ஞாயிறு, 8 டிசம்பர், 2024

ஆத்தங்குடி அரண்மனை லெட்சுமி விலாஸ் - பாகம் 1

 பிள்ளையார்பட்டி வரை வந்ததும், பயணத் திட்டத்தில் இல்லாத காரைக்குடி, ஆத்தங்குடி ஆகியனவும் திடீரெனப் பட்டியலில் சேர்ந்து கொண்டன. காரைக்குடி கானாடுகாத்தான் அரண்மனையைப் படம் எடுக்க நான் விரும்பிய போது, அங்கு உள்ளே செல்ல முன் அனுமதி இல்லை பெற்றிருக்க வேண்டுமெனத் தெரிய வர,  அதே போன்ற மற்றொரு அரண்மனையான  ஆத்தங்குடி லெட்சுமி விலாஸ் சென்று வந்தோம். 

ஆத்தங்குடி (டைல்ஸ்) தரைக் கற்களுக்கும் பெயர் பெற்ற ஊர். சுற்றி வர ஊரின் பல இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை நாம்  சென்று பார்க்கலாம். அடுத்து காரைக்குடி செல்ல வேண்டியிருந்த அவசரத்தினால் தவறவிட வேண்டியதாயிற்று. அடுத்த முறை செல்ல வாய்த்தால் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் சேர்த்தாயிற்று. ஆத்தங்குடி அரண்மனையின் ஒவ்வொரு பகுதியிலும் பயன்படுத்தப் பட்டிருக்கும் வெவ்வேறு விதமான தரைக் கற்களைக் குறிப்பாகக் கவனித்தால் இங்குள்ள இத்தொழிலின் சிறப்பு புரிய வரும். படங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் இரண்டு பாகங்களாக பகிருகிறேன்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியிலிருந்து சுமார் 24 கிமீ தொலைவில் உள்ள ஆத்தங்குடி எனும் செட்டிநாட்டுச் சிற்றூரில் உள்ளது  ஆத்தங்குடி அரண்மனை. லெட்சுமி விலாஸ் மற்றும் பெரிய வீடு என்றும் இது அழைக்கப்படுகிறது. 

#1

தெருவின் தொடக்கத்தில் பரந்து விரிந்து நிற்கும் இந்த அரண்மனை சிறிய நுழை வாயிலைக் கொண்டு அமைந்துள்ளது. 

#2 இடப்புறம்:


#3 வலப்புறம்:


நுழை வாயில் நிலைக்கதவு பர்மா தேக்குகளைக் கொண்டு அமைக்கப்பட்டவையாகும். உள்ளே படிகளில் ஏறும்போது இரு பக்கங்களிலும் முற்றம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து இரு புறங்களிலும் பெரிய திண்ணைகள் காணப்படுகின்றன. தேக்கு மரத்தால் ஆன பெரிய கதவுகள் உள்ளன. கதவுகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

#4 தேக்கு மர நிலைக்கதவுகள்:


#5 இடப்புற முற்றத்தில் தூண்களுடனான திண்ணை:

#6 முற்றத்தின் வலப்புற  திண்ணை:

இந்தத் திண்ணையிலிருந்து வெளிப்புறமாகப் பார்க்கையில்..

#7 


பிரதான நிலைக் கதவுகளைக் கடந்து உள்ளே சென்றதும் பெரிய செவ்வக வடிவிலான அறை அமைந்துள்ளது. ஒரு கோயிலின் அமைப்பைப் போன்ற கட்டுமானங்கள் காணப்படுகின்றன. மேல் கூரையில் ரசாயனக் கலவையைக் கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன.  பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களால் ஆன டைல்ஸ் கற்களை இந்த அரண்மனையில் காணமுடிகிறது. சில இடங்களில் ‘டச்சு’ நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட பளிங்கு கற்கள் காணப்படுகின்றன. அங்கேயே தயாராகும் ஆத்தங்குடி டைல்ஸ் கற்களையும் பதித்துள்ளனர். 

#7 செவ்வக வடிவிலான பிரதான அறை, உப்பரிகை:

#8 உப்பரிகை மற்றும் மேற்கூரை சன்னல்கள்

#9 மேற்கூரை 


பிரதான அறையிலிருந்து உள் முற்றத்துக்கு நுழையும் வாயிலுக்கு இருபுறமும் நீண்ட தாழ்வாரங்கள் உள்ளன.

#10



#11

அரண்மனை உட்புறம் மின்விசிறி இல்லாமல் இதமாக இருக்கும் அளவிற்கு அமைக்கப்பட்டிருப்பது உண்மை. வெளியிலிருக்கும் வெம்மையை உள்ளே உணர முடியவில்லை. 


#12 பிரதான அறையின் இடப்புறம் அமைந்த உணவுக் கூடம்:

#13



#14 பிரதான அறையின் வலப்புறம் அமைந்த மற்றுமோர் நீண்ட கூடம்:

இந்தக் கூடத்துக்கு அழகூட்டுகின்றன நுழைந்ததும் இடப்புற ஆரம்பத்திலும், கூடத்தின் இறுதியிலும் அமைந்த இது போன்ற தூண்களும், அந்நாளைய அலமாரிகளும்..

#15

#16

#17


அரண்மனையின் உட்புற மேற்கூரையானது சந்திரவட்டப் பிறை வடிவில் தேக்கு மரங்களைக் கொண்டு அமைந்துள்ளது. அவற்றில் யாழி, யானை போன்ற சிற்பங்கள்  உள்ளன. மேற்கூரைச் சுவற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் போன்ற பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவை ஆன்மிக சுற்றுலாத் தலங்களின் மீதான அவர்களின் ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன. 

தரைத் தளத்தில் சுவற்றில் பொருத்தப்பட்டு அமைக்கப்படுகின்ற ஜப்பான் ‘பூ’ பாணியில் அமைந்த கற்கள் அழகுக்கு மெருகூட்டுகின்றன. 

அறையின் மேற்கூரையில் தேக்கு மரங்கள் உள்ளன. அவற்றைத் தாங்கும் வகையில் ‘பொருசு’ மர தூண்கள் கம்பீரமாகக் காணப்படுகின்றன. மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள லண்டன் ஓடுகள் மழைக்காலத்தில் சேகரமாகும் மழை நீரை விரயம் ஆக்காமல் ஆள் உயர அண்டா போன்ற கிடாரத்தில் சேகரிக்கின்றன. மழை நீர் சேகரிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவர்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

*

[இணையத்தில் சேகரித்தத் தகவல்களை, சுருக்கமாக எனது எழுத்தில் தந்துள்ளேன்.]

**

அடுத்த பாகத்தில், வெயில் கம்பளம் விரித்திருக்கும் இந்த அழகிய நடுமுற்றத்தைச் சுற்றி வருவோம்:

#18

***









11 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. படங்கள் 7 மற்றும் 18_யை கவனியுங்கள். மாடி உள்ளது. ஆனால் மேலே செல்ல அனுமதி இல்லை.

      நீக்கு
  2. இவ்வளவு பெரிய அரண்மனையில் மிகச் சில அறைகள்தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுமுற்றத்தின் இருபுறமும், இரண்டு பெரிய கூடங்களின் பக்கவாட்டில், பிரதான அறையிலிருந்து மற்றும் மாடியில் எனப் பல அறைகள் உள்ளன. மொத்தம் 60 அறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

      நீக்கு
  3. அபாரமான வேலைப்பாடுகளுடன் அரண்மனை ஆடம்பரமாக இருக்கிறது.  இதைக் கட்டி தீனி போடவே பெரிய செலவாகும் போல... 

    இவ்வளவு பெரிய வீடு பிரமிப்பைத் தந்தாலும் அங்கு வசிப்பது போர் அடித்து விடும் என்றும் தோன்றுகிறது.. 

    நோ...நோ  அப்படிப் பார்க்காதீங்க...  நிஜமாதான் சொல்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பராமரிப்பு சிரமமே. போர் அடிப்பது.. அவரவர் மனநிலையைப் பொறுத்தது :). நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. யம்மாடியோவ் எவ்வளவு பெரிய அரண்மனை. அழகு, கலை நயம் மிக்க ஆடம்பரமான அமைப்பு.

    இத்தனையும் பராமரிக்கவும் நிறைய செலவு ஆகியிருக்குமோ அத்தனை செல்வந்தராக இருந்திருப்பாங்க ஆமாம் அரண்மனை னா அப்படித்தானே இல்லை பெரிய குடும்பமாக அவங்களே எல்லா வேலைகளும் செய்பவர்களாக இருந்திருப்பார்கள் போலும்!

    இந்த லெட்சுமி விலாஸ் பல படங்களில் நடித்திருக்கிறதோ? பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. படங்களில் பார்த்தது போல...அந்த முற்றம்....எல்லாம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் பார்வைக்கு அனுமதிக் கட்டணத்துடன் திறந்து விடப்பட்ட அரண்மனைகள் மிகச் சில. காரைக்குடி, ஆத்தங்குடியில் இதுபோலப் பல பெரிய வீடுகள் உள்ளனவாம். காரைக்குடியில் சில வீடுகள் இப்போது உணவு மற்றும் தங்கும் விடுதிகளாகவும் செயல்பட்டு வருகின்றன.

      நன்றி கீதா.

      நீக்கு
    2. ஆம், இந்த வீடு பல படங்களில் இடம் பெற்றுள்ளது. அந்த விவரங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

      நீக்கு
  5. சினிமாக்களில் இந்த வீடு இடம்பெறும். பார்த்து இருக்கிறேன் சினிமாக்களில்.
    இப்போது நீங்கள் பார்த்து படங்களை மிக அழகாய் எடுத்து பதிவு செய்து இருப்பதற்கு நன்றி.
    அடுத்த பதிவை பார்க்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா. அடுத்த பாகத்தை விரைவில் பதிகிறேன்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin