புதன், 31 ஜூலை, 2019

ஆனித் திருவிழா

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் (பாகம் 1)

#1
கோயில் யானை

ண்டு தோறும் முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும் ஆனி திருவிழா பிரசித்தமானது. 

#2
முத்துமாலை அம்மன் சன்னதி

'தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலின் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெறும். 
ஒவ்வொரு நாளின் பொறுப்புகளையும் ஒவ்வொரு அமைப்புகள் ஏற்று சிறப்புறச் செய்து வருகிறார்கள். விழா நாட்களில் காலை, மாலை, இரவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், மதியம் அன்னதானமும், மாலையில் யானை மீது தீர்த்தவாரி ஊர்வலமும், இரவில் அம்பாள் சப்பர பவனியும் நடைபெறுகிறது. குறிப்பாக  9–ம் திருநாள் இரவு 8 மணிக்கு அம்பாள் சப்பர ஊர்வலம் புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிவரை நடைபெறும். ஊர்வலத்தின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாம்பூலம் ஏந்தி சுருள் கொடுக்கும் காட்சி நடைபெறும். கோவில் சார்பாக நடைபெறும் 10, 11–ம் திருவிழாவில் கோவில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.' [தகவல்: செய்தித் தளங்கள்]

நான்கு வருடங்களுக்கு முன்னர் திருவிழா சமயத்தில் ஒரு மாலை நேரம் திருவிழாவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கோயில் வாசலிலும் ஆற்றங்கரையிலுமாக எடுத்த ஏராளமான படங்களை, குறிப்பாக சிறு வியாபாரிகள் மற்றும் வெள்ளந்தி மனிதர்களின் படங்களை, ஏற்கனவே பல்வேறு சமயங்களில் பதிந்து விட்டுள்ளேன். மேலும் சில படங்கள் இங்கே:

#3
திருவிழா மைதானத்தின் நுழைவாயில் அருகே..
நீர் அருந்தும் பைரவர்

#4
ஆற்றில் குளித்து முடித்து 
பக்தர்களை ஆசிர்வதிக்கத் தயாராகி நிற்கும் யானை
#5

#6
நல்லதொரு குடும்பம்

#7
எத்தனை வண்ணங்கள்

#8
குறைவான விலையில்
விதம் விதமான
 சிகை அலங்காரம்..

#9
கை நிறைய அணிந்திட
கலர் கலராக வளையல்கள்

#10
தங்கைக்காக..

#11
பல நாள் கழித்துப் பார்க்கும் பரவசத்தில் 
அளவளாவிக் கொண்டிருந்த தோழியர்..

#12
‘இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி 
எங்கெங்கோ அலைகின்றார்.. ஞானத்தங்கமே..!’


#13
“ஒரே இடத்தில் நின்னா எப்படி? 
நீ அந்தப் பக்கமாப் போ!
நான் இந்தப் பக்கமாப் போறேன்.”


#14
“சோட்டா பீம் வாங்கித் தாப்பா”

#15
 “கொய்யா பிடிக்குமா?
மாங்கா பிடிக்குமா?”

#16
அன்னாசியும்..
தர்பூசணியும்..

#17
ஹாட் சிப்ஸ்

#18
போகலாமா ஒரு ரவுண்ட்?

#19
பஞ்சு மிட்டாய்..


அடுத்த பாகத்தில் கருப்பட்டி மிட்டாய்க் கடைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

#20
‘சீனி மிட்டாய், சீரணி மிட்டாய், ரயில் மிட்டாய்..’

#21
 ‘பாரம்பரிய இனிப்பு மிட்டாய்..’

வரும் வருடங்களில் ஆனி மாதம் வாய்ப்புக் கிடைக்கிறவர்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக மகிழ்ந்திருந்து வரலாம்.

***


14 கருத்துகள்:

 1. இயல்பு முகங்கள். ஊருக்கு ஒரு ரவுண்ட் போன மாதிரி இருக்கிறது. தோழியர் படம் மிக அழகு. நன்றி.

  பதிலளிநீக்கு
 2. யானையைப் பார்ப்பது எப்போதுமே சின்ன உற்சாகம் தரும். இப்போதும். தோழியர் மனம் கவர்கின்றனர். பாவம் பைரவர். தங்கை மீதான பாசம்.. ஆஹா! போகலாமா ஒரு ரவுண்ட்? ஊ..ஹூம்... பயம். தலை சுத்தும். மயக்கம் வரும்! பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாயா? அனைத்தையும் ரசித்தேன். அருமை.

  பதிலளிநீக்கு
 3. அனைத்து படங்களும் அழகு.
  ஒவ்வொரு படங்களும் பேசுகின்றன.

  பதிலளிநீக்கு
 4. அழகான படங்கள்.

  பாமரர்களை படம் பிடித்துக் காண்பித்தது சிறப்பு. பல இடங்களில் படம் எடுக்க நினைத்தாலும் முடியாமல் போவதுண்டு.

  பதிலளிநீக்கு
 5. கிராமத்து மணத்துடன் கோவில் விழா மனதுக்கு இதமாக .

  பதிலளிநீக்கு
 6. மண் வாசம் வீசும் காட்சிகள் ..அழகு

  பதிலளிநீக்கு
 7. தளத்துக்கே எங்கள் ஊர் வாசனை வந்துவிட்டது போன்ற பிரமை.

  இந்த சீரணி மிட்டாய் மேல் மிக ஆசை கொண்டு, நாகர்கோவிலிலிருந்து வருபவர்களிடம் வாங்கிக்கொண்டு தரச் சொன்னேன் (வெளிநாட்டில்). நினைத்த மாதிரி நன்றாக இல்லை. ஒருவேளை சுடச் சுடச் சாப்பிட்டால்தான் நன்றாக இருக்குமோ என்னவோ.

  படங்கள் அருமையாக இருக்கிறது, அதிலும் தோழியர் படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி.

   செய்து அடுக்கும் போது ஆறித்தானே போகிறது. ஒருவேளை ஓரிருநாட்களுக்குள் செய்யப்பட்டவற்றில் சுவை கூடுதலாக இருக்குமோ? ஏனெனில் இந்த மிட்டாய் மட்டுமே அங்கேயே தயாராகிக் கொண்டிருந்தது.

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin