திங்கள், 30 ஜூன், 2014

அஞ்சலிகள்

என் அன்பு அத்தையும், பதிவரும், எழுத்தாளரும் ஆன கோமா என்கிற திருமதி. கோமதி நடராஜன் அவர்கள் உடல்நலக் குறைவினால் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்கள். அவர்களின் ஆன்ம சாந்திக்கு வேண்டிக் கொள்வோம்.


சிலரால் நம் வாழ்வில் ஏற்படும் வெற்றிடத்தை எவராலும் எதனாலும் நிரப்ப இயலாது:(!


33 கருத்துகள்:

 1. அன்பு ராமலக்ஷ்மி, நம்பவே முடியவில்லை. உயிரோட கலந்த உற்சாகத்தோடு இந்த மாத முதலில் கூட முகநூலில் சில மருத்துவ முறைகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார்,. அவர் எழுத்திலிருந்து யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. சுகவீனமாக இருந்தார் என்று. உங்கள் எல்லோருக்கும் என் அன்புகளையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. முற்றிலும் உண்மை. சில வெற்றிடங்களை நிரப்பவே முடியாது. என் ஆழ்ந்த அனுதாபஙகளை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. ஆழ்ந்த இரங்கல்கள் .May her soul rest in peace .

  பதிலளிநீக்கு
 4. ஆழ்ந்த இரங்கல்கள்.. அவரின் ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. உங்களது நெருங்கிய உறவுகள் வெடிவால் சகாதேவன், ninewest நானானி மற்றும் ஹாஸ்யரசம் கோமதி நடராஜன் ஆகியோரது பதிவுகளைப் படித்து இருக்கிறேன்.

  உங்கள் அத்தை ஹாஸ்யரசம் கோமதி நடராஜன் அவர்கள் மறைவு பதிவர் குடும்பத்தில் ஒரு இழப்பு. அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலி!

  பதிலளிநீக்கு
 6. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கிறோம்..!

  பதிலளிநீக்கு
 7. அவர்கள் ஆன்மா சாந்தியடைய
  பிரார்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
 8. ஆழ்ந்த இரங்கல்கள்....

  அவருடைய ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.....

  பதிலளிநீக்கு
 9. ஆழ்ந்த இரங்கல்கள்...
  அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...

  பதிலளிநீக்கு
 10. ஆழ்ந்த இரங்கல்கள்.. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

  பதிலளிநீக்கு
 11. ராமலக்ஷ்மி, செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். உடல் நலம் இல்லாமல் இருந்தார்களா?

  அவருடைய பதிவுகள் இப்போது நிறைய இல்லையே என்று நினைத்துக் கொள்வேன் எல்லோரும் முகநூலில் எழுதுவதால் இங்கு வருவது இல்லையே அது போல் நினைத்துக் கொள்வேன். ஆரம்பத்தில் பின்னூட்டங்கள் மட்டும் அளித்துக் கொண்டு இருந்த என்னை எழுத வைத்தவர் அவர்தான். பதிவு போட்டவுடன் வந்து பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்துவார்.

  அவரை இழந்து வாடும் அவர் அன்பு குடும்பத்தினர்களுக்கும், மன ஆறுதலை இறைவன் அளிக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் அவர் மறைந்த அந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பவே முடியாது.

  பதிலளிநீக்கு
 12. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 13. அவருடைய ஆன்மா சாந்தியடைய எங்கள் பிரார்த்தனைகளும். அவரை இழந்து வாடும் உங்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இதைத் தாங்கிக் கொள்ளும் மனோதிடத்தை ஆண்டவன் கொடுக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 14. மூத்த பதிவர். போனில் சில தடவைகள் பேசியிருக்கிறேன். செய்தி கேட்டதும் மிகவும் மனசு வேதனைப்படுகிறது. ஆழ்ந்த இரங்கல்கள். திருமதி கோமதி நடராஜன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய மனமார பிரார்த்திக்கிறோம். இந்த பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. முகநூலில் பார்த்தேன். இருக்காது என நினைத்தேன். நம்பவே முடியவில்லை. நகைச்சுவையரசிக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 16. ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 17. உடல்நலக்குறைவாய் இருந்தார்னு தெரியும். ஆனால் இவ்வளவு விரைவில் நம்மை எல்லாம் விட்டுப் பிரிவார் என எதிர்பார்க்கவே இல்லை. ரொம்பவே வருத்தமா இருக்கு. பல்கலை வித்தகி. கடைசி வரை தன் ஹாஸ்யத்தை விடவே இல்லை. அவரைப் பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 18. தாமதமாய் இப்போது தான் தெரிய வந்தது. :(

  பதிலளிநீக்கு
 19. ஒருமுறை ஃபேஸ்புக்கில் சாட் பண்ணோம். தன் உடல்நிலை குறித்து எதுவுமே சொல்லவில்லை. அத்தனை உறுதியானவர்.

  பதிலளிநீக்கு
 20. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், முகமரியா நட்புகளுக்கும் மன ஆறுதலை அளிக்க வல்ல ஏகன் அல்லாஹ்விடன் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் ...

  பதிலளிநீக்கு
 21. ஆழ்ந்த இரங்கல்கள்.

  அவரின் ஆன்மா சாந்தியடைய எங்கள் பிரார்த்தனைகளும்...

  பதிலளிநீக்கு
 22. @சுபத்ரா,

  துயரில் பங்கேற்ற அனைவருக்கும் குடும்பத்தினர் சார்பில் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. ஐயோ என்னப்பா இப்படிக் கல்லைத் தூக்கிப்போடறீங்க???

  நம்பமுடியலையேப்பா:(

  குடும்பத்தினர் அனைவருக்கும் மன தைரியம் கொடுக்கும்படி பெருமாளை வேண்டிக்கறேன்.

  கோமாவின் ஆத்ம சாந்திக்கு எங்கள் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 24. அய்யோ! நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை.குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin