பெரியவர் சிறியவர் பாகுபாடின்றிப் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருப்பது சாக்லேட்.
டேபிள் டாப் ஒளிப்படங்களாக இந்த வார ஞாயிறு படத்தொகுப்பு:
தொழில் நுட்பப்படிப் பார்த்தால் இவற்றைச் சாக்லேட் எனச் சொல்ல முடியாது. ஆனால் சுவையானவை. கோக்கோ திடப் பொருட்கள் ஏதுமின்றி கோக்கோ வெண்ணெய், சர்க்கரை மற்றும் சிறிது வெனிலா எசன்ஸ் சேர்த்துத் தயாரிக்கப்படுவவை. கேல்சியம் நிறைந்தவை. எதிர்ப்பு சக்தியையும் குடல் ஆரோக்கியத்தையும் அதிகரிப்பவை. கொலஸ்ட்ராலைக் குறைப்பவை. இரத்தத்தில் சர்க்கரையின் நிலையை மேம்படுத்த வல்லவை. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் சுவாசப் பிரச்சனைகளுக்குத் தீர்க்கவும் கூட உதவியாக இருப்பவை என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் :).
#1
ப்ரவுன் சாக்லேட்
"குழந்தைப் பருவ மலரும் நினைவுகள், பெருவாழ்வு, இன்சுவை மற்றும் சாக்லேட் சாதாரண உணவை விடவும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது - அது ஒரு சிகிச்சை."
_ Christelle Le Ru
#2
வெள்ளை சாக்லேட்
எனக்கு எப்போதுமே வெள்ளை சாக்லேட்களின் சுவையில் பிடித்தம் இருந்ததில்லை. ப்ரவுன் சாக்லேட் பிடிக்குமானாலும் இப்போது அவற்றை ஒதுக்கி விட்டு டார்க் சாக்லேட்கள் பக்கம் சாய்ந்து விட்டேன் :). அவற்றின் பலன்களையும் பார்த்து விடுவோம்.
#3
டார்க் சாக்லேட்
கேன்சர் மற்றும் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள். தாதுப் பொருட்களில் செழிப்பானவை. தினசரி ஆரோக்கியத்திற்கு நல்லவை. இதய நோய் ஆபத்துக்களைக் குறைப்பவை. உடல் எடையைக் குறைக்க உதவுபவை. மூளையின் செயல்பாட்டையும் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துபவை. இரத்த அழுத்தத்தைக் குறைப்பவை.
#4
வார்த்தைகள் அற்ற ஆறுதல்,
சாக்லேட்!
_ Ursula Kohaupt
#5
"சாக்லேட் என்பது
நீங்கள் உண்ண முடிகிற
ஒரு சந்தோஷம்.”
_ Ursula Kohaupt
#6
"வாழ்க்கை என்பது ஒரு சாக்லேட் பெட்டியைப் போன்றது.
உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறதென என
ஒருபோதும் அறிந்திட இயலாது."
எனக்கு வெள்ளை சாக்லேட்டில்தான் இஷ்டம்! காட்பரிஸ் சுவை எனக்குப் பிடிப்பதில்லை.
பதிலளிநீக்குகாட்பரிஸ் பிடிக்காதது ஆச்சரியமே. வெள்ளை சாக்லேட் நம் சிறு பிராயத்தில் கிடைத்த நினைவில்லை.
நீக்குநன்றி ஸ்ரீராம்.
ஆஹா சாக்லேட்! ஹையோ சாதாரணமாகப் பார்க்கும் சாக்லேட்டுகள் உங்கள் கேமரா மற்றும் லைட்டிங் வாவ்! போட வைக்கின்றன! படங்களுக்குத் துணையாக அழகாக வைக்கப்பட்து உட்பட! உங்கள் கற்பனை அபாரம், ராமலக்ஷ்மி!
பதிலளிநீக்குநானும் டார்க் சாக்கலேட் பக்கம்!!!!
கீதா
நன்றி கீதா :). டார்க் சாக்லேட் பக்கம் சென்றதற்கு டயட்டும் ஒரு காரணம்:).
நீக்குஎனக்கு எல்லா வித சாக்லேட்டும் பிடிக்கும்! :) சிறு வயதிலிருந்தே நிறைய சாப்பிட்டு இருக்கிறேன் - தற்போது தவிர்த்து விடுகிறேன்.
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகு.
டயட்தான் காரணமெனில் டார்க் சாக்லேட்டைத் தொடரலாம். நன்றி வெங்கட்.
நீக்குபடங்கள் அழகு.
பதிலளிநீக்குஎனக்கு டார்க் சாக்லேட் தவிர வேறொன்றும் பிடிப்பதில்லை.
நன்றி மாதேவி.
நீக்கு