புதன், 12 டிசம்பர், 2012

RED FRAMES; SBI நூற்றாண்டு; டிசம்பர் PiT.. போட்டிகள் - சென்னை வீக் என்ட் க்ளிக்கர்ஸ் கண்காட்சி


 RED FRAMES வழங்கும் " FRAMES OF MY CITY 2 " :
சென்ற வருடம் போலவே இந்த வருடமும் ஏராளமான பரிசுகளுடன் காத்திருக்கிறது உங்கள் படங்களுக்காக ரெட் ஃப்ரேம்ஸ்.

பொதுவான விதிகள்:

நீங்கள் நேசிக்கும் ஒரு ஊரின் இடங்களையும், மக்களையும், அதன் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்கும் காட்சிகளையும் படமாக்க வேண்டும். அது பிறந்த ஊரோ, வசிக்கும் ஊரோ அல்லது குறிப்பிட்ட சிறப்புகளினால் மனதைப் பறிகொடுத்த ஊரோ எதுவாயினும் இருக்கலாம்.

பதினெட்டு வயதான அனைத்து இந்தியர்களும் கலந்து கொள்ளலாம்.

கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை.

ஒருவர் பத்து படங்கள் மட்டுமே சமர்பிக்கலாம்.

மூன்று இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பரிசுகள் காத்திருக்கின்றன.

படங்களின் உரிமை முழுக்க முழுக்க எடுத்தவரையே சாரும். பரிசினை வெல்லும் பட்சத்தில் அவற்றை ரெட் ஃப்ரேம்ஸ் ப்ரோமோட் செய்ய உங்கள் அனுமதியைத் தர வேண்டும்.

படங்கள் வேறு போட்டிகளில் பரிசினை வென்றவையாக இருக்கக் கூடாது.

இரண்டு வருட காலத்துக்குள் எடுத்தவையாக இருக்க வேண்டியது அவசியம்.

சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள் எனக் கலை சம்பந்தமானவற்றையும் காட்சிப் படுத்தலாம். ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக எடுத்தவையாக இருக்கக் கூடாது.

முடிவுத் தேதி: 20 ஜனவரி 2013

விரிவாக அறிந்திட இங்கே செல்லுங்கள்: http://www.redframes.in/contest2/Rule-FOMC2.aspx

வாராந்திரப் பரிசுகளும் உண்டு. ஆறாம் வாரத்துக்கான படங்களை அனுப்ப நாளையே (12/12/12) கடைசித் தேதி போன்ற Red Frames-ன் அவ்வப்போதான அறிவிப்புகளையும் நினைவூட்டல்களையும் பெற நீங்கள் ஃபேஸ்புக்கிலும் தொடரலாம்:  http://www.facebook.com/redframes.in?fref=ts

[சென்ற வருடப் போட்டி முடிவுகள் மற்றும் பெங்களூரில் நடந்த கண்காட்சி குறித்த பதிவு இங்கே.]

***
-----------------------------------------------------------------------------------------------------------------------------
SBI நூற்றாண்டு விழாப் போட்டி:

கோவையில் இருக்கும் இந்திய விவசாய ஆய்வு மையத்தைச் சேர்ந்த கரும்பு வளர்ப்பு நிலையம் [Sugarcane Breeding Institute (SBI) of the Indian Council of Agricultural Research (ICAR) ] தனது நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அகில இந்திய அளவிலான ஆன்லைன் புகைப்படப் போட்டியை அறிவித்திருக்கிறது.

தலைப்பு: கரும்பு

கலந்து கொள்ளக் கட்டணம் இல்லை.

ஒருவர் மூன்று படங்கள் வரை சமர்ப்பிக்கலாம்.

படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 15 டிசம்பர் 2012

3 பேர் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். மேலும் 5 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

நுழைவுப் படிவம் பெறவும், விரிவாக விதிமுறைகளை அறியவும்:

http://www.sugarcane100.blogspot.in/ 

www.sugarcane.res.in

www.caneinfo.nic.in

***
-------------------------------------------------------------------------------------------------------------------------

டிசம்பர் 2012 PiT போட்டி:

தலைப்பு: மழைக்காலம்.

மழைத்துளி, குளிருக்காக போர்த்திய மனிதன், மழையில் நனையும் பூ, குடை பிடித்துச் செல்லும் குழந்தை என என்னவெல்லாம் “மழைக்காலம்” என்ற தலைப்புக்குப் பொருத்தமாயிருந்தாலும் அனுப்புங்க. படத்தப் பார்த்ததுமே மழைக்காலம் அதில பிரதிபலிக்கனும். அதுதான் ரொம்ப முக்கியம்.” எனக் கேட்டுக் கொள்கிறார் நடுவர் அன்டன்.

கடைசித் தேதி: 20 டிசம்பர் 2012

போட்டி அறிவிப்பு இங்கே.

இதுவரை போட்டிக்கு வந்திருக்கும் படங்களைக் கண்டு இரசிக்க, உங்கள் கருத்துகளை வழங்கி ஊக்கம் தர இங்கே செல்லலாம்.
***
-----------------------------------------------------------------------------------------------------------------------------
THIRD EYE - சென்னையில் கண்காட்சி

903 உறுப்பினர்களைக் கொண்ட 'CHENNAI WEEKEND CLICKERS' சென்னை லலித் கலா அகடமியில் மூன்றாவது வருடமாக வழங்கும் கண்காட்சி. 10 டிசம்பர் 2012 அன்று ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரும் ஞாயிறு 16 டிசம்பர் வரை நடைபெற உள்ளது.

***

8 கருத்துகள்:

 1. நல்ல தகவல்கள். நீங்கள் நிச்சய்ம் கலந்து கொள்வீர்கள் எனத் தெரியும்.... :) அட்வான்ஸ் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. தகவல்களுக்கு நன்றி. உங்களையும் சேர்த்து, கலந்து கொள்பவர்களுக்கு அனைவருக்கும், வாழ்த்துகள்!! :))

  பதிலளிநீக்கு
 3. ராமலஷ்மி நல்ல பயனுள்ள போட்டி தகவலகள் அனைத்தும் சூப்பர். நானும் ஒரு சில படங்களை அனுப்பலாம் என்று நினைக்கிறேன். போட்டின் என்பதலாம் நிறய்ய பேரின் படங்கள் காண ஒரு நல்ல வாய்ப்பு.
  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. @வெங்கட் நாகராஜ்,

  நான் கலந்து கொள்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை வெங்கட்:)! நேரமிருப்பின் தில்லிப் பக்கம் எடுத்த படங்களோடு கலந்து கொள்ளப் பாருங்கள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. @Vijiskitchencreations,

  நல்லது விஜி. நன்றி.

  அவசியம் கலந்து கொள்ளுங்கள். வாழ்த்துகள்:)!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin