1. பறக்கத்தான் சிறகுகள்
'உயர உயரப் பறந்தாலும்
ஊர்க் குருவி பருந்தாகுமா?'
யாரோ எவரோ
சொல்லிச் சென்றதாலே
சிறகை விரிக்காதிருக்கலாமா?
பறக்க முயலாதிருக்கலாமா?
நோக்கம் உயர்வாய் இருந்தால்
சீக்கிரமே உயர்வாய் பருந்தை விட-
சின்னதாய் இருக்கிறதே சிறகென்று
எண்ணவே எண்ணாதே என்றும் நீ!
*** *** ***
ஊர்க் குருவி பருந்தாகுமா?'
யாரோ எவரோ
சொல்லிச் சென்றதாலே
சிறகை விரிக்காதிருக்கலாமா?
பறக்க முயலாதிருக்கலாமா?
நோக்கம் உயர்வாய் இருந்தால்
சீக்கிரமே உயர்வாய் பருந்தை விட-
சின்னதாய் இருக்கிறதே சிறகென்று
எண்ணவே எண்ணாதே என்றும் நீ!
*** *** ***
2. "நகருவது நாமா.. சாலையோரச் செடியா.."
விரைகின்ற வண்டியிலிருந்து
வியக்கிறது மனசு
நகர்வது நாமா செடியா என்று..
கண நேரத்தில் காமிரா
கவர்ந்திட்ட காட்சி இதற்காகவே
பிறந்திட்ட கவிதை கீழே:
இரயில் பயணங்களில்..
நிற்கின்ற புகைவண்டியிலே
ஜன்னல் ஓர இருக்கையிலே
அமரக் கொடுத்து வைக்கையிலே-
சடாரெனப் பக்கத்து
இருப்புப் பாதையிலே
‘தடதட’ சத்தத்துடன்
பாய்ந்து வரும்
எதிர்திசை வண்டி
ஏற்படுத்தும் ஓருணர்வை-
நாமிருக்கும் வண்டிதான்
நாலுகால் பாய்ச்சலில்
நகர்வது போலவே..
பிடித்த பிரமை
'மடமட'வென்றே
விலகிடும் வந்த வேகத்தில்..
பின்னால் தேய்ந்து
சன்னமாகிடும் சத்தத்திலும்-
கண் முன்னால் விரிந்திடும்
சற்றுமுன் கண்ட
அதே காட்சியிலும்..
வாழ்விலும் கூட இதுவே நியதி-
பிரச்சனை தடதடவென வருகையிலே
எதிர்கொள்ளாமல் எதிர் திசையில்
எடுத்திடலாம் ஓட்டம்
என்றுதான் மனமது விழையும்..
நின்று எதிர் கொண்டாலே புரியும்
நின்ற இடத்திலேயே நாம் இருக்க
பிரமாண்டமாய் தெரிந்த
பிரச்சனையது சடுதியில்
தேய்ந்து பின் மாயமாய்
மறைந்தே போய்விடும்.
இன்னல் திரையும் விலகி-மிக
இனிதாய் காட்சிகள் மலர்ந்திடும்.
3.காலக் கண்ணாடியில் ஒரு ஆனந்தத் தாவல்
ஆனந்தம் இது ஆனந்தம்
ஆஹா வெகு ஆனந்தம்
காவேரியில் இத்தனை தண்ணீர் கண்டால்
கரை புரண்டிடாதோ ஆனந்தம்!
[கணநேரக் கண்ணாடி மட்டுமல்ல இது. இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முந்தைய கணத்தைக் கண் முன் கொண்டு வந்திருக்கும் காலக் கண்ணாடியும் கூட!]ஆஹா வெகு ஆனந்தம்
காவேரியில் இத்தனை தண்ணீர் கண்டால்
கரை புரண்டிடாதோ ஆனந்தம்!
*** *** ***
இங்கு வலையேற்றிய பின் “பறக்கத்தான் சிறகுகள்” கவிதை பிப்ரவரி 19, 2009 திண்ணை இணைய இதழிலும், மார்ச் 10, 2009 இளமை விகடன் இணைய தளத்திலும் வெளிவந்துள்ளது:
இங்கு வலையேற்றிய பின் “இரயில் பயணங்களில்..” கவிதை 8 மார்ச் 2009 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும், 17 மார்ச் 2009 இளமை விகடன் இணைய தளத்திலும் வெளிவந்துள்ளது:
அருமையான படங்கள், எனக்குப் பிடித்தது இரண்டாவதுதான்.
பதிலளிநீக்கு/'உயர உயரப் பறந்தாலும்
பதிலளிநீக்குஊர்க் குருவி பருந்தாகுமா?'
யாரோ எவரோ
சொல்லிச் சென்றதாலே
சிறகை விரிக்காதிருக்கலாமா?
பறக்க முயலாதிருக்கலாமா?
நோக்கம் உயர்வாய் இருந்தால்
சீக்கிரமே உயர்வாய் பருந்தை விட-
சின்னதாய் இருக்கிறதே சிறகென்று
எண்ணவே எண்ணாதே என்றும் நீ!/
அருமையான வரிகள்
/விரைகின்ற வண்டியிலிருந்து
வியக்கிறது மனசு
நகர்வது நாமா செடியா என்று../
கணநேரக் கண்ணாடி
கவிதைகள் அத்தனையும் அருமை
அக்கா அந்த ரெண்டாவது படம் ஜீப்பரு :)
பதிலளிநீக்கு//நின்று எதிர் கொண்டாலே புரியும்
பதிலளிநீக்குநின்ற இடத்திலேயே நாம் இருக்க
பிரமாண்டமாய் தெரிந்த
பிரச்சனையது சடுதியில்
தேய்ந்து பின் மாயமாய்
மறைந்தே போயிடும்//
நல்லா சொல்லியிருக்கீங்க.
நன்றி
சூர்யா ஜிஜி
அந்த ரெண்டாவது படம் ஜீப்பரு //
பதிலளிநீக்குரிப்பீட்டு....
மிக அழகான படங்கள் சகோதரி..இறுதிப் படத்தில் அந்தச் சிறுவனின் ஆனந்தத்தை உணரமுடிகிறது. பாராட்டுக்கள் !!
பதிலளிநீக்குமூன்று படங்களும் உங்கள் எழுத்தும் வழக்கம்போல் அருமை ராமலக்ஷ்மி. ரயில் ,எதிர் ரயில் உதாரணம் என் மனதுக்கும் அமைதி தருகிறது.
பதிலளிநீக்கு''விரலுக்கு தகுந்த வீக்கம் வேணும்''
பதிலளிநீக்கு''ஏழைக்கு தகுந்த எள் உருண்டை''
'' என்னதான் என்னைய தடவிக்கிட்டு மண்ணுல உருண்டாலும்
ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்''
''உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது''
இந்த மாதிரியெல்லாம் சொல்லி, முயற்சி செய்றவங்கள கூட
தடுக்குறதுக்கு சில ஜென்மங்கள் இருக்காங்க!!
நீங்க அருமையா சொல்லி இருக்கீங்க!!
///'உயர உயரப் பறந்தாலும்
ஊர்க் குருவி பருந்தாகுமா?'
யாரோ எவரோ
சொல்லிச் சென்றதாலே
சிறகை விரிக்காதிருக்கலாமா?
பறக்க முயலாதிருக்கலாமா?
நோக்கம் உயர்வாய் இருந்தால்
சீக்கிரமே உயர்வாய் பருந்தை விட-
சின்னதாய் இருக்கிறதே சிறகென்று
எண்ணவே எண்ணாதே என்றும் நீ!//
இப்படித்தான் சொல்லணும்!! மிக்க நன்றி அம்மா!!
அந்த மூணாவது படம் நல்லாருக்கு!
பதிலளிநீக்குநான்கூட அந்த மாதிரி தண்ணில குதிச்சு இருக்கேன்.
இன்னும் கொஞ்சம் கவனிச்சு எடுத்திருந்தீங்கன்னா அந்தா 3வது இன்னும் நல்லா வந்துருக்கும்கா.
பதிலளிநீக்குவாழ்துக்கள்
அப்புறமா வருகிறேன் :-)
பதிலளிநீக்குஅருமையான படங்கள். அருமையான வரிகள்.
பதிலளிநீக்கு/*பிரச்சனை தடதடவென வருகையிலே
எதிர்கொள்ளாமல் எதிர் திசையில்
எடுத்திடலாம் ஓட்டம்
என்றுதான் மனமது விழையும்..
நின்று எதிர் கொண்டாலே புரியும்
நின்ற இடத்திலேயே நாம் இருக்க
பிரமாண்டமாய் தெரிந்த
பிரச்சனையது சடுதியில்
தேய்ந்து பின் மாயமாய்
மறைந்தே போயிடும்.
*/
அழகாகக் கூறினீர்கள்.
வெண்பூ said...
பதிலளிநீக்கு//அருமையான படங்கள்//
நன்றி.
//எனக்குப் பிடித்தது இரண்டாவதுதான்.//
“சின்னதாய் இருக்கிறதே சிறகென்று
எண்ணவே எண்ணாதே என்றும் நீ!”
என்று சொன்னாலும் சொன்னேன் நான், பாருங்க வெண்பூ சிறகை விரித்துப் பறந்தே விட்டது முதல் படத்து வாத்து போட்டியில் கலந்திட:))!
திகழ்மிளிர் said...
பதிலளிநீக்கு//அருமையான வரிகள்//
”பறக்கத்தான் சிறகுகள்” உங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி திகழ்மிளிர்.
//கணநேரக் கண்ணாடி
கவிதைகள் அத்தனையும் அருமை//
பாராட்டுக்கும் ரசனைக்கு மிக்க நன்றி.
புதுகை.அப்துல்லா said...
பதிலளிநீக்கு//அக்கா அந்த ரெண்டாவது படம் ஜீப்பரு :)//
நன்றி அப்துல்லா. ஆனா மொதப் படம் ஜிவ்வுன்னு பறந்துட்டு அப்பவே போட்டிக்கு:)!
சூர்யா ஜிஜி said...
பதிலளிநீக்கு// //நின்று எதிர் கொண்டாலே புரியும்
நின்ற இடத்திலேயே நாம் இருக்க
பிரமாண்டமாய் தெரிந்த
பிரச்சனையது சடுதியில்
தேய்ந்து பின் மாயமாய்
மறைந்தே போயிடும்//
நல்லா சொல்லியிருக்கீங்க.//
நின்று எதிர் கொண்டால் நிச்சயம் புரியும். இது நிஜம். முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சூர்யா ஜிஜி.
//சின்னதாய் இருக்கிறதே சிறகென்று
பதிலளிநீக்குஎண்ணவே எண்ணாதே என்றும் நீ!
//
இதைப் படித்ததும் கணத்தில் தோன்றியது
http://puthiyavaarppugal.blogspot.com/2009/02/blog-post_16.html
புதுகைத் தென்றல் said...
பதிலளிநீக்கு// அந்த ரெண்டாவது படம் ஜீப்பரு //
ரிப்பீட்டு....//
வாங்க தென்றல். உங்கள் ஓட்டும் இரண்டாவதற்குதானா:)? நிஜமாய் நகருவது செடியல்ல ஆகையால் போட்டித் தலைப்புக்குப் பொருந்தி வருமா என்ற சந்தேகத்தில் அதைத் தெரிவு செய்யவில்லை:)!
//பிரமாண்டமாய் தெரிந்த
பதிலளிநீக்குபிரச்சனையது சடுதியில்
தேய்ந்து பின் மாயமாய்
மறைந்தே போயிடும்.
//
வாவ்!
வார்த்தைகளை கோர்வையாய் போட்டு தெளிவாக சொல்லி இருப்பது அழகு!!
இவ்வரிகளை மட்டும் பல முறை மீண்டும் மீண்டும் படித்தேன்!!!
//சடாரெனப் பக்கத்து
பதிலளிநீக்குஇருப்புப் பாதையிலே
‘தடதட’ சத்தத்துடன்
பாய்ந்து வரும்
எதிர்திசை வண்டி
ஏற்படுத்தும் ஓருணர்வை-//
இது சூப்பர் ராமலஷ்மி!
மறுபடியும் படிக்க ரசனையான கவிதைகள்!
:-)
இரண்டாவதில் ஆக்ஷன் இருந்தாலும் மூன்றாம் படத்தில் இருக்கும் ஏதொவொன்று ஈர்க்கின்றது என்னை! :-)
பதிலளிநீக்குnice :) picture and poem - Double treat :)
பதிலளிநீக்குஅருமையான படங்கள்
பதிலளிநீக்குஅருமையான படங்கள்!
பதிலளிநீக்கு//விரைகின்ற வண்டியிலிருந்து
பதிலளிநீக்குவியக்கிறது மனசு
நகர்வது நாமா செடியா என்று..
//
அருமை...
முதல் படம் நல்லா இருக்கு. இரண்டாவதின் கவிதை மிக ஆழம். ஆனால், பிடித்த படம், மூன்றாவது தான். படத்தின் நேர்த்தி பற்றி எல்லாம் தெரியாது. நேர் எதிரில் எடுக்கப்பட்ட படம். எங்கிருந்து சிறுவன் (இப்ப பெரியவர்) குதித்திருக்க முடியும்? கோணம், முகத்தின் மட்டற்ற மகிழ்ச்சி, சுழித்தோடும் நதியின் அழகு எல்லாம் பார்த்தால், மிக அருமையான புகைப்படம். அதுவும் இருபது ஆண்டுகளுக்கு முன்னால்? நம்பவே முடியவில்லை. வாழ்த்துகள் சகோதரி.
பதிலளிநீக்குஅனுஜன்யா
// //நின்று எதிர் கொண்டாலே புரியும்
பதிலளிநீக்குநின்ற இடத்திலேயே நாம் இருக்க//
எல்லா வரிகளும் அழகு..இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை..
யாரோ சொல்லிட்டாங்க என்று நம் திறமையை ஒளித்துக் கொள்வதையும், சில பிரச்சனைகள் எதிர் திசையில் இருக்க, நமக்கு தானென்று நாம் நினைப்பதையும் ... வழக்கம் போல கலக்கல் வரிகள். படங்களும் அருமை. எனது ஓட்டும் மூன்றாவது படத்துக்கே.
பதிலளிநீக்குஎம்.ரிஷான் ஷெரீப் said...
பதிலளிநீக்கு//மிக அழகான படங்கள் சகோதரி..இறுதிப் படத்தில் அந்தச் சிறுவனின் ஆனந்தத்தை உணரமுடிகிறது. பாராட்டுக்கள் !!//
பசுமை நிறைந்த நினைவுகள். என் தம்பிதான் அந்தச் சிறுவன்:)! திருச்சியில் இருக்கும் பெரியம்மா வீட்டுக்கு விடுமுறைக்கு சென்றிருந்த போது கிடைத்தது அந்தக் காவேரிக் குளியல்.
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//மூன்று படங்களும் உங்கள் எழுத்தும் வழக்கம்போல் அருமை ராமலக்ஷ்மி.//
நன்றி வல்லிம்மா.
// ரயில் ,எதிர் ரயில் உதாரணம் என் மனதுக்கும் அமைதி தருகிறது.//
ஆமாங்க. பல சமயம் நாம் பயப்படும் பிரச்சனைகள் வந்த வேகத்தில் மறைந்தும் விடுகின்றனதானே?
கடைசி படம் மிக அருமை. ஆனந்தத்தை தருகிறது.
பதிலளிநீக்குமுதல் படம் அருமை.
//நோக்கம் உயர்வாய் இருந்தால்
பதிலளிநீக்குசீக்கிரமே உயர்வாய் பருந்தை விட-
சின்னதாய் இருக்கிறதே சிறகென்று
எண்ணவே எண்ணாதே என்றும் நீ!//
//நின்று எதிர் கொண்டாலே புரியும்
நின்ற இடத்திலேயே நாம் இருக்க
பிரமாண்டமாய் தெரிந்த
பிரச்சனையது சடுதியில்
தேய்ந்து பின் மாயமாய்
மறைந்தே போயிடும்//
எனக்கு மிகவும் பிடித்த வரிகள். நம்பிக்கையை அழகாயும் பொருத்தமாகவும் தந்திருக்கிறீர்கள். மூன்றாவது படம்தான் எனக்கு பிடித்தது :) வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
//'உயர உயரப் பறந்தாலும்
பதிலளிநீக்குஊர்க் குருவி பருந்தாகுமா?'
யாரோ எவரோ
சொல்லிச் சென்றதாலே
சிறகை விரிக்காதிருக்கலாமா?
பறக்க முயலாதிருக்கலாமா?//
கலக்கல் :-)
//நின்று எதிர் கொண்டாலே புரியும்
நின்ற இடத்திலேயே நாம் இருக்க//
எளிமை கவிதையே ராமலக்ஷ்மி :-)
முதல் படம் நன்றாக உள்ளது..இரண்டாவது படம் தெளிவாக வர வாய்ப்பில்லை இருந்தும் எதோ குறைகிறது, மூன்றாவது படம் எடுத்த விதம் நன்றாக உள்ளது, ஆனால் படம் டிம்மாக உள்ளது. நம்ம வோட் முதல் படம்
வாத்து படம் நல்லா இருக்கு.. அந்த கடைசிபடம் நல்லா வந்திருந்தா சூப்பரா இருந்திருக்குமில்ல ராமலக்ஷ்மி..... உங்க கவிதையும் பாஸிட்டிவ் கோணமும் அருமை..
பதிலளிநீக்குஜீவன் said...
பதிலளிநீக்கு//''விரலுக்கு தகுந்த வீக்கம் வேணும்''
''ஏழைக்கு தகுந்த எள் உருண்டை''
'' என்னதான் என்னைய தடவிக்கிட்டு மண்ணுல உருண்டாலும்
ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்''
''உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது''
இந்த மாதிரியெல்லாம் சொல்லி, முயற்சி செய்றவங்கள கூட
தடுக்குறதுக்கு சில ஜென்மங்கள் இருக்காங்க!!//
உண்மைதான் ஜீவன். நீங்க ஒருபடி மேலே போய் கதைக்கு உதவாத அத்தனை பழமொழிகளையும் புட்டுப் புட்டுப் போட்டு விட்டீர்கள்.
//நீங்க அருமையா சொல்லி இருக்கீங்க!! //
அதை விட அருமை நீங்க சொன்னது.
// //'உயர உயரப் பறந்தாலும்
ஊர்க் குருவி பருந்தாகுமா?'
யாரோ எவரோ
சொல்லிச் சென்றதாலே
சிறகை விரிக்காதிருக்கலாமா?
பறக்க முயலாதிருக்கலாமா?
நோக்கம் உயர்வாய் இருந்தால்
சீக்கிரமே உயர்வாய் பருந்தை விட-
சின்னதாய் இருக்கிறதே சிறகென்று
எண்ணவே எண்ணாதே என்றும் நீ!//
இப்படித்தான் சொல்லணும்!!// //
அப்படிச் சொல்லிக் கொண்டுதான் நான் பல வல்லுநர்கள் கலக்கும் புகைப்படப் போட்டியில் தயங்காமல் கலந்து கொள்கிறேனாக்கும்:)!
கருத்துக்கு மிக்க நன்றி ஜீவன்.
ஜீவன் said...
பதிலளிநீக்கு//அந்த மூணாவது படம் நல்லாருக்கு!
நான்கூட அந்த மாதிரி தண்ணில குதிச்சு இருக்கேன்.//
ஆனந்தமா இருந்திருக்குமே:)! இந்தக் கால நீச்சல் குளங்களை விட அந்த மாதிரி ரம்மியமான இயற்கை சூழலில் ஆற்று நீரில் நீச்சல் அடிப்பது அருமையான அனுபவமில்லையா?
முதல் ப்டம் அருமையோ அருமை.
பதிலளிநீக்கு***விரைகின்ற வண்டியிலிருந்து
பதிலளிநீக்குவியக்கிறது மனசு
நகர்வது நாமா செடியா என்று..***
நானும் வியந்ததுண்டு!
***நின்று எதிர் கொண்டாலே புரியும்
நின்ற இடத்திலேயே நாம் இருக்க
பிரமாண்டமாய் தெரிந்த
பிரச்சனையது சடுதியில்
தேய்ந்து பின் மாயமாய்
மறைந்தே போயிடும்.
இன்னல் திரையும் விலகி-மிக
இனிதாய் காட்சிகள் மலர்ந்திடும்***
வேலை சம்மந்தப்பட்ட என் சம்மந்தப்பட்ட பிரச்சினையை எதிர் நோக்கி நின்று வெற்றி இன்றுவரை அடைந்துள்ளேன்!
அதே சமயத்தில், ஈழத்தமிழர் பிரச்சினை, மதவெறி பிரச்சினை என்று வரும்போது, எதுவும் செய்ய முடிவதில்லை! என்னுடைய வெறும் புலம்பலும், வருத்தங்களும், அனுதாபங்களும், கண்ணீரும் பிரச்சினைகளை தீர்ப்பதில்லை!
கணநேரக் கண்ணாடிகள்....தலைப்பே அழகுங்க...படங்கள் அதைவிட அழகு...
பதிலளிநீக்குஅன்புடன் அருணா
//நின்று எதிர் கொண்டாலே புரியும்//
பதிலளிநீக்குஇதுதான் முத்தான வரிகள்!
அப்புறம் படம் என் கணினி திரையிலே வலப்பக்கம் முழுக்க வரலை. வெட்டுப்படுது. பாத்து போடுங்க.
அன்பின் ராமலக்ஷ்மி
பதிலளிநீக்குஅத்தனையும் அருமை - படமும் கவிதையும். போட்டிக்கு முதல் படம் என்றாலும் இரண்டும் மூன்றும் நன்றாகத்தான் இருக்கின்றன.
நல்வாழ்த்துகள் வெற்றி பெற
பிரண்ட்! நான் நீங்க பதிவு போட்ட உடனேயே பார்த்துட்டேன்! என் பின்னூட்டம் எதுனா உங்க பதிவை திசை திருப்பி விடுமோன்னு 40 ஆகட்டும்ன்னு பார்த்துகிட்டே இருந்தேன்!
பதிலளிநீக்குஅந்த 3 வது படம்! ஆஹா அந்த சுகம் அந்த கலங்கமில்லா காவிரி தண்ணியிலே தன் முகம் பார்த்து நாமே கலக்குவது அருமையோ அருமை!
நீங்க ஒரு நல்ல கவிஞர் பிரண்ட்!
முதல் படம் அருமை.
பதிலளிநீக்குமூன்றாவதும்.
//நின்று எதிர் கொண்டாலே புரியும்
பதிலளிநீக்குநின்ற இடத்திலேயே நாம் இருக்க
பிரமாண்டமாய் தெரிந்த
பிரச்சனையது சடுதியில்
தேய்ந்து பின் மாயமாய்
மறைந்தே போயிடும்//
சூப்பர் பன்ச்.அருமையான வரிகள்.தோல்வியக் கண்டு துவழும் மனக்களுக்கு நல்ல மருந்து.
கணநேரக் கண்ணாடிகள்,பல நேரம் சிந்தனைக்கு விருந்தாயின.
அனைவரையும் ,ஒவ்வோரு செவ்வாய்க்காக,வழிமேல் விழி வைத்து காத்திருக்க வைத்து விட்டீர்கள்.....சபாஷ்.
பதிலளிநீக்குராசி பலன்:அனைத்து பிளாகருக்கும்,
பதிலளிநீக்குஇன்னாள்,
முத்துச்சரம் உச்சத்தில் இருக்கும் நாள்,ஆகவே,இன்று யாரும் பதிவுகள் போடாதிருத்தல் உத்தமம்.
யாருக்கும் வெட்டுப் படலை திவாவுக்கு மட்டும் படங்கள் வெட்டுப் படுது....அது என்ன???.
பதிலளிநீக்கு”
//நின்று எதிர் கொண்டாலே புரியும்//, ரசித்த வரிகள் படி
புரியப் பாருங்களேன்,திவா.
[ராமலஷ்மி பயந்து விடாமல்...மறுபடியும் நம் தளத்தில் கோமா/திவா யுத்தம் தொடங்கி விடுமோ என்று.வெள்ளைகொடி பறக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள்,]
////நின்று எதிர் கொண்டாலே புரியும்//, ரசித்த வரிகள் படி
பதிலளிநீக்குபுரியப் பாருங்களேன்,திவா.//
நின்னு பாத்தாச்சு, உக்காந்து பாத்தாச்சு, படுத்து பாத்தாச்சு. அப்படியேதான் வெட்டு பட்டு தெரியுது!
3 வது படம்! Superrrrrrr! ஆஹா!
பதிலளிநீக்குகார்த்திக் said...
பதிலளிநீக்கு//இன்னும் கொஞ்சம் கவனிச்சு எடுத்திருந்தீங்கன்னா அந்தா 3வது இன்னும் நல்லா வந்துருக்கும்கா.
வாழ்த்துக்கள்//
நன்றி கார்த்திக். அது 87-ல் எடுத்த படம். கவனம் எல்லாம் அருமையான கணத்தைப் பதிவதில் இருந்ததே தவிர நேர்த்தியைப் பற்றியெல்லாம் நினையாத தருணம். அது ஹாட் ஷாட் காமிராவில் எடுத்தது. இந்த அளவுக்குத்தான் வர இயலும் என நினைக்கிறேன். மேலும் இப்போதுதான் காமிராவைக் கையில் எடுக்கையிலே கோணம் முதல் லைட்டிங் வரை சகலதும் சிந்தனைக்கு வருகிறது PiT புண்ணியத்தில்:).
கிரி said...
பதிலளிநீக்கு//அப்புறமா வருகிறேன் :-)//
அட்டென்டன்ஸ் மார்க்ட்:))!
அமுதா said...
பதிலளிநீக்கு//அருமையான படங்கள். அருமையான வரிகள். //
நன்றி அமுதா. ”இரயில் பயணங்களில்” கவிதைக்கான ஸ்பெஷல் பாராட்டுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.
நன்றி அமுதா. ”இரயில் பயணங்களில்” கவிதைக்கான ஸ்பெஷல் பாராட்டுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.
பதிலளிநீக்குPoornima Saravana kumar said...
// //சின்னதாய் இருக்கிறதே சிறகென்று
எண்ணவே எண்ணாதே என்றும் நீ!//
இதைப் படித்ததும் கணத்தில் தோன்றியது
http://puthiyavaarppugal.blogspot.com/2009/02/blog-post_16.html // //
என் கவிதையைப் படித்து நீங்கள் கணத்தில் வடித்த கவிதையைக் கண்டேன் பூர்ணிமா.
//முதல் கவிதை)கணத்தில் தோன்றியது //
முதல் கணத்தில் தோன்றியதை அப்படியே எழுதுவது அற்புதமாக அமைந்து விடுகின்றன பல நேரங்களில்..
திருத்தித் திருத்தி எழுதுவது திருப்தியே தராது போய் விடுகின்றன சில நேரங்களில்..
உங்கள் கவிதை இதில் முதல் ரகம்:)!
அற்புதம்.
Poornima Saravana kumar said...
பதிலளிநீக்கு// //பிரமாண்டமாய் தெரிந்த
பிரச்சனையது சடுதியில்
தேய்ந்து பின் மாயமாய்
மறைந்தே போயிடும்.
//
வாவ்!
வார்த்தைகளை கோர்வையாய் போட்டு தெளிவாக சொல்லி இருப்பது அழகு!!
இவ்வரிகளை மட்டும் பல முறை மீண்டும் மீண்டும் படித்தேன்!!!// //
நன்றி பூர்ணிமா. படிக்கப் படிக்க பிரச்சனைகளை எதிர்கொண்டு அவற்றை மாயமாய் மறைய வைக்கும் சக்தி உங்களுக்குப் பெருகிட என் வாழ்த்துக்கள்!
சந்தனமுல்லை said...
பதிலளிநீக்கு// //சடாரெனப் பக்கத்து
இருப்புப் பாதையிலே
‘தடதட’ சத்தத்துடன்
பாய்ந்து வரும்
எதிர்திசை வண்டி
ஏற்படுத்தும் ஓருணர்வை-//
இது சூப்பர் ராமலஷ்மி!
மறுபடியும் படிக்க ரசனையான கவிதைகள்! // //
நன்றி முல்லை.
சந்தனமுல்லை said...
பதிலளிநீக்கு//இரண்டாவதில் ஆக்ஷன் இருந்தாலும் மூன்றாம் படத்தில் இருக்கும் ஏதொவொன்று ஈர்க்கின்றது என்னை! :-)//
பலரையும் ஈர்த்தது போலவே. அக் காட்சியே ஒரு கவிதையென உணர்கிறேன் நான். கருத்துக்களுக்கு நன்றி முல்லை.
Jeeves said...
பதிலளிநீக்கு//nice :) picture and poem - Double treat :)//
ட்ரீட் கொடுத்தவருக்கும் இதைக் கேட்டு ஒரு திருப்தி:)! நன்றி ஜீவ்ஸ்.
கடையம் ஆனந்த் said...
பதிலளிநீக்கு//அருமையான படங்கள்//
Poornima Saravana kumar said...
//அருமையான படங்கள்!//
சொல்லி வைத்தாற் போல அடுத்தடுத்து ஒரே மாதிரியான பாராட்டுக்கள்:)[ஆனந்தின் கமெண்டை பூர்ணிமா பார்க்காமலே]!
நன்றி ஆனந்த்.
நன்றி பூர்ணிமா.
Poornima Saravana kumar said...
பதிலளிநீக்கு// //விரைகின்ற வண்டியிலிருந்து
வியக்கிறது மனசு
நகர்வது நாமா செடியா என்று..//
அருமை...// //
இந்த வரிகளும் பிடித்துப் போயினவா? நன்றி:)!
அனுஜன்யா said...
பதிலளிநீக்கு//முதல் படம் நல்லா இருக்கு. இரண்டாவதின் கவிதை மிக ஆழம்.//
கவிஞரிடமிருந்து வந்திருக்கும் இப்பாராட்டு மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி:)!
//ஆனால், பிடித்த படம், மூன்றாவது தான். படத்தின் நேர்த்தி பற்றி எல்லாம் தெரியாது.//
நேர்த்தி அந்த காமிராவில் அத்தனைதான் வந்திருக்க இயலும் என நினைக்கிறேன்.
//நேர் எதிரில் எடுக்கப்பட்ட படம். எங்கிருந்து சிறுவன் (இப்ப பெரியவர்) குதித்திருக்க முடியும்? கோணம், முகத்தின் மட்டற்ற மகிழ்ச்சி, சுழித்தோடும் நதியின் அழகு எல்லாம் பார்த்தால், மிக அருமையான புகைப்படம்.//
ஆமாம் கும்மாளம் போட்ட கூட்டத்தில் நானும் உண்டு:). என் இளைய சகோதரன். இப்போ பெரியவர்தான்:)! கவிதையான் அந்தத் தருணத்தைக் கவித்துவமாய் நீங்கள் விவரித்திருக்கும் பாங்கு எனைக் கவர்ந்தது. மிக்க நன்றி அனுஜன்யா.
//அதுவும் இருபது ஆண்டுகளுக்கு முன்னால்? நம்பவே முடியவில்லை. வாழ்த்துகள் சகோதரி.//
சின்னத் திருத்தம் இருபத்து இரண்டு ஆண்டுகள்:)! பதிவிலும் இதோ திருத்தி விடுகிறேன்:)! வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அனுஜன்யா.
பாச மலர் said...
பதிலளிநீக்கு// //நின்று எதிர் கொண்டாலே புரியும்
நின்ற இடத்திலேயே நாம் இருக்க//
எல்லா வரிகளும் அழகு..இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை..// //
கவிதைக்குப் பொய் அழகு. ஆனால் இவ்வரிகளில் இருக்கிற மெய்தான் தந்திருக்கிறது அதற்குத் தனி அழகு.
எல்லோரையும் கவர்ந்த வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பாசமலர். நன்றி.
சதங்கா (Sathanga) said...
பதிலளிநீக்கு//யாரோ சொல்லிட்டாங்க என்று நம் திறமையை ஒளித்துக் கொள்வதையும், சில பிரச்சனைகள் எதிர் திசையில் இருக்க, நமக்கு தானென்று நாம் நினைப்பதையும் ... வழக்கம் போல கலக்கல் வரிகள். படங்களும் அருமை.//
நன்றி நன்றி சதங்கா.
//எனது ஓட்டும் மூன்றாவது படத்துக்கே.//
மூன்றாவது படத்துக்கான ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் முந்திக் கொண்டு வாத்து விரித்து விட்டது சிறகைப் போட்டிக்கு:)!
நாகை சிவா said...
பதிலளிநீக்கு//கடைசி படம் மிக அருமை. ஆனந்தத்தை தருகிறது.//
ஆமாம். அது ஆனந்தத்தைத் தந்தாலேதான் ஆனந்தத்தைக் கொண்டாடும் விதமாய் வரிகளும்...:)!
//முதல் படம் அருமை.//
கருத்துக்கும், உங்கள் தொடர் வருகைக்கும் தொடரும் பாராட்டுக்கும் என் நன்றிகள் சிவா.
கவிநயா said...
பதிலளிநீக்கு// //நோக்கம் உயர்வாய் இருந்தால்
சீக்கிரமே உயர்வாய் பருந்தை விட-
சின்னதாய் இருக்கிறதே சிறகென்று
எண்ணவே எண்ணாதே என்றும் நீ!//
//நின்று எதிர் கொண்டாலே புரியும்
நின்ற இடத்திலேயே நாம் இருக்க
பிரமாண்டமாய் தெரிந்த
பிரச்சனையது சடுதியில்
தேய்ந்து பின் மாயமாய்
மறைந்தே போயிடும்//
எனக்கு மிகவும் பிடித்த வரிகள். நம்பிக்கையை அழகாயும் பொருத்தமாகவும் தந்திருக்கிறீர்கள்.//
நன்றி கவிநயா. இரண்டுமே நம்பிக்கை சார்ந்தவைதான்.
//மூன்றாவது படம்தான் எனக்கு பிடித்தது :) வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//
கவித்துவமான படம் கவிநயாவைக் கவர்ந்ததில் வியப்பேயில்லை:)!
கிரி said...
பதிலளிநீக்கு// //'உயர உயரப் பறந்தாலும்
ஊர்க் குருவி பருந்தாகுமா?'
யாரோ எவரோ
சொல்லிச் சென்றதாலே
சிறகை விரிக்காதிருக்கலாமா?
பறக்க முயலாதிருக்கலாமா?//
கலக்கல் :-)// //
பிறகென்ன, விரித்திடலாம் சிறகை:)!
// //நின்று எதிர் கொண்டாலே புரியும்
நின்ற இடத்திலேயே நாம் இருக்க//
எளிமை கவிதையே ராமலக்ஷ்மி :-)//
நன்றி கிரி. அந்த எளிமைக்காகவே என் வரிகளை என்றும் ரசிப்பவர் தாங்கள்.
//இரண்டாவது படம் தெளிவாக வர வாய்ப்பில்லை இருந்தும் எதோ குறைகிறது, //
இது தலைப்புக்காக தேர்ந்தெடுத்தது. தோன்றிய கவிதைக்காக பதிவிட்டது:)!
//மூன்றாவது படம் எடுத்த விதம் நன்றாக உள்ளது, ஆனால் படம் டிம்மாக உள்ளது.//
டிஜிட்டல் அல்லவே. அதனால்தான். புகைப்பட ப்ரிண்டை ஸ்கேன் செய்து வலையேற்றியுள்ளேன்.
//முதல் படம் நன்றாக உள்ளது..//
//நம்ம வோட் முதல் படம்//
சரி போட்டிக்குச் சென்றிருக்கும் படத்துக்கு ஸ்டாராங்காக ஒரு வோட்:)! நன்றி கிரி.
முத்துலெட்சுமி-கயல்விழி said...
பதிலளிநீக்கு//வாத்து படம் நல்லா இருக்கு.. //
நன்றி முத்துலெட்சுமி.
//அந்த கடைசிபடம் நல்லா வந்திருந்தா சூப்பரா இருந்திருக்குமில்ல ராமலக்ஷ்மி....//
உண்மைதான். டிஜிட்டல் வராத காலமல்லவா அது:)?
//உங்க கவிதையும் பாஸிட்டிவ் கோணமும் அருமை..//
மிக்க நன்றி:)!
வடகரை வேலன் said...
பதிலளிநீக்கு//முதல் படம் அருமையோ அருமை.//
ரொம்ப ரொம்ப நன்றிங்க வேலன்.
வருண் said...
பதிலளிநீக்கு//***விரைகின்ற வண்டியிலிருந்து
வியக்கிறது மனசு
நகர்வது நாமா செடியா என்று..***
நானும் வியந்ததுண்டு!//
சின்ன வயதில் அந்த வியப்பு ரொம்பப் பிராமாண்டமா வேறு இருக்கும் எனக்கு:)!
//***நின்று எதிர் கொண்டாலே புரியும்
நின்ற இடத்திலேயே நாம் இருக்க
பிரமாண்டமாய் தெரிந்த
பிரச்சனையது சடுதியில்
தேய்ந்து பின் மாயமாய்
மறைந்தே போயிடும்.
இன்னல் திரையும் விலகி-மிக
இனிதாய் காட்சிகள் மலர்ந்திடும்***
வேலை சம்மந்தப்பட்ட என் சம்மந்தப்பட்ட பிரச்சினையை எதிர் நோக்கி நின்று வெற்றி இன்றுவரை அடைந்துள்ளேன்!//
மிக்க மகிழ்ச்சி வருண்.
//அதே சமயத்தில், ஈழத்தமிழர் பிரச்சினை, மதவெறி பிரச்சினை என்று வரும்போது, எதுவும் செய்ய முடிவதில்லை! //
தனிப் பட்ட வாழ்க்கையில் எதிர் நீச்சல் சிலருக்கு ஓரளவிலும் சிலருக்குப் பெருமளவிலும் வெற்றியைத் தர பொதுபிரச்சனைகளில் தனியொரு மனிதனால் எதுவும் செய்திட முடியாதை ’இயலாமை’யை என்னவென்று சொல்ல:(? அதற்கொரு விடை என்னிடத்திலும் இல்லை:(!
//என்னுடைய வெறும் புலம்பலும், வருத்தங்களும், அனுதாபங்களும், கண்ணீரும் பிரச்சினைகளை தீர்ப்பதில்லை!//
உண்மைதான் வருண். ஆயினும் இவற்றைத் தாண்டி.. சக்தி வாய்ந்ததாய்.. ”பிரார்த்தனை” என்ற ஒன்று உள்ளது. இம்மாதிரியான பிரச்சனைகளில் நம்பிக்கை பற்றுகோல் எல்லாம் அதுவே!
கருத்துக்களுடன் தங்கள் மன ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி வருண்.
அன்புடன் அருணா said...
பதிலளிநீக்கு//கணநேரக் கண்ணாடிகள்....தலைப்பே அழகுங்க...//
”பறக்கத்தான் சிறகுகள்” தலைப்புத்தான் எனக்குச் சொந்தமுங்க.
நீங்கள் பாராட்டியிருக்கும் “கணநேரக் கண்ணாடிகள்” தலைப்புக்கான பாராட்டு PiT குழுவினரைச் சேருமுங்க. இம்மாத புகைப் படப் போட்டிக்கான தலைப்பே அது:)!
//படங்கள் அதைவிட அழகு...//
இந்த..இந்தப் பாராட்டு எனக்கேதாங்க:))!
திவா said...
பதிலளிநீக்கு// //நின்று எதிர் கொண்டாலே புரியும்//
இதுதான் முத்தான வரிகள்!// //
நன்றி திவா. சத்தான வரிகளாய் எல்லார் வாழ்விலும் அமையட்டும்.
//அப்புறம் படம் என் கணினி திரையிலே வலப்பக்கம் முழுக்க வரலை. வெட்டுப்படுது. பாத்து போடுங்க.//
திவா. புகைப்படப் பதிவுகளில் படங்கள் பெரிதாகத் தெரிந்தால் நன்றாக இருக்கும் என அபிப்பிராயப் பட்டு சிவிஆர் ஒரு வழியும் சொல்லியிருந்தார். நந்து அதை விட எளிதான வழியாக html-லில் சிறு திருத்தம் செய்து படங்களை பெரிதாக்க வழி கூறியிருந்தார். அதன் படி என் எல்லா புகைப்பட பதிவுகளிலும் படங்களை பெரிது செய்தேன். திடீரென கடந்த இரு மாதங்களாக அம்முறை வேலை செய்யவில்லை. தற்சமயம் இன்னொரு வழியை சொல்லியிருக்கிறார் நந்து
இந்தப் பதிவில். அதைத்தான் இங்கு நான் பின் பற்றியிருக்கிறேன். ஆகையால் உங்களுக்கு வலப் பக்கம் வெட்டுப் பட்டிருக்கலாம்தான். நீங்கள் பார்த்தது மடிக் கணினியில் என்றால் அதன் திரை சைஸ் என்ன? அதைப் பொறுத்தும் வெட்டுப் பட வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன்.
cheena (சீனா) said...
பதிலளிநீக்கு//அன்பின் ராமலக்ஷ்மி
அத்தனையும் அருமை - படமும் கவிதையும். போட்டிக்கு முதல் படம் என்றாலும் இரண்டும் மூன்றும் நன்றாகத்தான் இருக்கின்றன.
நல்வாழ்த்துகள் வெற்றி பெற//
வரணும் சீனா சார், அத்தனை படங்களையும் ரசித்திருக்கிறீர்கள். உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி!
அபி அப்பா said...
பதிலளிநீக்கு//பிரண்ட்! நான் நீங்க பதிவு போட்ட உடனேயே பார்த்துட்டேன்! என் பின்னூட்டம் எதுனா உங்க பதிவை திசை திருப்பி விடுமோன்னு 40 ஆகட்டும்ன்னு பார்த்துகிட்டே இருந்தேன்!//
இது.. இது அல்லவோ நல்ல ஃப்ரெண்டுக்கு அடையாளம்:)! நன்றி நன்றி:)!
//அந்த 3 வது படம்! ஆஹா அந்த சுகம் அந்த கலங்கமில்லா காவிரி தண்ணியிலே தன் முகம் பார்த்து நாமே கலக்குவது அருமையோ அருமை!
நீங்க ஒரு நல்ல கவிஞர் பிரண்ட்!//
நீங்களும்தான். நம் எல்லோருள்ளும் ஒரு கவிஞர் எப்போதும் உண்டு. பாருங்கள் மூன்றாவது படத்தை எத்தனை கவித்துவமாய் விவரித்து சிலாகித்திருக்கிறீர்கள்!
SurveySan said...
பதிலளிநீக்கு//முதல் படம் அருமை.
மூன்றாவதும்.//
நன்றி நன்றி சர்வேசன்.
goma said...
பதிலளிநீக்கு// //நின்று எதிர் கொண்டாலே புரியும்
நின்ற இடத்திலேயே நாம் இருக்க
பிரமாண்டமாய் தெரிந்த
பிரச்சனையது சடுதியில்
தேய்ந்து பின் மாயமாய்
மறைந்தே போயிடும்//
சூப்பர் பன்ச்.அருமையான வரிகள்.தோல்வியக் கண்டு துவழும் மனக்களுக்கு நல்ல மருந்து.
கணநேரக் கண்ணாடிகள்,பல நேரம் சிந்தனைக்கு விருந்தாயின.// //
தங்கள் அழகான புரிதலுக்கும் பாராட்டுக்கும் நன்றி கோமா.
goma said...
பதிலளிநீக்கு//அனைவரையும் ,ஒவ்வோரு செவ்வாய்க்காக,வழிமேல் விழி வைத்து காத்திருக்க வைத்து விட்டீர்கள்.....சபாஷ்.//
நன்றி. ஆனால் ஒவ்வொரு செவ்வாயும் என கமிட்மெண்ட்டெல்லாம் கிடையாதுங்கோ:)!
goma said...
பதிலளிநீக்கு//ராசி பலன்:அனைத்து பிளாகருக்கும்,
இன்னாள்,
முத்துச்சரம் உச்சத்தில் இருக்கும் நாள்,ஆகவே,இன்று யாரும் பதிவுகள் போடாதிருத்தல் உத்தமம்.//
அடடா, போடட்டும் எல்லோரும் பதிவுகள்:)! என் மேலுள்ள அதீத அன்பினால் உதித்த ராசி பலன் இது, இருக்கட்டும்:)!
ஆனாலும் //வாழ்விலும் இதுவே நியதி// என இப்போதுதானே பதிவிட்டிருக்கிறேன். வாழ்வின் பல நியதிகள் மனதில் என்றைக்கும் நிறுத்தியே இருக்கிறேன்.
”வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் மாதிரி. உச்சத்தில் இருப்பவன் கீழே வந்தாக வேண்டும். கீழே இருப்பவன் மேலே சென்றேயாக வேண்டும். இந்த சுழற்சியை யாராலும் தடுக்க முடியாது”
என்ன எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா:)? என்னதான் நம் சான்றோர் சொல்லிச் செல்லாத விஷயமே இல்லையென்றாலும் ஒரு விஜய் அல்லது ஒரு விவேக் திரைப் படங்களில் பேசிய வசனங்கள் என்றால் அது ‘பச்சக்’ என மனசில் ஒட்டி கொள்வதன் காரணம்.. மாற்றி மாற்றி அதைக் காட்டிக் காட்டி புண்ணியத்தைக் கட்டிக் கொள்ளும் சேனல்கள்தான்:)!
goma said...
பதிலளிநீக்கு//யாருக்கும் வெட்டுப் படலை திவாவுக்கு மட்டும் படங்கள் வெட்டுப் படுது....அது என்ன???.”//
அவர் சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அவருக்குத் தந்திருக்கும் பதிலைப் படித்தால் புரிந்திடுவீர்கள்:)!
// //நின்று எதிர் கொண்டாலே புரியும்//, ரசித்த வரிகள் படி
புரியப் பாருங்களேன்,திவா.//
பாருங்கள், நீங்கள் சொன்ன ஒரே காரணத்துக்காக எப்படியெல்லாம் உருண்டு புரண்டு பார்த்திருக்கிறார் என:)! நன்றி, அதே சமயம் சாரி திவா.
//[ராமலஷ்மி பயந்து விடாமல்...மறுபடியும் நம் தளத்தில் கோமா/திவா யுத்தம் தொடங்கி விடுமோ என்று.வெள்ளைகொடி பறக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள்,]//
ஹிஹி. அதான் நீங்களே தயாராக வெள்ளைக் கொடி காட்டி விட்டீர்களே.
திவா said...
பதிலளிநீக்கு////நின்று எதிர் கொண்டாலே புரியும்//, ரசித்த வரிகள் படி
புரியப் பாருங்களேன்,திவா.//
நின்னு பாத்தாச்சு, உக்காந்து பாத்தாச்சு, படுத்து பாத்தாச்சு.// //
கோமா சொன்னதை இத்தனை சீரியஸாக எடுத்து, படுத்தும் பார்த்த நீங்கள் அப்படியே எனக்காக அலுவலகத்தில் பக்கத்து ஸீட் காரர் கணினியில் எட்டியும் பார்த்துப் விட்டுச் சொல்லுங்களேன், ப்ளீஸ்:)!.
//அப்படியேதான் வெட்டு பட்டு தெரியுது!//
சிலருக்கு வெட்டுப் பட்டாலும் பலருக்குச் சரியாகத் தெரிவதால் புகைப்பட பதிவில் நந்துவின் method சரியாக வேலை செய்யும் பட்சத்தில் இப்படியே காட்டிடத்தான் ஆசை. படத்தைக் ‘க்ளிக்’கிட்டுப் பார்க்கும் பொறுமை எல்லோருக்கும் இருக்காதல்லவா, திவா? இருந்தாலும் இதற்கு வேறெதும் வழி இருக்கிறதா என்றும் ஆய்கிறேன். அக்கறையுடன் இதைச் தெரிவித்ததற்கு என் நன்றிகள்.
ambi said...
பதிலளிநீக்கு//3 வது படம்! Superrrrrrr! ஆஹா!//
எல்லோரும் ‘’ஓஹோ” வெனப் புகழ்ந்தது உங்களுக்கும் பிடித்திருக்கிறது:)! ஆஹா, நன்றி அம்பி!
syncMaster 540 15 inch 1024*768
பதிலளிநீக்குவேற மெதேடா? என் சித்திரம் பேசுதடில பாருங்க. டெம்ப்லேட் ஐ மாத்திட்டேன். மத்த எல்லா விவரமும் கீழே போயிட்டது. படங்கள் மட்டுமே உடம்பிலே.சிம்பிள்!
February 10, 2009 11:42 AM
பதிலளிநீக்குராமலக்ஷ்மி said...
அபி அப்பா said...
//கவிதையும் நீங்க தேர்ந்தெடுத்த படங்களும் நல்லா இருக்கு பிரண்ட்!//
நன்றி.
//ஆனா இன்றைக்கு செவ்வாய் நான் கும்மி அடிப்பதில்லை என விரதம்!//
இனிமே என் எல்லா பதிவும் செவ்வாய்தான்:)!
February 10, 2009 11:51 AM
------
goma said...
//அனைவரையும் ,ஒவ்வோரு செவ்வாய்க்காக,வழிமேல் விழி வைத்து காத்திருக்க வைத்து விட்டீர்கள்.....சபாஷ்.//
நன்றி. ஆனால் ஒவ்வொரு செவ்வாயும் என கமிட்மெண்ட்டெல்லாம் கிடையாதுங்கோ:)!
February 17, 2009 2:16 PM
நான் புரிந்து கொண்டது சரியில்லையா?
போன பதிவின் தொடர்ச்சியாகத்தான் கேட்கிறீர்கள் என்பது எனக்கும் புரிந்தது. அதுச் சும்மா ஒரு பேச்சுக்கு.. அபி அப்பாவின் கலாட்டாவுக்குப் பயந்து.. அதை நிறுத்த ஒரு உத்தியாக நினைத்து வேடிக்கையாகச் சொன்னது:))!
பதிலளிநீக்குஆக, நீங்கள் புரிந்து கொண்டது சரிதான். ஆனால் செவ்வாய் என்று சொல்லியிருக்கிறேனே தவிர ‘ஒவ்வொரு’ என சொல்லவில்லை அல்லவா அதான் ’நோ கமிட்மெண்ட்ஸ்’ என்றேன்:)!
இப்போதைக்கு எனது பதிவுகள் மாதம் 3 அல்லது 4 என்ற அளவிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். அதை விடக் குறையலாம். ஆனால் கூடாது. அக்கறையுடன் முந்தைய பதிவின் பதில்களிலிருந்து கேட்டிருக்கும் கேள்விக்கு நன்றி கோமா:)!
தொரத்தி தொரத்தி கேள்வி கேக்கறீங்களே? கோ மா கோ!
பதிலளிநீக்குBlogger திவா said...
பதிலளிநீக்கு//syncMaster 540 15 inch 1024*768//
திவா, இங்கு
syncMaster 753 17 inch-லும் மடிக்கணினியின் 14 inch-லும் முழுமையாகவே தெரிகிறது. இப்போது நானும் உங்களுக்கு ஒரு மெதெட் சொல்கிறேன். ட்ரை பண்ணிப் பாருங்களேன். நாம் திறக்கும் பக்கங்கள் முழுமையாகத் தெரியுமாறு மானிட்டரில் ஸ்க்ரீன் செட்டிங் ரெசலூஷனை மாற்றிப் பாருங்களேன்.
//வேற மெதேடா? என் சித்திரம் பேசுதடில பாருங்க. டெம்ப்லேட் ஐ மாத்திட்டேன். மத்த எல்லா விவரமும் கீழே போயிட்டது. படங்கள் மட்டுமே உடம்பிலே.சிம்பிள்!//
பார்த்தேன். சித்திரம் மட்டுமே பேசும் வலைப்பூவுக்கு அது இன்னும் சிறப்பே. ஆனால் என் வலைப்பூவில் விவரங்களும் பதிவும் அருகருகே வருவதையே விரும்புகிறேன் என்பது ஒருபுறமிருக்க, ஹிஹி, டெம்ப்ளேட்டை மாற்றப் போனால் ஏகக் குளறுபடியாவதால் அதில் இப்போதைக்கு கை வைப்பதாய் உத்தேசமில்லை:))!
திவா said...
பதிலளிநீக்கு//தொரத்தி தொரத்தி கேள்வி கேக்கறீங்களே? கோ மா கோ!//
ஆகா ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க...அது என்ன அவர்கள் துரத்தி துரத்தி கேட்டால் நீங்க மாற்றி மாற்றி மடக்க வந்து விடுகிறீர்கள்:)? பதில் பெற்றதும் அவர்கள் போய் விடத்தான் போகிறார்கள்! GO எல்லாம் சொல்லக் கூடாது திவா:)!
அக்கா, திரையில் text size சின்னதாக்கி படத்தை பாத்தாச்சு. இல்லைனாலும் சொடுக்கி பாத்து இருப்பேன். மத்தவங்களுக்கு பிரச்சினை இல்லைனா எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை.
பதிலளிநீக்குகோ மா கோ சமாசாரம். என்ன செய்யறது! ஜோக் அடிக்க ஒரு வாய்ப்பு கிடச்சா விட மனசு வரதில்லை. உங்களுக்கு கஷ்டமா இருந்தா இதை எல்லாம் அவங்க ப்ளாக்லேயே வெச்சுக்கிறேண்! ;-)
பதிலளிநீக்குதிவா said...
பதிலளிநீக்கு//கோ மா கோ சமாசாரம். என்ன செய்யறது! ஜோக் அடிக்க ஒரு வாய்ப்பு கிடச்சா விட மனசு வரதில்லை.//
எனக்கும் அது தெரியும்:)! ஒரு விருந்தினர் இன்னொரு விருந்தினரை “கோ” சொல்லக் கூடாது என சொல்ல வந்தேன்:)!
//அக்கா, திரையில் text size சின்னதாக்கி படத்தை பாத்தாச்சு. இல்லைனாலும் சொடுக்கி பாத்து இருப்பேன். மத்தவங்களுக்கு பிரச்சினை இல்லைனா எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை. //
அப்பாடி, நல்லது திவா. அப்போ இப்படியே தொடருகிறேன்:)!
// எனக்கும் அது தெரியும்:)! ஒரு விருந்தினர் இன்னொரு விருந்தினரை “கோ” சொல்லக் கூடாது என சொல்ல வந்தேன்:)!//
பதிலளிநீக்குஅது நீங்க நினைக்கிறா கோ இல்லை. சின்ன வயசிலே (ஹும்! ஞாபகம் இருக்கா?) ஸ்கூல்லே கோக்கோ விளையாடினது இல்லை?
அந்த கோ!
சமாளிப்பு பரவாயில்லைதானே?
:-))
@ திவா,
பதிலளிநீக்குசமாளிப்பு சூப்பரு:))!
// அது 87-ல் எடுத்த படம்.//
பதிலளிநீக்குஅப்போ பிறவிக்கலைஞன்னு சொல்லுங்க.
// கோணம் முதல் லைட்டிங் வரை சகலதும் சிந்தனைக்கு வருகிறது PiT புண்ணியத்தில்:).//
same blood
கார்த்திக் said...
பதிலளிநீக்கு****// அது 87-ல் எடுத்த படம்.//
//அப்போ பிறவிக்கலைஞன்னு சொல்லுங்க.//****
81-லே எனது 17-வது வயதிலேயே Yashica-D காமிராவைக் கையில எடுத்துட்டன்ல:)! அந்த காமிரா பற்றிய விவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.
நன்றி கார்த்திக்:))!
muthal padam arumai...
பதிலளிநீக்குappadiye ennoda kavithai blog i paddikka aarvamudan azhaikkindren...ithuve enathu muthal post...
nandri
-puma
@ புமா,
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//
பதிலளிநீக்கு'உயர உயரப் பறந்தாலும்
ஊர்க் குருவி பருந்தாகுமா?'
யாரோ எவரோ
சொல்லிச் சென்றதாலே
சிறகை விரிக்காதிருக்கலாமா?
பறக்க முயலாதிருக்கலாமா?
நோக்கம் உயர்வாய் இருந்தால்
சீக்கிரமே உயர்வாய் பருந்தை விட-
சின்னதாய் இருக்கிறதே சிறகென்று
எண்ணவே எண்ணாதே என்றும் நீ!
//
தன்னம்பிக்கைக்கு கொடுத்துள்ள
அங்கீகாரம்.
இரண்டு கைகளில் மிகச்சிறந்த
கை எதுவென்றால் நான் உடனே
கூறுவேன் அது தன்னம்பிக்கை என்று.
அந்த தன்னம்பிக்கை சத்தமில்லாமல்
இங்கு மொத்தமாக அரங்கேறி இருக்கிறது.
//
பதிலளிநீக்குவாழ்விலும் கூட இதுவே நியதி-
பிரச்சனை தடதடவென வருகையிலே
எதிர்கொள்ளாமல் எதிர் திசையில்
எடுத்திடலாம் ஓட்டம்
என்றுதான் மனமது விழையும்..
//
சரியாச் சொன்னீங்க என்ன தான்
அறிவு வேலை செய்தாலும் சமயத்தில்
இது போல் தான் தோன்றுகிறது
துயரம் தாங்க முடியாமல் போகும்
போது ராமலக்ஷ்மி மேடம்.
//
பதிலளிநீக்குஇன்னல் திரையும் விலகி-மிக
இனிதாய் காட்சிகள் மலர்ந்திடும்.
//
அந்த இனிய காட்ச்சிகளுக்காக இன்னல்களை தாங்கிக்கலாம்!!
அருமை அருமை ரசிக்க வைத்த வரிகள்!!
//
பதிலளிநீக்குஆனந்தம் இது ஆனந்தம்
ஆஹா வெகு ஆனந்தம்
காவேரியில் இத்தனை தண்ணீர் கண்டால்
கரை புரண்டிடாதோ ஆனந்தம்!
//
இதை படிக்கும்போது உண்மையாகவே
ஆனந்தம் என் மனதில் அப்பிக்கொண்டது.
தாமதாமாக வருகிறேன் என்று மிகவும் வருத்தத்தோடு தான் வந்தேன்.
ஆனால் என் மனதிற்கு ஒரு
அருமையான விருந்து அளித்தமைக்கு
மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
படங்கள் அருமை, நீங்கள்
எழுதிய கவிதைகள் அருமையோ அருமை!!
RAMYA said...
பதிலளிநீக்கு//இரண்டு கைகளில் மிகச்சிறந்த
கை எதுவென்றால் நான் உடனே
கூறுவேன் அது தன்னம்பிக்கை
என்று.//
எவ்வளவு அருமையாகச் சொல்லி விட்டீர்கள்.
//அந்த தன்னம்பிக்கை
சத்தமில்லாமல் இங்கு மொத்தமாக அரங்கேறி இருக்கிறது.//
நன்றி ரம்யா.
RAMYA said...
பதிலளிநீக்கு//*//வாழ்விலும் கூட இதுவே நியதி-
பிரச்சனை தடதடவென வருகையிலே
எதிர்கொள்ளாமல் எதிர் திசையில்
எடுத்திடலாம் ஓட்டம்
என்றுதான் மனமது விழையும்..//
சரியாச் சொன்னீங்க என்ன தான்
அறிவு வேலை செய்தாலும் சமயத்தில்
இது போல் தான் தோன்றுகிறது
துயரம் தாங்க முடியாமல் போகும்
போது ராமலக்ஷ்மி மேடம்.//*//
உண்மைதான் ரம்யா. உங்களது சகோதரி குறித்த பதிவு அதை உறுதியும் படுத்தியது.
உங்களை ஆனந்தப் படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே. தங்கள் மனம் திறந்த பாராட்டுக்கள் யாவற்றிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ரம்யா.
பதிலளிநீக்குRAMYA said...
//*//இன்னல் திரையும் விலகி-மிக
இனிதாய் காட்சிகள் மலர்ந்திடும்.//
அந்த இனிய காட்ச்சிகளுக்காக இன்னல்களை தாங்கிக்கலாம்!!
அருமை அருமை ரசிக்க வைத்த வரிகள்!!//*//
ரம்யா கண்டிப்பாக இன்னல்களுக்குப் பிறகும் திரை விலகி இனிய காட்சிகள் வந்திடத்தான் போகிறது. வரிகளை ரசித்தது போல வாழ்விலும் அத்தகைய தருணங்களை ரசிக்கத்தான் போகிறீர்கள். உங்கள் சகோதரி பூரண குணமடைய பதிவுலக நண்பர்கள் எல்லோரும் பிரார்த்திக்கிறோம்.
RAMYA said...
பதிலளிநீக்கு//*//ஆனந்தம் இது ஆனந்தம்
ஆஹா வெகு ஆனந்தம்
காவேரியில் இத்தனை தண்ணீர் கண்டால்
கரை புரண்டிடாதோ ஆனந்தம்!//
இதை படிக்கும்போது உண்மையாகவே
ஆனந்தம் என் மனதில் அப்பிக்கொண்டது. // *//
உங்களை ஆனந்தப் படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே. தங்கள் மனம் திறந்த பாராட்டுக்கள் யாவற்றிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ரம்யா.
//
பதிலளிநீக்குகாலக் கண்ணாடியில் ஒரு ஆனந்தத் தாவல்
//
போடோல மூணாவது போட்டோவும் எல்லா கவிதையும் நல்லா இருக்கு
விகடன் குட் பிளாக்கில்
பதிலளிநீக்குஉங்கள்
///சேற்றிலே செந்தாமரைகளும் ஆஸ்கார் அவார்டுகளும்//
பதிவு !!
வாழ்த்துக்கள் அம்மா!!
யம்மா....! செம கும்மி! குறுக்கால வரவே முடியலை.
பதிலளிநீக்குவாழ்கையின் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் விதம் பற்றி நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்! மனதுக்கு இதம்!!புயற்காற்றின் எதிரே போய் நிற்பது ஒரு சுகம்!!
ராமலக்ஷ்மி அவர்களுக்கு.. என்னுடைய கவிதை விகடனில் வந்ததை சொல்லி இருந்தீர்கள்.. ரொம்ப நன்றி.. உங்களுடைய எழுத்துக்களை படிக்கும் போது ரொம்ப சந்தோஷமாக உள்ளது.. வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்கு”விகடன் புகழ்” அக்கா வாழ்க!
பதிலளிநீக்குவாழவந்தான் said...
பதிலளிநீக்கு//*//காலக் கண்ணாடியில் ஒரு ஆனந்தத் தாவல்//
போடோல மூணாவது போட்டோவும் எல்லா கவிதையும் நல்லா இருக்கு//*//
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வாழவந்தான்.
ஜீவன் said...
பதிலளிநீக்கு//விகடன் குட் பிளாக்கில்
உங்கள்
///சேற்றிலே செந்தாமரைகளும் ஆஸ்கார் அவார்டுகளும்//
பதிவு !!
வாழ்த்துக்கள் அம்மா!!//
கண்டதும் தகவல் தந்து வாழ்த்திய உங்களுக்கும் சதங்காவுக்கும் என் நன்றிகள் ஜீவன்!
நானானி said...
பதிலளிநீக்கு//வாழ்கையின் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் விதம் பற்றி நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்! மனதுக்கு இதம்!!புயற்காற்றின் எதிரே போய் நிற்பது ஒரு சுகம்!!//
அழகாய்ச் சொன்னீர்கள் நானானி. போராடி ஜெயிப்பதுவும் ஒரு சுகமே:)!
கார்த்திகைப் பாண்டியன் said...
பதிலளிநீக்கு//ராமலக்ஷ்மி அவர்களுக்கு.. என்னுடைய கவிதை விகடனில் வந்ததை சொல்லி இருந்தீர்கள்.. ரொம்ப நன்றி.. உங்களுடைய எழுத்துக்களை படிக்கும் போது ரொம்ப சந்தோஷமாக உள்ளது.. வாழ்த்துக்கள்..//
இன்றைய விகடன் பரிந்துரையில் இன்னொரு கவிதை தங்களது, மாசில்லாத உலகம் தா...!!
வாசிக்காமலிருப்பேனா:)? மிகவும் நல்ல கவிதை அது. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்.
எம்.எம்.அப்துல்லா said...
பதிலளிநீக்கு//”விகடன் புகழ்” அக்கா வாழ்க!//
உங்கள் அன்புக்கு நன்றி அப்துல்லா.
படங்களும் வரிகளும் நன்று இருந்தாலும் இரண்டாவது படத்தின் வரிகள் ஆழமாய் இருந்தன...
பதிலளிநீக்கு@தமிழன்-கறுப்பி,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அன்பு ராமலக்ஷ்மி,
பதிலளிநீக்குஇந்தப் பதிவுக்கும் நான் எழுதும் விசயத்துக்கும் சம்பந்தம் இல்லை.
என் ஒவ்வொரு பதிவிலும் வந்து என்னை உற்சாகமளிக்கும் பின்னூட்டம் இட்டு எனக்கு ஆனந்தம் கொடுக்கிறீர்களே அதற்கு நன்றி சொல்லத்தான்.
அன்புக்கு நன்றி லக்ஷ்மி.
@ வல்லிம்மா,
பதிலளிநீக்குஉங்கள் ஒவ்வொரு பதிவும் நீங்கள் கடந்து வந்த பாதையிலே சந்தித்த.. பார்த்த.. உணர்ந்த.. கற்றுக் கொண்ட.. பல அனுபவங்களிலிருந்து ஏதோ ஒரு விஷயத்தை இதமாய் பதமாய் எல்லோருக்கும் சொல்லிய படி வருகிறதே வல்லிம்மா. தவறாமல் பதிவுகளை நான் படிக்கிறேன் என்பதை விடப் படிக்கத் தவறக் கூடாதவை அவை என்பதுவே சரி.
உங்கள் அன்புக்கும் என் நன்றி.