வியாழன், 21 ஏப்ரல், 2011

வண்ணத்துப்பூச்சிகளின் வகுப்பறை! - கல்கி கவிதை கஃபே


குடியரசுதின அணிவகுப்பு மரியாதை
கண்களுக்குள் ஓட

‘ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்
ஆகணும் டீச்சர்’
தொடங்கி வைத்தாள் எழிலரசி

ஆனந்தி, மல்லிகா, சந்திராவுக்கு
போலீசாய் பைலட்டாய் விஞ்ஞானியாய்
ஆக விருப்பமாம்

கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகி
உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதில்
உறுதியாக இருந்தாள் உமா மகேஸ்வரி

தயங்கித் தயங்கி
வெளிப்படுத்தினாள் யாழினி
வண்ணத்துப்பூச்சியாக வேண்டுமென்பதே
தன் ஆசையென

கைதட்டிக் குலுங்கியது சிரிப்பால்
குழந்தைகளின் வகுப்பறை

தட்டிக் கொண்டிருந்த கைகள் யாவும்
மெல்ல இறக்கைகளாய்
மாறிக்கொண்டிருந்தன.
***

24 ஏப்ரல் 2011, இந்த வார கல்கியில் வெளியாகியுள்ள கவிதை.

வண்ணத்துப்பூச்சி படம் கவிதையுடன் கல்கி ஆன்லைனில் வெளியானது.

பத்திரிகையில்...
என் கவிதையின் தலைப்பு கவிதை கஃபேயின் தலைப்பாகவும் அமைந்ததில் கூடுதல் மகிழ்ச்சி:)!

கல்கியில் இதுவரை வெளியான பிற கவிதைகள்(முன்னர் வாசித்திராதவருக்காக..): தவிப்பு , குழந்தை முகத்தில் குளிர் நிலவு!


நன்றி கல்கி!!!

***

54 கருத்துகள்:

 1. வண்ணக்கனவுகளோடு இறக்கைகள் துளிர்க்க வளமான எண்ணங்களோடு சிறகடிக்கிறது அழகான வண்ணத்து பூச்சி... நல்ல அழகானக் கவிதை

  பதிலளிநீக்கு
 2. நல்ல அருமையான அழகிய கவிதை.
  கல்கியிலேயே படித்தேன். பெயர் ராமலக்ஷ்மி என்று இருந்ததால் அது தங்களுடையது [முத்துச்சரம் ராமலக்ஷ்மி தான்] என்பதை கவனிக்கத்தவறிவிட்டேன்.

  மனமார்ந்த பாராட்டுக்கள், மேடம்.

  வாழ்த்துக்கள். Congratulations.

  [அதே கல்கியில் 83 ஆம் பக்கத்தில்
  என் பெயரும் இடம்பெற்றுள்ளது]

  பதிலளிநீக்கு
 3. குழந்தைகளின் கனவு அழகு... வண்ணத்துப்பூச்சிகளும் அழகு... இரண்டையும் இணைத்த கவிதை கொள்ளை அழகு.

  பதிலளிநீக்கு
 4. //தயங்கித் தயங்கி
  வெளிப்படுத்தினாள் யாழினி
  வண்ணத்துப்பூச்சியாக வேண்டுமென்பதே
  தன் ஆசையென//


  கலக்குங்க கலக்குங்க....

  பதிலளிநீக்கு
 5. அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. சிறகுகள் விரித்துப் பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும்...வண்ணமயமான கனவுகள் நனவாகட்டும்..

  பதிலளிநீக்கு
 7. வித்தியாசமான கவிதை,கல்கி கவிதை கஃபே ,இப்ப தான் கேள்விபடுறேன்..வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. சூப்பர்! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

  பதிலளிநீக்கு
 9. மிக அழகு... வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறது மனம் கவிதை படித்ததும்....

  பதிலளிநீக்கு
 10. வண்ணக்கனவுகளோடு சின்னக்குழந்தைகள்.அழகான கற்பனை.வாழ்த்துகள் அக்கா !

  பதிலளிநீக்கு
 11. //தட்டிக் கொண்டிருந்த கைகள் யாவும்
  மெல்ல இறக்கைகளாய்
  மாறிக்கொண்டிருந்தன//

  அழகு
  வாழ்த்துகளுடன்
  ஆ.ஞானசேகரன்

  பதிலளிநீக்கு
 12. //தட்டிக் கொண்டிருந்த கைகள் யாவும்
  மெல்ல இறக்கைகளாய்
  மாறிக்கொண்டிருந்தன.
  ***//ஆஹா என்ன ஒரு அற்புதமான கவி வரிகள்.வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி

  பதிலளிநீக்கு
 13. முதலிலேயே படிச்சுட்டேனே....! பாராட்டுகள். கல்கி வந்தவுடன் தெரிந்த பெயர்கள் இருக்கிறதா என்று பார்ப்பதுதான் முதல் வேலை.

  பதிலளிநீக்கு
 14. எழிலரசி,ஆனந்தி, மல்லிகா, சந்திரா,யாழினி....
  அழகான தமிழ்ப் பெயர்களை வைத்து அசத்துகிறீர்கள்.

  பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. குமரி எஸ். நீலகண்டன் said...
  //வண்ணக்கனவுகளோடு இறக்கைகள் துளிர்க்க வளமான எண்ணங்களோடு சிறகடிக்கிறது அழகான வண்ணத்து பூச்சி... நல்ல அழகானக் கவிதை//

  மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன்.

  பதிலளிநீக்கு
 16. ராஜ ராஜ ராஜன் said...
  //ரொம்ப அழகா இருக்குங்க...//

  மிக்க நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

  பதிலளிநீக்கு
 17. செல்வராஜ் ஜெகதீசன் said...
  //நல்லா இருக்குங்க.//

  மிக்க நன்றி செல்வராஜ் ஜெகதீசன்:)!

  பதிலளிநீக்கு
 18. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //நல்ல அருமையான அழகிய கவிதை.
  கல்கியிலேயே படித்தேன். பெயர் ராமலக்ஷ்மி என்று இருந்ததால் அது தங்களுடையது [முத்துச்சரம் ராமலக்ஷ்மி தான்] என்பதை கவனிக்கத்தவறிவிட்டேன்.

  மனமார்ந்த பாராட்டுக்கள், மேடம்.

  வாழ்த்துக்கள். Congratulations.

  [அதே கல்கியில் 83 ஆம் பக்கத்தில்
  என் பெயரும் இடம்பெற்றுள்ளது]//

  மிக்க நன்றி. தங்கள் பெயரை பத்திரிகையிலும் பார்த்தேன். அதுகுறித்த தங்கள் பதிவினையும் வாசித்தேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. தமிழ் உதயம் said...
  //குழந்தைகளின் கனவு அழகு... வண்ணத்துப்பூச்சிகளும் அழகு... இரண்டையும் இணைத்த கவிதை கொள்ளை அழகு.//

  மிக்க நன்றி தமிழ் உதயம்.

  பதிலளிநீக்கு
 20. MANO நாஞ்சில் மனோ said...
  ***//தயங்கித் தயங்கி
  வெளிப்படுத்தினாள் யாழினி
  வண்ணத்துப்பூச்சியாக வேண்டுமென்பதே
  தன் ஆசையென//


  கலக்குங்க கலக்குங்க....//

  நன்றி நாஞ்சில் மனோ.

  பதிலளிநீக்கு
 21. Mahan.Thamesh said...
  //அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

  பதிலளிநீக்கு
 22. அமைதிச்சாரல் said...
  //அழகான கவிதை..//

  நன்றி சாந்தி:)!

  பதிலளிநீக்கு
 23. பாச மலர் / Paasa Malar said...
  //சிறகுகள் விரித்துப் பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும்...வண்ணமயமான கனவுகள் நனவாகட்டும்..//

  ஆகட்டும் அவ்வண்ணமே:)! நன்றி மலர்.

  பதிலளிநீக்கு
 24. April 21, 2011 2:50 PM
  Kanchana Radhakrishnan said...
  //அழகிய கவிதை.//

  நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 25. asiya omar said...
  //வித்தியாசமான கவிதை,கல்கி கவிதை கஃபே ,இப்ப தான் கேள்விபடுறேன்..வாழ்த்துக்கள்.//

  நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 26. S.Menaga said...
  //அழகான கவிதை!!//

  நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 27. Chitra said...
  //சூப்பர்! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!//

  நன்றி சித்ரா.

  பதிலளிநீக்கு
 28. அன்புடன் அருணா said...
  //ஆஹா!பூங்கொத்து!//

  நன்றி அருணா!

  பதிலளிநீக்கு
 29. அமுதா said...
  //மிக அழகு... வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறது மனம் கவிதை படித்ததும்....//

  நன்றி அமுதா:)!

  பதிலளிநீக்கு
 30. ஹேமா said...
  //வண்ணக்கனவுகளோடு சின்னக்குழந்தைகள்.அழகான கற்பனை.வாழ்த்துகள் அக்கா !//

  நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 31. ஆ.ஞானசேகரன் said...
  **//தட்டிக் கொண்டிருந்த கைகள் யாவும்
  மெல்ல இறக்கைகளாய்
  மாறிக்கொண்டிருந்தன//

  அழகு//

  மிக்க நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 32. சசிகுமார் said...
  //அருமை//

  நன்றி சசிகுமார்.

  பதிலளிநீக்கு
 33. திவா said...
  //good!....great!//

  மிக்க நன்றி திவா சார்!

  பதிலளிநீக்கு
 34. ஈரோடு கதிர் said...
  //வாவ்!//

  நன்றி:)!

  பதிலளிநீக்கு
 35. Shakthiprabha said...
  //மிக அருமை. வாழ்த்துக்கள்!!//

  நன்றி ஷக்தி:)!

  பதிலளிநீக்கு
 36. ஆயிஷா அபுல். said...
  //அருமை.வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி ஆயிஷா.

  பதிலளிநீக்கு
 37. ஸாதிகா said...
  ***//தட்டிக் கொண்டிருந்த கைகள் யாவும்
  மெல்ல இறக்கைகளாய்
  மாறிக்கொண்டிருந்தன.
  ***//ஆஹா என்ன ஒரு அற்புதமான கவி வரிகள்.வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி//

  நன்றி ஸாதிகா.

  பதிலளிநீக்கு
 38. ஸ்ரீராம். said...
  //முதலிலேயே படிச்சுட்டேனே....! பாராட்டுகள். கல்கி வந்தவுடன் தெரிந்த பெயர்கள் இருக்கிறதா என்று பார்ப்பதுதான் முதல் வேலை.//

  பல சமயம் உங்கள் தகவல் மூலமே (தினமணி கதிர் உட்பட) முதலில் அறிய வருகிறேன்:)!நன்றி ஸ்ரீராம்!

  பதிலளிநீக்கு
 39. அமைதி அப்பா said...
  //எழிலரசி,ஆனந்தி, மல்லிகா, சந்திரா,யாழினி....
  அழகான தமிழ்ப் பெயர்களை வைத்து அசத்துகிறீர்கள்.

  பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.//

  மகிழ்ச்சியும் நன்றியும் அமைதி அப்பா:)!

  பதிலளிநீக்கு
 40. தமிழ்மணம் இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி:)!

  பதிலளிநீக்கு
 41. அருமை.
  பறக்க வேண்டும் என்று ஆசை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin