ஞாயிறு, 25 ஜூலை, 2021

புதிய கோணம்

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (107) 

பறவை பார்ப்போம் - பாகம்: (70)

#1

“அச்சத்தை வெல்வதால் உங்களுக்குக் கிடைக்கும் பரிசே 
தன்னப்பிக்கை.”

#2

ஒரு கலையைப் போலவே, 
தன்னம்பிக்கையானது எல்லா விடைகளையும் வைத்திருப்பதால் வருவதில்லை; 
எல்லா கேள்விகளையும் எதிர் கொள்ளவதால் வருகிறது.
_Earl Gray Stevens


#3

"சில நேரங்களில் நமக்குத் தேவைப்படுவதெல்லாம்,
 புதிய கோணத்தில் சிந்திப்பதே!"

#4

"அளவுக்கு மீறிச் சிந்திக்காதீர்கள், 
உங்களுக்கு மகிழ்ச்சி தருபவற்றில் ஈடுபடுங்கள்."


#5

"பதில் சொல்லும் நோக்கத்துடனேயே செவி மடுக்காதீர்கள், 
புரிந்து கொள்வது நோக்கமாக இருக்கட்டும்."

#6

"பேச்சு இயல்பாக வருவது. 
அமைதி புரிந்து கொள்வதால் வருவது."
(ஜெர்மன் பழமொழி.)

***

எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
தொகுப்பது தொடருகிறது..

***

8 கருத்துகள்:

  1. ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு வண்ணத்துடன் அழகாயிருக்கிறது.பொருத்தமான வரிகளை அவையே சொல்வது போல இருக்கிறது! அந்த பழுப்பு நிறப்பறவை கம்பீரமாக அமர்ந்திருக்கிறது. அதை மிகவும் ரசித்தேன்!!

    பதிலளிநீக்கு
  2. அனைத்து பறவைகளும் மனம் கவர்ந்தது.
    அவைகள் சொன்ன வாழ்வியல் சிந்தனைகள் மிக அருமை.
    4, 5 மிகவும் தேவையான ஒன்று.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அழகு.  மூன்றாவதும் நாலாவதும் கொஞ்சம் எதிரெதிர் நிலையை எடுத்தாலும் சில சமயங்களில் இப்படி, சில சமயங்களில் அப்படி என்று எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான், எல்லாப் பொன்மொழிகளும் எல்லா சமயங்களுக்கும் பொருந்தி விடுவதில்லை. நேரம், சூழல் ஆகியவற்றைப் பொறுத்ததே.

      இங்கே மூன்றில், குழப்பத்தில் இருக்கும் போது தீர்வு காண புதிய கோணம் அவசியமாகிறது. நான்கு ஆசையிருந்தும் தயக்கம் காட்டுபவர்களுக்காகச் சொல்லப்பட்டது:).

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பறவைகளின் படங்களும், அதற்கான சிந்தனைகளும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin