வியாழன், 18 ஜூலை, 2013

பிளாஸ்டிக் தவிர்ப்போம் - "பை.. பைகள்.." - ஜூலை PiT

பை, பைகள் இதுதான் இம்மாதப் போட்டித் தலைப்பு. படங்களை அனுப்ப முழுதாக இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன என்பதை நினைவூட்டிட இந்தப் பகிர்வு, எட்டு மாதிரிப் படங்களுடன்.

#1
இசையும் கலையும்
இல்லாவிடில்
இனிக்குமா வாழ்வு?


#2 

மகிழ்ச்சியில் துள்ளும் குழந்தை.
மெளனத்தில் அம்மாவும் பையும்.


#3
சேர்ந்தே இருக்கட்டும்
நளினமும் துணிவும்


#4
சுமை, தோளில் தலையில்..
வலிமை உறுதி, மனதில்!
கபினி அணை அருகில்..


#5
வண்ண வண்ணக் காட்சிதான்
கமர்ஷியல் ஸ்ட்ரீட், பெங்களூரு

#6
காலை மணி ஒன்பது:)!


பிளாஸ்டிக் பைகள் தவிர்ப்போம்:
#7
கப்பன் பூங்காவில்..

#8
பெங்களூர் காமராஜர் சாலையில்.. தோழியும் நானும் எங்கள் வாகனம் வரக் காத்திருந்த வேளையில்..

போட்டி விதிமுறைகள் இங்கே. கடைசித் தேதி 20 ஜூலை 2013.

30 கருத்துகள்:

  1. குட்டியானை படம் போட்ட அந்தப் பை ரொம்ப சூப்பர். மத்த எல்லாப் படஙகளுமே ரசனை!

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அருமை - முக்கியமாக கப்பன் பூங்காவில் (மதுரை) துணிப்பை...!

    நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. எங்கள் கன்யாகுமரி மாவட்டத்திலும், மும்பையிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடா....பிடித்தால் ஐயாயிரம் ரூபாய் அபதாரம்...!!!

    பதிலளிநீக்கு
  4. பெண்களுக்குப் பைகள் பிடிக்கலைன்னாத்தான் ஆச்சரியம். எனக்கு டோரேமான் பிடிச்சிருக்கார் :-))

    பதிலளிநீக்கு
  5. அதெப்படி 3 படங்களில் யானையார் இடம்பிடித்துள்ளார்...

    பதிலளிநீக்கு
  6. பை பையாகப் படங்கள்! எவ்வளவு பைகள்?

    பதிலளிநீக்கு
  7. மிகவும் அழகான படங்கள். இன்றைக்குத் தேவையான பயனுள்ள செய்திகள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. அழகழகு பைகள் அற்புதமான கோணத்தில்....

    பதிலளிநீக்கு
  9. ரசனையான படங்கள். பைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். படம்பிடித்தக் கரங்களுக்குப் பாராட்டுகள். போட்டியில் பங்கேற்கவிருப்பவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. படங்கள் அருமை மேடம். போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  11. அத்தனை பைகளும் அழகு!

    போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. ஆமா என்ன போட்டிங்க இது நாங்களும் பங்கேற்கலாமா ?
    படங்கள் பார்க்க அழகு. அனைவரும் பின்பற்றினால் உலகம் அழகாககும்.

    பதிலளிநீக்கு
  13. தில்லியில் இரண்டு வருடங்களுக்கு மேலாகவே பிளாஸ்டிக் பைகள் தடையில் உள்ளன. அதற்குப் பதிலாக வேறுமாதிரி பைகள் கடைகளில் தரப்படுகின்றன.

    பைகள் எல்லாமே அழகு... யானைப் பை மிகவும் பிடித்தது.

    போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. @அமைதிச்சாரல்,

    அணிந்திருப்பவரிடம் தெரிவிக்கிறேன்:)! நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  15. @ezhil,

    அட ஆமாம்:)! மதுரைத் துணிப்பையிலும். சொன்னதுமே கவனிக்கிறேன். நன்றி எழில்.

    பதிலளிநீக்கு
  16. @Sasi Kala,

    நன்றி. கலந்து கொள்ளலாம் சசிகலா. ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி தலைப்பு அறிவிப்பாகும்.20 தேதிக்குள் படங்களை அனுப்ப வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. @கோவை2தில்லி,

    பெங்களூரிலும் தடை உள்ளது. நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin