இந்த ஆண்டிலும் என் கூடவே வந்து வாசித்து கருத்து சொல்லி ஊக்கம் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
இருதினம் முன்னே என் பிறந்த தினத்தன்று பதிவிட்டு வாழ்த்திய ஆனந்த், தமிழ் பிரியன், ஆயில்யன், முத்துலெட்சுமி மற்றும் வல்லிம்மாவுக்கும் தொடர்ந்து வாழ்த்தியிருந்த அத்தனை பேரின் அன்புக்கும் நெகிழ்வுடன் இங்கும் என் நன்றிகள்!
எழுதும் நம்மை பலரிடம் கொண்டு சேர்த்து வரும் திரட்டிகளான தமிழ்மணத்துக்கும் தமிழிஷுக்கும் நன்றிகள். ஆறு மாதங்களுக்கு முன்னர் தமிழிஷில் இணைந்தேன். வாக்களித்து தொடர்ந்து அங்கு பதிவுகளை 'பிரபல படைப்புகள்' ஆக்கிய அனைவருக்கும் நன்றிகள்! தமிழ்மணத்தில் பரிந்துரைத்தவர்களுக்கும் நன்றிகள்!
இவ்வருடத்தில் என் படைப்புகள் பலவற்றை வெளியிட்டும், பதிவுகள் சிலவற்றை குட்ப்ளாக்ஸ் பிரிவில் பரிந்துரைத்தும் உற்சாகம் தந்த யூத்ஃபுல் விகடனுக்கு நன்றிகள்!
வார்ப்பு கவிதை வாராந்திரியில் தொடர்ந்து கவிதைகள் வெளிவருவதும்; கலைமகள், வடக்கு வாசல், இலக்கியப்பீடம் ஆகியவற்றில் தடம் பதிக்க முடிந்ததும்; தேவதையில் வலைப்பூ அறிமுகமானதும் கூடுதல் மகிழ்ச்சி.
சென்னைப் புத்தகத் திருவிழாவையொட்டி இந்த வாரம் ஆதிமூலகிருஷ்ணன் பதிவர்களைக் கண்ட தொடர் பேட்டியில் எனது பங்களிப்பு இங்கே. அனைவரது பேட்டியும் ஒருதொகுப்பாக இங்கே. நன்றி ஆதி!
PiT போட்டிகளுக்கு மட்டுமேயென புகைப்படப் பதிவுகள் தந்து வந்த நான் 'தேவதை' தந்த உற்சாகத்தில், அவர்கள் சிலாகித்திருந்த ‘பேசும் படங்கள்’ எனும் தலைப்பிலேயே அவ்வப்போது புகைப்படங்களைப் பகிர்ந்து வர எண்ணியதின் முதல் கட்டமாக சில மாதங்கள் முன்னர் சென்றிருந்த ஸ்தலங்களின் படங்கள் பார்வைக்கு...
படங்கள் கணினித்திரையை விட்டு வெளியேறித் தெரிந்தால் please click view-zoom-zoom in! [குறிப்பாக இத்தகவல் திவா அவர்களுக்காக:)!]
மதுரை மீனாக்ஷி சுந்தரேஷ்வரர்
வானுயர்ந்த கோபுரமும்
தரணி போற்றும் பொற்றாமரைக் குளமும்
தரணி போற்றும் பொற்றாமரைக் குளமும்
தகதகக்கும் தங்கத் தாமரை
மதுரை கூடலழகர்
திருக்கோவிலின் தெப்பக் குளம்
அண்ணன் உலாப் போகும் நேரம்
குளித்து முடித்து வெளியில் கிளம்பக்
குஷியாய் போடுகிறார் ஆட்டம்
*** *** ***
தம்பிக்கு ஓய்வு நேரம்
கழுத்து மணிகள் கழற்றி ஆணியில் போட்டாச்சு
‘தூங்கலாமா’ கண்கள் சுழற்றி சிந்தனை வந்தாச்சு
*** ***
‘தூங்கலாமா’ கண்கள் சுழற்றி சிந்தனை வந்தாச்சு
*** ***
கடலருகே அலையலையாய் பக்தர்கூட்டம்
சுற்றிவரும் பிரகாரம்
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பக்தி பரவசத்தோடு புத்தாண்டிற்கு வரவேற்பா? படங்கள் அழகு
பதிலளிநீக்குபுத்தாண்டு மற்றும் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா.
பதிலளிநீக்குஎனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபிரகாசமான புது வருட வாழ்த்துகளும் தோழி. படங்கள் அருமை.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகோவில் படங்களும் யானையும் கொள்ளை கொள்ளும் அழகுடன்...!
திருக்கோவில் படங்கள் அனைத்தும் அருமை. ஆனைப்படம் இனிமை.
பதிலளிநீக்குஅடிக்குறிப்பு வாக்கியம் ரசனை.
அகம் மகிழ்ந்த ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குஅனைத்து தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமதுரைமீனாட்சி திருச்செந்தூர் முருகன் படங்கள் அருமை.
பதிலளிநீக்குஇருவரையும் முன்பு தரிசித்துள்ளேன். மீண்டும் படங்களைப் பார்த்தது ஆனந்தம்.
உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
1. பிறந்த நாள் வாழ்த்துகள் (வழக்கம் போல் தாமதம் ம்ம்ம்ம்)
பதிலளிநீக்கு2. புகைப்படங்கள் எல்லாமே நல்லா இருக்கு. திருச்செந்தூரில் கடல்-அலை படம்?
3. ஹா ஹா இப்ப தான் 75 ஆ? நம்மள விடவும் ஸ்லோவா ஒருத்தரா? வாழ்த்துகள்
அனுஜன்யா
அக்கா, இங்க அதிகம் வந்ததில்ல. ரொம்ப பிரபலம் போல இருக்கு நீங்க. சந்தோஷம்.
பதிலளிநீக்குபடங்கள் நல்ல தெளிவா, அழகா இருக்கு.
உங்களுக்கு ஒன்னு சொல்லனுமே? அது..
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் தாமதமான எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலட்சுமி மேடம்
பதிலளிநீக்குNEW YEAR WISHES, NICE PHOTOS, THANKS FOR SHARING
பதிலளிநீக்குஅடடா தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! புத்தாண்டு வாழ்த்துக்கள். படம் எல்லாம் சூப்பரோ சூப்பர்.
பதிலளிநீக்கு@ஹுஸைன் அம்மா!
என் பிரண்ட் ரொம்ப பிரபலம் தான் தெரியாதா! என்ன போங்க!
அருமையான, தெய்வீகமான படங்களைப் போட்டு அசத்திவிட்டீர்கள். உழைப்பும் நேர்த்தியும் பளிச்சிட்டுகின்றன.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
உங்களுக்கும் குடும்பத்துக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
75வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்...!
பதிலளிநீக்குஉங்க பேட்டியும் படித்தேன் அருமை...!
பதிலளிநீக்குயானையும் ,முதலில் இருக்கும் கோபுரமும் பளிச்ன்னு எடுத்துருக்கீங்க...!
ரகசியம் எனக்கு மட்டும் சொல்லுங்க மேடம் எந்த கேமராவுல படமெல்லாம் எடுக்குறீங்க?
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குஇவ்வருடம் போலவே 2010லும் சிறந்த படைப்புகள் தருக....!
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபிறந்த நாள்,எழுபத்தைந்தாவது பதிவு,மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா!
பதிலளிநீக்குமிக அருமையான ஒளிப்படங்கள் ... ரசித்தேன்
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குவாவ்! அசத்தல், அத்தனை படங்களும்!
பதிலளிநீக்குஉங்கள் சாதனைகள் புத்தாண்டிலும் மென்மேலும் தொடர, இன்னும் பலப்பல சிகரங்கள் தொட, மனமார்ந்த வாழ்த்துகள்!
எழுபத்தைந்தாவது பதிவின் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபிரமிக்க வைக்கும் கோபுரப் படங்கள். என்ன ரகசியம். துல்லியம்.
உங்கள் பேட்டியும் பிரமாதம். அத்தனை அனுபவமும் எனக்கும்...கூட சாண்டில்யனும், நாபா, கல்கி, விக்ரமன், ஜெகசிற்பியன் ..... அ.ரு.ராமநாதன்....
படங்கள் அழகு.
பதிலளிநீக்குபிறந்த நாள், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பூங்கொத்துடன் raamalakshmi!
பதிலளிநீக்குபேட்டியும் படிச்சிட்டேன். மீண்டும் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு75வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.அத்தனை படங்களும் ப்ரொஃபஷனல் டச்சோடு இருந்தன.அதிலும்
பதிலளிநீக்குதிருச்செந்தூர் படங்களில் என் மனம் கவர்ந்த படம் கடைசி படம் .அருமை.
எல்லாப் படங்களுமே அழகு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி !
படங்கள் எல்லாமே நல்லா இருக்குங்க!
பதிலளிநீக்குHappy New Year! ங்க ராமலக்ஷ்மி!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குBeautiful photographs!
பதிலளிநீக்குவாழ்த்துகள், படங்கள் அருமை, நீங்கதான் எடுக்கறீங்களா?
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டுச் வாழ்த்துக்கள் ராமலஷ்மி.
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையும் அழகு. எப்படி இவ்வளவு பெரிதாக ஆக்கினீர்கள்.?
ராமலக்ஷ்மி படங்கள் ரொம்ப நல்லா இருக்கு..படங்களில் பார்டர் பினிஷிங் இன்னும் சரியாக கவனித்து எடுத்தால் இன்னும் சிறப்பாக வரும்.
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குராம லெக்ஷ்மி நலமே பொலிக
ஹாப்பி நியூ இயர்! வாழ்த்துக்கள் 75க்கு :)
பதிலளிநீக்குபிறந்தநாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.விரைவில் சதமடிக்க வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குஎழுபத்தைந்தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா
பதிலளிநீக்குபுகைப்பங்கள் அருமையிலும் அருமை..
பதிலளிநீக்குநூறாவது பதிவுக்கு ரொம்ப நாள் எடுக்கும்னு நினைக்குறது எல்லாம் பெரிய விஷயமே இல்லை மேடம். நானும்தான் நவம்பர் 24 முதல் டிசம்பர் இறுதிக்குள் 76 pathivu எழுதியிருக்கிறேன். பதிவுகளின் எண்ணிக்கையை விட அவை ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரிது.
பதிலளிநீக்குஒளிப்படங்கள் மிகவும் தரமாக இருந்தன. விழாக்களை படம் பிடிக்கும் கேமராமேன் என்ற வகையில் நான் மிகவும் ரசித்த படங்களில் இவைகளுக்கும் இடம் உண்டு.
புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்.
பிரபல பதிவர் அவர்களுக்கு,
பதிலளிநீக்குமுதலில் ப்ளாட்டினம் பதிவுக்கு மனமார்ந்த வாந்த்துக்கள்!!
போட்டோகள் எல்லாம் கூர்மை!
உங்க பெரியப்பாவின் கைவண்ணம் உங்க கைகளிலும் ஒளிர்கிறது. வாழ்த்துக்கள்!!!
மதுரை மீனாட்சி கோவில் கோபுரமும் பொற்றாமரைக்குளமும் 1961ல் முதன் முதலாக மதுரையில் எனது பணிக்குச் சேர்ந்த உடன்
பதிலளிநீக்குகோவிலுக்குச் சென்று அம்மனின் திருவருள் பெற்ற நினைவுகளைத் தந்தன.
மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் சுற்றத்தாருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.
மீனாட்சி.
http://vazhvuneri.blogspot.com
உங்க பதிவுகளுக்கும் புதுவருடத்துக்கும் வாழ்த்துக்கள் அக்கா.
பதிலளிநீக்குஅருமையான படங்கள்.
இந்த வருஷமும் சிறப்பான பதிவுகள எதிர்பார்க்கிறோம் அக்கா.
படங்கள் அனைத்தும் அற்புதம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "LAND MARK - July PiT மெகா போட்டிக்கு" இடுகையை படித்தேன்.
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
அருமையான புகை படங்கள் இனிதே துவங்கிய புத்தாண்டு இனிதே தொடர வாழ்த்துகள் ..:))
பதிலளிநீக்குநானும் கேமராவ
தூக்கிட்டு போக சோம்பேறித்தனப்பட்டுகிட்டு இருக்கும்போது உங்கள் பதிவு உற்சாகம் தருகிறது... நன்றி.
புகைப்படம் எடுப்பதில் தாங்கள் மிகத் தேர்ந்தவர் என்பதை நான் மட்டுமல்ல; இந்த உலகே அறியும் :-)
பதிலளிநீக்குதமிழ்மண முதல் சுற்றில் தேர்ச்சி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா!
பதிலளிநீக்குபுகைப்படங்கள் ஒவ்வொன்றும் தலங்களை நேரில் பார்த்த உணர்வைத் தந்தன.
நன்றி!
அருமையான படங்களுடன் ஒரு நிறைவான வாழ்த்திப் பெற்ற மகிழ்ச்சி...
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள்...
எனக்கு சங்கரன் கோவில் "கோமதி யானை " நினைவு வந்தது..
படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு!
பதிலளிநீக்குஅந்த கோபுர படத்தினால் கோபுர தரிசனம் முடித்த ஒரு திருப்தி மனதிற்கு கிடைத்தது..
உங்களின் எழுபத்தைந்தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
விரைவில் நூறு எழுத வாழ்த்துக்கள்!
அருமையான புகைப்படங்கள். தொடரட்டும்.
பதிலளிநீக்குfentastic photos.
பதிலளிநீக்குthanks
regards
www.hayyram.blogspot.com
அமுதா said...
பதிலளிநீக்கு//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பக்தி பரவசத்தோடு புத்தாண்டிற்கு வரவேற்பா? படங்கள் அழகு//
பக்தி பரவசத்துடன் எல்லோரும் நலம் வாழ வேண்டி:)! பாராட்டுக்கு நன்றிகள் அமுதா!
வித்யா said...
பதிலளிநீக்கு//புத்தாண்டு மற்றும் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா.//
நன்றி நன்றி விதயா.
ஜெஸ்வந்தி said...
பதிலளிநீக்கு// எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.
பிரகாசமான புது வருட வாழ்த்துகளும் தோழி. படங்கள் அருமை.//
பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜெஸ்வந்தி.
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு//புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
கோவில் படங்களும் யானையும் கொள்ளை கொள்ளும் அழகுடன்...!//
நன்றி ஆயில்யன். ஆனைப் படங்களும் பிடித்தனவா? மகிழ்ச்சி:)!
துபாய் ராஜா said...
பதிலளிநீக்கு// திருக்கோவில் படங்கள் அனைத்தும் அருமை.
ஆனைப்படம் இனிமை.
அடிக்குறிப்பு வாக்கியம் ரசனை.//
அழகான பாராட்டு.
//அகம் மகிழ்ந்த ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி துபாய் ராஜா!
Sangkavi said...
பதிலளிநீக்கு//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....//
புத்தாண்டில் புதிதாகத் தொடர ஆரம்பித்திருப்பதற்கும் முதல் வருகைக்கும் என் நன்றிகள்!
R.Gopi said...
பதிலளிநீக்கு// அனைத்து தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//
எல்லோருக்குமான உங்கள் வாழ்த்துக்கள் இதம். நன்றி கோபி.
மாதேவி said...
பதிலளிநீக்கு//மதுரைமீனாட்சி திருச்செந்தூர் முருகன் படங்கள் அருமை.//
நன்றி மாதேவி, வாழ்த்துக்களுக்கும்.
//இருவரையும் முன்பு தரிசித்துள்ளேன். மீண்டும் படங்களைப் பார்த்தது ஆனந்தம்.//
உங்கள் நினைவுகளை மீட்டெடுத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.
ஹுஸைனம்மா said...
பதிலளிநீக்கு//அக்கா, இங்க அதிகம் வந்ததில்ல. ரொம்ப பிரபலம் போல இருக்கு நீங்க. சந்தோஷம்.
படங்கள் நல்ல தெளிவா, அழகா இருக்கு.//
இனி அடிக்கடி வாங்க. பிரபலம் எல்லாம் இல்லைங்க, அப்படி ஒரு தோற்றமெனில் அது நண்பர்களின் பிரியத்தால் வந்ததே. உங்கள் முதல் வருகையிலும் படங்களைப் பற்றிய பாராட்டிலும் எனக்கும் சந்தோஷம்.
அண்ணாமலையான் said...
பதிலளிநீக்கு//உங்களுக்கு ஒன்னு சொல்லனுமே? அது..
புத்தாண்டு வாழ்த்துக்கள்...//
உங்களுக்கும் அதையே நான் அன்புடன் திருப்பி சொல்லிக் கொள்கிறேன் அண்ணாமலையான்.
aambal samkannan said...
பதிலளிநீக்கு//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் தாமதமான எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி Aambal Samkannan!
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
பதிலளிநீக்கு//இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலட்சுமி மேடம்//
மிக்க நன்றி நடராஜன்!
குப்பன்.யாஹூ said...
பதிலளிநீக்கு//NEW YEAR WISHES, NICE PHOTOS, THANKS FOR SHARING//
நன்றிகள் குப்பன்.யாஹூ.
அபி அப்பா said...
பதிலளிநீக்கு//அடடா தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! புத்தாண்டு வாழ்த்துக்கள். படம் எல்லாம் சூப்பரோ சூப்பர்.//
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி அபி அப்பா!
//@ஹுஸைன் அம்மா!
என் பிரண்ட் ரொம்ப பிரபலம் தான் தெரியாதா! என்ன போங்க!//
பதிவர்கள் நம் பலரையும் புத்தாண்டின் முதல்நாள் தினமணியில் நிஜமாகவே பிரபலமாக்கி விட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா அபி அப்பா:)?
அத்திரி said...
பதிலளிநீக்கு//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//
என் நன்றிகள் அத்திரி.
அனுஜன்யா said...
பதிலளிநீக்கு// 1. பிறந்த நாள் வாழ்த்துகள் (வழக்கம் போல் தாமதம் ம்ம்ம்ம்)//
லேட்டஸ்டா வந்த வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்:)!
//2. புகைப்படங்கள் எல்லாமே நல்லா இருக்கு. திருச்செந்தூரில் கடல்-அலை படம்?//
Thanks. பொதுவாக திருச்செந்தூரில் பக்தர் கூட்டம் என்றாலே கடல்-அலை இதைத்தான் சொல்வார்கள். நான் போன சமயம் அத்தனை இல்லைதான் என்றாலும்.., build up எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது:)!
// 3. ஹா ஹா இப்ப தான் 75 ஆ? நம்மள விடவும் ஸ்லோவா ஒருத்தரா? வாழ்த்துகள் //
ஹி.., ஸ்லோவாக செல்வதிலும் இருக்கிறது ஒரு பெரிய சவுகரியம் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்:)!
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//அருமையான, தெய்வீகமான படங்களைப் போட்டு அசத்திவிட்டீர்கள். உழைப்பும் நேர்த்தியும் பளிச்சிட்டுகின்றன.
மிக்க நன்றி.//
அத்தனை படங்களையும் பெரிதாக்கி பார்டர் கொடுத்து வலையேற்ற நிரம்ப நேரம் எடுத்ததுதான் வல்லிம்மா. அதைக் கூர்மையாகக் கவனித்துப் பாராட்டியிருப்பதற்கு என் நன்றிகள். புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பிரியமுடன்...வசந்த் said...
பதிலளிநீக்கு// 75வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்...!//
//உங்க பேட்டியும் படித்தேன் அருமை...!//
நன்றி நன்றி வசந்த்!
//யானையும் ,முதலில் இருக்கும் கோபுரமும் பளிச்ன்னு எடுத்துருக்கீங்க...!//
பிடித்தனவா? பதிவைப் பார்த்து விட்டு முதல் கோபுரப் படத்தின் blow-up வேண்டுமென U.S-ல் இருக்கும் தங்கை ஃபோன் செய்தாள். அங்குள்ளவர்கள் பெரிதும் விரும்பி ரசிப்பார்கள், வீட்டில் மாட்டிக் கொள்கிறேன் என!
//ரகசியம் எனக்கு மட்டும் சொல்லுங்க மேடம் எந்த கேமராவுல படமெல்லாம் எடுக்குறீங்க?//
சீரியஸாகவே கேட்கிறீர்களா:)?
அப்படியெனில்..
Sony Cyber-shot W80,
Nikon Coolpix 3700
இரண்டையுமே கைப்பையில் வைத்திருப்பேன்.
//தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
இவ்வருடம் போலவே 2010லும் சிறந்த படைப்புகள் தருக....!//
வாழ்த்துகக்ளுக்கும் நன்றி வசந்த். முடிந்தவரை நல்ல படைப்புகள் தர முயற்சிப்பேன்:)!
நசரேயன் said...
பதிலளிநீக்கு//புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//
நன்றி நசரேயன்.
பா.ராஜாராம் said...
பதிலளிநீக்கு//பிறந்த நாள்,எழுபத்தைந்தாவது பதிவு,மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகா!//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பா ரா!
Nundhaa said...
பதிலளிநீக்கு//மிக அருமையான ஒளிப்படங்கள் ... ரசித்தேன்//
உங்கள் ஒளிப்படங்களை நானும் வியந்து ரசித்திருக்கிறேன் நந்தா. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
நினைவுகளுடன் -நிகே- said...
பதிலளிநீக்கு//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....//
மிக்க நன்றி நிகே!
கவிநயா said...
பதிலளிநீக்கு//வாவ்! அசத்தல், அத்தனை படங்களும்!//
ரசனைக்கு நன்றி கவிநயா:)!
//உங்கள் சாதனைகள் புத்தாண்டிலும் மென்மேலும் தொடர, இன்னும் பலப்பல சிகரங்கள் தொட, மனமார்ந்த வாழ்த்துகள்!//
கூடவே வரும் உங்கள் வாழ்த்துக்களே புத்துணர்ச்சி!
//பேட்டியும் படிச்சிட்டேன். மீண்டும் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!//
படித்தீர்களா:)? நன்றி!
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு// எழுபத்தைந்தாவது பதிவின் வாழ்த்துக்கள்.
பிரமிக்க வைக்கும் கோபுரப் படங்கள். என்ன ரகசியம். துல்லியம்.//
நன்றி ஸ்ரீராம். துல்லியம் எனில் காமிராவுக்கும் பங்கு உள்ளதுதானே?
// உங்கள் பேட்டியும் பிரமாதம். அத்தனை அனுபவமும் எனக்கும்...//
ஆகா நன்று:)!
//கூட சாண்டில்யனும், நாபா, கல்கி, விக்ரமன், ஜெகசிற்பியன் ..... அ.ரு.ராமநாதன்....//
பகிர்வுக்கு நன்றி. சரித்திரக் கதைகளில் மட்டும் எனக்கு ஏனோ ஈடுபாடு இல்லை. ஆயினும் கல்கியின் கதைகளே வாசித்தே ஆக வேண்டுமென நினைத்திருக்கிறேன். வாங்கியும் வைத்திருக்கிறேன்! புத்தாண்டில் அதை செய்தும் முடிப்பேன் என நம்புகிறேன்:)!
அம்பிகா said...
பதிலளிநீக்கு//படங்கள் அழகு.
பிறந்த நாள், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி அம்பிகா.
அன்புடன் அருணா said...
பதிலளிநீக்கு//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பூங்கொத்துடன் raamalakshmi!//
நன்றி அருணா, பூங்கொத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறேன்.
படங்கள் அழகோ அழகு
பதிலளிநீக்குஎன்ன கேமரா வைத்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
விஜய்
தமிழ் பிரியன் said...
பதிலளிநீக்கு//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!//
நன்றி தமிழ் பிரியன்.
goma said...
பதிலளிநீக்கு//75வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.அத்தனை படங்களும் ப்ரொஃபஷனல் டச்சோடு இருந்தன.அதிலும்
திருச்செந்தூர் படங்களில் என் மனம் கவர்ந்த படம் கடைசி படம் .அருமை.//
உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. என்னைக் கவர்ந்தபடமும் அதுவே. அதைப் பகிர்ந்திடும் ஆசையால்தான் இந்தப் பதிவுக்கான ‘தீம்’ பிறந்தது.
எம்.ரிஷான் ஷெரீப் said...
பதிலளிநீக்கு// எல்லாப் படங்களுமே அழகு.
வாழ்த்துக்கள் சகோதரி !//
மிக்க நன்றி ரிஷான்.
வருண் said...
பதிலளிநீக்கு//படங்கள் எல்லாமே நல்லா இருக்குங்க!
Happy New Year! ங்க ராமலக்ஷ்மி!//
மிகவும் நன்றி வருண்!
கண்மணி said...
பதிலளிநீக்கு//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//
வ்ருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கண்மணி!
அப்பாதுரை said...
பதிலளிநீக்கு// Beautiful photographs!//
Thanks a lot!
குடுகுடுப்பை said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள், படங்கள் அருமை, நீங்கதான் எடுக்கறீங்களா?//
ஏனுங்க இப்படி ஒரு சந்தேகம்:)? நேரம் வாய்ப்பின் Labels-ன் கீழ் ஃபோட்டோ போட்டி என வகைப்படுத்தியிருக்கும் பதிவுகளையும் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சின்ன அம்மிணி said...
பதிலளிநீக்கு//இனிய புத்தாண்டுச் வாழ்த்துக்கள் ராமலஷ்மி.
படங்கள் அத்தனையும் அழகு.//
நன்றி அம்மிணி.
// எப்படி இவ்வளவு பெரிதாக ஆக்கினீர்கள்.?//
இணையத்தில் கற்ற பாடம்தான். நந்து அவர்கள் தனது பதிவொன்றில் சொன்ன வழிமுறையின்படி படத்தை வலையேற்றிய பின்னர் html code-ல் திருத்தங்கள் செய்ய வேண்டும். சற்றே நேரம் பிடித்தாலும் ரிசல்ட் மனதுக்கு நிறைவே:)!
கிரி said...
பதிலளிநீக்கு//ராமலக்ஷ்மி படங்கள் ரொம்ப நல்லா இருக்கு..//
நன்றி.
//படங்களில் பார்டர் பினிஷிங் இன்னும் சரியாக கவனித்து எடுத்தால் இன்னும் சிறப்பாக வரும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!//
இனி அவ்வாறே கவனம் எடுக்கிறேன்:)! வாழ்த்துக்களுக்கும் நன்றி.
thenammailakshmanan said...
பதிலளிநீக்கு// புத்தாண்டு வாழ்த்துக்கள்
ராம லெக்ஷ்மி நலமே பொலிக//
நன்றிங்க தேனம்மை லக்ஷ்மணன்.
SurveySan said...
பதிலளிநீக்கு//ஹாப்பி நியூ இயர்!//
விஷ் யு த சேம் சர்வேசன்.
//வாழ்த்துக்கள் 75க்கு :)//
500 கண்ட உங்களின் வாழ்த்துக்கள மகிழ்ச்சியைத் தருகின்றன:)!
amaithicchaaral said...
பதிலளிநீக்கு//பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.விரைவில் சதமடிக்க வாழ்த்துகிறேன்.//
நன்றி அமைதிச்சாரல். உங்கள் வாக்கின்படியே ஆகட்டும்:)!
மாதவராஜ் said...
பதிலளிநீக்கு//எழுபத்தைந்தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும்.//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி மாதவராஜ்.
கடையம் ஆனந்த் said...
பதிலளிநீக்கு//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா//
நன்றி ஆனந்த்.
வினோத்கெளதம் said...
பதிலளிநீக்கு//புகைப்படங்கள் அருமையிலும் அருமை..//
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வினோத்கெளதம்.
சரண் said...
பதிலளிநீக்கு//நூறாவது பதிவுக்கு ரொம்ப நாள் எடுக்கும்னு நினைக்குறது எல்லாம் பெரிய விஷயமே இல்லை மேடம். நானும்தான் நவம்பர் 24 முதல் டிசம்பர் இறுதிக்குள் 76 pathivu எழுதியிருக்கிறேன். பதிவுகளின் எண்ணிக்கையை விட அவை ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரிது.//
ஒரு மாத்த்தில் இத்தனை பதிவுகளா? வாழ்த்துக்கள்!
//ஒளிப்படங்கள் மிகவும் தரமாக இருந்தன. விழாக்களை படம் பிடிக்கும் கேமராமேன் என்ற வகையில் நான் மிகவும் ரசித்த படங்களில் இவைகளுக்கும் இடம் உண்டு.
புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்.//
பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சரண்.
நானானி said...
பதிலளிநீக்கு//பிரபல பதிவர் அவர்களுக்கு,
முதலில் ப்ளாட்டினம் பதிவுக்கு மனமார்ந்த வாந்த்துக்கள்!!//
பேட்டியைப் படித்து விட்டு வருகிறீர்களா:)? வாழ்த்துக்களுக்கு நன்றி.
//போட்டோகள் எல்லாம் கூர்மை!
உங்க பெரியப்பாவின் கைவண்ணம் உங்க கைகளிலும் ஒளிர்கிறது. வாழ்த்துக்கள்!!!//
அவர்களது திறமைக்கு அருகில் செல்ல இயலாது என்றாலும், இந்தப் பாராட்டு ஊக்கத்தைத் தருகிறது.
sury said...
பதிலளிநீக்கு//மதுரை மீனாட்சி கோவில் கோபுரமும் பொற்றாமரைக்குளமும் 1961ல் முதன் முதலாக மதுரையில் எனது பணிக்குச் சேர்ந்த உடன்
கோவிலுக்குச் சென்று அம்மனின் திருவருள் பெற்ற நினைவுகளைத் தந்தன.//
உங்கள் நினைவுகளை சிலகணங்கள் படம் மீட்டுத் தந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி சார்.
//மிக்க நன்றி. தங்களுக்கும் தங்கள் சுற்றத்தாருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.
மீனாட்சி.
http://vazhvuneri.blogspot.com//
நன்றி. உங்கள் இருவரின் வாழ்த்துக்களை ஆசிகளாக ஏற்றுக் கொண்டேன்.
சுசி said...
பதிலளிநீக்கு//உங்க பதிவுகளுக்கும் புதுவருடத்துக்கும் வாழ்த்துக்கள் அக்கா.
அருமையான படங்கள்.
இந்த வருஷமும் சிறப்பான பதிவுகள எதிர்பார்க்கிறோம் அக்கா.//
பதிவுகளுக்கும் சேர்த்து வந்த வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி சுசி. இயன்றவரை சிறப்பாகச் செயல்பட முயற்சிக்கிறேன்:)!
malarvizhi said...
பதிலளிநீக்கு//படங்கள் அனைத்தும் அற்புதம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி மலர்விழி.
புலவன் புலிகேசி said...
பதிலளிநீக்கு//புத்தாண்டு வாழ்த்துக்கள்//
நன்றிகள் புலவன் புலிகேசி.
சிங்கக்குட்டி said...
பதிலளிநீக்கு//தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "LAND MARK - July PiT மெகா போட்டிக்கு" இடுகையை படித்தேன்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//
நன்றிகள் சிங்கக்குட்டி. சமூகம் பிரிவிலும் என் பதிவு முதல் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பலா பட்டறை said...
பதிலளிநீக்கு//அருமையான புகை படங்கள் இனிதே துவங்கிய புத்தாண்டு இனிதே தொடர வாழ்த்துகள் ..:))//
நன்றிகள் பலா பட்டறை.
// நானும் கேமராவ
தூக்கிட்டு போக சோம்பேறித்தனப்பட்டுகிட்டு இருக்கும்போது உங்கள் பதிவு உற்சாகம் தருகிறது... நன்றி.//
வாங்க வாங்க. கேமிராவைத் தூக்கிடுங்க:)! இதுதானே வேண்டும்.
" உழவன் " " Uzhavan " said...
பதிலளிநீக்கு//புகைப்படம் எடுப்பதில் தாங்கள் மிகத் தேர்ந்தவர் என்பதை நான் மட்டுமல்ல; இந்த உலகே அறியும் :-)//
'லேண்ட் மார்க்’ முதல் சுற்றில் வந்து விட்டதுதான்:)!
//தமிழ்மண முதல் சுற்றில் தேர்ச்சி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!//
நன்றி உழவன். கடந்த வருடம் போலவே முதல் சுற்றுவரை வர முடிந்ததில் மகிழ்ச்சி.
சுந்தரா said...
பதிலளிநீக்கு//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா!
புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தலங்களை நேரில் பார்த்த உணர்வைத் தந்தன.
நன்றி!//
நன்றி சுந்தரா. உங்கள் பாராட்டு மகிழ்ச்சியைத் தருகிறது.
ஈ ரா said...
பதிலளிநீக்கு//அருமையான படங்களுடன் ஒரு நிறைவான வாழ்த்திப் பெற்ற மகிழ்ச்சி...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
எனக்கு சங்கரன் கோவில் "கோமதி யானை " நினைவு வந்தது..//
எங்கள் நெல்லை கோவிலில் காந்திமதி யானை:)! நன்றிகள் ஈரா.
RAMYA said...
பதிலளிநீக்கு//படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு!
அந்த கோபுர படத்தினால் கோபுர தரிசனம் முடித்த ஒரு திருப்தி மனதிற்கு கிடைத்தது..//
மகிழ்ச்சி ரம்யா.
//உங்களின் எழுபத்தைந்தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
விரைவில் நூறு எழுத வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி.
புளியங்குடி said...
பதிலளிநீக்கு//அருமையான புகைப்படங்கள். தொடரட்டும்.//
நன்றி புளியங்குடி. பகிர்வுகள் அவ்வப்போதெனத் தொடரும்.
hayyram said...
பதிலளிநீக்கு//fentastic photos.
thanks//
மிக்க நன்றி.
விஜய் said...
பதிலளிநீக்கு//படங்கள் அழகோ அழகு
என்ன கேமரா வைத்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்//
பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி விஜய். Sony Cyber-shot W80 &
Nikon Coolpix 3700!
/// ராமலக்ஷ்மி said...
பதிலளிநீக்குStarjan ( ஸ்டார்ஜன் ) said...
//இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராமலட்சுமி மேடம்//
மிக்க நன்றி நடராஜன்! ///
மேடம் என் பெயர் நடராஜன் இல்லை ; என் பெயர் ஸ்டார்ஜன் . திருத்திக் கொள்ளவும் .
@ Starjan ( ஸ்டார்ஜன் )
பதிலளிநீக்குதவறுக்கு வருந்துகிறேன் ஸ்டார்ஜன். உங்களது ப்ரொஃபைலில் முழுப்பெயரை அவ்வாறாகப் பார்த்ததாகவே மனதில் நினைத்து விட்டிருந்தேன். இனி தவறு நேராது! மீள் வருகைக்கும் உடன் திருத்தியமைக்கும் நன்றி.
HAPPY BIRTHDAY, akka! HAPPY NEW YEAR! Best wishes for more to come........!
பதிலளிநீக்குவேறு இடுகை இடப் பட்டுள்ளதா என்று பார்க்க வரும்போதெல்லாம் மீண்டும் கோபுரம் பார்த்துச் செல்கிறேன். நல்ல கேமிரா இருந்தால் மட்டும் போதாதே...!
பதிலளிநீக்குகூடலழகர் கோவில் கோபுரம்...அருகில் யார் வீட்டு மாடியிலாவது நின்று எடுக்கப் பட்டதோ? அங்கு அந்தக் கோணம் சாத்தியமில்லையே..
அ.ரு. ராமநாதனின் குண்டு மல்லிகை, நா பாவின் சமுதாய வீதி, குறிஞ்சிமலர் எல்லாம் சரித்திரக் கதை இல்லையே...
Chitra said...
பதிலளிநீக்கு// HAPPY BIRTHDAY, akka! HAPPY NEW YEAR! Best wishes for more to come........!//
சித்ரா விடுமுறை இனிதே கழிந்ததென அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கு நன்றி!
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//வேறு இடுகை இடப் பட்டுள்ளதா என்று பார்க்க வரும்போதெல்லாம் மீண்டும் கோபுரம் பார்த்துச் செல்கிறேன். நல்ல கேமிரா இருந்தால் மட்டும் போதாதே...!//
என்ன சொல்ல வருகிறீர்கள், இது பாராட்டுதானே:)?
//கூடலழகர் கோவில் கோபுரம்...அருகில் யார் வீட்டு மாடியிலாவது நின்று எடுக்கப் பட்டதோ? அங்கு அந்தக் கோணம் சாத்தியமில்லையே..//
மிகக் கூர்மையாகக் கவனித்துச் சரியாகக் கேட்டிருக்கிறீர்கள்! மதுரை நகரையொட்டியிருக்கும் அழகர் கோவில் செல்ல நேரம் கிடைக்கவில்லை. இந்த கூடலழகர் கோவில் நகரத்தின் உள்ளேயே இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் மாடி லாபியிலிருந்து எடுத்தது. அதனாலேயே பிரகாரமும் சேர்த்து ஃப்ரேமுக்குள் கொண்டு வர முடிந்தது:)!
//அ.ரு. ராமநாதனின் குண்டு மல்லிகை, நா பாவின் சமுதாய வீதி, குறிஞ்சிமலர் எல்லாம் சரித்திரக் கதை இல்லையே...//
இல்லவே இல்லைதான். கல்கியின் கதைகளைப் படிக்காமல் போனதற்கான காரணத்தைதான் கூறியுள்ளேன் அப்படி. சொன்னவிதம் தவறான புரிதலையே தர வாய்ப்பு:)! மேலும் என் பேட்டியின் ஆரம்பமே இப்படித்தான்: ”என்னுடைய வாசிப்பு என்பது பகிர்ந்திடும் அளவுக்கு அத்தனை விசாலமானது அல்ல”. ஆக, நீங்கள் குறிப்பிட்டவற்றையும் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர வாசித்ததில்லை!
மீள் வருகைக்கு நன்றிகள்! சீக்கிரமே வரும் அடுத்த பதிவு:)!
வாழ்துக்கள்கா
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் செம மிரட்டலா இருக்குங்க
நீங்க எங்கையோ போயிட்டீங்க
எல்லாப்படங்களும் செம அழகுக்கா :-))
கார்த்திக் said...
பதிலளிநீக்கு//வாழ்துக்கள்கா
படங்கள் எல்லாம் செம மிரட்டலா இருக்குங்க//
நன்றி கார்த்திக்.
//நீங்க எங்கையோ போயிட்டீங்க
எல்லாப்படங்களும் செம அழகுக்கா :-))//
அட ஆமா கார்த்திக். எங்கேயோதான் போயிட்டேன் போலிருக்கு:))!
வலையுலகம் பக்கம் அதிகம் நீங்கள் வருவதில்லை என்பதால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
புகைப்படப் பிரிவில் தமிழ்மணத்தின் வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்கிறது 2009ஆம் ஆண்டின் விருதாக:)!
மின்மடல் வழியாக:
பதிலளிநீக்கு//Hi Ramalakshmi,
Congrats!
Your story titled 'சில ஸ்தலங்கள்.. சில படங்கள்.. பலப்பல நன்றிகள்..!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 31st December 2009 04:28:03 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/162469
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team//
தமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலும் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
All pictures are nice.
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
அந்தக் கோணமும், அதைப் பற்றிய கேள்வியும் முந்தைய பதிவில் இல்லையே என்பதாலேயே கேட்டேன். இந்த பதிவில் கமன்ட் போட்டுள்ள பா ரா சமீபத்தில் மறைந்து விட்டார் என்பது சோகம்.
பதிலளிநீக்குஅதிர்ச்சி அளித்த மறைவு. நானும் அறிய வந்தேன்:(.
நீக்கு