ஞாயிறு, 4 நவம்பர், 2018

வெற்றிக் கனி

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 41
#1
“நீங்கள் செய்வதெல்லாம் தனித்துவமானதென நடித்திடுங்கள். 
அவை தனித்துவம் பெற்றிடும்." 
_ William James

#2
“இந்த வாழ்வின் பெரும்பாலான நிழல்களுக்குக் காரணம் 
ஒருவர் தனது சொந்தக் கதிரொளியில் நின்றிருப்பதே..!”
_Ralph Waldo Emerson

#3
“யாரோ ஒருவர் மலர்களைக் கொண்டு தரக் காத்திராமல்
 உங்கள் சொந்தத் தோட்டத்தில் செடிகளை ஊன்றி வளர்த்து, 
உங்கள் ஆன்மாவை அலங்கரியுங்கள்!” 
_  Veronica A. Shoffstall

#4
“சிலர் வெற்றியைப் பற்றிக் கனவு மட்டும் கண்டிருக்க,
மற்ற சிலர் ஒவ்வொரு காலையிலும் எழுந்து அதை நனவாக்குகிறார்கள்!”
 _ Wayne Huizenga

#5
"எளிமை என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.”
_Charles Chaplin
**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது..]
***

18 கருத்துகள்:

 1. அழகான படங்கள். தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த வாசகங்களும் சிறப்பு.

  தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்.

  பதிலளிநீக்கு
 2. நிழலுக்கான காரணம் அருமை. வெற்றிக்கனவை நனவாக்குபவர்களையும் ரசித்தேன்.

  படங்களும் அருமை. வரிகளும் அருமை.

  பதிலளிநீக்கு
 3. மேற்கோள் கவிதைகள் அருமை. வாய்ப்பிருப்பின் கவிஞர்களின் பெயர்களையும் தமிழில் எழுதலாமே? (தேவையெனில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்துடன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலரது பெயர்களின் உச்சரிப்பு சரிதானா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள முடியாததால் தவறைத் தவிர்க்கவே ஆங்கிலத்தில் கொடுக்கிறேன். இனி phonetics மூலமாக அறிந்து தர முயலுகிறேன். நன்றி.

   நீக்கு
 4. அருமயான கருத்துரைகள் படங்களைப் பற்றி கூற எனக்கு அருகதை இருக்கிறதா

  பதிலளிநீக்கு
 5. அத்தனை படங்களும் அழகு.
  நிலா படம் வெகு அழகு.

  இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. கறுப்பு பின்னணியில் மலர்கள் கவிதை. இரண்டாவது படம் நிழலும் வெளிச்சமும் அழகிய இரசனை. எளிமை என்பது இயல்பாக உள்ளபடியே இருத்தல் என வாசித்த நினைவு. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகட்டினை உள்ளபடியான இயல்பாகக் கொண்டவர்களும் இருப்பதால் இப்படிச் சொல்லப்பட்டிருக்குமோ?

   கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
  2. நீங்கள் சொன்னது சரிதான். எளிமையை வரையறுப்பதும் அவ்வளவு எளிமையானதல்ல.:-).

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin