#1
#2
"தன்னம்பிக்கையும் புத்திசாலித்தனமும்
அழகாக இருப்பதை நிறுத்துவதேயில்லை."
#3
“சில நேரங்களில்
உண்மையான திசையை.”
#4
“உங்கள் பொறுமையே உங்கள் பலம்.”
_ K. Tolnoe
#5
"சூரிய ஒளியைக் காண முடியாத வேளைகளில்
நீங்களே சூரியனாகப் பிரகாசியுங்கள்."
#6
“புதிய ஆரம்பம் என்பது புதிய இடம் அல்ல,
புதிய மனநிலை!”
#8
"உங்கள் வேகத்தைக் காட்டிலும்
செல்லும் திசை அதிமுக்கியமானது."
#9
"இறுதியில் உங்கள் முறை வருகையில்,
காத்திருப்பின் அவசியத்தைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்
என நம்புகிறேன்."
*
அம்மா வீட்டுத் தோட்டத்தில்.. :)!
Canon EOS 80D:
வழக்கமாக Nikon D5000; Nikon D750 ஆகிய எனது ஒளிப்படக்கருவிகளில் எடுத்த படங்களையே இங்கு பகிர்ந்து வந்துள்ளேன்.
இப்பதிவிலுள்ள படங்கள் ஊருக்குச் சென்றிருந்த போது அம்மா வீட்டுத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய செவ்வரளி, தங்க அரளி, நந்தியாவட்டை, செம்பருத்திப் பூக்களை, தம்பி மனைவியின் Canon - 80D உபயோகித்து எடுத்தவை.
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***
பரிசுத்தத்துக்கு வெண்பூ. தன்னம்பிக்கைக்கு நீண்டு முன்வரும் பூ. மலரக்காத்திருக்கும் பூவுக்கு பொறுமை. படங்களும் வரிகளும் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் சூப்பராக இருக்கின்றன....என்றாலும், கேமரா வேறோ? படங்கள் வித்தியாசமாக இருக்கின்றன. ...
பதிலளிநீக்குஇப்படி எழுதிட்டு.....படங்களைப் பார்த்துக் கொண்டே கீழே வந்ததும் தெரிந்தது....வித்தியாசம்.
கீதா
நன்றி கீதா :).
நீக்குஅருமையான வரிகள். படங்களும் அழகு சேர்க்கின்றன.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்கு