ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

நிறையுடைமை நீங்காமை வேண்டின்

 #1

"மற்றவர்களை மேம்பட்டவராக உணர வைக்க 
உங்களை நீங்கள் சுருக்கிக் கொள்ளாதீர்கள்."
_Brad Turnbull

#2
"உங்கள் பாதையை 
நீங்களே வழிமறித்து  நிற்காதீர்கள்."#3
“மற்றவரை பீதியுறச் செய்யும் இரகசிய அவா,
ஒவ்வொரு சோளக்கொல்லை பொம்மைக்கும் உள்ளது.”
 _ Stanislaw Jerzy Lec


#4
"நீங்கள் உங்களை அறிந்திருப்பதைக் காட்டிலும்
மற்றவர்கள் உங்களை நன்றாக அறிவார்கள் என்பதை 
ஒருபோதும் ஒப்புக் கொள்ளாதீர்கள்."


#5
"வேளாண்மையின் அழகு 
அது நமது கலாச்சாரம் என்பதே."

#6
"மேடு பள்ளமாகப் பாதை இருந்தாலும் 
உங்கள் வழிமுறையில் உறுதியாய் இருங்கள்!"

#7
"பொறுமை என்பது மந்தமாக இருப்பதன்று. 
மாறாக, சுறுசுறுப்புடன் 
அடர்ந்த ஆற்றலைக் கொண்டிருப்பது."

*
படங்கள் 19 ஆகஸ்ட் உலக ஒளிப்பட தினத்தையொட்டி பெங்களூரு கண்ணமங்களா ஏரிப் பகுதிக்கு எனது இரண்டு கேமராக்களையும் தூக்கிக் கொண்டு photo walk சென்றிருந்தபோது எடுத்தவை:)!

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..

***

8 கருத்துகள்:

 1. எல்லாப் படங்களுமே மிக அருமை.  வரிகளும்தான்.

  பதிலளிநீக்கு
 2. அனைத்து படங்களும் மிக அருமை.
  உங்கள் படம் அழகு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. படங்களும் வாசகங்களும் அருமை ராமலக்ஷ்மி.
  வாழ்த்துகள்.
  பழைய நினைவுகள் மலர்கின்றன.

  பதிலளிநீக்கு
 4. படங்கள் எல்லாம் அட்டகாசமாக இருக்கின்றன. செல்லங்கள் அழகு!!!!

  ஃபோட்டோ எடுப்பதில் எனக்கும் மிகுந்த ஆர்வம். படங்களையும் ரசிப்பேன்.

  உங்கள் திறமை அசாத்தியம், ராமலஷ்மி.

  கீதா

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin