#1 # சூரியக் கதிரில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் மலர்கள்
#3 கண்ணாடி மாளிகை
#4 ஒவ்வொரு முறையும் இந்தப் படிகளில் இறங்கும் போது மனிதத் தலைகளை மட்டுமே காண முடியும். கூட்டமில்லாக் கண்காட்சி கொண்டாட்டத்தைக் கொடுத்தது:)!
கடந்த சில தினங்களாக மழையும் குளிருமாகவே இருந்த பெங்களூர் இப்போதுதான் சூரியனின் கதகதப்புக்குத் திரும்பியிருக்கிறது. இந்த நீரூற்றுக்கு எதிரேயிருக்கும் வாயிலின் வழியாகவே நுழைய வேண்டும் மாளிகைக்குள்..
#5
#7 அருகாமையில்..
#8 வீடியோ எடுக்கும் மீடியாக்காரர்
#9 நீலக் கடலின் ஓரத்தில்..
#10 நீண்ட படகு மூவண்ண ரோஜாக்களில்..
தேர்ந்த கலைஞர்கள் பத்து பேர்களால் நான்கு முழுநாட்கள் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டப் படகு. பூக்களைப் பதிக்க மேலும் 25 பேர்களின் உழைப்புத் தேவையாய் இருந்திருக்கிறது.
#11 பட்டொளி வீசி பறக்குது தேசியக் கொடி.. நாடு எல்லா வளமும் பெற்று செழிக்க வேண்டுமென்கிற வேண்டுதலுடன் காய்களும் கனிகளும்..
#14 மறுபுறத் தோற்றம். இன்னொரு முனையில் கர்நாடக மாநிலக் கொடி..
#15 நடுவே லில்லி மலர்கள்.. பக்கவாட்டில் பலவகை மலர்கள் கம்பளமாக..
#17 Mega Hand
நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிடாதபடி மழை பொழியவும், வளர்ச்சியும் செழிப்பும் இருக்க வேண்டுமென்றும் பிரார்த்திக்கும் விதமாக முளைவிட்ட இளம் தளிர்களையும் பழங்களையும் ஏந்தி நிற்கிற ”பசும் கைகள்” இரண்டு பக்கவாட்டு நுழைவாயில்கள் அருகே இடம்பெற்றிருந்தன.
# தோட்டமெங்கிலும் விதம் விதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அடடா இவற்றை இரசிக்கவே இன்னொரு சமயம் சாகவாசமாக வரலாம் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். இவை கண்காட்சிக்காகவென்றே தருவிக்கப்பட்டு மண்ணில் நடப்பட்ட செடிகளாம். காட்சி முடிந்ததும் மீண்டும் ஊரைப் பார்க்க வண்டியைக் கட்டி விடுமாம்:(!
#18
#19 Melting Pot of Culture
#20 உலகின் அதி உயரமான இந்த மண்பாண்டத்தை செய்து அளித்தவர்கள் பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில் இங்கே.
#21 Vertical Garden
#23
#24
#25 குளிர்ச்சி
#26
மலர்ந்து புன்னகைத்தப் பூக்களுக்கு மத்தியில் மனங்கொத்திச் சென்ற மழலையின் சிரிப்பு
வாய்ப்புக் கிடைத்தால் ஆர்வமுள்ள பெங்களூர்வாசிகள் சென்று பாருங்கள். இன்னும் ஐந்து தினங்களுக்கு நடைபெறுகிறது கண்காட்சி. படமாக்கிய தனி மலர்களை வழக்கம் போல அவ்வப்போது ஃப்ளிக்கரில் பகிர்ந்து வந்தபிறகு தொகுத்து இங்கே அளிக்கிறேன். இப்போது சொல்லிக் கொள்கிறேன் அட்வான்ஸாக,
#27
இந்தப் பகிர்வு விகடன் செய்திகள்.காமிலும்:
#2 ஆரம்பித்த இரண்டாம் நாள் (8 ஆகஸ்ட்) என்பதாலோ அல்லது மதிய நேரம் என்பதாலோ கூட்டமிருக்கவில்லை.
#3 கண்ணாடி மாளிகை
#4 ஒவ்வொரு முறையும் இந்தப் படிகளில் இறங்கும் போது மனிதத் தலைகளை மட்டுமே காண முடியும். கூட்டமில்லாக் கண்காட்சி கொண்டாட்டத்தைக் கொடுத்தது:)!
கடந்த சில தினங்களாக மழையும் குளிருமாகவே இருந்த பெங்களூர் இப்போதுதான் சூரியனின் கதகதப்புக்குத் திரும்பியிருக்கிறது. இந்த நீரூற்றுக்கு எதிரேயிருக்கும் வாயிலின் வழியாகவே நுழைய வேண்டும் மாளிகைக்குள்..
#5
நீல நதியில் மிதந்து கொண்டிருந்தது அங்கே இரண்டு இலட்சம் ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட, 35 அடி நீளமும், 13 அடி உயரமும் கொண்ட
பூப் படகு. விரிக்கப்பட்டிருந்தது முன்னே பூக்கம்பளம். நெருக்கடியோ கெடுபிடியோ இல்லாத சூழலில் படகைச் சுற்றி வந்து வேறு வேறு கோணங்களில்
எடுத்தவற்றை பார்வைக்கு வைக்கிறேன் நீங்கள் இரசித்திட. அப்படியே Mega Hand, Vertical Garden,
Melting Pot என இந்தக் கண்காட்சியின் சில சிறப்பம்சங்களையும் பார்க்கலாம்
வாங்க.
#6
#7 அருகாமையில்..
#8 வீடியோ எடுக்கும் மீடியாக்காரர்
#9 நீலக் கடலின் ஓரத்தில்..
#10 நீண்ட படகு மூவண்ண ரோஜாக்களில்..
தேர்ந்த கலைஞர்கள் பத்து பேர்களால் நான்கு முழுநாட்கள் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டப் படகு. பூக்களைப் பதிக்க மேலும் 25 பேர்களின் உழைப்புத் தேவையாய் இருந்திருக்கிறது.
#11 பட்டொளி வீசி பறக்குது தேசியக் கொடி.. நாடு எல்லா வளமும் பெற்று செழிக்க வேண்டுமென்கிற வேண்டுதலுடன் காய்களும் கனிகளும்..
#14 மறுபுறத் தோற்றம். இன்னொரு முனையில் கர்நாடக மாநிலக் கொடி..
#15 நடுவே லில்லி மலர்கள்.. பக்கவாட்டில் பலவகை மலர்கள் கம்பளமாக..
#16 நுணுக்கமான வேலைப்பாடு
#17 Mega Hand
# தோட்டமெங்கிலும் விதம் விதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அடடா இவற்றை இரசிக்கவே இன்னொரு சமயம் சாகவாசமாக வரலாம் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். இவை கண்காட்சிக்காகவென்றே தருவிக்கப்பட்டு மண்ணில் நடப்பட்ட செடிகளாம். காட்சி முடிந்ததும் மீண்டும் ஊரைப் பார்க்க வண்டியைக் கட்டி விடுமாம்:(!
#18
#19 Melting Pot of Culture
#20 உலகின் அதி உயரமான இந்த மண்பாண்டத்தை செய்து அளித்தவர்கள் பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில் இங்கே.
#21 Vertical Garden
5000 செடிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது 17 அடி உயரமும் 40 அடி அகலமும் கொண்ட செங்குத்துத் தோட்டம்.
கண்களுக்கு விருந்து
#22 Floral Arrangement#23
#24
#26
மலர்ந்து புன்னகைத்தப் பூக்களுக்கு மத்தியில் மனங்கொத்திச் சென்ற மழலையின் சிரிப்பு
வாய்ப்புக் கிடைத்தால் ஆர்வமுள்ள பெங்களூர்வாசிகள் சென்று பாருங்கள். இன்னும் ஐந்து தினங்களுக்கு நடைபெறுகிறது கண்காட்சி. படமாக்கிய தனி மலர்களை வழக்கம் போல அவ்வப்போது ஃப்ளிக்கரில் பகிர்ந்து வந்தபிறகு தொகுத்து இங்கே அளிக்கிறேன். இப்போது சொல்லிக் கொள்கிறேன் அட்வான்ஸாக,
#27
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்:)!
Astroemaria Lily
***
நன்றி விகடன்!
***
மிக மிக அழகான படங்களுடன் அசத்தலான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குமேலிருந்து கீழ் இரண்டாவது படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
அருமையான புகைப்படங்கள்
பதிலளிநீக்குநேரடியாகக் கூட இப்படி அருமையாய்
ரசிக்கமுடியுமா என சந்தேகமாக உள்ளது
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
பதிலளிநீக்குசோதரி ! நானும் நெல்லை மாவட்டம் தான். பணிவிடை பெற்ற BSNL ஊழியன். வசிப்பது சென்னை. தங்கள் பதிவுகளில் பொருள் இருக்கின்றது. வீண் என்று எதையும் சுட்டிக்காட்ட இயலாது. rssairam.blogspot.com, sankaravadivu.blogspot.com எமது வலைப்பூக்கள்.tamilspeak.com புதிய இணையம். உறுப்பினராகுங்க்கள். நேரடியாக நீங்களே பதிவிடலாம். பெங்களூருக்கே அழைத்துச் சென்றமைக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குலால்பாக்குக்கு மீண்டும் ஒருமுறை சென்று வந்தது போலிருந்தது... படங்கள் அருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா...
தட்டு தட்டாக மலர்க்கொத்துகள்
பதிலளிநீக்குகட்டு கட்டாக
எட்டி எடு எடு என்று என்னை
கட்டி புடிச்சு இழுக்கின்றனவே
அற்புதமான மலர் கண்காட்சி.
சுப்பு தாத்தா.
back to
chennai
வழக்கம் போல் ...
பதிலளிநீக்கு........... அழகுப் படங்களின் அணி வரிசை.
இன்னொரு சந்தேகம் (கேட்க பயமாக இருக்கிறது!) கர்நாடகாவின் கொடி ஒன்று போட்டிருக்கிறீர்கள். இதுபோல் எல்லா (த.நா.)மாநிலங்களும் கொடி வைத்திருக்கிறார்களா?
அத்தனையும் அழகு.
பதிலளிநீக்குரோஜாப்படகு ஜூப்பரு. உழைத்தவர்களுக்கும் பாராட்டுகள்.
அருமையான பதிவு ராமலக்ஷ்மி. பல புதிய தகவல்களுடன் பிரகாசிக்கிறது உங்கள் பதிவு...
பதிலளிநீக்குமலர் படகு பழங்களையும், காய்கனிகளையும் எடுத்துக் கொண்டு நீலக்கடலில் போவது மிக அழகு.அதற்கு உழைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபழங்கள் ஏந்திய கைகள் அருமை.
கூட்டம் இல்லாமல் இருக்கும் போது அருகில் போய் அழகாய் படம் எடுத்து கண்ணுக்கு விருந்து அளித்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
அழகிய மலர்களின் அணிவகுப்பு. பூக்களால் செய்யப் பட்ட படகு பிரம்மாண்டம். எப்படி உழைத்து உருவாக்கியிருப்பார்கள் என்று நினைக்கும்போது ஆச்சர்யம் வருகிறது. நீரிலேயே இருக்கும் அந்த மலர்கள் எத்தனை நாட்களுக்கு புதுப்பொலிவுடன் இருக்கும்? தினமும் மலர்களை மாற்றவும் முடியாதே...
பதிலளிநீக்குஅத்தனையும் அற்புதம்.....
பதிலளிநீக்குகண்கொள்ளாக் காட்சியை நீங்கள் பார்த்தது மட்டுமன்றி எங்களுடனும் பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குஎன் மகன் எனக்கு, லால்பாக் மலர்க் கண்காட்சிகளிருந்து சில படங்களைப் பதிவில் பகிர்ந்து கொள்ள அனுப்பி இருந்தான். உங்கள் படங்களை பார்த்தபின் அவற்றை பதிவிட த் தேவை இல்லை என்று தோன்றுகிறது. அழகு. வெகு அழகு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.அவன் cereals கொண்டு வரையப் பட்ட கொடி பற்றியும் கூறி இருந்தான். பாராட்டுக்கள்.
@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குநன்றி vgk sir.
@Ramani S,
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் நன்றியும் sir.
@Sankara RamaSamy,
பதிலளிநீக்குவருகைக்கும் தகவலுக்கும் நன்றி.
@சே. குமார்,
பதிலளிநீக்குநன்றி குமார்.
@sury Siva,
பதிலளிநீக்குநன்றி சூரி sir:)!
@தருமி,
பதிலளிநீக்குநன்றி:)! ஜம்மு காஷ்மீர், சிக்கிம் மாநிலங்களுக்கு உண்டுதானே?
எனக்கும் சொல்லப் பயமாக இருக்கிறது:)! இங்கு மாநிலக் கொடிக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும்.
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குநன்றி சாந்தி:).
@Vanila,
பதிலளிநீக்குநன்றி வனிலா:)!
@கோமதி அரசு,
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குFloral foam (பச்சை நிறத்தில் இருக்கும்) தண்ணீர் உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது. அதன் மேலே முதலில் மொட்டுகளாகவே இவற்றைப் பதிக்கிறார்கள். அதனால் முழுதாக மலரும் வரை ஒருவாரம் தாக்குப் பிடிக்கும். வார நடுவில் வாடிவிடும் சிலவற்றை மட்டும் எடுத்து விட்டு வேறு வைப்பார்கள்.
நன்றி ஸ்ரீராம்.
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
@G.M Balasubramaniam,
பதிலளிநீக்குதானியங்களால் உருவாக்கப்பட்டத் தேசியக் கொடி சென்ற வருடக் காட்சிகளிலும் இருந்தது. இருமுறை பகிர்ந்தும் இருக்கிறேன். குறிப்பாக சுதந்திர தின வாழ்த்துகளுடன் close up_ல் இங்கே: http://tamilamudam.blogspot.com/2012/08/blog-post.html பச்சை நிறத்தை சிரத்தை எடுத்து, சரியாகக் காண்பிக்கலாம் அவர்கள். உபயோகிப்பட்டிருந்த ஆழ்பச்சை நிறம் பார்க்கவும் சரி, படத்திலும் சரி கருப்பு வண்ணம் பக்கமே சாய்கிறது. அப்போது பதிவிலும் சுட்டிக் காட்டியிருந்தார்கள் நண்பர்கள். இந்த வருடமும் அப்படியேதான் இருந்தது. அங்கே யாரிடம் சுட்டிக் காட்ட என்றுதான் தெரியவில்லை.
உங்கள் மகன் எடுத்தப் படங்களையும் பகிர்ந்திடுங்கள். வேறு கோணங்களில் பார்க்கக் கிடைக்குமல்லவா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி GMB sir.