Tuesday, February 2, 2010

தேடல்


ன்னென்ன நம் தேவை
என்கின்ற கோணத்திலேயே
என்றைக்கும் சிந்தித்து
எப்படியோ ஒருமுடிவுக்கும் வந்து..

அதை அடைந்திடும் நோக்கம்
ஒன்றே வாழ்வாகிப் போனாற்போல்
துடிப்புடன் நாளதும் பொழுதும்
ஓயாமல் ஓடியாடி..

ஒருவழியாய் ஆசையது
நிறைவேறும் வேளைதனில்
தேடத்தான் வேண்டியிருக்கிறது
பலனாகக் கிடைத்ததா
துளியேனும் பரவசமென்று!

***

ன்னென்ன தேவையில்லை
எனத் தீர்மானித்து
ஒருதெளிவாய் வாழ்கின்ற
வகையினருக்கு மட்டுமின்றி..

இதுயிதுவே தேவையென
எல்லைகள்
வகுத்துக் கொள்ளாமல்
விடிகின்ற காலைகளை
நன்றிப் புன்னகைசிந்தி
எதிர்கொள்வது போலவே
வருகின்ற வளர்ச்சிகளைச்
சந்தித்தவராய்
செய்யும் பணிகளிலே
கவனத்தைக் குவித்துத்
திறம்பட முடிப்பதையே
பேரானந்தமாய்
உணர்பவருக்கும்..

தேடாமலேதான்
கிடைத்து விடுகிறதோ
நம்மில் பலருக்கும்
தீராத் தேவையாகவே
இருந்துவரும் அந்தப்
பரிபூரண மனநிறைவு?

*** *** ***


படம்: இணையத்திலிருந்து...


யூத்ஃபுல் விகடன் முகப்பில்:விகடன்.காம் முகப்பில்:
93 comments:

 1. "விடிகின்ற காலைகளை
  நன்றிப் புன்னகைசிந்தி
  எதிர்கொள்வது..."
  அவசியமான சிந்தனை.
  அழகான வரிகள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. கவிதை இளமை விகடனில் வெளியான அன்று பதிவர் சரண் என் முந்தைய இடுகையொன்றில் இட்டிருந்த பின்னூட்டம்:

  சரண் said..

  //யூத்புல் விகடனில் தங்கள் கவிதை வெளி வந்ததற்கு வாழ்த்துக்கள்.

  முடிந்தவன் சாதிக்கிறான். முடியாதவன் போதிக்கிறான் என்று சொல்வார்கள். பணம் ஈட்டும் திறனுடையவன் தேவைகள் என்னென்ன என்று பட்டியலிடுகிறான். பூர்த்தி செய்து கொண்டு கணநேர மனநிறைவுடன் அடுத்த தேவைக்காக ஓடுகிறான். திறன் குறைந்தவன் நமக்கு எது தேவையில்லை என்று பட்டியலிட்டு அற்ப திருப்தி அடைகிறான். ஆனால் உள் மனதில் ஏக்கம் இருந்து கொண்டேதான் இருக்கும். இது என்னுடைய கருத்து.//

  --------------------------------

  @ சரண்,

  'தேடல் உள்ள உயிர்களுக்கே தினம் பசி எடுக்கும்’. சான்றோர் சொன்னதே.

  பின்வரும் செவிவழிக் கதையும் எல்லோரும் அறிந்ததே:

  கிராமத்தில் மீன் பிடித்துப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவனை இப்படியா எந்த லட்சியமும் இல்லாமல் இருப்பது எனக் கடிந்து கொண்ட நண்பனைத் திருப்பிக் கேட்பான் அவனது லட்சியம் என்னவென்று. அப்படி ஆகி இப்படி ஆகி அது வாங்கி இது வாங்கி பண்ணை வீடொன்றும் வாங்கி விடுமுறையில் மீன் பிடித்துப் பொழுதைப் போக்குவேன் என்பான் பெருமையாக. அதைத்தான் நான் இப்போதே செய்து கொண்டிருக்கிறேனே என்பான் இவன் பதிலுக்கு அமைதியாக.

  ஆக, இது போதும் என நினைப்பவனுக்கு மனநிறைவும் இருக்கக் கூடும். நீங்கள் சொன்ன மாதிரி ஏக்கமும் இருக்கக் கூடும்.

  தேடல் மட்டுமின்றி தேடலைப் பற்றிய ஆராய்வும் புரிதலும் கூட ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக..!

  விகடனில் வெளிவந்ததுமே வாழ்த்தி இட்ட பின்னூட்டத்திற்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சரண்.

  ReplyDelete
 3. Dr.எம்.கே.முருகானந்தன் said...

  // "விடிகின்ற காலைகளை
  நன்றிப் புன்னகைசிந்தி
  எதிர்கொள்வது..."
  அவசியமான சிந்தனை.
  அழகான வரிகள்.
  வாழ்த்துக்கள்.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டாக்டர்!

  ReplyDelete
 4. படித்தவுடன் எதோ லேசாக உணர்ந்தேன் ராமலக்‌ஷ்மி நன்றி..

  ReplyDelete
 5. பாராட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன்

  ReplyDelete
 6. //தேடாமலேதான்
  கிடைத்து விடுகிறதோ
  நம்மில் பலருக்கும்
  தீராத் தேவையாகவே
  இருந்துவரும் அந்தப்
  பரிபூரண மனநிறைவு?//

  அது எப்படி இடுகையை தேடிப் படிக்காம மனநிறைவு வரும் ?

  ReplyDelete
 7. எல்லாவற்றிலும் தேடல் இல்லாவிட்டால் வாழ்க்கை சுகிக்காது

  அருமையான கவிதை

  வாழ்த்துக்கள் சகோதரி

  விஜய்

  ReplyDelete
 8. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்... கவிதை.. நல்ல சிந்தனை.

  ReplyDelete
 9. /தேடாமலேதான்
  கிடைத்து விடுகிறதோ//

  அப்படிக்கிடைச்சா நல்லாத்தான் இருக்கும் :)

  ReplyDelete
 10. //இதுயிதுவே தேவையென
  எல்லைகள்
  வகுத்துக் கொள்ளாமல்
  விடிகின்ற காலைகளை
  நன்றிப் புன்னகைசிந்தி
  எதிர்கொள்வது போலவே
  வருகின்ற வளர்ச்சிகளைச்
  சந்தித்தவராய்
  செய்யும் பணிகளிலே
  கவனத்தைக் குவித்துத்
  திறம்பட முடிப்பதையே
  பேரானந்தமாய்
  உணர்பவருக்கும்..//

  அருமையா சொன்னீங்க மேடம் எதிர்பாராத விஷயங்களை ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்தாலே வாழ்க்கையில் வெற்றிதான்...

  ReplyDelete
 11. கனவுகள் தேடலுக்கு வழிவகுக்கின்றன் தேடல்கள் சாதனைக்கு வழிவகுக்கின்றன தேடல் இல்லாத மனித வாழ்க்கை வீண்...

  ReplyDelete
 12. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //படித்தவுடன் எதோ லேசாக உணர்ந்தேன் ராமலக்‌ஷ்மி நன்றி..//

  நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 13. goma said...

  //பாராட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன்//

  இங்கேயே உள்ளனவே. நன்றிகள் கோமா.

  ReplyDelete
 14. நசரேயன் said...

  ***/ //தேடாமலேதான்
  கிடைத்து விடுகிறதோ
  நம்மில் பலருக்கும்
  தீராத் தேவையாகவே
  இருந்துவரும் அந்தப்
  பரிபூரண மனநிறைவு?//

  அது எப்படி இடுகையை தேடிப் படிக்காம மனநிறைவு வரும் ?/***

  நீங்க அப்படி வருகிறீர்களா:)? தீர்வைப் பற்றிக் கவலை கொள்ளாமல் தேடலை தொடருங்கள்!!

  ReplyDelete
 15. விஜய் said...

  //எல்லாவற்றிலும் தேடல் இல்லாவிட்டால் வாழ்க்கை சுகிக்காது

  அருமையான கவிதை

  வாழ்த்துக்கள் சகோதரி//

  உண்மைதான் விஜய். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 16. தமிழ் பிரியன் said...

  //முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்... கவிதை.. நல்ல சிந்தனை.//

  இந்த நம்பிக்கையுடன் தொடருவோம். நன்றி தமிழ் பிரியன்.

  ReplyDelete
 17. சின்ன அம்மிணி said...

  ***/ /தேடாமலேதான்
  கிடைத்து விடுகிறதோ//

  அப்படிக்கிடைச்சா நல்லாத்தான் இருக்கும் :)/***

  அப்படி இருந்து பார்ப்போமே:)! நன்றி அம்மிணி.

  ReplyDelete
 18. பிரியமுடன்...வசந்த் said...

  ***/ //இதுயிதுவே தேவையென
  எல்லைகள்
  வகுத்துக் கொள்ளாமல்
  விடிகின்ற காலைகளை
  நன்றிப் புன்னகைசிந்தி
  எதிர்கொள்வது போலவே
  வருகின்ற வளர்ச்சிகளைச்
  சந்தித்தவராய்
  செய்யும் பணிகளிலே
  கவனத்தைக் குவித்துத்
  திறம்பட முடிப்பதையே
  பேரானந்தமாய்
  உணர்பவருக்கும்..//

  அருமையா சொன்னீங்க மேடம் எதிர்பாராத விஷயங்களை ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்தாலே வாழ்க்கையில் வெற்றிதான்.../***

  பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்யும் கீதையின் வழி சுலபமல்லதான். ஆனால் தீர்வுகள் விரும்பத்தகாததாய் வரும் சமயங்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்தால் புன்னகையுடன் அதையும் கடக்க முடிந்தால் நீங்கள் சொன்ன மாதிரி வெற்றிதான்.

  //கனவுகள் தேடலுக்கு வழிவகுக்கின்றன் தேடல்கள் சாதனைக்கு வழிவகுக்கின்றன தேடல் இல்லாத மனித வாழ்க்கை வீண்...//

  உண்மை. கருத்துப் பகிர்வுக்கு நன்றி வசந்த்.

  ReplyDelete
 19. வாழ்த்துகள் ராமலஷ்மி! கவிதை யோசிக்க வைக்குது. முன்பைவிட இப்போதெல்லாம் நல்லா திட்டமிட்டு தன்முனைப்போட உழைத்து வெற்றியோடு பரவசமும் காண்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்! :-)

  ReplyDelete
 20. அழகான வரிகள்...

  வாழ்த்துகளுடன்
  ஆ.ஞானசேகரன்

  ReplyDelete
 21. சந்தனமுல்லை said...

  // வாழ்த்துகள் ராமலஷ்மி! கவிதை யோசிக்க வைக்குது. முன்பைவிட இப்போதெல்லாம் நல்லா திட்டமிட்டு தன்முனைப்போட உழைத்து வெற்றியோடு பரவசமும் காண்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்! :-)//

  ஆமாம் முல்லை. அந்த பரவசத்திலே நின்று விடாமல் 'விடிகின்ற காலைகளை நன்றிப் புன்னகையுடன் எதிர்கொள்வது போல’ அடுத்த வேலையைப் பார்ப்போமெனக் கடக்கிறார்கள்தானே:)? பாராட்டுவோம் அவர்களை!

  ReplyDelete
 22. ஆ.ஞானசேகரன் said...

  //அழகான வரிகள்...

  வாழ்த்துகளுடன்
  ஆ.ஞானசேகரன்//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஞானசேகரன்!

  ReplyDelete
 23. தேடித்தேடி மனநிறைவு அடையாமல் இருக்கும் மனிதர்களின் தேடலில் கிடைத்த சாதனைகளும், தன் தகுதியுணர்ந்து அதற்கேற்ப கிடைக்காததை தேடாமலே மனநிறைவு பெற்ற மனிதர்களின் மனபக்குவமும் நமக்கு பயனுள்ளவைகளே! னு சொல்லலாமாங்க, ராமலக்ஷ்மி?

  நல்ல தத்துவக்கவிதைங்க! :)

  ReplyDelete
 24. வருண் said...

  தேடித்தேடி மனநிறைவு //அடையாமல் இருக்கும் மனிதர்களின் தேடலில் கிடைத்த சாதனைகளும், தன் தகுதியுணர்ந்து அதற்கேற்ப கிடைக்காததை தேடாமலே மனநிறைவு பெற்ற மனிதர்களின் மனபக்குவமும் நமக்கு பயனுள்ளவைகளே! னு சொல்லலாமாங்க, ராமலக்ஷ்மி?//

  அவை பயனுள்ளவையா எனத் தெரியாமலேதான் அடுத்ததா இன்னொரு தேடலையும் சொல்லியிருக்கிறேன் பாருங்க:)! வெவ்வேறு கோணங்களில் தேடிப் பார்த்திருக்கிறேன். இன்னும் பல கூட இருக்கலாம். தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். முல்லை 'அப்படி இல்லை. இரண்டும் சேர்த்தே கிடைக்கிறது' என சொல்லியிருப்பதும் சந்தாஷமான விஷயம்.

  //நல்ல தத்துவக்கவிதைங்க! :)//

  கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் வருண்.

  ReplyDelete
 25. T.V.Radhakrishnan.. said...

  //அருமையான கவிதை//

  நன்றிகள் TVR sir!

  ReplyDelete
 26. ரெம்ப புடிச்சுது...ரெண்டாவது நபர் நானோனு ஒரு நிமிஷம் யோசிக்க வச்சுது...அப்புறம் இன்னும் கொஞ்சம் யோசிச்சதுல இந்த இடுகை உருவாச்சு போட்டி கவிதை எல்லாம் இல்லை..ஏதோ என் மனசுல பட்டது..அவ்ளோ தான்..படிச்சு பாருங்களேன்..

  http://blogsenthilnathan.blogspot.com/2010/02/blog-post.html

  Thanks for the inspiration..hee hee..

  ReplyDelete
 27. அழகான படமும் கவிதையும்.:))

  ReplyDelete
 28. நிஜம்தான் ராமலக்ஷ்மியக்கா...

  திட்டமிட்டுத் தேடத் துவங்கி, வெற்றியடையாமல் போகும்போது ஏற்படும் ஏக்கத்தைக்காட்டிலும்,
  எல்லைக்கோடுகள் எதுவுமின்றி,
  வருகிற வாய்ப்புகளைத் திறமையுடன் பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு தேடப்படும் மனநிறைவு எளிதில் கிடைத்துவிடுமென்றேதோன்றுகிறது.

  அருமையான கவிதை.

  ReplyDelete
 29. செந்தில் நாதன் said...

  //ரெம்ப புடிச்சுது...ரெண்டாவது நபர் நானோனு ஒரு நிமிஷம் யோசிக்க வச்சுது...அப்புறம் இன்னும் கொஞ்சம் யோசிச்சதுல இந்த இடுகை உருவாச்சு போட்டி கவிதை எல்லாம் இல்லை..ஏதோ என் மனசுல பட்டது..அவ்ளோ தான்..படிச்சு பாருங்களேன்..

  http://blogsenthilnathan.blogspot.com/2010/02/blog-post.html

  Thanks for the inspiration..hee hee..//


  அருமை:)! பார்த்தேன் செந்தில்நாதன். அவரவர் கோணத்தில் தேடலைப் பற்றி பகிர்ந்திடக் கேட்டுக் கொண்டிருந்தேன். நீங்கள் கவிதையாகவே தந்து விட்டிருக்கிறீகள். உங்கள் பார்வையும் சிறப்பு.

  ReplyDelete
 30. ஷங்கர்.. said...

  //அழகான படமும் கவிதையும்.:))//

  நன்றி ஷங்கர்!

  ReplyDelete
 31. சுந்தரா said...

  //நிஜம்தான் ராமலக்ஷ்மியக்கா...

  திட்டமிட்டுத் தேடத் துவங்கி, வெற்றியடையாமல் போகும்போது ஏற்படும் ஏக்கத்தைக்காட்டிலும்,
  எல்லைக்கோடுகள் எதுவுமின்றி,
  வருகிற வாய்ப்புகளைத் திறமையுடன் பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு தேடப்படும் மனநிறைவு எளிதில் கிடைத்துவிடுமென்றேதோன்றுகிறது.

  அருமையான கவிதை.//

  எனது மூன்றாவது கோணத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்! பாராட்டுக்கும் நன்றிகள் சுந்தரா!

  ReplyDelete
 32. //தேடாமலேதான்
  கிடைத்து விடுகிறதோ
  நம்மில் பலருக்கும்
  தீராத் தேவையாகவே
  இருந்துவரும் அந்தப்
  பரிபூரண மனநிறைவு?//
  சரியான கேள்விதான் சகோதரி

  ReplyDelete
 33. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. @ பாத்திமா ஜொஹ்ரா,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாத்திமா!

  ReplyDelete
 35. //ஒருவழியாய் ஆசையது
  நிறைவேறும் வேளைதனில்
  தேடத்தான் வேண்டியிருக்கிறது
  பலனாகக் கிடைத்ததா
  துளியேனும் பரவசமென்று!//

  உண்மைதாங்க... சில நேரங்கள்ல இதுமாதிரியும் எண்ணங்கள் வரும்...

  நல்ல கவிதை வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 36. மின்மடலாக..

  //Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'தேடல்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 3rd February 2010 05:00:28 AM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/178998

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team//

  தமிழிஷ் மற்றும் தமிழ்மணம் திரட்டிகளில் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 37. malarvizhi said...

  //அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.//

  நன்றிகள் மலர்விழி.

  ReplyDelete
 38. க.பாலாசி said...

  ***/ //ஒருவழியாய் ஆசையது
  நிறைவேறும் வேளைதனில்
  தேடத்தான் வேண்டியிருக்கிறது
  பலனாகக் கிடைத்ததா
  துளியேனும் பரவசமென்று!//

  உண்மைதாங்க... சில நேரங்கள்ல இதுமாதிரியும் எண்ணங்கள் வரும்.../***

  பலருக்கும் இந்த அனுபவம் இருக்கக் கூடும்தான் பாலாசி.

  // நல்ல கவிதை வாழ்த்துக்கள்...//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 39. கவிதைக்கு தேர்வு செய்திருக்கும் படம் தற்போதைய பின்பனிக்காலத்தில் உதகையிலோ கொடைக்கானலிலோ அதிகாலையில் பற்கள் தந்தியடிக்க வாக்கிங் சென்ற அனுபவத்தை ஏற்படுத்தியது.

  ReplyDelete
 40. @ சரண் என்ற சரவணன்,
  சரண் என்ற பெயரிலிருந்து முழுப்பெயருக்கு மாறி விட்டீர்களா? கவிதையைப் பதியும் முன்னரே தந்த பின்னூட்டத்துக்கும் இப்போதைய வருகைக்கும் நன்றி சரவணன்!

  ReplyDelete
 41. தேடினால் கிடைக்காதது, தேடாமலே கிடைப்பது தான் பேரானந்தம். எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தாலே ஏமாற்றம் இல்லாமல் மன நிறைவு கிடைக்கும்.எதிர்பாராது கிடைக்கும் எல்லாமே மன நிறைவுதான்... சரிதானே...

  ReplyDelete
 42. நன்றாக தேடியிருக்கிறீர்கள், தேடலின் காரணத்தை ஒரு கவிதை வடிவில்!!
  வாசிக்க ஆனந்தமே!!

  ReplyDelete
 43. //தேடாம லேதான்
  கிடைத்து விடுகிறதோ
  நம்மில் பலருக்கும்
  தீராத் தேவையாகவே
  இருந்து வரும் அந்தப்
  பரிபூரண மனநிறைவு?//

  இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைவது தானே மனித மனம்.(நமக்குள் தான் இருக்கு மனநிறைவு)

  கவிதை அருமை ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 44. அழகான தேடல் அருமையான கவிதை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 45. அருமையா சொல்லி இருக்கீங்க அக்கா..

  வாழ்த்துக்கள்.. யூத்ஃபுல் விகடனில் முத்தாரம் சூட்டியதற்கு..

  ReplyDelete
 46. ஸ்ரீராம். said...

  //தேடினால் கிடைக்காதது, தேடாமலே கிடைப்பது தான் பேரானந்தம். எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தாலே ஏமாற்றம் இல்லாமல் மன நிறைவு கிடைக்கும்.எதிர்பாராது கிடைக்கும் எல்லாமே மன நிறைவுதான்... சரிதானே...//

  சரியேதான். எல்லோரையும் ரொம்பக் குழப்பி விட்டேனா:)? உங்கள் புரிதல் நன்று ஸ்ரீராம். மிக்க நன்றி!

  ReplyDelete
 47. இசக்கிமுத்து said...

  //நன்றாக தேடியிருக்கிறீர்கள், தேடலின் காரணத்தை ஒரு கவிதை வடிவில்!!
  வாசிக்க ஆனந்தமே!!//

  உங்களையும் கூட வலையுலகில் காணோமே என்றும் தேடிக் கொண்டிருந்தேன். தங்கள் வருகை எனக்கும் ஆனந்தமே! கருத்துக்கு நன்றி இசக்கி முத்து.

  ReplyDelete
 48. செ.சரவணக்குமார் said...

  //கவிதை மிக அருமை.//

  நன்றி சரவணக்குமார்.

  ReplyDelete
 49. கோமதி அரசு said...

  ***/ //தேடாம லேதான்
  கிடைத்து விடுகிறதோ
  நம்மில் பலருக்கும்
  தீராத் தேவையாகவே
  இருந்து வரும் அந்தப்
  பரிபூரண மனநிறைவு?//

  இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைவது தானே மனித மனம்.(நமக்குள் தான் இருக்கு மனநிறைவு)/***

  அழகாய் சொல்லி விட்டீர்கள்.

  //கவிதை அருமை ராமலக்ஷ்மி.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
 50. senthil said...

  //அழகான தேடல் அருமையான கவிதை வாழ்த்துக்கள்//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் செந்தில்.

  ReplyDelete
 51. சுசி said...

  //அருமையா சொல்லி இருக்கீங்க அக்கா..

  வாழ்த்துக்கள்.. யூத்ஃபுல் விகடனில் முத்தாரம் சூட்டியதற்கு..//

  கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும்
  நன்றிகள் சுசி !

  ReplyDelete
 52. அழகான வரிகள்...யூத்புல் விகடனில் வெளிவந்தற்க்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 53. //ஒருவழியாய் ஆசையது
  நிறைவேறும் வேளைதனில்
  தேடத்தான் வேண்டியிருக்கிறது
  பலனாகக் கிடைத்ததா
  துளியேனும் பரவசமென்று!//

  ராமலெஷ்மி நீங்க காபிரைட் கொடுக்கலைன்னாலும் எனக்கு தோனுன ஒரு மாற்றம் இது

  ஒருவழியாய் ஆசையது
  நிறைவேறும் வேளைதனில்
  தேடத்தான் வேண்டியிருக்கிறது
  அடுத்து எதற்கு
  ஆசைப் படலாமென்று!

  எப்பூடி?

  ReplyDelete
 54. தேடல் இல்லாத வாழ்க்கை அபூர்வம். நல்லா சொல்லியிருக்கீங்க. படமும் ரொம்ப அழகு!

  ReplyDelete
 55. தேடல்களின் தேடல் தொடர்ந்துகொண்டேயிருக்கும் ஏதோ ஒருவகையில் இல்லையா மேடம். அருமை அழகா சொல்லியிருக்கீங்க..

  ReplyDelete
 56. அருமையான கருத்து

  ReplyDelete
 57. Mrs.Menagasathia said...

  // அழகான வரிகள்...யூத்புல் விகடனில் வெளிவந்தற்க்கு வாழ்த்துக்கள்!!//

  கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மேனகசத்யா.

  ReplyDelete
 58. அன்புடன் அருணா said...

  // நல்ல தேடல்!//

  நன்றி அருணா!

  ReplyDelete
 59. புலவன் புலிகேசி said...
  // ராமலெஷ்மி நீங்க காபிரைட் கொடுக்கலைன்னாலும் எனக்கு தோனுன ஒரு மாற்றம் இது

  ஒருவழியாய் ஆசையது
  நிறைவேறும் வேளைதனில்
  தேடத்தான் வேண்டியிருக்கிறது
  அடுத்து எதற்கு
  ஆசைப் படலாமென்று!

  எப்பூடி?//

  அருமை:)! காபிரைட் எதற்கு? அவரவர் தேடலைச் சொல்லுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளேனே!

  ReplyDelete
 60. கவிநயா said...

  //தேடல் இல்லாத வாழ்க்கை அபூர்வம். நல்லா சொல்லியிருக்கீங்க. படமும் ரொம்ப அழகு!//

  ஆமாம் கவிநயா. அபூர்வத்திலும் அபூர்வமே. கருத்துக்கும் படத் தேர்வை ரசித்தமைக்கும் நன்றிகள்!

  ReplyDelete
 61. அன்புடன் மலிக்கா said...

  //தேடல்களின் தேடல் தொடர்ந்துகொண்டேயிருக்கும் ஏதோ ஒருவகையில் இல்லையா மேடம். அருமை அழகா சொல்லியிருக்கீங்க..//

  அதேதான் மலிக்கா. தேவைக்கான தேடல்களோடு இந்தத் தேடலும் ஒருபக்கம் தொடரத்தானே செய்கிறது?
  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

  ReplyDelete
 62. Matangi Mawley said...

  // beautiful!!!//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் மாதங்கி!

  ReplyDelete
 63. திகழ் said...

  //அருமையான கருத்து//

  யூத் விகடனிலும், முந்தைய பதிவொன்றிலும், பதிந்த பின் இங்குமாக தொடரும் உங்கள் ஊக்கத்துக்கு மிகவும் நன்றி திகழ்.

  ReplyDelete
 64. தேடலில் தப்பில்லை.தேடுவது பணம் வசதிகள் மட்டுமே என்றால் எந்த ஜென்மத்திலும் பரிபூரண சந்தோஷம் கிடைக்காது.
  மனிதத்தைத் தேடி அன்பை விதைத்தால் ஊற்றெடுக்கும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 65. @ கண்மணி,

  அப்படிப் போடுங்க கண்மணி:)! சிந்திக்க வைக்கும் உயர்ந்த கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 66. //என்னென்ன நம் தேவை
  என்கின்ற கோணத்திலேயே
  என்றைக்கும் சிந்தித்து
  எப்படியோ ஒருமுடிவுக்கும் வந்து..

  அதை அடைந்திடும் நோக்கம்
  ஒன்றே வாழ்வாகிப் போனாற்போல்
  துடிப்புடன் நாளதும் பொழுதும்
  ஓயாமல் ஓடியாடி..

  ஒருவழியாய் ஆசையது
  நிறைவேறும் வேளைதனில்
  தேடத்தான் வேண்டியிருக்கிறது
  பலனாகக் கிடைத்ததா
  துளியேனும் பரவசமென்று!
  //

  அருமையான வாழ்வியல் வரிகள்.

  ஆனால், எவரேனும் அமர்ந்து இவ்வாறு யோசிக்கத்தான் நேரமேது. இது தற்போதைய வாழ்வியல் வலிகள்.

  //வருகின்ற வளர்ச்சிகளைச்
  சந்தித்தவராய்
  செய்யும் பணிகளிலே
  கவனத்தைக் குவித்துத்
  திறம்பட முடிப்பதையே
  பேரானந்தமாய்
  உணர்பவருக்கும்..//

  'இந்த வகையினர் எண்ணிக்கையில் மிகக்குறைவே' என்று படித்துக் கொண்டே வருகையில் கடைசிப் பத்தியில் அதற்கு விளக்கமும் சொல்லி விட்டீர்கள். அருமை. அருமை.

  ReplyDelete
 67. நல்லாருக்கு அக்கா.

  ReplyDelete
 68. சதங்கா (Sathanga) said...

  //அருமையான வாழ்வியல் வரிகள்.

  ஆனால், எவரேனும் அமர்ந்து இவ்வாறு யோசிக்கத்தான் நேரமேது. இது தற்போதைய வாழ்வியல் வலிகள்.//

  முதல் பாகம் அநேகம் பேருக்கு பொருந்தக் கூடியதே. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தற்போதைய வாழ்வியல் வலிகளை உணர்ந்து பலர் சொல்லவும் கேட்டிருக்கிறோம்.

  ***/ //வருகின்ற வளர்ச்சிகளைச்
  சந்தித்தவராய்
  செய்யும் பணிகளிலே
  கவனத்தைக் குவித்துத்
  திறம்பட முடிப்பதையே
  பேரானந்தமாய்
  உணர்பவருக்கும்..//

  'இந்த வகையினர் எண்ணிக்கையில் மிகக்குறைவே' என்று படித்துக் கொண்டே வருகையில் கடைசிப் பத்தியில் அதற்கு விளக்கமும் சொல்லி விட்டீர்கள். அருமை. அருமை./***

  குறைவாயினும் நிறைவாய் வாழும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியதும் இருக்கிறதுதானே? என் ஆராய்வை ஆராய்ந்து தந்திருக்கும் கருத்துக்களுக்கு நன்றிகள் சதங்கா!

  ReplyDelete
 69. ஹுஸைனம்மா said...

  //நல்லாருக்கு அக்கா.//

  மிக்க நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 70. அன்பு ராமலக்ஷ்மி,
  தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தால் தான் வாழ்வு சுவையாகும்.
  கண்மணி சொல்வது போல எதைத் தேடுகிறோம் என்பதைப் பொறுத்தே வாழ்வின் நிம்மதி.
  அந்த நிலையை அடையும் வரை பல சூழலில் மாட்டி
  மீண்டு வந்து மீண்டும் இலக்கு நோக்கிப் பயணம் ஆரம்பிக்க வேண்டும்.
  பலரையும் சிந்திக்க வைக்கும் வரிகளைக் கவிதையாகத் தந்து மகிழ்விக்கிறீர்கள் அம்மா. வாழ்த்துகள்.

  ReplyDelete
 71. வல்லிசிம்ஹன் said...

  //அன்பு ராமலக்ஷ்மி,
  தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தால் தான் வாழ்வு சுவையாகும்.
  கண்மணி சொல்வது போல எதைத் தேடுகிறோம் என்பதைப் பொறுத்தே வாழ்வின் நிம்மதி.//

  உண்மைதான்மா சிந்திக்க வைக்கும் உயரிய கருத்து. இந்தக் கவிதைக்கு முதலில் ‘தேவைகளும் தேடல்களும்’ என்றே தலைப்பிட்டிருந்தேன். தேவைகள் பொருட்டான தேடல்களையே முன்னிறுத்தியும் விட்டேன். ஆனால் மனநிறைவு என வருகையில் எதைத் தேடுகிறோம் என்பதே முன்னிலை வகிக்கிறது கண்மணி சொல்லியது போல.

  //அந்த நிலையை அடையும் வரை பல சூழலில் மாட்டி
  மீண்டு வந்து மீண்டும் இலக்கு நோக்கிப் பயணம் ஆரம்பிக்க வேண்டும்.//

  அனுபவஸ்தர் நீங்கள் கூறுவது மிகச் சரி.

  //பலரையும் சிந்திக்க வைக்கும் வரிகளைக் கவிதையாகத் தந்து மகிழ்விக்கிறீர்கள் அம்மா. வாழ்த்துகள்.//

  தேடல் தொடரட்டும் என்றே கேள்விக்குறியுடன் முடித்து வைத்தேன். பலரும் தத்தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது மேலும் சிந்திக்க வைக்கிறது. உங்கள் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 72. வாழ்வியல் தேடல்கள் அருமை ராமலெஷ்மி

  ReplyDelete
 73. @ thenammailakshmanan,

  மிக்க நன்றி தேனம்மை.

  ReplyDelete
 74. அழகான வரிகள் ராமலக்ஷ்மி, ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 75. எனது குறும்படத்தைப்பார்த்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி. youtubeல் jagadeesan3d என்ற பெயரில் எனது 2நிமிடஅனிமேசன் படம் ஒன்று உள்ளது பாருங்கள்.

  ReplyDelete
 76. சிங்கக்குட்டி said...

  //அழகான வரிகள் ராமலக்ஷ்மி, ரொம்ப நல்லா இருக்கு.//

  நன்றி சிங்கக்குட்டி!

  ReplyDelete
 77. @ ரவிக்குமார்,

  அவசியம் பார்க்கிறேன்.

  ReplyDelete
 78. தேடாமலேதான்
  கிடைத்து விடுகிறதோ
  நம்மில் பலருக்கும்
  தீராத் தேவையாகவே
  இருந்துவரும் அந்தப்
  பரிபூரண மனநிறைவு?


  ...............மன நிறைவு, மனதின் ஆளுகைக்குள். வெளியில் தேடி அலைந்தால்?

  அக்கா, அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 79. Chitra said...

  // ...............மன நிறைவு, மனதின் ஆளுகைக்குள். வெளியில் தேடி அலைந்தால்?//

  அழகாய் சொன்னீர்கள்.

  //அக்கா, அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.//

  கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சித்ரா.

  ReplyDelete
 80. //ஒருவழியாய் ஆசையது
  நிறைவேறும் வேளைதனில்
  தேடத்தான் வேண்டியிருக்கிறது
  பலனாகக் கிடைத்ததா
  துளியேனும் பரவசமென்று!//

  நிஜமான வரிகள்.
  புகைபடம் மிகவும் அருமை.

  ReplyDelete
 81. நல்லா இருக்கு..., இல்மை விகடனில் கவிதை வெளியானதற்க்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 82. @ பேநா மூடி,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பேநா மூடி.

  ReplyDelete
 83. //ஒருவழியாய் ஆசையது
  நிறைவேறும் வேளைதனில்
  தேடத்தான் வேண்டியிருக்கிறது
  பலனாகக் கிடைத்ததா
  துளியேனும் பரவசமென்று!//

  எல்லாருக்கும் பொருந்தும்.. நைஸ்..

  ReplyDelete
 84. @ SanjaiGandhi™ ,

  நீண்ட இடைவெளிக்குப் பிறகான வருகைக்கும் கருத்துக்கு நன்றி சஞ்சய்!

  ReplyDelete
 85. தேடலோ...தேடல்.....

  பின்னூட்டம் போடவும் தேடல்...

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 86. @ கண்ணகி,

  வாழ்த்துக்களுடன் தேடலைத் தேடி வந்தமைக்கு நன்றி:)!

  ReplyDelete
 87. /*தேடத்தான் வேண்டியிருக்கிறது
  பலனாகக் கிடைத்ததா
  துளியேனும் பரவசமென்று!
  */

  /*தேடாமலேதான்
  கிடைத்து விடுகிறதோ
  நம்மில் பலருக்கும்
  தீராத் தேவையாகவே
  இருந்துவரும் அந்தப்
  பரிபூரண மனநிறைவு?
  */
  உண்மை. தேடல் கவிதை மனதில் புது தேடலைத் துவக்கி விட்டது.

  ReplyDelete
 88. @ அமுதா,

  வாங்க அமுதா. தேடலுக்கு முடிவே இல்லைதான். தொடர்வோம்:)! கருத்துக்கு நன்றி!

  ReplyDelete
 89. nice one maam.

  Find my scribbling at:

  http://encounter-ekambaram-ips.blogspot.com/

  keep blogging

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin