Sunday, February 27, 2011

வடம் - இன்றைய தினமணி கதிரில்..

'பதப'வெனப் படபடத்து அடங்கி நின்றது என்ஜின். வாயிற்கதவின் படிக்கட்டில் அமர்ந்திருந்த விமலா சட்டெனத் துள்ளி எழுந்து அவனைப் பார்த்து வாய் கொள்ளாச் சிரிப்புடன் "மாமா" என்றாள் மகிழ்ச்சியாய்.

அதே மகிழ்ச்சியைத் தன் அகன்ற புன்சிரிப்பால் விவேக் அந்த மழலைக்குப் புரிய வைத்த படி "மாமாவுக்கு வழி விடும்மா" என்றதும், அவள் ஒதுங்கிக் கொள்ள இரும்புக் கதவைத் தள்ளித் திறந்தான். இரட்டைப் படிகளின் நடுவேயிருந்த சறுக்கத்திலே பைக்கின் சக்கரத்தை வைத்து எம்பி உள்ளே ஏற்றினான்.

மறுபடி கதவை மூடி உட்புறமாகத் தாளிடவும் ஓடி வந்து வழக்கம் போல கதவின் கீழ் கம்பியில் தொற்றி நின்று கொண்டாள் விமலா.

மாடியேறி விவேக் தன் அறைக்குள் நுழையும் முன் மேலிருந்து கை அசைக்க வேண்டும் விமலாவுக்கு. இந்தப் புது சிநேகிதம் மொட்டு விட்டு மூன்று வாரங்களாகின்றன.

மூன்று வயதான விமலா வீட்டின் எதிர் நிலத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு தம்பதியரின் ஒரே மகள். அங்கேயே தற்காலிகக் குடிசை இட்டு வசித்தாலும், தங்களது வேலை நேரத்தில் குழந்தை வேடிக்கை பார்த்தபடி பொழுதைப் போக்கட்டும் எனப் பெரும்பாலும் அவளை விவேக் குடியிருந்த வீட்டின் வாயிற்கதவையொட்டிய படிக்கட்டில் அமர்த்தி விட்டிடுவாள் அவளது அன்னை முனியம்மா.

'குளுகுளு'வென்ற வேப்பமரம் ஒரு காரணம் என்றால் கீழ் தளத்தில் குடியிருந்த வீட்டின் உரிமையாளர்களான வயதான தம்பதியரின் அனுசரணையும் ஒரு காரணம். எப்போதும் வராந்தாவில் அமர்ந்து எதையாவது படித்தபடி இருக்கும் பெரியவர் மணியும், அவரது மனைவி மேகலாவும் குழந்தையிடம் பேச்சுக் கொடுத்தபடி இருப்பார்கள். சில சமயங்களில் சாப்பாடும் கொடுப்பதுண்டு.

விவேக் நண்பன் கார்த்திக்குடன் மேல் தளத்திலிருந்த அறையில் வாடகைக்கு இருந்தான்.

மேல்படிக்கு வந்து சாவியால் கதவைத் திறந்ததும் அனிச்சையாக விமலாவுக்குக் கை அசைக்கத் திரும்பிய விவேக் ஒரு கணம் திகைத்து நின்று விட்டான். குழந்தை வாயிற்படியில் விநோதமாக மல்லாந்து விழுந்து கிடந்தாள். பதட்டத்துடன் நான்கு நான்கு படியாகத் தாவித் தாவி இறங்கி ஓடி வந்து கதவைத் திறந்து குழந்தையைத் தூக்கினால் பேச்சு மூச்சில்லை.

ணி சார் மணி சார்” என குரலெழுப்பவும் பெரியவரும் மேகலாவும் ஓடி வந்தனர்.

“என்னப்பா ஆச்சு”

“தெரியலையே! நான் வரும் போது நல்லா சிரிச்சுட்டு நின்ன குழந்த மேலே போய் திரும்புவதற்குள் இப்படிச் சுருண்டு கிடக்குதே”

என்ன ஏது என ஆராய முற்படும் முன்னரே தெருவின் எதிர்த் திசையிலிருந்து ஓடி வந்தான் சின்னையா. விமலாவின் தகப்பன்.

“தம்பி புள்ளய இப்படிக் கொடுங்க”

பின்னாடியே ஓடி வந்த முனியம்மா பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பிக்க "தே சும்மா இரு புள்ளே" என சின்னையா போட்ட அதட்டலில் அரண்டு சேலைத் தலைப்பைப் பந்தாய்ச் சுருட்டி வாயில் அடக்கிக் கொண்டாள். விமலாவை விவேக்கிடமிருந்து வாங்கித் தன் தோளில் சாய்த்துக் கொண்டு தன் குடிசை இருந்த திசையில் நடையைக் கட்டியவனை பெரியவரின் குரல் தடுத்தது.

“என்னப்பா டாக்டரிடம் காட்ட வேண்டாமா?”

“என்ன காட்டியும் இனிப் பிரயோசனமில்லை சாமி. இப்படித்தான் அப்பப்ப மயங்கி விழுந்திடுது. சித்த நேரத்தில் சரியாயிடும்...விதி நல்லா இருந்தா...” என்றான் கனத்த குரலில்.

“சொல்றத புரியும் படியா சொல்லக் கூடாதா...?” ஆதங்கத்துடன் கேட்டான் விவேக்.

குழந்தையை முனியம்மாவிடன் கொடுத்து குடிசையில் படுக்க வைக்குமாறு ஜாடை காட்டிவிட்டு அவர்கள் அருகில் வந்தான் சின்னையா.

“தெரிஞ்சு என்னா ஆகப் போவுது தம்பி? இருந்தாலும் இத்தினி அக்கறயா கேக்கிறதால சொல்லுதேன். இது இப்படி ரெண்டு மூணு தபா மயக்கம் போட்டு விழுந்ததால போன வாரம் தர்மாஸ்பத்திரிக்கு இட்டுக்கிட்டுப் போய் காம்பிச்சோம். மூளயில கட்டியாம் எதோ, சொன்னாக புரியல. 'ஆப்புரேசன் பண்ணணும். எங்க ஆசுபத்திரில அதுக்குண்டான வசதிங்க இல்ல. வேறயிடம் பாரு'ன்னு எழுதிக் குடுத்தாக. லச்சக் கணக்கில செலவாகுமின்னும் சொன்னாக. ரெண்டு வேள கஞ்சிய அன்னின்னிக்கு உழைச்சாதான் கண்ணால பாக்க முடியுது எங்களால. இதுக்கு மேல சாமி விட்ட வழின்னு இருக்கோமுங்க.”

சொல்லி முடிக்கும் முன் குரல் உடைந்து போனது சின்னையாவுக்கு. எந்தப் பதிலையும் எதிர் பார்க்காமல் கண்களைத் துடைத்தபடியே சின்னையா சென்று விட உறைந்து போய் நின்றிருந்தார்கள் மூவரும்.

கார்த்திக் அறைக்குத் திரும்பும் போது இரவு மணி எட்டரையிருக்கும். அறை ஜன்னல் இருண்டிருக்க ‘பைக் நிக்குது. அதுக்குள்ள சாப்பிடக் கிளம்பிட்டானா என்ன’ எண்ணியபடி தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்து சுவிட்சைத் தட்டியவன் படுக்கையில் 'கொட்டக் கொட்ட' விழித்தபடி விட்டத்தைப் பார்த்துப் விழுந்து கிடந்த விவேக்கைக் கண்டு வியந்தான்.

ஏதோ நெருடினாலும் "என்னாச்சு விவேக். கரெண்ட் சேவிங்கா..?" என்றான் சூழ்நிலையைக் கலகலப்பாக்க முயன்றபடி.

இவன் எப்போது வருவான் என்று காத்திருந்தவன் போல விமலாவைப் பற்றி 'கடகட'வென விவரித்து முடித்தான் விவேக்.

“வருத்தமான விஷயம்தான். ஆனால் நம்மால என்ன செய்ய முடியும்?”

“என்ன கார்த்தி இப்படி சொல்லிட்டே, எதுவும் முடியாதா” ஆதங்கமாகக் கேட்டான் விவேக்.

“மாசக் கடைசியான நம்ம பாடே தொட்டுக்கோ தொடச்சுக்கோன்னு இருக்கு. படிப்பு லோனு, பைக்கு லோனு இதெல்லாம் போக ஊருக்கு வேற அனுப்பணும். என்ன முடியும் சொல்லு!”

“முடியும்னு தோணுது கார்த்தி. அந்தக் குழந்தையை நாம முயற்சி செஞ்சா காப்பாத்திட முடியும்னே தோணுது.”

“எனக்கும் மட்டுமென்ன ஆசையில்லயா அந்தக் குழந்தை பிழைச்சு வரணும்னு. ஆனா லட்சக் கணக்கில பணத்துக்கு எங்க போறது?” என்றபடியே ஷூவைக் கழட்டி ஓரமாக வைத்தான்.

“லட்சக் கணக்கில பணம் நம்மகிட்ட இல்லேன்னா என்ன? உதவக் கூடிய நல்ல மனசு உள்ளவங்களை ஒண்ணு சேர்க்கிறதும், அவங்க கவனத்துக்கு இதைக் கொண்டு போவதும் கூடவா முடியாது? யாரையும் வற்புறுத்தப் போறதில்லையே. இந்தக் குழந்தையைப் பத்திய விவரங்களை எழுதி உதவி கேட்டு நமக்கு தெரிஞ்சவங்களுக்கு ஈமெயில் அனுப்பிதான் பார்ப்பமே.”

“சரிப்படுமா? நம்மைக் கண்டாலே ‘வந்துட்டான்யா.. வந்துட்டான்’னு ஓட மாட்டாங்க?”

“அதுக்குதான் சொல்றேன் நம்மைப் புரிஞ்ச தெரிஞ்சவங்களுக்கு மட்டும் அனுப்புவோம். ஒரு பொதுச் சேவைன்னு வரும் போது எல்லோருமே இப்படித்தான் நினைச்சு ஒதுங்கிடறோம். அப்புறம் ஊர்ல உலகத்துல நல்லது செய்ய யாரு இருப்பா?”

“அப்படிங்கறே? ரைட்டுப்பா. நாளைக்கேதொடங்கிடுவோம். முதல்ல மெஸ் மூடும் முன்னே சாப்பிட்டுட்டு வரலாம் வா. பசி ஆளக் கொல்லுது"

நண்பன் ஒத்துக் கொண்டு உடனிருக்கச் சம்மதித்ததிலே பெரும் தெம்பு கிடைத்தாற் போலிருக்க கிளம்பினான் விவேக்.

வழக்கமாக ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கி விடும் கீழ்த்தளத்தில் இன்னும் விளக்கெரிந்து கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கத் தவறவில்லை. சாப்பிட்டு அரை மணியில் திரும்பி வந்து இரும்புக் கதவைத் திறக்கையில் 'எண்ணெய் போடக் கூடாதா எனக்கு' என அது எழுப்பிய 'க்ரீச்' சத்தத்தில் வெளியில் வந்து வராந்தா விளக்கை எரிய விட்டார் மணி.

“இன்னுமா தூங்கப் போகல சார்?” ஒரு மரியாதைக்கு கேட்டு வைத்தான் கார்த்திக்.

“இன்னிக்கு தூக்கம் வரும்னு தோணலப்பா”

பதில் கார்த்திக்குக்கு என்றாலும் பார்வை என்னவோ விவேக் மேல் பதிந்தது அர்த்தத்துடன்.

“விமலா நினைப்புத்தானே”

“சரியாச் சொன்னே விவேக்” என்றபடி உள்ளிருந்து வந்த மேகலா அழிக் கதவைத் திறந்து விட எல்லோரும் அங்கிருந்த பிரம்புக்கூடை நாற்காலிகளில் அமர்ந்தனர். விவேக்கின் விவேகமான யோசனையை கார்த்திக் விவரிக்க விவரிக்க முகம் மலர்ந்து பூரித்துப் போனார் மணி.

“கொஞ்சம் இருப்பா” என உள்ளே சென்று திரும்பியவரின் கையில் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்.

“என் சக்திக்கு முடிஞ்சது”

ஓய்வூதியத்திலும் தாங்கள் கொடுக்கும் அறை வாடகையிலும் நாட்களை நகர்த்தும் அவர் அன்புடன் தொடங்கி வைத்த அந்த உதவித் தொகை லட்சியத்தையே எட்டி விட்ட சந்தோஷத்தை அப்போதே கொடுத்தது விவேக்கிற்கு.

“ஊர்க் கூடி இழுக்கும் தேரானாலும் அதுக்கும் தேவையாச்சேப்பா ஒரு சாரதி. நீ செலுத்து. காட்டுற திசையில வடம் இழுக்கறோம். தேரு நிலைக்கு வரும் வரை கூட இருப்பேன்” என்ற போது நெகிழ்ந்தே போனான் விவேக்.

தன் பிறகு நடந்தவை எல்லாமே கனவோ என வியக்கும் படியாக இருந்தது. பெரியவர் மணியின் அக்காள் மகள், தான் நர்ஸாகப் பணி புரியும் பிரபல மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க, மருத்துவர் தனக்கான அறுவை சிகிச்சை கட்டணத்தைத் தள்ளுபடி செய்து பிற செலவுகளுக்கான இரண்டு லட்சத்தை ஏற்பாடு செய்யச் சொன்னார் கனிவுடன்.

கல்லூரி நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், தெரிந்தவர்கள் என தொடர்பு கொண்டு தங்கள் வங்கிக் கணக்கு எண்ணையும் தர டிராஃப்ட், செக், வங்கிக் கணக்குக்கு என வந்து சேர்ந்தவை ஒரே வாரத்தில் ஐம்பது ஆயிரத்தைத் தொட்டது. மகிழ்ச்சியில் திளைத்தனர் இருவரும்.

மேலும் இரண்டு வாரங்கள் ஓடிட, பெரிய தேக்கம் வரவில். கூட பத்தாயிரமே சேர்ந்திருந்தது. துண்டு விழுந்த தொகை விவேக்கிற்குக் கவலையை உண்டு பண்ணுவதாய் இருந்தது. ஏனெனில் மருத்துவர் ஒரு மாதத்துக்குள் குழந்தையின் சிகிச்சையை ஆரம்பித்து விட வேண்டுமெனக் கெடு வைத்திருந்தார்.

வழக்கத்துக்கு மாறாக அன்று சற்று சீக்கிரமாகவே அறைக்குத் திரும்பிய கார்த்திக் “ நம்ம காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்ல இன்னும் சில பேரோட ஐடீஸ் கிடைச்சிருக்குடா" என்றான் உற்சாகமாய்.

'சட்'டென ஏதோ பொறி தட்ட “இரு வரேன்” என அவசரமாய் விமலாவைத் தேடிச் சென்றான் விவேக். வேப்பமரத்து நிழலிலே ஆட்டுக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் அவள். புதிதாய் அவளுக்குக் கிடைத்திருந்த தோழன்.

பக்கத்தில் நின்றிருந்த முனியம்மா இவனைக் கண்டதும் கை எடுத்துக் கும்பிட்டது சங்கோஜமாக இருந்தது. காட்டிக் கொள்ளாமல் வந்த வேலையில் மும்முரமாகி மொபைல் காமிராவால் விமலாவைப் படம் எடுக்கத் தயாரானான். அவளோ ஒத்துழைக்காமல் குட்டியின் பின்னே ஓடிக் கொண்டேயிருந்தாள். முனியம்மா பெரிதாக ரெண்டு அதட்டுப் போட்டாள் மகளை.

“அட குழந்தைய கோவிச்சுக்காதீங்க.” என்றவன் விமலாவை சமாதானப் படுத்தி, ஆட்டுக்குட்டியின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருப்பது போலவே இரண்டு மூன்று எடுத்து முடித்தான்.

முனியம்மாவிடம் காட்டிய போது முதலில் பூரித்துப் போனாள். பிறகு சற்று வாட்டமாக “தம்பி படம் புடிச்சா ஆயுசு கொறஞ்சுடும்பாங்களே. ஏற்கனவே இதுக்கு..” என இழுத்தாள்.

“நீங்க வேணா பாருங்கம்மா. இந்தப் படங்கள்தான் உங்க பொண்ணோட ஆயுசைப் கெட்டியாக்கப் போகுது” என்றான் அழுத்தமாக.

யிற்று, விமலாவின் படத்துடன் அடுத்தச் சுற்று ஈ மெயில்கள் பறந்து. பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை. மருத்துவர் சொன்ன கெடுவுக்கோ இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்க மெல்ல மெல்ல லட்சத்தை அப்போதுதான் எட்டிக் கொண்டிருந்தது சேகரிப்பு. பாதிக் கிணறே தாண்டிய நிலை. விவேக்கை விட அதிகம் கலங்கி விட்டிருந்தது கார்த்திக்தான்.

“ஹும்... விதி விட்ட வழின்னு இருந்தவங்களுக்கு வீணா ஆசை காட்டிட்டமோன்னு குற்ற உணர்ச்சியால்ல இருக்கு”

“எனக்கு அப்படித் தோணல கார்த்தி. இருக்கிற பணத்தை வச்சு சிகிச்சைய ஆரம்பிச்சிடுவோம்.”

“அது சரி. முழு பணத்தையும் கட்டினாதான் ஆச்சுன்னா என்ன செய்வ?”

“ம்ம். செய்யலாம் ஏதாச்சும். கடைசி முயற்சியா தானே நாளைக்கு பேப்பர்ல விளம்பரம் கொடுக்கறதாவும், ஏதாவது தொண்டு நிறுவனம் பார்த்துட்டு உதவ முன்வர சான்ஸ் இருக்குன்னும் மணி சார் சொல்லியிருக்கிறார். விடியும்னு தூங்கப் போகிற மாதிரி, பிறக்கும் வழின்னு நம்புவோம். ஆரம்பத்தில் மதர் தெரஸா தனி மனுஷியா.. எத்தனை தைரியமாய்.. பிடிவாதமா.. தன்னால முடியும்னு சேவையில் இறங்கினாரு, நல்ல உள்ளங்கள ஒண்ணு சேர்த்தாருன்னு இப்ப நினைக்க நினைக்கப் பிரமிப்பா இருக்கு. அதுவே தன்னம்பிக்கையும் தருது.”

சொன்னது காதிலேயே விழாத மாதிரி எந்த உணர்ச்சியும் காட்டாமல் சுரத்தின்றி அமர்ந்திருந்தவனைப் பார்க்கையில், தன் வார்த்தைகளில் அவனுக்குக் கிஞ்சித்தும் பிறக்கவில்லை நம்பிக்கை என்பது மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்தது விவேக்கிற்கு.

ஒருவகையில் அவனைப் பார்க்கப் பாவமாகவும் இருந்தது. இதுவே வேறொரு ஞாயிறாக இருந்தால் ரிலாக்ஸ் பண்ணுகிறேன் பேர்வழியெனப் பாட்டை அலற விட்டு அதகளம் செய்திருப்பான்.

“சரி வா. ப்ரெளசிங் சென்டர் வரை ஒரு நடை போய் மெயில் செக் பண்ணிட்டு அப்படியே டீ சாப்பிட்டு வரலாம்”

“நான் வரலை” குப்புற அடித்துப் படுத்துக் கொண்டான் கார்த்திக். அவனை அவன் போக்கில் விட முடிவு செய்தவனாய் தான் மட்டும் கிளம்பினான் விவேக்.

'புது மடல் இரண்டு' எனக் காட்டிய இன்பாக்ஸ் மேலே மவுஸால் 'க்ளிக்'கிடவும் விரிந்தது ஷ்யாமின் மடல். கல்லூரி நண்பன் ராமின் அண்ணன்.

'அன்பின் விவேக்,

நலமா? உன் மடலை வாசித்துக் கொண்டிருக்கையில் விமலாவின் படத்தைப் பார்க்க நேர்ந்த என் அப்பா விவரம் சொன்னதும் “எப்படியாவது இந்தக் குழந்தை நல்லாகி வரணுமடா “ என்றபடி என் மகளை அணைத்துக் கொண்டார். விமலாவைத் தன் சொந்தப் பேத்தியாகவே நினைத்து அவர் சொல்லியிருந்தது மறுநாள் 'ஃபார் விமலா' என்ற குறிப்புடன் என் அக்கவுண்டுக்கு அவர் மாற்றியிருந்த ஒரு லட்ச ரூபாய் உணர்த்தியது.

கடந்த மாதம் ஓய்வு பெறுகையில் அவருக்கு வந்த பணத்திலிருந்து நாளையைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அதை அளித்திருந்தது என்மேல் அவர் வைத்திருக்கும் பரிபூரண நம்பிக்கையையும் உணர்த்தியது. நல்ல மகனாக அதைக் காப்பாற்றுவேன். அவரது மகனாய் இருப்பதில் பெருமிதமும் கொள்கிறேன். அந்தப் பணத்தை உங்கள் வங்கி எண்ணுக்கு மாற்றி விட்டேன். சரிபார்ததிடுங்கள்.

உங்கள் அலைபேசிக்கு முயற்சித்த போது தொடர்பு கிடைக்காததால் மடலிட்டுள்ளேன். விமலா பரிபூரண குணமடைய எங்கள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

அன்புடன்
ராம்'

மீண்டும் வாசித்தான்.

நம்பிக்கை என்பது ஒரு சுழற்சியாய் ஒவ்வொருவர் வாழ்க்கையை ஒவ்வொரு விதமாய் நகர்த்திச் சென்று கொண்டே இருக்கும் அற்புதத்தைத் தன் அனுபவத்திலேயே உணர்ந்ததில் நெகிழ்ந்து போனவனாய் கார்த்திக்கிடம் காட்ட அக்கடிதத்தைப் பிரிண்ட் எடுத்துக் கொண்டான்.

வீட்டை நெருங்கிய போது, நடைவாசலில் வழக்கம் போல விமலா. மணித் தாத்தா வீட்டில் தனக்குத் தரப்பட்ட உணவின் ஒரு பாதியை ஆட்டுக்குட்டிக்கு உருட்டி வைத்துச் சாப்பிடச் செய்து கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும் எப்போதும் போல மலர்ச்சியாய் புன்னகைத்தாள்.

தேர் நிலைக்கு வர இன்னும் இழுக்க வேண்டியிருந்த வடத்தின் கனம் அந்தப் புன்னகையில் கரைந்து போக, சட்டைப் பையிலிருந்த கடித நகலை அவன் கைகள் அன்னிச்சையாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டன. இலேசான மனதுடன் அவள் அருகில் அமர்ந்து ஆட்டுக் குட்டியைத் தடவிக் கொடுக்கலானான் தானும்.
*** *** ***

நன்றி தினமணி கதிர்!

கதைக்கான காட்சியுடன் தலைப்பை வலிமையான வடமாகவே வரைந்திருக்கும் ஓவியருக்கும் நன்றி! தினமணி இணைய தளத்திலும் வாசிக்கலாம் இங்கே..

65 comments:

 1. வாசித்துவிட்டு வருகிறேன் ராமலஷ்மி.

  ReplyDelete
 2. மனதைத் தொட்ட கதை

  ReplyDelete
 3. மிக அருமை,நல்ல மனப்பான்மையை இந்தக்கதை நிச்சயம் வளர்க்கும்...
  பாராட்டுக்கள் பல.

  ReplyDelete
 4. தேர் நிலைக்கு வர இன்னும் இழுக்க வேண்டியிருந்த வடத்தின் கனம் அந்தப் புன்னகையில் கரைந்து போக, சட்டைப் பையிலிருந்த கடித நகலை அவன் கைகள் அன்னிச்சையாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டன. -

  மனதை தொட்ட வரிகள், மிகவும் அருமையாக இருக்கிறது.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. மிக நெகிழ்வான கதை. பாராட்டுக்கள்.

  இதுவும் ஒருவகை வழிகாட்டுதல்தான்... இனி நமக்கென்ன என்று ஒதுங்க யோசிப்பார்கள்.

  ReplyDelete
 6. தேர் நிலைக்கு வர இன்னும் இழுக்க வேண்டியிருந்த வடத்தின் கனம் அந்தப் புன்னகையில் கரைந்து போக, சட்டைப் பையிலிருந்த கடித நகலை அவன் கைகள் அன்னிச்சையாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டன. -

  மனதை தொட்ட வரிகள்.
  \\இதுவும் ஒருவகை வழிகாட்டுதல்தான்... இனி நமக்கென்ன என்று ஒதுங்க யோசிப்பார்கள்\\
  வாழ்த்துகள் ராமலஷ்மி.

  ReplyDelete
 7. இன்று காலை கதிரில் பார்த்தேன் (பக்கம் 12,13,14)
  நீங்கள் தானா, வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்

  ReplyDelete
 8. அருமை மேடம். வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்

  நம்பிக்கை என்பது பெருங்கோயில்

  வாழ்த்துக்கள்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

  ReplyDelete
 10. அருமை. மனிதம் இன்னும் உயிருடன் இருப்பதை காட்டும், நம்பிக்கை தரும் இத்தகைய கதைகளை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்

  ReplyDelete
 11. அருமை! வாழ்த்துகள் மேடம்!!!

  குறிஞ்சி குடில்

  ReplyDelete
 12. கதை நெகிழ வைத்து விட்டது.எழுத்து நடை அபாரம்.

  ReplyDelete
 13. ஊர்கூடி செயல்பட்டால் எதையும் சாதிக்கலாமென்று புரியவைக்கிற கதை.
  மிக நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க அக்கா.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. கதையே ஆனாலும் ,நம்பிக்கை கொடுத்த வடிவமாய் பாசிடிவ் நோட்ஸ் வாசிக்கும் குயில் போல ஒரு கதை.
  மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 15. அருமை சகா! வாழ்த்துகள்!

  ReplyDelete
 16. பாசிடிவ் எண்ணங்களை விதைக்கும் கதை. பொருத்தமான தலைப்புடன் நம்பிக்கையை தூண்டும் முடிவு. தினமணியின் ஆஸ்தான எழுத்தாளராகி விட்டதால் புகைப் படம் போடவில்லை போலும் என்று காலை கதிரில் உங்கள் பெயர் பார்த்ததும் தோன்றியது. படிப்பவர்களுக்கு தனக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும்போது இது போல உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும் நடை.

  ReplyDelete
 17. மேடம், கதை மனதை நெகிழ வைத்தது. ஊர் கூடி தேர் இழுப்பது நடந்து கொண்டே தான் உள்ளது. இது கதை மட்டும் அல்ல உண்மையும் தான். அருமையாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. வாழ்த்துகள் அக்கா.கதை இயல்பு நடை பிடிச்சிருக்கு !

  ReplyDelete
 19. விமலாவுக்கு பிரச்சனை என்றதும் அந்த குழந்தைக்கு என்ன ஆகப்போகிறதோ என்ற தவிப்புடனேயே கதையை படித்து முடித்தேன். இத்தகைய நடை எல்லாருக்கும் கைவராது. இளைய தலைமுறைக்கு நல்லதொரு வழிகாட்டியாக இந்த கதை இருக்கும்.

  ReplyDelete
 20. வர வர பிளாக் ஒரு தமிழ்பத்திரிகைகளுக்கான லைப்ரரியாக மாறிக்கொண்டிருக்கிறது.
  மாற்றத்துக்கு வித்திட்ட ராமலஷ்மிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. அடுத்தவார கல்கியும் விகடனும் வந்ததும் சொல்லுங்க....

  ReplyDelete
 22. ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 23. மத்தவங்களுக்கு உதவி செய்யணும்கற நல்ல எண்ணத்தை நிச்சயமா இந்தக்கதை விதைக்கும். வாழ்த்துகள்..

  ReplyDelete
 24. விவேக், ராம், கார்த்தி மற்றும் ராமலக்ஷ்மி அவர்கள், மனிதனென்பவன் தெய்வமாகலாம் பாடல் வரியை நினைவுபடுத்துறாங்க! :)

  இந்த நல்லகதையை பலாயிரக்கணக்கான மக்களுக்கு கவனத்திற்கு எடுத்துச் செல்லும் தினமணிக்கதிருக்கு நன்றி!

  ReplyDelete
 25. //நம்பிக்கை என்பது ஒரு சுழற்சியாய் ஒவ்வொருவர் வாழ்க்கையை ஒவ்வொரு விதமாய் நகர்த்திச் சென்று கொண்டே இருக்கும் அற்புதத்தைத் தன் அனுபவத்திலேயே உணர்ந்ததில் நெகிழ்ந்து போனவனாய் கார்த்திக்கிடம் காட்ட அக்கடிதத்தைப் பிரிண்ட் எடுத்துக் கொண்டான்.//

  நம்பிக்கை தான் வாழ்க்கை.

  குழந்தை நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!

  கார்த்திக், விவேக்கிற்கு உதவிய நண்பர், ஒய்வூதியத்தில் சிறு தொகை கொடுத்த வீட்டுக்காரர் என்று பாத்திரப் படைப்பு அருமை. ந்ல்ல உள்ளங்கள் வாழ்க.

  ReplyDelete
 26. நல்ல கதை ராம லஷ்மி. மனதிற்கு நெகிழ்வை ஏற்படுத்திய கதை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. வடம் பிடிப்பதே ஒரு நம்பிக்கையில் தானே!!!

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. நல்ல கருத்து. ஒரு சிறு சம்பவத்தைக் கதையாக்கிய விதம் பாராட்டுக்குரியது.

  வாழ்த்துகள்

  ReplyDelete
 30. எல் கே said...
  //மனதைத் தொட்ட கதை//

  நன்றி எல் கே.

  ReplyDelete
 31. asiya omar said...
  //மிக அருமை,நல்ல மனப்பான்மையை இந்தக்கதை நிச்சயம் வளர்க்கும்...
  பாராட்டுக்கள் பல.//

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 32. ஜோ said...
  //தேர் நிலைக்கு வர இன்னும் இழுக்க வேண்டியிருந்த வடத்தின் கனம் அந்தப் புன்னகையில் கரைந்து போக, சட்டைப் பையிலிருந்த கடித நகலை அவன் கைகள் அனிச்சையாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டன. -

  மனதை தொட்ட வரிகள், மிகவும் அருமையாக இருக்கிறது.

  வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி ஜோசப்.

  ReplyDelete
 33. சி.கருணாகரசு said...
  //மிக நெகிழ்வான கதை. பாராட்டுக்கள்.

  இதுவும் ஒருவகை வழிகாட்டுதல்தான்... இனி நமக்கென்ன என்று ஒதுங்க யோசிப்பார்கள்.//

  நன்றி கருணாகரசு.

  ReplyDelete
 34. அன்புடன் அருணா said...
  //பூங்கொத்து!//

  நன்றி அருணா.

  ReplyDelete
 35. அம்பிகா said...
  //
  மனதை தொட்ட வரிகள்.
  \\இதுவும் ஒருவகை வழிகாட்டுதல்தான்... இனி நமக்கென்ன என்று ஒதுங்க யோசிப்பார்கள்\\
  வாழ்த்துகள் ராமலஷ்மி.//

  மிக்க நன்றி அம்பிகா.

  ReplyDelete
 36. ராம்ஜி_யாஹூ said...
  //இன்று காலை கதிரில் பார்த்தேன் (பக்கம் 12,13,14)
  நீங்கள் தானா, வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்//

  மிக்க நன்றி ராம்ஜி:)!

  ReplyDelete
 37. தமிழ் உதயம் said...
  //அருமை மேடம். வாழ்த்துகள்.//

  நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 38. Thamizth Thenee said...
  //மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்

  நம்பிக்கை என்பது பெருங்கோயில்

  வாழ்த்துக்கள்//

  அருமையான வரிகள். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தமிழ்த்தேனீ சார்.

  ReplyDelete
 39. மோகன் குமார் said...

  //அருமை. மனிதம் இன்னும் உயிருடன் இருப்பதை காட்டும், நம்பிக்கை தரும் இத்தகைய கதைகளை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்//

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 40. Kurinji said...
  //அருமை! வாழ்த்துகள் மேடம்!!!//

  நன்றி குறிஞ்சி.

  ReplyDelete
 41. MANO நாஞ்சில் மனோ said...
  //அருமையான கதை....//

  நன்றி நாஞ்சில் மனோ.

  ReplyDelete
 42. ஸாதிகா said...
  //கதை நெகிழ வைத்து விட்டது.எழுத்து நடை அபாரம்.//

  மிக்க நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 43. சுந்தரா said...
  //ஊர்கூடி செயல்பட்டால் எதையும் சாதிக்கலாமென்று புரியவைக்கிற கதை.
  மிக நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க அக்கா.

  வாழ்த்துக்கள்!//

  நன்றி சுந்தரா.

  ReplyDelete
 44. வல்லிசிம்ஹன் said...
  //கதையே ஆனாலும் ,நம்பிக்கை கொடுத்த வடிவமாய் பாசிடிவ் நோட்ஸ் வாசிக்கும் குயில் போல ஒரு கதை.
  மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

  மிக்க நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 45. பா.ராஜாராம் said...
  //அருமை சகா! வாழ்த்துகள்!//

  நன்றி பா ரா.

  ReplyDelete
 46. ஸ்ரீராம். said...
  //பாசிடிவ் எண்ணங்களை விதைக்கும் கதை. பொருத்தமான தலைப்புடன் நம்பிக்கையை தூண்டும் முடிவு. தினமணியின் ஆஸ்தான எழுத்தாளராகி விட்டதால் புகைப் படம் போடவில்லை போலும் என்று காலை கதிரில் உங்கள் பெயர் பார்த்ததும் தோன்றியது. படிப்பவர்களுக்கு தனக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும்போது இது போல உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும் நடை.//

  எழுதியவர் புகைப்படம் கதைகளுடன் வந்து பார்த்ததில்லை. எழுத்து பேசி நின்றாலே போதும். சொல்ல வந்த கருத்துக்கு வெற்றி. அதுதானே முக்கியம். மிக்க நன்றி ஸ்ரீராம்:)!

  ReplyDelete
 47. அமுதா said...
  //மேடம், கதை மனதை நெகிழ வைத்தது. ஊர் கூடி தேர் இழுப்பது நடந்து கொண்டே தான் உள்ளது. இது கதை மட்டும் அல்ல உண்மையும் தான். அருமையாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்//

  உண்மைதான் அமுதா. நல்லுள்ளங்கள் வடம் பிடிக்க நம்பிக்கைத் தேர் நகர்ந்தபடியே. அதைத்தான் பதிந்துள்ளேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 48. ஹேமா said...
  //வாழ்த்துகள் அக்கா.கதை இயல்பு நடை பிடிச்சிருக்கு !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 49. திருவாரூரிலிருந்து சரவணன் said...
  //விமலாவுக்கு பிரச்சனை என்றதும் அந்த குழந்தைக்கு என்ன ஆகப்போகிறதோ என்ற தவிப்புடனேயே கதையை படித்து முடித்தேன். இத்தகைய நடை எல்லாருக்கும் கைவராது. இளைய தலைமுறைக்கு நல்லதொரு வழிகாட்டியாக இந்த கதை இருக்கும்.//

  மிக்க நன்றி சரவணன்.

  ReplyDelete
 50. goma said...
  //வர வர பிளாக் ஒரு தமிழ்பத்திரிகைகளுக்கான லைப்ரரியாக மாறிக்கொண்டிருக்கிறது.
  மாற்றத்துக்கு வித்திட்ட ராமலஷ்மிக்கு வாழ்த்துக்கள்

  அடுத்தவார கல்கியும் விகடனும் வந்ததும் சொல்லுங்க....//

  கேட்க நல்லாதான் இருக்கு:)! மிக்க நன்றி கோமா!!

  ReplyDelete
 51. ஆர்.கே.சதீஷ்குமார் said...
  //ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள்//

  நன்றி சதீஷ்குமார்.

  ReplyDelete
 52. அமைதிச்சாரல் said...
  //மத்தவங்களுக்கு உதவி செய்யணும்கற நல்ல எண்ணத்தை நிச்சயமா இந்தக்கதை விதைக்கும். வாழ்த்துகள்..//

  நன்றி சாரல்.

  ReplyDelete
 53. வருண் said...
  //விவேக், ராம், கார்த்தி மற்றும் ராமலக்ஷ்மி அவர்கள், மனிதனென்பவன் தெய்வமாகலாம் பாடல் வரியை நினைவுபடுத்துறாங்க! :)//

  கதை நினைவு படுத்துகிறது என்றே சொல்லுங்கள். பார்ப்பதையும், முடிந்தவரை பங்கேற்பதையும் பதியும் எண்ணம் வந்த போது.....

  //பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கவனத்திற்கு எடுத்துச் செல்லும் தினமணிக்கதிருக்கு நன்றி!//

  ஆம், எடுத்துச் சென்ற தினமணி கதிருக்கு மீண்டும் நன்றி.

  நன்றி வருண்.

  ReplyDelete
 54. கோமதி அரசு said...
  ***//நம்பிக்கை என்பது ஒரு சுழற்சியாய் ஒவ்வொருவர் வாழ்க்கையை ஒவ்வொரு விதமாய் நகர்த்திச் சென்று கொண்டே இருக்கும் அற்புதத்தைத் தன் அனுபவத்திலேயே உணர்ந்ததில் நெகிழ்ந்து போனவனாய் கார்த்திக்கிடம் காட்ட அக்கடிதத்தைப் பிரிண்ட் எடுத்துக் கொண்டான்.//

  நம்பிக்கை தான் வாழ்க்கை.

  குழந்தை நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!

  கார்த்திக், விவேக்கிற்கு உதவிய நண்பர், ஒய்வூதியத்தில் சிறு தொகை கொடுத்த வீட்டுக்காரர் என்று பாத்திரப் படைப்பு அருமை. ந்ல்ல உள்ளங்கள் வாழ்க.//***

  மிக்க நன்றி கோமதிம்மா, குழந்தைக்கான வாழ்த்துக்களுக்கும்.

  ReplyDelete
 55. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  //நல்ல கதை ராம லஷ்மி. மனதிற்கு நெகிழ்வை ஏற்படுத்திய கதை. வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றிங்க பவளஸ்ரீ.

  ReplyDelete
 56. சே.குமார் said...
  //மிக அருமை.//

  நன்றி குமார்.

  ReplyDelete
 57. ஈரோடு கதிர் said...
  வடம் பிடிப்பதே ஒரு நம்பிக்கையில் தானே!!!

  கனக்கிறது என நழுவவிட்டு விடாமல் தேர் நிலைக்கு வரும் வரை இழுக்க வைப்பதும் அதே நம்பிக்கைதான். நன்றி கதிர்.

  ReplyDelete
 58. sakthi said...
  //வாழ்த்துக்கள்//

  வாங்க சக்தி. மிக்க நன்றி.

  ReplyDelete
 59. "உழவன்" "Uzhavan" said...
  //நல்ல கருத்து. ஒரு சிறு சம்பவத்தைக் கதையாக்கிய விதம் பாராட்டுக்குரியது.

  வாழ்த்துகள்//

  மிக்க நன்றி உழவன்.

  ReplyDelete
 60. தமிழ்மணம், இன்ட்லி திரட்டிகளில் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.

  ReplyDelete
 61. //கடந்த மாதம் ஓய்வு பெறுகையில் அவருக்கு வந்த பணத்திலிருந்து நாளையைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அதை அளித்திருந்தது என்மேல் அவர் வைத்திருக்கும் பரிபூரண நம்பிக்கையையும் உணர்த்தியது. நல்ல மகனாக அதைக் காப்பாற்றுவேன். அவரது மகனாய் இருப்பதில் பெருமிதமும் கொள்கிறேன். அந்தப் பணத்தை உங்கள் வங்கி எண்ணுக்கு மாற்றி விட்டேன். சரிபார்ததிடுங்கள்.//

  தந்தையும் மகனும் எப்படி இருக்க வேண்டுமென்பதை இந்த வரிகள் மூலம் சொல்லி இருக்கிறீர்கள். நானும், மேலே உள்ள தந்தை மாதிரி இருக்க முயற்சி செய்கிறேன்.

  நமது மனதில் தோன்றும் நல்ல சிந்தனைகளைச் சொல்ல, கதை ஒரு கருவி என்பதை தங்கள் கதைகளைப் படிப்பதன் மூலம் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 62. @ அமைதி அப்பா,

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin