வெள்ளி, 18 நவம்பர், 2016

நங்கூரம்

#1
மகிழ்ச்சியாய் இருங்கள். நீங்கள் நீங்களாய் இருங்கள். மற்றவர்களுக்கு அது பிடிக்காவிட்டால் போகட்டும். மகிழ்ச்சி ஒரு விருப்பத் தேர்வு. ஒவ்வொருவரையும் திருப்திப் படுத்திக் கொண்டிருப்பதற்காக அல்ல நமது வாழ்வு.

#2
உங்கள் அனுமதியின்றி யாராலும் உங்களைத் தாழ்வாக உணர வைக்க முடியாது. _ Eleanor Roosevelt 

#3

‘மகிழ்ச்சி கொள்வோம். எல்லாமே நன்றாக நடப்பதற்காக அல்ல,
எல்லாவற்றிலும் நல்ல பக்கத்தை நம்மால் பார்க்க முடிவதற்காக.’

#4

சிறந்த நடனக் கலைஞர்கள் சிறந்தவர்களாக விளங்கக் காரணம் அவர்களது   நாட்டிய நுட்பங்கள் அல்ல, கலை மீது அவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு.
— Martha Graham

#5
நம்மை நாமே அறிந்து கொள்வதல்ல வாழ்க்கை. நம்மை நாம் உருவாக்கிக் கொள்வதே வாழ்க்கை.
_பெர்னார்ட் ஷா


#6
“தன்னம்பிக்கை என்பது எப்போதும் சரியாகவே நடக்கிறோம் என்கிற எண்ணம் அன்று, தவறைத் தவறென ஒப்புக் கொள்ள அஞ்சாதிருப்பது.”

#7
ஒரு நங்கூரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதற்காகவா கப்பல்?  ஒரேயொரு கனவோடு ஒட்டிக் கொண்டிருப்பதற்காகவா வாழ்க்கை?
_ Epictetus


#8

‘ஒளிரட்டும் உங்கள் சுடர்’

#9

யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். மற்றவரிடம் இல்லாத ஏதோ ஒன்று ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.”
#10
கசப்பும் இனிப்பும் கலந்ததே வாழ்க்கை.


#10
கருப்பு வெள்ளையில் கண்ணாமூச்சி ஆடுகிறதா வாழ்க்கை? கனவுகளை வண்ணத்தில் காண்பதில் உறுதியாய் இருங்கள்.

#11
சபலத்தைத் தவிர்ப்பது எளிது. எதிர் கொள்வது ஆகக் கடினம்:)!
***
[ஃப்ளிக்கர் தளத்தில் படங்களுடன் பதிந்த  பொன்மொழிகளின் தமிழாக்கம், எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]

10 கருத்துகள்:

 1. படங்கள், அதற்கான வரிகள் இரண்டுமே அருமை.

  பதிலளிநீக்கு
 2. படங்களும் வார்த்தைகளும் இனிமை
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 3. படங்கள் எல்லாம் அழகு, கீழ்வரும் வார்த்தைகள் அருமை.

  பதிலளிநீக்கு
 4. பாசிட்டிவ் தாட்ஸுக்கு லைக் சொல்வதா இல்ல போட்டோக்கா!!! லைக்கோ லைக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தென்றல்:). நீண்ட இடைவெளிக்குப் பின் பதிவுலகத்திற்குத் திரும்பியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

   நீக்கு
 5. ஆஹா...அழகு...படங்களும்..சிந்தனைகளும்..

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin