ஞாயிறு, 15 அக்டோபர், 2017

மங்கையர் மலர் தீபாவளி சிறப்பிதழில்.. - கிழக்கும் மேற்கும்..

 1 அக்டோபர் 2017,
மங்கையர் மலர் தீபாவளி சிறப்பிதழ்


புத்தகம் - 1.. பக்கம் 36_ல்..

நான் எடுத்த படத்துடன்..
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/24898652892

கவிதை..
கிழக்கும் மேற்கும்

#
பாசி படர்ந்த கரும் பாறைகள் மேல்
ஓய்வெடுத்த களைத்த பெரிய 
கடல் நாரைகள்
ஓங்கியடித்த அலைகளோடு
மேலெழும்பி மீண்டும் இறங்கி
காத்திருக்கின்றன இரவுக்கு.

களைத்த அப்பறவைகள்
நாளின் முடிவுக்கு ஏங்கி
மேற்குவானை நோக்கி
தலையைத் திருப்புகின்றன.
பொன்னொளி அவற்றின் 
குருதியில் கலக்க
பொறுமையைத் தொலைத்து
சிறகுகள் விரித்து 
படபடக்கின்றன.

வாக்குவாதத்தை நிறுத்திவிட்டு
களைத்த நாங்களும் பார்க்கிறோம்
பரந்த கடலைத் தாண்டி
மேற்குத் திசையில்.
ஆகாயத்தை வியாபித்திருக்கிறது
அந்திச் சூரியனின் செங்கதிர்கள்.
எங்கும் அமைதி.
தூரத்தே தெரியும்
இரவுக்குள்ளே நுழையும்
பிரமாண்டத்தின் ஒரு துளியாய்
எங்கள் வாழ்வு.

பரிமாறிக் கொண்ட
சூடான வார்த்தைகள்
பேசியது பேசாதது
என்னுடையது அவனுடையது
எல்லாம் அமிழ்ந்து போயின
பேரமைதியில்.

திரும்பிச் செல்லும் வழி
தெரியாத அளவுக்கு
காரிருள் சூழ்ந்து விட்டிருந்தது.
காத்திருக்கலானோம்
கிழக்குத் திசை பார்த்து
தோளோடு தோள் சாய்ந்து.
**

நன்றி மங்கையர் மலர்!
***




20 கருத்துகள்:

  1. அமைதி எங்கும் நிலவட்டும்
    தீபாவளி சிறப்பிதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கடைசி மூன்று வரிகளில் நம்பிக்கை கீற்றை விதைத்திருந்தாலும், கவிதை முழுமையும் பயன்படுத்திய வலி உணர்த்தும் வார்த்தைகள், உவமை, வாசித்து முடித்தவுடன் மெல்லியதொரு சோகத்தை, பிரிவாற்றாமையை மனதில் படரவிடுகிறது.

    இது தான் இப்படைப்பின் எதிர்பார்ப்போ?

    //பேசியது பேசாதது
    என்னுடையது அவனுடையது//
    வெகு நுட்பம்.

    வாழ்த்துக்கள்.

    குடும்பத்தினர்க்கும் அன்பு நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படைப்பதோடு முடிந்தது என் பங்கு. வாசகர் பார்வையில் தந்திருக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin