உள்நிறைய எல்லாம் உவப்பு
தோட்டத்தின் மற்றவையெல்லாம்
உறக்கத்தில் ஆழ்ந்திருக்க
வெளிறிய ஓர் அரும்பு
அமைதியான இருளுக்குள்
மெல்ல அவிழத் தொடங்கியது
ஒவ்வொரு இதழாக—
இரவு தானே ஒரு ரகசியத்தை
விரித்துக் காட்டுவது போல.
நள்ளிரவுக்குள்
இருளுக்கு எதிரே வெண்மையாய்
மென்மையாய்
ஒளிரும் படிகமாய்
தோட்டமெங்கும் மணம் கமழ.
மலர்வைத் தெரிவிக்க
ஞாயிற்றின் ஒளியில்லை
வண்டுகளின் ரீங்காரமில்லை.
முழு நிலவும்
அசைவற்ற இலைகளும்
விழித்திருக்கும் பேறுபெற்ற
சில விழிகளும் மட்டுமே.
இத்தோட்டத்திற்கு அப்பால் எங்கோ
வேறொரு நள்ளிரவு வானின் கீழ்
வேறொரு வெண்கமலம்
விரிந்துகொண்டிருக்கலாம்—
தொலைதூர வீடொன்றில்
வேறொரு நகரத்தில்
உலகின் வேறொரு மூலையில்
ஒன்றையொன்று அறியாமல்
ஒரே இரவுக்குள் மலர்ந்து
உறங்கும் பூமியில்
தம் மணத்தைப் பொழிந்தபடி
நிலவே சாட்சியாக.
விலக மனமின்றி
என் மலரருகே நின்றிருந்தேன்
இன்னும் சற்று நேரம்,
வெண்ணிதழ்கள் நிலவொளியைத்
தாங்கி நிற்பதைப் பார்த்தபடி.
இருளோடு கலந்த நறுமணம்
உள்நிறைய எல்லாம் உவப்பு.
*
படம்: ராமலக்ஷ்மி
*


அருமை.
பதிலளிநீக்குப்ரம்மகமலம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. நல்ல மணமாக இருக்குமா?
மலர் மட்டுமல்ல, அது மலர்ந்ததும் சுற்றுப்புறம் முழுக்க அப்படி மணக்கும். நன்றி ஸ்ரீராம்.
நீக்குஸ்ரீராம், எனது “இந்த”ப் பதிவில் பிரம்மக் கமலத்தின் மணத்தை கொரியரில் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளீர்கள் :) .
நீக்குஆமாம். பார்த்தேன். அப்பவும் வாசனை பற்றி கவலை பட்டிருக்கிறேன்.
நீக்குஅதேதான், நானும் நினைத்தேன் :). மீள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குப்ரம்மகமலம் மலருக்கு உங்கள்கவிதை அருமை.
பதிலளிநீக்குஇரவு நேரம் மணம் பரப்பும். கோவையில் எங்கள் ஓர்ப்படி வீட்டில் போஅன் மாதம் பூத்தது. படம் அனுப்பி வைத்தார்கள். நம் பதிவர் ஜி.எம் பாலசுப்பிரமணியம் சார் வீட்டில் பூத்து இருந்தது.
பிரம்மக் கமலம் குறித்து 2012 தொடங்கி 2025 வரையிலுமாக ஐந்து பதிவுகள் இங்கு பகிர்ந்துள்ளேன். எனக்கான ஒரு சேமிப்புக்காகவும், முந்தைய பதிவின் இணைப்பு இது... இதிலிருந்தே அதற்கு முந்தைய பதிவுகளுக்கு செல்லவும் இணைப்புகள் உள்ளன. அப்பதிவுகளில் விரிவான தகவல்களும் உள்ளன.
பதிலளிநீக்குhttps://tamilamudam.blogspot.com/2025/06/blog-post_8.html
ஆம், ஜிஎம்பி அவர்களும் நானும் ஒரே சமயத்தில் பிரம்மக்கமலம் பூத்த வேளையில் பதிவுகள் இட்டிருக்கிறோம்.
தங்கள் கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
ஆமாம். ஜி எம் பி அவர்கள் பதிவிலும் உங்கள் பதிவிலும் இதை அப்போது பார்த்த ஞாபகம் இருக்கிறது
நீக்கு