வெள்ளி, 21 ஜூன், 2013

தேவ கானம் – மட்சுவோ பாஷோ ஜப்பானிய துளிப்பாக்கள் (பத்து)


1.
குருவியே, விட்டுவிடேன்
பூக்களோடு ஆடிப்பாடும்
சிறு ஈயை.

2.
மாலைக் குருவிகள்
உத்திரத்தில் எலிகள்
தேவ கானம்.

3.
மிகுந்த பரவசம்
சற்று கழிந்து பெரும் வருத்தம்
நீர்க்காக்கையிடம் மீன்.

4.
பெருவெளியில்
எதிலும் ஒட்டுதலின்றி,
பாடும் வானம்பாடி.

5.
நோயுற்றக் காட்டுவாத்து
சாய்கிறது குளிரிருளில்
ஓரிரவு உறங்கி ஓய்வெடுக்க.

6.
குதிரைக்குட்டியை செலுத்துகிறேன்
அகன்ற பொட்டல்வெளியில்
வானம்பாடியின் பாட்டுத் திசையில்.

7.
எலிக்குஞ்சுகள் தம் கூட்டிலிருந்து
எதிர்க் கீச்சிடுகின்றன
குருவிக் குஞ்சுகளுக்கு.

8.
கடலிருளுகிறது
காட்டு வாத்துகளின் குரல்
மங்கிய வெண்மையில்.

9.
பார்வை தொடருகிறது கடலில்
பறவை காணாது போகிற இடத்தில்
ஒரு சிறு தீவு.

10.
நிலவு வெகு பரிசுத்தமானது
நாடோடித் துறவி அதைச் சுமந்து
கடக்கிறார் மணல்வெளியை.

மூலம்:
ஜப்பானிய மொழியில்: Matsuo Basho
17 ஜூன் 2013 அதீதம் இதழுக்காக ஆங்கிலத்தினூடாகத் தமிழாக்கம் செய்யப்பட்டவை. 

30 கருத்துகள்:

 1. 6, 10 மிகவும் அருமை... தமிழாக்கத்திற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தமிழாக்கம் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. எல்லாமே ஜோர். எனக்குப் பிடித்தது நான்கு மற்றும் பத்து.

  பதிலளிநீக்கு
 4. 1, 2,4 கவிதை நல்லா இருக்கு.., பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. எதிலும் ஒட்டுதல் இல்லாதா பாடும் வானம்பாடியும், துறவியும் ஒன்றுதான் போல்.நான்கும், 10 ஒன்றாய் இருக்கிறது. நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. மிக நன்று .பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 7. 4 ரொம்பப் பிடிச்சிருக்கு. பகிர்தலுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. அனைத்தும் அழகு. பத்தாவது, முத்து!

  //பெருவெளியில் எதிலும் ஒட்டதலின்றி...// ஒட்டுதலின்றி?

  பதிலளிநீக்கு
 9. ஒவ்வொரு கவித்துளியும் ஓராயிரம் எண்ணங்களை விதைக்கின்றது. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசனையோடு வாழச்சொல்லும் அற்புத வரிகள். அருமையான தமிழாக்கத்துக்குப் பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 10. நிலவு வெகு பரிசுத்தமானது
  நாடோடித் துறவி அதைச் சுமந்து
  கடக்கிறார் மணல்வெளியை.


  :)

  பதிலளிநீக்கு
 11. @கே. பி. ஜனா...,

  கவனக் குறைவு. திருத்தி விட்டேன்:)! நன்றி.

  பதிலளிநீக்கு
 12. @அப்பாதுரை,

  நன்றி:)! 3 எனக்கும் மிகப் பிடித்தது.

  பதிலளிநீக்கு
 13. @கீத மஞ்சரி,

  ஆம் கீதா. வியக்க வைக்கும் ரசனை. நன்றி.

  பதிலளிநீக்கு
 14. நச் கவிதையை தமிழாக்கம் படுத்தி இருப்பது அருமை.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin