சனி, 12 அக்டோபர், 2019

பதாகை மின்னிதழில்.. - “பாடல் நான்”, சார்ல்ஸ் காஸ்லே

றவையைப் பாடும் பாடல் நான்.
நிலத்தை வளர்க்கும் இலை நான்.
நிலவை நகர்த்தும் அலை நான்.
மணலை நிறுத்தும் ஓடை நான்.
புயலை விரட்டும் மேகம் நான்.
சூரியனுக்கு ஒளியூட்டும் பூமி நான்
கல்லை உரசும் நெருப்பு நான்
கையை வடிக்கும் களிமண் நான்.
மனிதனைப் பேசும் வார்த்தை நான்.
*

மூலம்:
I am the Song
by
Charles Causley
*

10 அக்டோபர் 2019, பதாகை மின்னிதழில்.. இங்கே. நன்றி பதாகை!

*

ழுத்தாளரும் பள்ளி ஆசிரியருமான சார்ல்ஸ் காஸ்லே (24 ஆகஸ்ட் 1917 – 4 நவம்பர் 2003) இங்கிலாந்தின் கார்ன்வால் மாவட்டத்தில் பிறந்தவர். அவரது எழுத்துகள் எளிமைக்கும் நேரடித் தன்மைக்கும் நாட்டுப்புறப் பாடல்களை ஒத்திருந்தமைக்கும் குறிப்பாகக் கவனம் பெற்றவையாகும். முதலாம் உலகப்போரில் ஏற்பட்ட காயங்களால் இவரது தந்தை மரணிக்கவும் 15_வது வயதில் பள்ளிப் படிப்பைத் துறந்து குடும்பத்தைக் காப்பாற்ற அலுவலக ஏவலாளாகப் பணிக்குச் செல்ல நேர்ந்தவர். பின்னாளில் இரண்டாம் உலகப் போரின் போது கடற்படையில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். போர்க்கால அனுபவங்களைத் தனது கவிதைகளிலும், சிறுகதைகளிலும் பகிர்ந்திருக்கிறார். தான் படித்த பள்ளியிலேயே சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றியவர். காஸ்லேயின் பிற கவிதைகளின் பாடு பொருட்களாக இருந்தவை நம்பிக்கை, விசுவாசம், பயணம், நண்பர்கள் மற்றும் குடும்பம். போகவும், குழந்தைகளுக்காக இவர் எழுதிய கவிதைகள் பிரபலமானவை. 1951ஆம் ஆண்டில் தொடங்கி வாழ்நாளின் இறுதி வரையிலுமாகத் தொடர்ச்சியாக எழுதி, பல நூல்களை வெளியிட்டவர். பல விருதுகளைப் பெற்றவர். முக்கிய இலக்கிய அமைப்புகளில் உறுப்பினராகத் திகழ்ந்தவர். அரசு மற்றும் பல்கலைக் கழகங்களில் கெளரவப் பதவிகள் வகித்தவர்.
*

தொடர்புடைய முந்தைய பதிவு:
நான் சூரியன்
டம்: என் வீட்டுத் தோட்டத்தில்..

**


7 கருத்துகள்:

  1. பதிவுகளின் வாசகன் நான் 
    ஊக்கமளிக்கும் பின்னூட்டம் நான்!


    ஹா...   ஹா...   ஹா...   

    சும்மா சொல்லிப் பார்த்தேன்.   

    கவிதையும் படிப்பாளி பற்றிய தகவல்களும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. கவிதையை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். உங்கள் வரிகள் இப்படி இருந்திருக்க வேண்டும்:

    வாசகனை வாசிக்கும் பதிவு நான்
    பின்னூட்டம் அளிக்கும் ஊக்கம் நான்

    நன்றி ஸ்ரீராம் :)!

    பதிலளிநீக்கு
  3. உருவாக்கப்பட்ட வஸ்து ஆதாரத்தை நோக்கி..., அழகிய கற்பனை. 9 வரிகளில் பஞ்ச பூதங்களையும் தொடர்புப்படுத்தியது ஆச்சரியம். மூலப்பாடலை "பதாகை" இணைப்பில் வாசித்தேன். மிக அருமை. "மனதை செதுக்கும் கவிதை நான்." மிக்க நன்றி.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ரசனை மிகுந்த கற்பனை. தாங்கள் புனைந்த வரி நன்று :)!

      நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin