ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

துணிவு எய்தல்

பறவை பார்ப்போம்.. - பாகம் 82
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 131
#1
"கடமை அழைக்கும் போது ஆளுமை வெளிப்படுகிறது."
__ William Safire

#2
"சில நேரங்களில், 
நீங்கள் எடுக்கும் மிகச் சிறிய முடிவுகள்
உங்கள் முழுவாழ்க்கையையும் 
மாற்றி விடுகின்றன."
__  Keri Russell

#3
"நமது ஆற்றல் நமது முடிவெடுக்கும் திறனில் உள்ளது."

#4

"நீங்கள் உண்மையாகக் கவனம் செலுத்துகையில்,
அனைத்தும் உங்கள் ஆசான் ஆகின்றன."
_ Ezra Bayda
#5
"பலகீனமானவர்களின் ஐயங்களால்
வலிமையானவர்களின் மனத்திண்மை
ஆட்டம் காண்பதில்லை."

#6
"மனஅழுத்தம் என்பது 
எது முக்கியம் என முடிவெடுக்க இயலாமல் 
தடுமாறுவது."

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

12 கருத்துகள்:

  1. மூன்றாவது படம் மிகவும் பிடித்திருந்தது. மற்ற படங்களும் பொன்மொழிகளும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓரிடத்தில் நில்லாது பறந்தவிடக் கூடிய தேன்சிட்டு, அன்று சில நொடிகளை என் கேமராவுக்கு தந்திருக்கிறது:). நன்றி வெங்கட்.

      நீக்கு
  2. படங்களும் வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. பறவைகள் படங்கள் எல்லாம் மிக அருமை.
    அவை சொல்லும் பொன்மொழிகள் அருமை.இரண்டாவது பற்வை இரண்டு நாள் முன்பு பால்கனி கைபிடியில் அமர்ந்தது, காமிராவை எடுத்து கொண்டு வருவதற்குள் பறந்து விட்டது.
    பெண் குயிலை எடுத்தேன் நேற்று எதிர் புறம் வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா.

      வால் காக்கை படங்கள் முன்னர் பதிவில் மற்றும் ஃபேஸ்புக்கிலும் கூட பகிர்ந்திருந்தீர்களே. பெண் குயில் படம் பகிர்ந்திடுங்கள்.

      நீக்கு
  4. ஒவ்வொரு முறை உங்கள் படங்களைப் பார்க்கும் போதும் வியந்து வியந்து ரசித்துப் பார்க்கிறேன் ராமலக்ஷ்மி.

    மூன்றாவது படம் செம க்ளிக்!!!!

    எல்லாம் மிக மிக ரசித்தேன். உங்கள் புகைப்படக் கலை உட்பட

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அனைத்துப் படங்களும் வாசகங்களும் அருமை.

    பறவைகள் எல்லாம் மிகத் தெளிவாகத் தெரிகின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin