#1 பாரம்பரியமும் படிக்கட்டுகளும்
இந்த ஆண்டு என் தங்கையின் இல்லத்தில் அழகுற அமைக்கப்பட்ட கொலுவின் சில காட்சிகளை பகிர்ந்து கொள்கிறேன். 2024ஆம் ஆண்டில் கருப்பொருளாக எடுத்துக் கொண்ட மகாபாரதக் காட்சிகளே இன்னும் சற்று விரிவாக்கம் பெற்றிருந்தன. நடுவில் உள்ள படிக்கட்டு பொம்மைகள் பெரும்பாலும் முன்னர் போலவே அமைந்துள்ளன. இவற்றை முந்தைய ஆண்டுகளில் தனித்தனிக் காட்சிகளாக ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். ஆகையால் இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட சில மகாபாரதக் காட்சிகள், மற்றும் வேறு கோணங்களில், ஒளியமைப்புகளில் எடுக்கப்பட்ட படங்கள்... உங்களுடனான பகிர்வாகவும் எனக்கான சேமிப்பாகவும் இங்கே இடம் பெறுகின்றன.
#2
#3
#4
#5
பிள்ளைகளுக்காக பரிசுகளுடன் பிள்ளையார்
#6
வியாசர் சொல்ல, விநாயகர் எழுத,
பிரதான படிக்கட்டுக்கு இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த மகாபாரதக் காட்சிகள்:
#7
#8
#9
#10
#11
அர்ஜுனனின் கலக்கமும்
கண்ணனின் விளக்கமும்
#12
இன்ப துன்பம், லாப நஷ்டம், வெற்றி தோல்வி
ஆகியவற்றைச் சமமாகக் கருதி,
கடமையின் பொருட்டுப் போராடு.
அவ்வாறு செயல்படுகையில்
பாவம் வந்து சேராது.
— பகவத் கீதை 2.38
நவராத்திரியின் உணர்வு, நம் பாரம்பரியத்தின் செழுமை, நெஞ்சில் பதிந்த கலாச்சார நினைவுகள் ஆகியவற்றோடு... தங்கையின் படைப்பாற்றலும், அர்ப்பணிப்பும் ஒன்றிணைந்து இக்கொலு மிளிர்ந்தது.
விரைவில், மேலும் சில மகாபாரதக் காட்சிகளைப் பாகம் இரண்டில் பார்ப்போம்.
***
#13
எங்கள் இல்லத்தில்
இவ்வருடம் எழுந்தருளிய
கலைமகள்
#14
ஏடுகள் அடுக்கி சரஸ்வதி பூஜை
***




-2.jpg)








கொலு தரிசனம் அருமை. தங்கை வீட்டு கொலு தரிசனம், உங்கள் வீட்டு சரஸ்வதி அம்மன் தரிசனம் அருமை.
பதிலளிநீக்குமகாபாரத கதை சொல்லும் பொம்மைகள், கீதை உரைக்கும் கண்ணன் அருமை.
ரிஷப வாகனத்தில் அம்மையும், அப்பனும் காட்சி தருவது அருமை.
அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
அழகான கொலு. ஒவ்வொரு பொம்மையும் ஒரு வித அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குஅற்புதம். மகாபாரதக் காட்சிகளில் தங்கையின் உழைப்பு பிரமிக்கத்தக்கது. மிக அருமை. உங்கள் வீட்டு கலைமகளும் அருமை.
பதிலளிநீக்கு