சனி, 8 அக்டோபர், 2022

சிகப்புப் தட்டான்பூச்சி - கிகாகு ஜப்பானிய துளிப்பாக்கள்



[சொல்வனம் இதழ்: 279]
1. 
பார்வையிழந்த குழந்தை
தன் அம்மாவின் வழிகாட்டலில்
ரசிக்கிறான் செர்ரி மலர்களை.

2.
அரிசி உருண்டை அலங்காரங்கள்
எலியின் கண்களில்
யோஷினோ மலை.

3.
புளிக்கும் செர்ரி
அதில் இறக்கைகளைச் சேர்க்க
சிகப்புப் தட்டான்பூச்சி.

4.
வடிசாற்றுக் குடுவைக்குள்
மூங்கில் தொப்பியிலிருந்து மழைத்துளிகள்
நெல் நாற்றுகளின் அறுவடை.

5. 
ஃப்யூஜியில் பனி,
மதுக்கடையில், 
எஞ்சியுள்ளன ஈக்கள்.

6.
வருடம் தொடங்குகிறது!
என் வீடு முழுவதிலும், 
நட்சத்திரங்கள் நிறைந்த வானின் செல்வம்.

7.
எடோவில் வசந்தகாலம்
கோயில் மணி விற்காமல்
ஒரு நாள் கழிந்ததில்லை.

8.
பிரகாசமான நிலவு 
பாயின் மேல்
பைன் மரக் கிளையின் நிழல்கள்.

9.
தண்ணீரில் பிரதிபலிப்பு
குறுக்கே பறக்கும் அணில்
விஸ்டெரியாவின் மேலங்கி.
--
(wisteria - ஜப்பான் நாட்டில் பூச்சொரியும் ஒரு தாவர வகை)

*


டகரை கிகாகு
 (1660-1707):  ஜப்பானிய ஹைக்கூ கவிஞரான இவர், மட்சுவோ பாஷோவின் சீடர்களில் நன்கு அறியப்பட்ட ஒருவர் ஆவார். எடோ நகரத்தில் (இன்றைய டோக்கியோ) இவரது தந்தை ஒரு மருத்துவராக இருந்தார். ஆனால் தந்தையின் வழியில் செல்ல விரும்பாது தொழில்முறை ஹைக்கூ கவிஞராக இருக்கவே கிகாகு விரும்பினார். இவரது கவிதைகள் அவற்றின் நகைச்சுவைத் திறனுக்காகவும் கடினமான கட்டமைப்புக்காகவும் அறியப்பட்டவை. 

பாஷோ, குறிப்பாகத் தனது கடைசிக் காலத்தில், தனது கவிதைகளில் கிராமப் புறத்தைக் கலைநயத்துடன் காட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் கிகாகு நகர்ப்புற வாழ்வை முன்னிலைப் படுத்தியதுடன் அது வாய்ப்பளித்த  நம்பவியலாத காட்சிகளைக் கவிதைகள் ஆக்கினார். எளிதில் புரியாத, புரிந்திட அதிக பிரயத்தனத்தைக் கோரும், வார்த்தை விளையாட்டுகளையும் குறியீடுகளையும் கொண்ட, முற்றிலும் வேறான இருகாட்சிகளை இணைத்தளிப்பது போன்ற கவிதைகளைப் படைத்தார். அவர் இறந்த தருணத்தில், எடோவின் முதன்மையான கவிஞர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். எடோ நகரம் (இன்றைய டோக்கியோ) அந்த சமயத்தில் ஒரு மில்லியன் மக்கட்தொகையுடன் உலகின் மிகப் பெரிய நகரமாகத் திகழ்ந்ததும் குறிப்பிடத் தக்கது.

**

[படங்கள்: இணையத்திலிருந்து.. நன்றியுடன்..]

ஆசிரியர் குறிப்பு மற்றும் துளிப்பாக்கள்.. ஆங்கிலம் வழித் தமிழில்: ராமலக்ஷ்மி 

**

கடந்த இரு பதிவுகளில் வெளியான துளிப்பாக்களின் தமிழாக்கத்துடன் 
இந்த பதிவும், சொல்வனம் இதழ் 279_ல், 
**
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

***

17 கருத்துகள்:

  1. நீ சிந்தும் ஒரு துளி கண்ணீர்..  எறும்பு  குளிக்கும் படித்துறை என்று கண்ணதாசன் எழுதி படித்த நினைவு..  இரண்டாவதைப் படிக்கும்போது இது நினைவுக்கு வந்ததது.

    பதிலளிநீக்கு
  2. ஆறாவதில் ஏழ்மையையும் அழகாகி சொல்லும் நேர்த்தி.  எனக்கு எஞ்சினியர் அப்பா - மகனின் ஜோக் நினைவு வந்ததது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம். முடிந்தால் அந்த நகைச்சுவைத் துணுக்கைப் பகிரவும் :).

      நீக்கு
  3. எட்டு இனிமையான பௌர்ணமி இரவின் நிலவுக் கற்பனை.

    கவிஞர் குறிப்பை படித்தேன்.  சுவாரஸ்யமான ஹைக்கூக்களுடன் கூடிய அழகிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலவு கவிஞர்களுக்கு எப்பொழுதுமே பிடித்தமான பாடுபொருள். ஹைக்கூ கவிஞர்கள் விதிவிலக்கல்ல. பாஷோவின் 7 துளிப்பாக்கள் “நிலவு பார்த்தல்” பதிவாக இங்கே: https://tamilamudam.blogspot.com/2013/01/blog-post_10.html

      நீக்கு
  4. கவிதைகளை ரசிக்க ஜப்பானிய கலாசாரமும் அறிந்திருக்க வேண்டியுள்ளது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான கவிதை வரிகள் இரசிக்க வைத்தன... - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  6. 2 வது வாசித்ததும் என் மகனும் நானும் பேசிக் கொண்டது நினைவுக்கு வந்தது. அவன் சிறுவனாக இருந்த போது எறும்புகளை மிகவும் கூர்ந்து கவனிப்பான். அப்போது தேங்கியிருந்த மழைத் தண்ணீரைப் பார்த்ததும் இருவருமே பேசியது இதுதான் எறும்புக்கு இது மகாசமுத்திரம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு குழந்தைகள் எறும்புகளோடு பேசுவதை நானும் கவனித்திருக்கிறேன் :). மகாசமுத்திரம்.. அருமையான வெளிப்பாடு!

      நீக்கு
  7. 6. அழகான பொருள் அது போல சிவப்புச் செர்ரி தட்டாம்பூச்சி....8 நிலவின் ஒளியில் பைனமரக் கிளைகளின் நிழல்...மிகவும் ரசித்தேன்

    6 வது...நான் எப்போதோ எழுதிய ஏழையின் குடிசை...குடை நினைவுக்கு வந்தது.
    நட்சத்திர பங்களா என்று முடித்திருப்பேன் ஹைக்கூதான்,

    ஆசிரியர் பற்றியும் தெரிந்து கொண்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியரைப் பற்றி அறிந்து கொள்வது கவிதைகளை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள நமக்கு உதவுவதாக உணருகிறேன்.

      தங்கள் கருத்துகளுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  8. பகிர்ந்த கவிதைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    ஆசிரியர் குறிப்பும் அவரை அறிந்து கொள்ள உதவுகிறது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. முற்றிலும் வேறுபட்ட இருகாட்சிகளுடன், இரு மாறுபட்ட உணர்வு நிலைகளையும் (இனிய- துயர) பொருத்தமாக இணைத்திருப்பது சிறப்பு. இந்த ஹைக்கூ கவிதைகள் எழுத அவர் எடுத்த பிரயாசம் புரிகிறது. ஒவ்வொன்றும் ஒரு புதிருக்கான விடையைத் தேடுவது போல் உள்ளது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. “புதிருக்கான விடை தேடுவது போல்..”, ஆம்.

      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin