ஞாயிறு, 21 ஜூன், 2015

தாயுமானவர்கள்.. தந்தையர் தின வாழ்த்துகள்!

ன் கேமராவில் சிறையான தந்தைமைத் தருணங்கள் பேசும் படங்களாக.. காட்சிக் கவிதைகளாக.. உங்களின் பார்வைக்கு..

#1 தாயுமானவன்..




#2 ‘என் அப்பா..’



முன்னர் முத்துச்சரத்தில் பகிராத படங்கள் பதிமூன்றை இரசிக்கும் முன் பல்வேறு சமயங்களில் பதிந்தவற்றில் இருந்து ஒரு (கொலாஜ்) தொகுப்பும்...

#3
தந்தைமை

#4 பாசப் பிணைப்பு

மிட்டாய்க் கணங்கள்..
#5


#6

#7 அரவணைப்பு




#8 செவிமடுப்பு


#9 தோளிலும் நெஞ்சிலும்..

#10 தந்தை மடி.. மெத்தையடி..



விளையாட்டு நேரங்கள்..
#11


#12

#13
உச்சி வெயிலுக்கு
உள்ளங்கை குடையாகுதல்.

#14
அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!
***

20 கருத்துகள்:

  1. அனைத்தும் சிறப்பான படங்கள்...

    தந்தையர் தின வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கேமிராவில் தந்தை சிறைபட்ட தந்தைமைத் தருணங்கள் கண்டு, என் நெஞ்சோ,

    என்றோ , என் நினைவுகளில் சிறைபட்ட அந்த நிகழ்வினை இவ்வருடமுஎதையோ ம் கண் முன்னே நிறுத்தியது.

    1950 ம் வருடம் அல்லது 1951 ஆக இருக்கலாம்.
    நான் 7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்பது மட்டும் தெரிகிறது.

    ஒரு நாள் காலையில் என் தந்தை ஏதோ ஒரு கோபத்தில், தன கையில் கிடைத்த எதையோ எங்கெயோ தூக்கி ஏறிய ,

    என் மேல் சற்றும் எதிர்பாராத வகையில் என் மேல் பட்டு நெற்றி முழுவதும் ரத்தம்.

    பெரிய அடி என்று ஒன்றும் இல்லை என்றாலும், தெப்பக்குளம் அருகே உள்ள மருத்துவகத்துக்குச் சென்று டிஞ்சர் அயோடின் எரிய எரிய அந்த கம்பவுண்டர் போட்டு ஒரு பிளாஸ்டர் ஒட்டி, இன்னும் 2 , 3 நாட்களுக்கு தண்ணீர் படாமல் பார்த்துக்கொள் என்றதும் நினைவில்.

    அப்பா, அப்படி ஒன்றும் பெரிய காயம் இல்லை என்று அம்மா சொன்னதால், கோர்ட்டுக்கு சென்று விட்டார். அவர் அன்றைய பிரபல வக்கீல். மேலும் அவருக்கு அன்று மிக முக்கியமான கேஸ் வாதாட இருந்ததாக, அம்மா சொன்னாள். நான் திரும்பி வரும்போது அப்பா வீட்டில் இல்லை.

    நான் ஸ்கூலுக்குச் சென்று விட்டேன்.
    ஒரு 3 மணி சுமாருக்கு, பள்ளியின் மேல் தளத்தில் என் வகுப்பில் எதோ ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த எனக்கு என் தந்தையின் குரல் மிகவும் சத்தமாக, சூரி, சூரி என்று விழுந்தது.

    நான் எழுந்து ஆசிரியரிடம், சார், எங்க அப்பா குரல் கேட்கிறது. நான் போக அனுமதி கொடுங்கள், என்று கேட்க,

    அவரும் என்னவோ ஏதோ என்று என் பின்னாடியே வர,

    அங்கு ரோடில், (நந்தி கோவில் தெரு, அனுமார் கோவில் அருகே)
    பள்ளி வளாகத்தின் கீழே , என் அப்பா நின்று கொண்டு இருந்தார். வகுப்பு நடக்கையில்,பள்ளி உள்ளே வர அவருக்கு அனுமதி தரப்பட வில்லை போலும்.

    என்னைப் பார்த்து என்னிடம் ஓடி வந்து, என் நெற்றியைத் தடவி
    கொடுக்கிறார்.

    வலிக்கிறதாடா என்று கேட்டார்.
    இல்லை என்று சொன்னேன்.

    இப்போ வலிக்கிறது.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெகிழ்வான பகிர்வு. நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சூரி sir.

      நீக்கு
  3. ahaa super super.. athilum kutti mappillai appavodu supero super :)

    பதிலளிநீக்கு
  4. மனதை மகிழச் செய்யும் காட்சிகள்
    நெகிழ்ந்து போய்விட்டேன் சகோதரியாரே
    தந்தையர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. இந்தப் படங்கள் எல்லாம் தந்தையர் தின ஸ்பெஷ்லா, அதற்காகவே எடுத்ததா.? எல்லாமே ஒரு தேர்ந்தகலைஞரின் கை வண்ணத்தில் அழகு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்வேறு சமயங்களில் எடுத்தவற்றைத் தொகுத்து தந்தையர் தினத்தில் பகிர்ந்திருக்கிறேன். இதற்காக எடுக்கவில்லை. வாழ்த்துகளுக்கு நன்றி GMB sir.

      நீக்கு
  6. ஆயிரம் வரிகள் உணர்த்த முடியாதை
    ஒவ்வொரு புகைப்படமும் அருமையாக
    உணர்த்திப் போகிறது

    சிறப்புப் பதிவு வெகு வெகு அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அழகிய படங்கள். குறிப்பாக தந்தை மடி மெத்தையடி நெகிழ்ச்சி! பதிவின் இறுதியில் உள்ள படம் கம்பீரம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin