சனி, 1 மே, 2021

மே தினம் 2021 - பாதுகாப்பு.. ஆரோக்கியம்..

 #1

1 மே, சர்வதேச உழைப்பாளர் தினமாக உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தினர் தம் உரிமைகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தத் தினம் உதவி வருகிறது. சென்ற வருடம் நோய்த் தொற்றின் காரணமாக ஏற்பட்ட லாக்டவுன், பல இலட்சம் உழைக்கும் மக்களைக் கால்நடையாக தம் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப வைத்தது. இந்த வருடம் நோய்த் தொற்றின் இரண்டாவது அலை அவர்களை மேலும் கலக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 

இந்த ஆண்டு மே தினத்தின்பேசு பொருளாக உழைக்கும் மக்களின் பாதுகாப்பும், ஆரோக்கியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்று, லாக் டவுன், வேலையின்மை பிரச்சனைகளிலிருந்து உலகம் மீண்டு வரப் பிரார்த்திப்போம். இரவும் பகலுமாக கொரானா நோயாளிகளுக்காக உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்களைப் போற்றுவோம்.

உழைப்பாளர்களைப் போற்றும் விதமாகச் சில படங்கள்:

#2


#3


#4


#5


#6


#7


#8


மே தின வாழ்த்துகள்!

***

6 கருத்துகள்:

  1. படங்களை ரசித்தேன்.  மே தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு


  2. படங்கள் எல்லாம் அருமை.
    மே தின வாழ்த்துக்கள்.
    அன்றாடம் பாடுபட்டு உழைக்கும் உழைப்பாளர்கள் நிலை கவலைகிடமாக இருக்கிறது. அவர்கள் நிலை சரியாக வேண்டும்.
    அனைவர் வாழ்க்கையும் வளமும் நலமும் பெற வாழ்த்துவோம், பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன

    உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

    துளசிதரன், கீதா

    கீதா: எல்லா தினமுமே உழைப்பாளர் தினம் தான் இல்லையா? அன்றாடம் உழைக்கும் உழைப்பாளர்கள் இல்லாமல் எதுவும் நடக்காதே..

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி.

    --

    உண்மைதான் எல்லா நாட்களும் உழைப்பாளர்களுக்கானதே. பதிவின் முதல் பத்தியில் சொல்லியிருப்பது போல் அவர்கள் தம் உரிமைகளைப் புரிந்து கொள்ளவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே இந்தத் தினத்தை அனுசரித்து வருகிறோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin