பாகம் 1: “இங்கே.”
அரண்மனையின் உட்பகுதியில் அழகிய பெரிய முற்றம் உள்ளது.
#1 பிரதான அறையிலிருந்து முற்றுத்துக்குள் நுழையும் வழி:
#2 நீல வானும் சூரிய ஒளிக் கம்பளமும்..:
(உட்புறத்திலிருந்து வெளிவாயில் நோக்கி எடுக்கப்பட்ட படம்)
#3 அகன்ற பார்வையில்..
#4 உப்பரிகை
முன் முற்றம் போலவே நடு முற்றத்திலும் உள்ளே நுழைந்ததும் இடது வலது பக்கங்களில் திண்ணைகள் உள்ளன.
#5 இடப்புறத் திண்ணை:
முற்றத்தைச் சுற்றி அமைந்துள்ள கூடத்தின் வலது மற்றும் இடது புறங்களில் பல சிறிய அறைகள் காணப்படுகின்றன.
#7 இடப்புறத் தாழ்வாரம்
#8 இடப்புறத்திலிருந்து வலப்புறத் தாழ்வாரம், ஒரு பார்வை:
#9 முற்றத்தின் வலப்புறத் தாழ்வாரம்:
#10 வலப்புறத்திலிருந்து இடப்புறத் தாழ்வாரம், ஒரு பார்வை:
சென்ற பதிவில் பார்த்த பிரதான அறையைச் சுற்றியும், இந்த முற்றத்தைச் சுற்றியும் ஏராளமான அறைகள் இருப்பதைப் பார்க்கலாம். மொத்தம் இங்கே 60 அறைகளும், மாளிகை மொத்தத்திற்கும் 600 ஜன்னல்களும் இருப்பதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு அறைக்கும் இடையே காணப்படும் ஜன்னல்களின் மேற்பகுதியில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஜன்னல்களில் மட்டுமின்றி சுவற்றிலும், கூரையிலும் கூடப் பலவித ஓவியங்கள் உள்ளன.
#11
ஆத்தங்குடி அரண்மனை அப்பகுதியில் உள்ளவர்களால் ‘சினிமா வீடு’ என்றும் அறியப்படுகிறது. இணையத்தில் கிடைத்தத் தகவலின்படி, இங்கே படமாக்கப்பட்ட சில திரைப்படங்களின் பெயர்கள்: அரண்மனைக் கிளி, சைவம், வள்ளல், சாமி, பிரிவோம் சந்திப்போம், ராசி மற்றும் சண்டைக் கோழி.
சிறந்த கட்டுமானம், நுணுக்கமான வேலைப்பாடுகள் ஆகியவற்றிற்காக அவசியம் பார்க்க வேண்டிய இடம் ஆத்தங்குடி லெட்சுமி விலாஸ்.
#12
முற்றம் மிக கவர்கிறது. வெவ்வேறு கோணங்களில் அந்த இடத்தை படம் பிடித்திருப்பதிலிருந்து உங்களையும் அந்த இடம் ரொம்ப கவர்ந்திருப்பது தெரிகிறது.
பதிலளிநீக்குதாழ்வாரங்கள் நல்ல அகலமாக தெரிகின்றன.
சாமி படமும், சண்டைக்கோழி படமும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த கட்டிடம் நினைவில்லை. முறையே வில்லன் வீடும், கதாநாயகன் விடுமோ....
நீக்குஆம், வளைத்து வளைத்து எடுக்கத் தூண்டியது இந்த அழகான முற்றம்:). நன்றி ஸ்ரீராம்.
நீங்கள் சொல்லியிருப்பவற்றோடு மேலும் ஒரு படமும் பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த வீடு நினைவுக்கு வரவில்லை:). மீண்டும் பார்த்தால்தான் தெரியும்.
முற்றம் உள்ள வீடுகள் மிகவும் பிடிக்கும் இப்படி நடுவில் சுற்றிலும் வெராண்டா போன்று......நாலு கெட்டு எட்டு கெட்டு என்று கேரளத்தில் சொல்வது இப்படி முற்றம் நடுவில் இருக்கும். ரொம்ப பிடிக்கும். ;உங்க படங்கள் அட்டகாசம். பல விதமாக எடுத்திருக்கீங்க. படங்கள் எல்லாம் செம
பதிலளிநீக்குகீதா
முற்றம் வீட்டுக்கு அழகு. கருத்துகளுக்கு நன்றி கீதா.
நீக்கு