புதன், 1 ஜூன், 2011

கண்ணோடு காண்பதெல்லாம்.. நடனம் - மேடைப் படங்கள் (பாகம் 2)

கண்ணோடு காண்பதெல்லாம்.. காமிராவுக்குச் சொந்தமில்லை என எனைத் தடுமாற வைத்த அனுபவம் இது:)!

இரவுக் காட்சிகளை எடுக்க என்னென்ன அவசியம் என்பதைப் புரிய வைத்த படங்கள் இவை.

சென்ற வருட ஜனவரியில் விடுமுறைக்காக குமரகம் சென்றிருந்ததும் அதைப் பற்றிய பகிர்வு ‘ஏரிக்கரைப் பூங்காற்றே..’ புகைப்படங்களுக்காக தமிழ்மணம் விருது 2010 வெள்ளிப் பதக்கம் பெற்றதும் உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும்.

அங்கு வேம்பநாடு ஏரிக்கரையில் அமைந்த தாஜ் ரெட்ரீட் விடுதியில் இருக்கும் சிறு நீர்தேக்கத்தைச் சுற்றிலும், மாலைச் சூரியன் மெல்ல மெல்ல ஏரிக்குள் உறங்கச் செல்ல, இருள் படர ஆரம்பிக்கும் ஏழுமணி அளவில் ஆரம்பித்து, நான்கு கிராமத்துபெண்கள் ஆயிரம் அகல்விளக்குகளை ஏற்றி வைப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். (நீர் நிலம் அக்னி வாயு ஆகாயமென பஞ்சபூதங்களையும் தரிசிக்கும் ஐதீகமாம்). சரியாக அத்தனை விளக்குகளும் ஏற்றி முடிக்க ஒருமணி நேரமாவது தேவைப்படுகிறது.

இந்தப் பின்னணியில் அங்கிருக்கும் பேக்கர்ஸ் பங்களாவையொட்டிய புல்வெளியில் தினமும் இரவு எட்டிலிருந்து எட்டரை மணி வரை ஒவ்வொருநாளும் ஒன்றாக மோகினியாட்டம், பரதநாட்டியம், திருவாதிரை எனும் கேரளப் பாரம்பரிய கூட்டுநடனம், வயலின் மெல்லிசை எனக் காண வாய்த்தது. அருகிலேயே உணவுக் கூடாரம். இரவு உணவை சுவைத்தபடி நிகழ்வுகளை தங்கியிருப்பவர் ரசிக்கவே இந்த ஏற்பாடு.

முதல் நாள் மோகினி ஆட்டம். மாலை படகுச் சவாரி முடிந்து ஏரிக்கரை புல்வெளியில் வழங்கப்பட்ட கேரளப் பணியாரங்கள், தேநீர் இவற்றால் வயிறு ‘கம்’ என்று இருப்பதாகவும், பசிக்கவில்லையாதலால் சற்று பொறுத்து வருகிறோமென்றும் கணவரும், மகனும் காட்டேஜில் தங்கி விட நான் மட்டும் ஆர்வமாய் ஆஜராகி விட்டேன் அங்கே எட்டு மணிக்கு. நான்கு நாட்களுமே ஆரம்பத்தில் இருபது பேரும் நிகழ்வு முடியும் நேரம் 40 பேர் வரைக்குமே பார்வையாளர்கள் எனினும் முழு ஈடுபாட்டுடன் கலைஞர்கள் லயித்து ரசித்து தம் கலையோடு ஒன்றி, பார்ப்பவரையும் ஒன்றிட வைத்தார்கள்.

என்ன ஒரு அருமையான சந்தர்ப்பம்? படம் எடுக்க எந்த விதக் கட்டுப்பாடும் கிடையாது. புல்வெளியின் சமதளத்துக்கு தற்காலிகமாய் போடப்பட்டிருந்த மேடையை ஒளியூட்ட ஒரு ஃபோகஸ் விளக்கு(படம் 1). எத்தனை நெருங்கிச் சென்று வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். வழக்கமாக படம் எடுக்க போட்டிக்கு வரும் வெளிநாட்டவர் கூட யாருமில்லை. ஆயினும் ஆயினும்.... :(!

அகல் தீபங்கள் ஆயிரம் பின்னால் ஒளிர்ந்து கொண்டிருக்க அற்புதமாக ஆட ஆரம்பித்தார் நர்த்தகி. ரசித்தபடியே ஆர்வமாகப் படங்களை எடுக்க ஆரம்பித்தேன். எடுத்த படங்களை உடனுக்குடன் பார்க்கப் பார்க்க அதிர்ச்சியில் உறைந்து போனேன். ‘மோகினி ஆட்டமல்லவா? அதனால்தானோ!’ என எண்ணும் வகையில் நர்த்தகியின் கைகள் கழன்று திசைக்கொன்றாக வான் வெளியில் மிதந்து கொண்டிருந்தன. ‘மகிஷாசுரனை அழிக்க வந்த ஸ்வரூபமோ’ எனத் தலைகள் பன்மடங்காகித் தெரிந்தன.

சோனி W80 அளவில் மிகச் சிறியதாயினும் எனக்குக் கைநடுக்கமே ஏற்படாது. பலரும் என் பல படங்களைக் குறிப்பிட்டு ஷேக் இல்லாமல் எடுத்திருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள். அப்போதுதான் . ‘ஓஹோ.., இது பாராட்டுக்குரிய ஒரு திறமை போலும்’ என உணர்ந்திருக்கிறேன்.

என்னதான் பிரச்சனை என முழிந்துக் கொண்டிருக்கையில் கணவரும் மகனும் சாவகாசமாக நடந்து வந்து கூடாரத்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்தார்கள். பீதி அப்பிய முகத்தோடு விரைந்து சென்று ‘காமிராவுக்கு என்னவோ ஆயிட்டு’ என்றேன். முந்தைய பாகத்தில் சொன்னது போல நான்தான் அப்போது காமிராவின் பிற பயன்பாடுகளை முயன்றிராத பேர்வழியாயிற்றே. கணவர் சிரித்து விட்டு ‘இரவுக் காட்சிகளுக்கு ISO மாற்றணும். Night shot mode இருக்குதா பார்’ எனச் சுட்டிக்காட்ட அதன் பிறகு எடுத்த படங்களே இங்கே:
மோகினி ஆட்டம்
#படம் 1#படம் 2#படம் 3#படம் 4


2. பரதம்
#படம் 5#படம் 6
3. திருவாதிரைக்களி
ஓணம் மற்றும் திருவாதிரை விழாக்களில் கேரள நங்கையர் ஆடி மகிழும் இந்நடனம் ‘கைகொட்டிக்களி’ என்றும் அழைக்கப்படுகிறது. (தீபங்களின் ஒளி தனித்துத் தெரிய வேண்டுமென்பதற்காகவோ என்னவோ, இந்த நிகழ்ச்சிக்கு ஃபோகஸ் லைட்டும் இருக்கவில்லை. மிகக் குறைந்த வெளிச்சத்தில் படமாக்க வேண்டியிருந்தது.)
#படம் 7


இப்படியாகத் தொடர்ந்து வந்த நாட்களிலும் ISO மற்றும் twlight mode-ல் ஒருவாறாக . . 'சுமார்' திருப்தியுடன் இரவுப் படபிடிப்பை முடித்தேன். (சுமாராகத் தேறியவற்றையே பகிர்ந்தும் உள்ளேன்).

ஊரிலிருந்து வந்ததும் ‘பிட்டூ..’ என ஓடினேன். இரவுப் புகைப்படக்கலை பற்றிய விளக்கங்கள் இரண்டு (PiT) பதிவுகளில் கிடைத்தன:இரவுப்புகைப்படக்கலை - ஒரு அறிமுகம்; படம் செய்ய விரும்பு- 5 இரவு புகைப்படக்கலை - பாடம் 1.

“இரவு காட்சிகளில் முக்காலியின் அவசியத்தை பல காலம் கழித்துதான் தெரிந்து கொண்டேன்
” என இதிலொரு பதிவில், இன்றைக்கு சென்னையில் புகைப்படக் கண்காட்சிகள் நடந்தும் புகழ்பெற்ற வல்லுநர் ஒருவர் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தது பார்த்து சற்றே ஆறுதலாகவும், கொஞ்சமே கொஞ்சம் அற்ப சந்தோஷத்தைத் தருவதாகவும் இருந்தது:)! DSLR-ல்தான் நல்ல ரிசல்டுக்கு வாய்ப்பு அதிகம் என்றாலும் கூடுதலாக நான் செய்திருக்க வேண்டியது முக்காலிக்கு பதில் ஒரு நாற்காலியில் காமிராவை வைத்து செல்ஃப் டைமர் போட்டிருந்திருக்கலாம்.

போகட்டும். இப்போது முக்காலியுடன் DSLR-ல் இரவுக் காட்சிகளைப் படமாக்குவதிலே தேர்ச்சி பெற்று விட்டக் கதையைதான் உங்களுக்கு ஏற்கனவே சூப்பர் மூன் மற்றும் சித்திரா பெளர்ணமி பதிவுகளில் சொல்லி விட்டுள்ளேனே. நீங்களும் சூப்பர் சூப்பர்னு சொல்லிவிட்டீர்களே:)!
***

சவாலே சமாளி.. பட்டிமன்றம் - மேடைப்படங்கள் (பாகம் 1) இங்கே.

அடுத்த பாகத்துடன் தொடர் நிறைவுறும்:)!

43 கருத்துகள்:

 1. அருமை..அதிலும் மூன்றாவது படம் மிகவும் பிடித்திருந்தது மேடம்..

  பதிலளிநீக்கு
 2. Nice photos taken in dark.

  Maniji has given a comment (which is rare).

  பதிலளிநீக்கு
 3. எல்லாப்படங்களுமே அருமையாக எடுக்கப்பட்டுள்ளன. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 4. எல்லா படங்களும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. அருமை. எடுத்த விதம் பற்றிய பகிர்வும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 6. படங்கள் அழகா வந்திருக்கு! நீங்க கொடுத்திருந்த லிங்கின் மூலம் இரவுபுகைப்பட கலை பற்றி தெரிந்துக்கொண்டேன். பயன் உள்ளதாக இருக்கிறது, மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 7. அழகான புகைப்படங்கள் அக்கா!!

  பதிலளிநீக்கு
 8. மோகன்குமார்..ஏன் இந்த கொலைவெறி? மனதுக்கு பிடித்தால் சொல்லாவிட்டால் எனக்கு தலை வெடித்து விடும்..

  பதிலளிநீக்கு
 9. எல்லா படங்களும் அருமை...நல்லா இருக்கு...

  பதிலளிநீக்கு
 10. படங்கள் அருமையா இருக்கு அக்கா !

  பதிலளிநீக்கு
 11. அருமையான பதிவு.
  அருமையான புகைப்படங்கள்.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. படங்கள் அருமை. எடுத்த விதம் பற்றிய குறிப்பும் உபயோகமாக இருக்கும். PiT பக்கத்தையும் பார்த்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 13. அழகான படங்கள். அருமை. மூன்றாவதும் , கடைசி படமும், மிக அழகு.

  பதிலளிநீக்கு
 14. படங்கள் சூப்பரா இருக்கு.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. மிக நேர்த்தியா எடுத்திருக்கிங்க.... ஆனா எப்போதும் இருக்கிற தரத்தை விட இது ஒளிகுறைவானது போல இருக்குங்க. அதாவது பளிச்ன்னு இல்லையே...

  பதிலளிநீக்கு
 16. அனைத்து படங்களும் அழகாய்.. அருமை..

  பதிலளிநீக்கு
 17. படங்கள் சூப்பரா இருக்கு.வாழ்த்துகள் மேடம்..

  பதிலளிநீக்கு
 18. மணிஜி...... said...
  //அருமை..அதிலும் மூன்றாவது படம் மிகவும் பிடித்திருந்தது மேடம்..//

  நன்றி மணிஜி.

  பதிலளிநீக்கு
 19. MANO நாஞ்சில் மனோ said...
  //படங்கள் சூப்பரா இருக்கு...!!//

  நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 20. மோகன் குமார் said...
  //Nice photos taken in dark.

  Maniji has given a comment (which is rare).//

  நன்றி மோகன் குமார். உங்களுக்குப் பதில் தந்துள்ளார் பாருங்கள்:)!

  பதிலளிநீக்கு
 21. சி.பி.செந்தில்குமார் said...
  //madam 3rd is super,

  if u try the 7th must better//

  நன்றி செந்தில்குமார். ஏழாவதுக்கு ஃபோகஸ் லைட் வெளிச்சமும் இருக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 22. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //எல்லாப்படங்களுமே அருமையாக எடுக்கப்பட்டுள்ளன. பாராட்டுக்கள்.//

  மிக்க நன்றிங்க vgk.

  பதிலளிநீக்கு
 23. சசிகுமார் said...
  //எல்லா படங்களும் அருமை//

  நன்றி சசிகுமார்.

  பதிலளிநீக்கு
 24. ஈரோடு தங்கதுரை said...
  //எல்லா படங்களும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 25. தமிழ் உதயம் said...
  //அருமை. எடுத்த விதம் பற்றிய பகிர்வும் சிறப்பு.//

  நன்றி தமிழ் உதயம்.

  பதிலளிநீக்கு
 26. Priya said...
  //படங்கள் அழகா வந்திருக்கு! நீங்க கொடுத்திருந்த லிங்கின் மூலம் இரவுபுகைப்பட கலை பற்றி தெரிந்துக்கொண்டேன். பயன் உள்ளதாக இருக்கிறது, மிக்க நன்றி!//

  மகிச்சியும் நன்றியும் ப்ரியா.

  பதிலளிநீக்கு
 27. S.Menaga said...
  //அழகான புகைப்படங்கள் அக்கா!!//

  நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 28. குணசேகரன்... said...
  //எல்லா படங்களும் அருமை...நல்லா இருக்கு...//

  நன்றி குணசேகரன்.

  பதிலளிநீக்கு
 29. ஹேமா said...
  //படங்கள் அருமையா இருக்கு அக்கா !//

  மிக்க நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 30. ராஜ நடராஜன் said...
  //கவிதை பொங்குது!//

  நன்றி ராஜ நடராஜன்.

  பதிலளிநீக்கு
 31. Rathnavel said...
  //அருமையான பதிவு.
  அருமையான புகைப்படங்கள்.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.//

  தொடரும் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 32. ஸ்ரீராம். said...
  //படங்கள் அருமை. எடுத்த விதம் பற்றிய குறிப்பும் உபயோகமாக இருக்கும். PiT பக்கத்தையும் பார்த்தேன். நன்றி...

  நல்லது. நன்றி ஸ்ரீராம்:)!

  பதிலளிநீக்கு
 33. அம்பிகா said...
  //அழகான படங்கள். அருமை. மூன்றாவதும் , கடைசி படமும், மிக அழகு.//

  திருவாதிரை நடனம் மிக நேர்த்தியாக ஆடினார்கள் அம்பிகா. மிக்க நன்றி:)!

  பதிலளிநீக்கு
 34. மாதேவி said...
  //அருமையான படங்கள்.//

  நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 35. Kanchana Radhakrishnan said...
  //படங்கள் சூப்பரா இருக்கு.வாழ்த்துகள்.//

  நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 36. சி.கருணாகரசு said...
  //மிக நேர்த்தியா எடுத்திருக்கிங்க.... ஆனா எப்போதும் இருக்கிற தரத்தை விட இது ஒளிகுறைவானது போல இருக்குங்க. அதாவது பளிச்ன்னு இல்லையே...//

  நன்றி. விடிய விடிய நான் சொன்ன கதையை நீங்கள் கேட்கவே இல்லை போலயே நண்பரே:)?

  பதிலளிநீக்கு
 37. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  //அனைத்து படங்களும் அழகாய்.. அருமை..//

  நன்றி கருன்.

  பதிலளிநீக்கு
 38. தமிழ்மணம், இன்ட்லி திரட்டிகளில் வாக்களித்த, buzz, fb-யில் பதிவை விரும்பியிருந்த நட்புகளுக்கு என் நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin