கமலா பஸீன் / Kamla Bhasin (ஏப்ரல் 1946 – செப்டம்பர் 2021)
நான்கு மாதங்களுக்கு முன்னர் 25 செப்டம்பர் 2021 அன்று தனது 75_வது வயதில் காலமானார் கவிஞரும் எழுத்தாளருமான கமலா பஸீன். கடந்த அரை நூற்றாண்டில் பெண் கல்வி, பெண் உரிமை குறித்த விழிப்புணர்வு பரவ, மாற்றங்கள் நிகழ இவரது எழுத்துகளும் செயல்பாடுகளும் ஆற்றிய பங்கு, இவர் காலமான பொழுது மீண்டும் பெருமளவில் பேசவும் போற்றவும் பட்டது.
பெண்ணிய ஆர்வலராக 1970_ல் தொடங்கிய பாஸினின் சமூகப் பணி பாலினம், கல்வி, மனித வளர்ச்சி, ஊடகங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டிருந்தது.
பஸீன் இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளாதாரம் படித்தவர். பின்னர் மேற்கு ஜெர்மனியில் உள்ள மியூன்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்தவர். அதன் பிறகு பேட் ஹொன்னெப்பில் வளரும் நாடுகளுக்கான ஜெர்மன் அறக்கட்டளையின் சார்புநிலை மையத்தில் ஒரு ஆண்டு கற்பித்தார். இந்தியாவுக்குத் திரும்பி, அங்கு கற்றுக்கொண்டவற்றைச் செயல்படுத்த விரும்பினார். எனவே, இராஜஸ்தானில் செயல்படும் சேவா மந்திர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். இந்திய சமுதாயத்தில் சாதி எவ்வாறு ஒரு சமூக நோயாக உள்ளது என்பதையும், ஆட்சியில் கூட பாகுபாடு எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் அங்கிருந்த நாட்களில் புரிந்து கொண்டார்.
சங்கத் அமைப்பில் பணியாற்றுவதற்காக 2002 ஆம் ஆண்டு ஐ.நா.வில் தனது வேலையை ராஜினாமா செய்தவர். சங்கத்தில் நிறுவன உறுப்பினராகவும் ஆலோசகராகவும் செயல் பட்டவர். பெண்ணியக் கோட்பாட்டையும் சமூக செயல்பாட்டையும் இணைத்து ஆதரித்து வாதாடுவதில் நம்பிக்கை கொண்டவர். பழங்குடி மற்றும் உழைக்கும் சமூகங்களைச் சேர்ந்த பெண்களுடன் இவர் பணியாற்றியுள்ளார். குறைந்த கல்வியறிவு விகிதங்களைக் கொண்ட சமூகங்களுடன் நெருங்கிச் செல்ல பெரும்பாலும் சுவரொட்டிகள், நாடகங்கள்,நடனங்கள் எனப் பிற எழுத்தறிவு அற்ற முறைகளைப் பயன்படுத்தியவர்.
பெண்ணியம் என்பதே மேற்கத்தியக் கோட்பாடு எனும் கருத்தை நிராகரித்தவர். இந்தியப் பெண்ணியத்தின் வேர்கள் அதன் சொந்த போராட்டங்கள் மற்றும் இன்னல்களில் இருந்து கிளை விட்ட ஒன்று என்பதை அழுத்தமாக வலியுறுத்தியவர்.
இவரைப் பற்றி மேலும் விரிவாக விக்கிப்பீடியாவின் தமிழ் பக்கத்தில் “இங்கே” அறிந்து கொள்ளலாம்:
பெண் குழந்தைகளின் எழுச்சி
இவரைப் பற்றிக் கொஞ்சம் அறிந்தது (நண்பர் துளசியினால். அவர் ஆங்கில ஆசிரியர் என்பதால் ஆங்கில இலக்கியத்தில் கடைசிக் கவிதை இருக்கிறது அவர் நோட்ஸ் அனுப்பி அதை நான் டைப் செய்ததால்) அதன் பின் விக்கியிலும் வாசித்துத் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குBecause I am a girl, I must study; by Kamla Bhasin...அழகான கவிதையை நான் ரசித்து வாசித்ததுண்டு. உங்கள் மொழியாக்கம் சிறப்பு. பதிவையும் ரசித்து வாசித்தேன்
கீதா
நன்றி கீதா!
நீக்குநல்ல பதிவு
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குசிறப்பான ஒரு எழுத்தாளர் குறித்த தங்கள் பதிவு கண்டேன். அவரது எழுத்தினை மொழியாக்கம் செய்து இங்கே வெளியிட்டது சிறப்பு.
பதிலளிநீக்குபாசின் அல்ல பசீன். பஞ்சாபி surname. நான் தில்லியில் பணியில் சேர்ந்த பொழுது, எனக்கு மூத்த அதிகாரியாக இருந்தவர் ஒரு பசீன்.
நீங்கள் சொன்னதுமே திருத்தி விட்டேன்:). நன்றி வெங்கட்.
நீக்குபஸீன் பற்றி அறிந்து கொண்டேன். கவிதையும் சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குபசீன் கவிதைகள் மிக அருமை. அவரை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி.
பதிலளிநீக்குபெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டிய அவசியம் உணர்ந்தவர்
நன்றி கோமதிம்மா.
நீக்குஅவரது வாழ்க்கை குறிப்புகளே ஒரு சிறந்த கவிதையை வாசித்த உணர்வைத் தருகிறது.
பதிலளிநீக்குவாழ்க்கை அனுபவங்கள் வார்த்தைகளாக வெளிப்படும் போது அதன் உண்மைத் தன்மை மனதை அதிரச் செய்கிறது.
பெண் குழந்தைகளை இயற்கையின் அபாரமான படைப்புகளுடன் ஒப்பிட்டு அதன் தன்மைகளோடு பொருத்தி, அவற்றை அடக்கி ஆள முற்படுவது இயல்பற்றது எனச் சுட்டுவது அருமை.
வாழ்க்கை போராட்டத்தை எதிர் கொள்ளக் கல்வி சிறந்த ஆயுதம் என்பது அவரது வாழ்க்கை செய்தி.
நல்லதொரு மொழிபெயர்ப்பு.
உயர்ந்த உள்ளம். சிறந்த வாழ்க்கை. நன்முறையாக நினைவஞ்சலி. வாசிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.
தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. ஆம், நினைவஞ்சலியாகவே இந்தப் பதிவு.
நீக்கு