உப்பு நீர்
--------------
கன்னங்கள் காய்ந்த பின்னரும்
குறையவில்லை உதடுகளில்
உப்புச் சுவை.
ஏவாளுக்குதான் ஏற்பட்டிருக்க வேண்டும்
ஆண்கள் அழுது பார்த்ததில்லை அவள்
இன்றளவிலும்.
ஏனிந்தக் கண்ணீர் தனக்கு மட்டுமே
நிரந்தரம் என்றாயிற்று, வினவுகிறாள்
வீங்கியிருந்த விழிகளை
நிலைக்கண்ணாடியில் நோக்கியவள்.
இத்துணைக் கனத்த விழிகளைக் கொண்ட
தவளைகளோ
இங்கனம் மருளும் விழிகளைக் கொண்ட
மான்களோ அழுமா
தெரியவில்லை அவளுக்கு.
வாலைச் சுழற்றிச் சுழற்றி
குடுவைக்குள் சுற்றி வந்த மீன்கள்
ஒவ்வொன்றின் கண்களையும்
உற்றுப் பார்த்து
உறுதிபடுத்திக் கொள்கிறாள்:
ஆம்,
அவள் மட்டுமே சுமந்து திரிகிறாள்
ஒரு சொத்தினைப் போல
தன் சரீரத்திற்குள்
ஒரு மகா சமுத்திரத்தை!
*
[படம்: நன்றியுடன்.. இணையத்திலிருந்து..]
*
நன்றி கீற்று!
அனைவரும் பார்க்க
பதிலளிநீக்குஆண்கள் அழுவதில்லை.
அது அவமானம்
என்று சொல்லியே
வளர்க்கப்பட்டிருக்கிறான்
பெண்ணினத்தால்!
அவனுக்குள்ளும் உண்டு
ஒரு அணைக்கட்டு
உடைவதற்கு தயாராய்
எப்போதும்..
மறுக்கவில்லை. இங்கே, ‘அவள்’ பார்த்ததில்லை. தங்கள் கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குகூகுள் க்ரோமில் என் ஆண்டிவைரஸ் இணையத்தை தடுத்து நிறுத்தி சோதித்ததால் Firefox வழியாக வந்தால் என்ன அனாமதேயராக்கி விட்டது! மேலே உள்ள பின்னூட்டத்தை தந்தது நான் தான்!
பதிலளிநீக்குஅனைவரும் பார்க்க
ஆண்கள் அழுவதில்லை.
அது அவமானம்
என்று சொல்லியே
வளர்க்கப்பட்டிருக்கிறான்
பெண்ணினத்தால்!
அவனுக்குள்ளும் உண்டு
ஒரு அணைக்கட்டு
உடைவதற்கு தயாராய்
எப்போதும்
நீங்களாகதான் இருக்குமென ஊகித்துக் கேட்கவிருந்தேன்:). அதற்குள் உறுதிப்படுத்தி விட்டீர்கள். நன்றி ஸ்ரீராம்.
நீக்குஸ்ரீராம் உங்கள் வரிகளையும் ரசித்தேன். அசாத்தியம். என்னிடம் ஒன்று இருக்கிறதே...அதற்கு
நீக்குகீதா
குறிப்பாகக் கடைசி 4 வரிகள்!
நீக்குநன்றி.
நீக்குஆமாம், மகா சமுத்திரம் சரிதான்.
பதிலளிநீக்குநிறைய பெண்கள் இதை சுமந்து திரிவது உண்மைதான்.
கீற்றில் இடபெற்றதற்கு வாழ்த்துகள்.
கருத்துக்கு மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குநீங்கள் எழுதிய "வரம்" கவிதையின் வரிகள் நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குநீரிலே பிறந்து
நீரிலே வாழ்ந்து
நீரிலேயே தொலைந்து போக
வாங்கி வந்த சாபமே
அவற்றின் வரமும்.
ஆனால், சிலருக்கு வலியுடன், சமுத்திரத்தைச் சுமக்கும் வலிமையையும் தருகிறது.
2017_ஆம் ஆண்டு தென்றல் பத்திரிகையில் வெளியான வரம் கவிதையை நினைவு கூர்ந்திருப்பது இனிய ஆச்சரியம். மிக்க நன்றி :)!
நீக்கு/சமுத்திரத்தைச் சுமக்கும் வலிமை/ ஆம், உண்மை.
ராமலக்ஷ்மி, நேற்றே பதிவு வந்ததை பார்த்து விட்டேன் வர வேண்டும் என்று நினைத்து வேலைப் பளுவில் விட்டுவிட்டேன்.
பதிலளிநீக்குகவிதை அசாத்தியம். ரொம்ப ரசித்தேன். கையில் தூக்கும் பாரத்தை விட மன பாரம் அதிக அழுத்தம்.
கீதா
/மனப் பாரம் அதிக அழுத்தம்./ உண்மை.
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு நன்றி கீதா.
மனதை தொடும் கவிதை கீற்றில் வந்ததற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
பதிலளிநீக்கு