ஞாயிறு, 6 ஜூலை, 2025

செல்வாக்கின் சின்னம்.. சௌமஹல்லா மாளிகை ( i ) - ஹைதராபாத் (6)

 சௌமஹல்லா மாளிகை:

#1

ஹைதராபாத் நகரில் சார்மினாருக்கு மிக அருகில் உள்ள சௌமஹல்லா அரண்மனை அல்லது சௌமஹல்லாத் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க மாளிகைகளில் ஒன்று. செல்வம், வலிமை மற்றும் அதிகாரத்தின் அடையாளமாக

#2

ஹைதராபாத் நிஜாம், அசாஃப் உத்-தௌலா மீர் சலாபத் ஜங் என்பவரால் இந்த அரண்மனைகள் 1750-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டன.  அப்சல் உத்-தௌலா மற்றும் ஐந்தாம் அசப் ஜா ஆட்சிக் காலத்தில் முறையே 1857 மற்றும் 1869-ஆம் ஆண்டுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இவை நிஜாம் அரசர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்துள்ளன. 

#3


#4


"Chowmahalla"  (Chow = நான்கு, Mahalla = மாளிகை) என்ற பெயர் "நான்கு மாளிகைகள்" என உருது, இந்தி மற்றும் பாரசீக மொழிகளில் அர்த்தம் கொண்டது. நான்கு அரண்மனைகளும் முறையே அஃப்ஸல் மஹால், மஹ்தாப் மஹால், தஹ்னியத் மஹால் மற்றும் ஆஃப்தாப் மஹால் என அழைக்கப்படுகின்றன. நவீன பாணியில் ஒன்றுக்கொன்று எதிரெதிராக இருக்கும்படி சமச்சீராக கட்டப்பட்டுள்ளன. அரண்மனைகளுக்கு இடையேயுள்ள முன்முற்றத்தில் அழகிய குளமும் தோட்டமும் உள்ளது. 

#5

#6


பலரும் ஜோடி ஜோடியாகக் காத்திருந்து காத்திருந்து இந்தப் பிரமாண்ட சன்னலின் பின்னணியில் தற்படம் எடுத்து கொண்டிருந்தார்கள்.

#7

கீழிருப்பது அடுத்த ஜோடி நுழையும் முன் சற்றே விலகியிருக்க வேண்டிக் கொண்டு எடுத்த படம்:)!

#8
ரசவை (தர்பார் மண்டபம்):

பளிங்குத் தரை, தூண்கள், சரவிளக்குகள், சாளரங்களுடன் கூடிய அதி உயரமான கூரை பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கின்றன. 

#9


#10

பெல்ஜியம் படிகங்களால் ஆன பத்தொன்பது சரவிளக்குகளும் சமீப காலத்தில் அரசவை மண்டபத்தின் பொலிவைக் கூட்டுவதற்காக, பழையவற்றை அகற்றி விட்டுப் புதிதாக நிறுவப்பட்டவை.

#11

#12

#13


ரசர்களைப் பற்றிய குறிப்புகளும், படங்களும் கொண்ட காட்சியக அறையின் நுழைவாயில். (அடுத்த பாகத்தில் அரசர்களின் படங்களைப் பகிருகிறேன்):

#14

படம் 8_ல் இருக்கும் சன்னலின் உட்புறத் தோற்றம், கூரை வேலைப்பாட்டுடன்:

#15

அழகிய சாளரம்:

#16


பெரிய கூடத்தில், மன்னர்கள் பயன்படுத்திய பீங்கான் உணவுக் கோப்பைகள் பார்வைக்கு:

#17


அந்தக் கூடத்திலுள்ள அழகிய வளைவுகளின் வழியே தர்பார் மண்டபம், இரு பார்வைகள்... :

#18



#19


ரண்மனையின் மேற்கு பக்கத்தில் உள்ள நுழைவாயில் அருகே ஒரு கடிகாரக் கோபுரம் உள்ளது. இது கிலாஃபத் கடிகாரம் என்று அழைக்கப்படுகிறது. 

#20

கோபுரம் மூன்று மாடிகளை கொண்ட உயரமான கட்டிடம். முகலாய பாணியிலான மாடங்கள், ஜரோக்கா வகை ஜன்னல்கள் மற்றும் அரை கோள வடிவக் கும்பங்களைக் கொண்டது.

#21


இந்தக் கடிகாரம் 1750_ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இக்கடிகாரம் பொதுமக்கள் நேரம் பார்த்துக் கொள்ள உதவும் வகையில், நான்கு திசைகளிலிருந்து பார்க்கும்படியாக சிந்தித்து வடிவமைக்கப்பட்டது. 

கடிகார நிபுணர்களின் குடும்பம் ஒன்று ஒவ்வொரு வாரமும் இந்த இயந்திரக் கடிகாரத்திற்குச் சாவி கொடுத்துப் பராமரித்து வருகிறது.

#22


ற்போது இந்த மாளிகை ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது என்பதோடு அதன் உரிமை இன்னும் குடும்பத்தினரிடமே உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

#23

(வடக்கு நுழைவாயில் வரவேற்பு வளைவு)

2010_ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இந்த சௌமஹல்லா மாளிகையை பாரம்பரியப் பண்பாட்டுத் தலமாக அறிவித்து சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

*

பாகம் இரண்டில், அருங்காட்சியகத்துப் படங்களைப் பார்ப்போம்.

*



5 கருத்துகள்:

  1. விவரங்களுடன் படங்கள் அருமை. விவரங்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. மாளிகையின் படங்கள் பிரமிப்பைத் தருகின்றன. பிரம்மாண்டம் என்பதோடு அரசர்கள் எல்லாரும் ரொம்பவே கலை ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருப்பார்களோ? வடிவங்களைப் பார்த்தால் அப்படித் தெரிகிறது. இதை எல்லாம் கட்டி முடிக்க எத்தனை வருடங்கள் ஆனதோ? எவ்வளவு பணியாட்கள் வேலை செய்திருப்பார்கள் இல்லையா?

    அசாத்தியமான அழகான வடிவங்கள் கட்டுமானங்கள். பிரமிப்பு. கடிகாரம் மக்கள் பார்த்துக் கொள்ளும்படி வடிவமைத்ததும் சிறப்பு. யுனெஸ்கோவின் சான்றிதழ் கிடைத்ததும் நல்ல விஷயம் சுற்றுலாப் பயணிகள் வருவார்களே!
    .

    இப்பவும் உரிமை குடும்பத்தினரிடமே இருப்பதும் ஆச்சரியமான தகவல்.

    மற்ற தகவல்களும் பார்த்துக் கொண்டேன், ராமலஷ்மி.

    படங்களை ரசித்துப் பார்த்தேன். குறித்துக் கொண்டேன் ஒரு வேளை ஹைதராபாத் போகும் வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம் என்று

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆம், கட்டுமானங்கள் பிரமிக்க வைக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் பார்க்க வேண்டிய இடம். கருத்துகளுக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான மாளிகை.
    அழகான கட்டிடம். யுனஸ்கோ நிறுவனம் பராம்பரிய பண்பாட்டு தலமாக அறிவித்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
    அழகான தர்பார் காட்சி.
    சரவிளக்குகள் அருமை.
    கடிகாரத்தை இன்னும் பராமரித்து வருவது அருமையான பெருமையான செய்தி.
    முன்னால் சாளரங்கள் பால்கனி போன்ற அம்மைப்பு அழகு.
    நேரில் பார்த்த நிறைவு .

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin