ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

சொந்தப் பயணத்தை அரவணைப்பவர்கள்

 #1 

“காட்டு மலர்களைப் போல, 
உங்களை நீங்கள் வளர அனுமதியுங்கள், 
மற்றவர் நீங்கள் வளர முடியாது என 
நினைத்த இடங்களிலும் கூட.”

#2
“நன்றி உணர்வில் 
அமைதியைப் பெறுகிறோம்; 
நம்பிக்கையில், 
ஆற்றலைப் பெறுகிறோம்.”

#3
“நன்றியுணர்வு, 
நம்மிடம் உள்ளதைப் போதுமானதாக 
உணரச் செய்கிறது.”

#4
“ஒவ்வொரு காட்டுப் பூவும், 
சுதந்திரமான ஆன்மாவின் ஓர் அடையாளம்.”

#5
“எழ வேண்டும் என உறுதி கொண்ட பெண்ணை விடவும், 
சக்தி வாய்ந்த சக்தி எதுவும் இல்லை.” 
_ W.E.B. Du Bois

#6
“சாதாரண தருணங்களிலும் கூட நேர்த்தியாக மலருங்கள்; 
ஏனெனில், தங்கள் சொந்தப் பயணத்தை அரவணைப்பவர்களிடத்தில் 
அழகு பிரகாசமாக மிளிர்கிறது.”
**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]
***

12 கருத்துகள்:

  1. ஒரு சிறிய ...இல்லை, பெரிய இடைவெளிக்குப் பின் மறுபடியும் வரிகளும் படங்களுமான பகிர்வு. 

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், மூன்றரை மாதங்களுக்குப் பிறகு :). நிறுத்தி விட எண்ணியிருந்தேன். அவ்வப்போது பதியலாம் என எண்ணியுள்ளேன். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அழகான பூக்களின் படங்களும் அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. பூக்களும் பொன்மொழிகளும் சிறப்பு. பிள்ளையார் கூடுதலாய் ரசிக்க வைக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன பிள்ளையார், பார்த்ததும் கவர்ந்தார். நன்றி கீதா:).

      நீக்கு
  4. “நன்றி உணர்வில்
    அமைதியைப் பெறுகிறோம்;
    நம்பிக்கையில்,
    ஆற்றலைப் பெறுகிறோம்.”
    அருமை!👏💐🙏

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொரு வாசகமும் கவனத்தை ஈர்க்கின்றன, படங்களை காண விடாமல்

    பதிலளிநீக்கு
  6. படங்களும் வாசகமும் சூப்பர். அதுவும் பிள்ளையாரைச் சுற்றி செம்பருத்தி செமையா இருக்கு. அடுத்தாப்ல அந்த வலப்பக்க மூலையிலிருந்து நெட்டுக்கா இருக்கும் படம் வாவ்!

    எல்லாமே ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin