சார்மினார்:
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாதின் முக்கிய இடங்களில் முதலிடமாக, நகரின் பெருமையாகவும் அடையாளச் சின்னமாகவும் விளங்குவது சார்மினார். இந்தியாவின் பிரசித்தி பெற்ற கலை நயம் மிக்கக் கட்டிடங்களில் இதுவும் ஒன்று.
#1
[பிரபல லாட் பஜாரை நோக்கி அமைந்த கிழக்குப் புற நுழைவாயில்.]
1591ஆம் ஆண்டு, பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதற்கான அடையாளமாக, அதனை கொண்டாடும் நோக்கத்துடன் முகம்மது குலி குட்ப் ஷா என்பவரால் கட்டப்பட்டது. முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. துறைமுக நகரான மசூலிப்பட்டினத்தையும், கோல்கொண்டாவையும் இணைக்கின்ற சாலையில் அமைந்துள்ளது. சார்மினாரிலிருந்து கோல்கொண்டா கோட்டைக்கு ஒரு சுரங்கப்பாதையும் உண்டு என்றும் கூறப்படுகிறது.
சார்மினார் ஹைதராபாத்தில் கட்டப்பட்ட முதல் பல மாடிக் கட்டிடம். இதனை மையமாக வைத்தே பழமை வாய்ந்த நகரமான ஹைதராபாத் உருவாக்கப்பட்டது. இது மேல் மாடிப் பகுதியில் சிறிய பள்ளிவாசல் உள்ளது.
[வடக்குப் புற நுழைவாயில்.]
உருது வார்த்தைகளான “சார் - நான்கு”, “மினார் - கோபுரம்” ஆக, “நான்கு கோபுரங்கள்” எனப் பொருள் படும்படி சார்மினார் என அழைக்கப்படுகிறது. நான்கு கோபுரங்களும் (அல்லது தூண்களும்) நான்கு வளைவுகளால் இணைக்கப்பட்டு சதுர வடிவ கட்டிடமாகத் திகழ்கிறது.
#3
[நான்கு கோபுரங்களும் தெரியும்படி எடுப்பதற்காக சாலையில் இருந்த கடைகளைக் கடந்து ஒரு மூலைக்குச் சென்று எடுத்த படம். வடக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்கள் தெரிகின்றன.]
சார்மினாரின் நான்கு திசைகளிலும் சில மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள, சதுர வடிவத்தில் கட்டப்பட்ட வரவேற்பு வழிகள் (Archways) ‘சார் கமான்’ (char kaman) என அழைக்கப்படுகின்றன. அவை முறையே சார்மினார் கமான், கலி கமான், மச்லி கமான் மற்றும் செஹர்-இ-பாட்டில் கி கமான் ஆகும்.
பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் நகரத்தை வடிவமைக்கும் போது சார்மினாரை மையமாகக் கொண்டு இவற்றையும் நிர்மாணித்துள்ளார்கள். இவை 50 அடி உயரம் கொண்டவை.
படத்தில் இருப்பது சார்மினாருக்கு நேர் எதிரே அமைந்த செல்லும் தெற்குப்புற வரவேற்பு வளைவாகிய “சார்மினார் கமான்”.
சார்மினாரை வடிவமைக்க பெர்சியாவிலிருந்து கட்டிடக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆக, இது இந்திய மற்றும் இஸ்லாமிய பாணி இரண்டும் கலந்த வகையில் காணப்படுகிறது.
கட்டிடம் சதுர வடிவத்தில், ஒவ்வொரு பக்கமும் 20 மீட்டர் நீளமுடையது. நான்கு புறமும் உள்ள வாசல்கள் உயர்ந்த வளைவுகளைக் கொண்டவை. ஒவ்வொரு வாசலும் அதனைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளைப் பார்த்து இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
கிரானைட் மற்றும் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டது.
#10
உச்சியில் தெரியும் வட்ட வடிவமே மேல் தளம். உற்று நோக்கினால் அங்கே சாளரங்கள் இருப்பது தெரியும். மக்கள் அங்கு வரை சென்று ஹைதராபாத் நகரத்தைக் கண்டு களிக்க முடியும். கீழே எட்டிப் பார்த்து ஏற முடியாதவர்களை ஏங்க வைக்கவும் முடியும்:)!
மேல் தளத்தை அடைய 149 படிகளைக் கொண்டு வளைந்து வளைந்து செல்லும் வகையிலான படிக்கட்டு நான்கு கோபுரங்களுக்கு உட்புறத்திலேயே உள்ளது.
#12
ஆனால் ஒவ்வொரு படிக்கட்டும் செங்குத்தாகவும், பிடித்து ஏற கம்பிகள் ஏதுமின்றி இருந்தன. ஏறமுடியாமல் போய் விட்டால் பின்னால் மக்கள் வந்து கொண்டிருக்கையில் நாம் பாதியில் திரும்பி வரக் கூட முடியாத ஒற்றையடிப் பாதை போலிருந்தது. பத்து படிகள் போல் ஏறிவிட்டு இதை நினைத்து பயந்து போய் பின்னால் நின்றவர்களைக் கீழே இறங்கக் கேட்டுக் கொண்டு வெளியில் வந்து விட்டேன்:).
சார்மினாரை பார்க்கச் சுற்றுலா வந்திருந்த பள்ளிக் குழந்தைகள்.
சார்மினாரிலிருந்து நான்கு திசைகளிலும் பிரியும் சாலைகளில் மேற்கே இருப்பது லாட் பஜார் (அல்லது சுரி பஜார்). இது வளையல்களுக்குப் பெயர் பெற்ற இடம்.
ஹைதராபாத் ‘முத்துகளின் நகரம்’ என அழைக்கப்படுவதற்கு ஏற்ப முத்துமாலைகள் விற்பனை செய்யும் கடைகளை நிறையப் பார்க்க முடிந்தது. கைகளில் ஏந்தியபடி சாலைகளிலும் விற்பனை செய்கிறார்கள். மற்றும் ஆடை, அணிகலன்களை விற்பனை செய்பவர்கள் ரசனையுடன் அவற்றை அடுக்கி விற்பது பார்ப்பவர்களைக் கவருகின்றது.
பள்ளி வாசலாகவும் இயங்கிய இந்த நினைவுச் சின்னத்தின் வரலாற்று வயது 450 ஆண்டுகளுக்கு மேலாகிறது. வெவ்வேறு மதங்கள் ஒரு இடத்தில் எப்படி அமைதியாக இணைந்து இயங்க முடியும் என்பதற்கு இதன் அருகாமையில் உள்ள சிறிய பாக்யலட்சுமி கோயிலும் அங்கே நடைபெறும் வழிபாடுகளும் உதாரணம்.
தொன்மை வாய்ந்த இக்கட்டிடம் தற்போது இக்கட்டிடம் இந்திய தொல்பொருள் துறையின் பராமரிப்பில் உள்ளது.
*
இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.
*
(ஹைதராபாத் பயணப் பதிவுகள்.. தொடரும்..)
*
தமிழ்நாட்டிலேயே நிறைய இடங்கள் பார்த்ததில்லை! ஹைதராபாத் எங்கே செல்லப்போகிறேன்! உங்கள் படங்கள் வாயிலாக பார்த்து விவரம் தெரிந்து கொள்கிறேன்!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குமிக அழகான பள்ளிவாசல். வேலை நடக்கிறதா? கடைசி படத்தில் சாரமா? அல்லது அலங்கார விளக்குகளா?
பதிலளிநீக்குநான்கு வாசல்களும் உள்ளே மேல் விதானமும் அழகு. மேலே போகும் படிக்கட்டு பிடிமானம் இல்லையென்றாலும் சுவற்றை பிடித்து கொண்டு நடக்க முடியாதா ராமலக்ஷ்மி?
ஜெயப்பூரில் சில கோட்டைகள் மேலே போக இப்படித்தான் இருந்தது, ஜூம்மா மசூதி மேலே போக படிக்கட்டு இப்படித்தான் இருக்கும்.
விற்பனை செய்பவர்கள் கலா ரசனை மிகுந்தவர்கள் போலும் !
450 ஆண்டுகளை கடந்து இன்னும் கம்பீரமாக நிற்கிறது.
படங்கள் எல்லாம் அழகு.
ஆம், கடைசி படத்தில் தெரிவது சாரம். கட்டிடத்தின் தெற்கு நோக்கிய ஒரு பக்கத்தில் மட்டும் புனரமைப்பு வேலை நடந்து கொண்டிருந்தது.
பதிலளிநீக்குபடிகள் மேலே செல்லச் செல்ல இன்னும் செங்குத்தாக உயரமாக இருக்குமா, எப்படி எனும் தெளிவு இல்லாததாலும், நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு தொடர்ந்து குழுக்களாக மக்கள் வந்தபடியே இருந்ததாலும், பின்னால் வருகிறவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியுமா எனும் சந்தேகத்தினாலும், குறிப்பாக இந்த விஷயங்களில் இப்போது தன்னம்பிக்கை குறைந்து விட்டபடியாலும் :( , ஏற முற்படவில்லை. மற்றபடி அதிக படிகள் ஒரு பொருட்டல்ல. திருப்பரங்குன்றத்திலும் படிகள் பல இடங்களில் செங்குத்தாகவே இருந்தன ஆயினும் நல்ல கைப்பிடிகள் இருந்தன. அதே போல் ஹைதையின்
பிர்லா மந்திரில் மெதுவாக ஏறி விட்டேன். இங்கே தயக்கமாகவே இருந்தது. ஆனால் நீங்கள் சொல்ல வருவது போல் மீண்டும் இந்த வாய்ப்புகள் கிடைப்பது அரிதுதான்.
ஜெய்ப்பூர் கோட்டைகள் பக்கெட் லிஸ்டில் உள்ளன:).
ஆம், பல விற்பனையாளர்கள் பொருட்களை ரசனையுடன் அடுக்கியிருந்தது பார்க்கவே அழகு.
கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
சார் - மினார் - ஆமாம் அதே பொருள்தான் நீங்கள் சொல்லியிருப்பது போல்...
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அருமை....ரசித்துப் பார்த்தேன். உள்ளே மேலே சாளர்ங்கள் தெரிவதும், கோபுரங்கள் எல்லாமே அழகா இருக்கு. நீங்க எடுத்த விதம் கோணங்கள் இன்னும் கவர்ச்சி.
கு செல்வதற்கான படிகள் பயமுறுத்தினாலும், ஏறிப்பார் என்று மனம் போட்டி போடுகிறது. செல்ல வேண்டும் கண்டிப்பாக. கணவரின் அண்ணன் மகள் அங்குதான் வேலை செய்கிறாள். கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள். ஒரு நாள் எல்லாம் வரக் கூடாது வேஸ்ட்... அதுக்கு நீ வரவே வேண்டாம்ன்னு வேறு அன்புக் கட்டளை!!! ஆனால் தற்போது அதிகநாள் செல்ல முடியாத சூழல்.
வளையல் கடை இழுக்கிறது. நான்கு சைடும் பஜார் இருக்கு...வாங்குபவர்களைக் கவர என்ன அழகாக அடுக்கி வைத்திருக்கிறார்கள்!
கடைசிப் படத்தில் - வேலைகள் நடப்பது தெரிகிறது.
என் லிஸ்டில் உள்ள இடம். (உன் லிஸ்டில் என்ன இடம் தான் இல்லை என்று என் உள் மனம் நக்கலடிக்கிறது!!)
கீதா
சார் - மினார் - ஆமாம் அதே பொருள்தான் நீங்கள் சொல்லியிருப்பது போல்...இஸ்லாமிய கலைவடிவங்களில் இந்தச் மினர் க
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அருமை....ரசித்துப் பார்த்தேன். உள்ளே மேலே சாளர்ங்கள் தெரிவதும், கோபுரங்கள் எல்லாமே அழகா இருக்கு. நீங்க எடுத்த விதம் கோணங்கள் இன்னும் கவர்ச்சி.
கு செல்வதற்கான படிகள் பயமுறுத்தினாலும், ஏறிப்பார் என்று மனம் போட்டி போடுகிறது. செல்ல வேண்டும் கண்டிப்பாக. கணவரின் அண்ணன் மகள் அங்குதான் வேலை செய்கிறாள். கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள். ஒரு நாள் எல்லாம் வரக் கூடாது வேஸ்ட்... அதுக்கு நீ வரவே வேண்டாம்ன்னு வேறு அன்புக் கட்டளை!!! ஆனால் தற்போது அதிகநாள் செல்ல முடியாத சூழல்.
வளையல் கடை இழுக்கிறது. நான்கு சைடும் பஜார் இருக்கு...வாங்குபவர்களைக் கவர என்ன அழகாக அடுக்கி வைத்திருக்கிறார்கள்!
கடைசிப் படத்தில் - வேலைகள் நடப்பது தெரிகிறது.
என் லிஸ்டில் உள்ள இடம். (உன் லிஸ்டில் என்ன இடம் தான் இல்லை என்று என் உள் மனம் நக்கலடிக்கிறது!!)
கீதா
வாய்ப்பு இருக்கும் போது சென்று வந்து விடுங்கள். ஒரு நாள் நிச்சயமாகப் போதாது. லிஸ்ட் நீண்டு கொண்டேதான் செல்லும்:). முடிந்த வரை முயன்றிடுவோம்.
நீக்குபெர்ஷிய கலை தனித்துவமானது ஆனால் பெர்ஷியாவை இஸ்லாமியர் பிடித்த பிறகு இரு கலைகளும் கொஞ்சம் தழுவியதுண்டு. இஸ்லாமிய கலைவடிவங்களில் இந்த மினர் இடம் பெற்றிருப்பதைக் காண முடியும்.
பதிலளிநீக்குபெர்ஷியன் எம்ப்ராய்டரி கலையும் தனித்துவமான ஒன்று,
கீதா
கருத்துகளுக்கு நன்றி கீதா.
நீக்கு