என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (101)
#1“மகிழ்ச்சி என்பது பின்விளைவு அல்ல, விருப்பத் தேர்வு.
மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நீங்களாக விரும்பினாலன்றி
எதுவும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராது.
மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் தீர்மானித்தாலன்றி
எந்தவொரு நபராலும் உங்களை மகிழ்ச்சிப்படுத்த முடியாது.
உங்கள் மகிழ்ச்சி உங்களைத் தேடி வராது.
அது உங்களிலிருந்து மட்டுமே வர முடியும்.”
_ Ralph Marston
#2
#3
ரோஜாவை நாம் வேறெந்தப் பெயரால் அழைத்தாலும்
அது இனிதாக மணக்கவே போகிறது!”
_William Shakespeare
#4
"புது நாளின் கூடவே வருகின்றன
புது பலமும் புதிய சிந்தனைகளும்..!"
#5
"உங்கள் சிந்தனைகளுக்கு நடுவேயான இடைவெளியில் உள்ளது
உங்களது உண்மை."
_ Reuben Lowe
#6
"அழகிய வண்ணங்களாலும் நேர்மறை ஆற்றலினாலும்
எதிர்மறை எண்ணங்களை
மெல்ல மெல்லப் புறந்தள்ளுங்கள்."
**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.. ]
***
அனைத்துப் படங்களும் அட்ட்காசம். மிகவும் ரசித்தேன். கூடவே வரும் வாசகங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குகீதா
மகிழ்ச்சி. மிக்க நன்றி.
நீக்குமலரும் மணமும் போல் மனம் கவர்ந்தது புகைப்படங்களும் அற்புதமான கருத்துரைகளும்...வாழ்த்துகள்..
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் நன்றியும், ரமணி Sir.
நீக்குமிக அழகாக மலர்களை புகைப்படமெடுத்திருக்கிறீர்கள்! கூடவே அதற்கேற்ற அருமையான வரிகள்!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குஅழகான மலர்கள், அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனை மிக அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா!
நீக்கு101 வது பாகத்திற்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகவனித்து வாழ்த்தியமைக்கு நன்றி.
நீக்குஅழகிய படங்கள். அருமையான வாசகங்கள். அதிலும் குறிப்பாக முதல் இரண்டும் எனக்காகவே சொல்லப்பட்டிருப்பது போல எடுத்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஅனைவருமே மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய நல்ல வாசகங்கள் அவை. நன்றி ஸ்ரீராம்.
நீக்குஒவ்வொரு படமும் அழகு. தேர்ந்தெடுத்த வாசகங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குதொடரட்டும் பதிவுகள்.
மிக்க நன்றி வெங்கட்.
பதிலளிநீக்கு