1.கரங்குவித்து வணங்கி வரவேற்கிறது அழகாய் ஆம்பல்
'சுதந்திரதினக் கண்காட்சி அப்டேட்ஸ் போலிருக்கிறது' என நினைத்து வந்தீர்களானால் மன்னிக்கணும். கடந்தமுறை அலைமோதிய கூட்டத்தை நினைத்தே போகவில்லை. இந்த முறை கண்ணாடி மாளிகையை அலங்கரித்தது ஆறுலட்சம் ரோஜாக்களால் உருவாக்கப்பட்ட ‘இண்டியா கேட்’.
ஒவ்வொரு வருடமும் தாஜ்மகால், குதுப்மினார், டைனாசர் என க்ளாஸ் ஹவுஸில் இடம் பெறும் பிரமாண்ட மலர் கட்டுமானங்களே கண்காட்சியின் செண்டர் ஃஆப் அட்ராக்ஷனாக இருந்து வந்தாலும், தோட்டக்கலையை முழுமையாக அறிந்து கொள்ளும் விதமாகக் காட்சிப் படுத்தியிருப்பார்கள் பரந்து விரிந்த லால்பாக் எங்கிலும் பல பிரிவுகளாக.
இந்த சுதந்திர தினக் கண்காட்சிக்கு நாற்பத்தைந்து லட்சம் ரூபாய் செலவானதாகவும் நுழைவுக் கட்டணம் வாயிலாக ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் வந்ததாகவும் (தலைக்கு முப்பது ரூபாய் என்றால் எத்தனை பேர் பார்த்துக் களித்தார்கள் என கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்), நிகர இலாபம் ஐம்பத்தைந்து இலட்சமென்றும் செய்தி அறிக்கை வெளியாகியுள்ளது.
சரி விஜயகாந்த் பாணியில் எதற்கு இந்தக் கதையெல்லாம் என்கிறீர்களா? ஜனவரியில் குடியரசு தினக் கண்காட்சியன்று எடுத்த படங்களில் பலவற்றை சொன்னபடி பார்வைக்கு வைக்காதது இப்போதுதான் நினைவுக்கு வந்தது. என் கணக்குக்கு கூட ஒரு பதிவுமாயிற்று:)! உங்களுக்கு மலர்களைப் பார்த்த மாதிரியும் ஆயிற்று.
முதல் பாகம் பார்க்காதவர்களுக்கு மாதிரிக்காக மீண்டும் ஒரு படம்..
2.குதுப்மினார்
ஆனால் மீள் படம் அல்ல:)! இதே போன்ற காவேரி மாதா மற்றும் மத நல்லிணக்க, பண்டிகை மலர் அலங்காரங்கள் காண விருப்பமாயின் முதல் பாகத்துக்குச் செல்லுங்கள்.கூட்டத்தோடு கூட்டமாக நகருகையில் அவசரமாய் எடுத்தவையே பின் வரும் படங்களும். ஆகையால் 'பூவை மறைக்கிற இலைகள், அருகே தெரிகிற தளைகள்' போன்ற சிறிய பெரிய குறைகள் எவற்றையும் பெரிது படுத்தாமல் வாருங்களேன் கூடவே, பிழைத்துப் போகிறேன் எப்போதும் போல:)!
[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரிந்தால் control மற்றும் minus பொத்தான்களை பயன்படுத்துங்கள்.]
3.ராஜா மகள்
4.லில்லி மலருக்குக் கொண்டாட்டம்
5.பூவில் வண்டு
6.தண்டுடன் அல்லி.. தடாகத்தில்..
7.இதழா குழலா?
இவ்வகை மலரை இங்குதான் முதன் முறையாகக் கண்டேன்.
8.மெல்லத் திறக்கும் இதழ்கள்
9.(செக்கச்) சிவந்த மலர்
10.நம்பினால் நம்புங்கள்
ஒற்றைப் பூதான் இத்தனை பெரிசாய்..
இவ்வகையே கண்காட்சியில் முதல் பரிசினைத் தட்டிச் சென்றது.
11.தொந்திரவு செய்யாதீர்
12.நீயா?
13.நானா?
14.கள்ளிக்குப் பூவேலி
இதழா குழலா படம் அழகு...
பதிலளிநீக்குசெக்கச்சிவந்த மலர் வெல்வெட் மலர்தானே?
கள்ளிக்கு பூ வேலி நல்ல சிந்தனை!
//நிகர இலாபம் ஐம்பத்தைந்து இலட்சமென்றும் செய்தி அறிக்கை வெளியாகியுள்ளது//
இலாபத்திற்க்காக மட்டுமே மலர் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றனவா? இல்லை வேறு நோக்கில் என்றால் இந்த பணத்தை நகர் வளர்ச்சிக்கு செலவிடுகின்றனரா? # டவுட்
எல்லாம் அழகாக இருக்கும் போது எதை விடுத்து சொல்லுவது ... பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஎதை செலக்ட் செய்வதுன்னு மனசுக்குள்ளே ஒரு கலவரமே வந்துடுச்சு. பூக்கள் அழகா இல்லாட்டி அந்த சோனி W80 தான் நல்லா இருக்கா. அதே சோனி w80 வழியா நான் எடுத்தாலும் இப்படித்தான் இருக்குமா?
பதிலளிநீக்குஒன்னே ஒன்னு தான் நியாபகம் வருது.
சிக்கலாரே!உங்க நாயனத்துல மட்டும் தான் இந்த சத்தம் வருமா, இல்லாட்டி நீங்க வாசிச்சா எல்லா நாயனத்துலயும் இந்த சத்தம் வருமா - ஜில்ஜில் ரமாமணி
தொந்தரவு செய்யாதீர் அற்புதம்..
பதிலளிநீக்குஎல்லாமே கொள்ளை அழகு.
தண்டுடன் அல்லி தடாகத்தில்
பதிலளிநீக்குஎனக்கு ரொம்ப்ப்ப்ப புடிச்ச ப்போட்டோ !
மலர்கண்காட்சி ஸ்பெஷல் பேக்கேஜ் சிறப்பு :)
//அதே சோனி w80 வழியா நான் எடுத்தாலும் இப்படித்தான் இருக்குமா?//
பதிலளிநீக்குஅட! கேமரா பொட்டியெல்லாம் வைச்சிருக்கிறீரா ??? :)) அது அபி பாப்பாவுதுல்ல!
அட அனியாய ஆபீசரே ஆயில்யா!உன் கேமிராக்கு முன்ன என்னுது பொடிடப்பா மாதிரி தான் இருந்துச்சு! அதுக்காக என்ன. அதுலயே ஒரு போட்டோ உன்னை எடுத்து வச்சிருக்கேன். பொண்ணு பார்க்க அந்த போட்டோவையே பிரிண்ட் போட்டு அனுப்பறேன் இரு:-)))))))
பதிலளிநீக்குvery nice photos akka!!
பதிலளிநீக்குஅத்தனையும் அழகு
பதிலளிநீக்குஅருமை...\
பதிலளிநீக்கு//..நகர் வளர்ச்சிக்கு செலவிடுகின்றனரா?.//
எந்த உலகத்தில இருக்கீர் .? அவங்க வீட்டு வளர்ச்சிக்கு செலவிடப் படும்
//தே சோனி w80 வழியா நான் எடுத்தாலும் இப்படித்தான் இருக்குமா?///
பதிலளிநீக்குவராது. செட்டிங்க்லாம் சரியாய் கொடுக்கணும் ... சரியா போகஸ் பண்ணனும் இதெல்லாம் உமக்கு சரிப்படாது
எல்லா மலர் படங்களும் அருமை ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குதிறமையான ஒவியர் வரைந்த மாதிரி உள்ள தண்டுடன் அல்லி தான் எனக்கு பிடித்த படம்.
எப்பொழுதும்போல் உங்கள் கண்வண்ணம் அழகு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ
விஜய்
Wow!Wow!Wow! you made my day! thanks!
பதிலளிநீக்குwow! Beautiful photos! :-)
பதிலளிநீக்குரொம்ப அழகான பகிர்வு ..நன்றி நன்றி
பதிலளிநீக்குYELLOW HIBISCUS TAKE MY VOTE.SIMPLE AND BEAUTIFUL.
பதிலளிநீக்குஇதுக்கு இதுக்குத்தான், காத்திருந்தேன்
பதிலளிநீக்குஎல்லாமே அழகு...பூவுக்குள் வண்டு ரியல்..குதுப்மினார் அழகோ அழகு.
பதிலளிநீக்குஅற்புதம்; எப்போ எடுத்த படங்கள் இவை?
பதிலளிநீக்குஹைய்யோ!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குஎதைச்சொல்ல, எதைவிட?
என்னங்க இப்படி எனக்கு ஹோம்சிக்கை வரவழைச்சுட்டீங்க!
//ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் வந்ததாகவும்//
பதிலளிநீக்குஏங்கப்பா...எத்தனை ரசிகர்கள்...
மலர்களை பார்க்கும்பொழுது மட்டும் எப்படித்தான் மனதும் மலர்கிறதோ தெரியவில்லை. இங்கும் அப்படித்தான்...
செக்கச் சிவந்த மலர்..கோழிக்கொண்டைதா எனக்கு பிடித்தது.. ராமலெக்ஷ்மி.. எங்கள் வீட்டுத்தோட்டத்திலும் இருக்கு..
பதிலளிநீக்குவெல்வெட் புன்னகை..
//7.இதழா குழலா//
பதிலளிநீக்குவித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது அக்கா
இது மீள் பதிவா? முன்பே பார்த்த நினைவு...!
பதிலளிநீக்குபடங்கள் அருமையாக இருக்கிறது :-)
வண்ணத்தில் ரோஜா
பதிலளிநீக்குகோணத்தில் “தொந்தரவு செய்யாதீர் ” :)
அக்கா....தொந்தரவு செய்யாதீர்ன்னு சொல்லிட்டு அத்தனை பூக்களையுமே தொந்தரவு செய்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஅவ்வளவு அழகு.இதில் எதை முதல் என்று சொல்ல? என்னால் முடியவில்லை !
ஏதாச்சுமா? எல்லாமே வெகு அழகுங்க!
பதிலளிநீக்குஆகா அத்தனையும் அழகு
பதிலளிநீக்குதண்டுடன் அல்லி ரொம்ப பிடிச்சிருக்கு.. வண்ணத்திலும் கோணத்திலும்...
பதிலளிநீக்குபூக்களின் அழகு கண்ணை பறிக்கிறது...
பதிலளிநீக்குஆஹா...
பதிலளிநீக்குபொதுவாகவே மலர்கள் கொள்ளை அழகு... இங்கு அழகாக அணிவகுத்து வேறு இருக்கிறது...
ஆகவே, கொள்ளையோ கொள்ளை அழகாக காட்சியளிக்கிறது....
பகிர்வுக்கு நன்றி....
Beautiful photos and very nice captions :)
பதிலளிநீக்குஓ... இதுதான் ஆம்பலா? படமும் உங்கள் தலைப்பும் அழகு, பொருத்தம்.
பதிலளிநீக்குபூவும் வண்டும் பிரம்ம்மாதம்...
இதழா குழலா...புதுமையான பூ...செயற்கைப் பூவோ?
நம்பினால் நம்புங்கள் பூ காலி ஃப்ளவர் உறவினர் போலும்...
'நான்'தான் சூப்பர்!!!
பூவேலி 'பயங்கர' கவர்ச்சி...
மலர்கள் அருமை. கண்ணுக்குள்ளே நிற்கின்றன.
பதிலளிநீக்குஇது நியாயமா ராமலக்ஷ்மி ?
பதிலளிநீக்குபாலைவன வெயிலில் காய்ந்து
கொண்டிருக்கும் நேரம் பார்த்தா
இந்த பதிவு :) ஒவ்வொன்றும்
மிக அருமை..
ப்ரியமுடன் வசந்த் said...
பதிலளிநீக்கு//இதழா குழலா படம் அழகு...
செக்கச்சிவந்த மலர் வெல்வெட் மலர்தானே?
கள்ளிக்கு பூ வேலி நல்ல சிந்தனை!//
நன்றி வசந்த். சிவந்தமலர் வெல்வெட்டேதான்:)!
***//நிகர இலாபம் ஐம்பத்தைந்து இலட்சமென்றும் செய்தி அறிக்கை வெளியாகியுள்ளது//
இலாபத்திற்க்காக மட்டுமே மலர் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றனவா? இல்லை வேறு நோக்கில் என்றால் இந்த பணத்தை நகர் வளர்ச்சிக்கு செலவிடுகின்றனரா? # டவுட்//***
டவுட்டே வேண்டாம். நகர வளர்ச்சிக்கு செலவிடப் போவதில்லை. ‘லால்பாக்கை மேம்படுத்த..?’ என்பது மக்களின் ஆவலான கேள்வியாய் இருக்க, அந்த லாபத் தொகை அடுத்த கண்காட்சிக்கென ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டு ஃபைலை மூடியாயிற்று:)!
மதுரை சரவணன் said...
பதிலளிநீக்கு//எல்லாம் அழகாக இருக்கும் போது எதை விடுத்து சொல்லுவது ... பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்//
நன்றி சரவணன்.
அபி அப்பா said...
பதிலளிநீக்கு//எதை செலக்ட் செய்வதுன்னு மனசுக்குள்ளே ஒரு கலவரமே வந்துடுச்சு. பூக்கள் அழகா இல்லாட்டி அந்த சோனி W80 தான் நல்லா இருக்கா. அதே சோனி w80 வழியா நான் எடுத்தாலும் இப்படித்தான் இருக்குமா?
ஒன்னே ஒன்னு தான் நியாபகம் வருது.
சிக்கலாரே!உங்க நாயனத்துல மட்டும் தான் இந்த சத்தம் வருமா, இல்லாட்டி நீங்க வாசிச்சா எல்லா நாயனத்துலயும் இந்த சத்தம் வருமா - ஜில்ஜில் ரமாமணி//
‘ஜில்’லுன்னு ஒரு பாராட்டு:)! நன்றி அபி அப்பா!
சுசி said...
பதிலளிநீக்கு//தொந்தரவு செய்யாதீர் அற்புதம்..
எல்லாமே கொள்ளை அழகு.//
நல்ல தேர்வு. நன்றி சுசி:)!
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு//தண்டுடன் அல்லி தடாகத்தில்
எனக்கு ரொம்ப்ப்ப்ப புடிச்ச ப்போட்டோ !
மலர்கண்காட்சி ஸ்பெஷல் பேக்கேஜ் சிறப்பு :)//
நன்றி ஆயில்யன். தண்டுடன் அல்லியே எடுத்த நாளிலிருந்து, என் பிகாஸா மற்றும் ஃப்ளிக்கர் தளங்களில் ப்ரொஃபைல் படமாக உள்ளன:)!
Mrs.Menagasathia said...
பதிலளிநீக்கு//very nice photos akka!!//
நன்றி மேனகா.
திகழ் said...
பதிலளிநீக்கு//அத்தனையும் அழகு//
நன்றி திகழ். பெங்களூர் எப்போதும் உங்களுக்குப் பிடித்தமானது என அறிவேன்:)!
LK said...
பதிலளிநீக்கு//அருமை...\//
நன்றி எல்கே.
****//..நகர் வளர்ச்சிக்கு செலவிடுகின்றனரா?.//
எந்த உலகத்தில இருக்கீர் .? அவங்க வீட்டு வளர்ச்சிக்கு செலவிடப் படும்****
இல்லையாம்:)! அடுத்த கண்காட்சிக்காம்.
LK said...
பதிலளிநீக்கு****//தே சோனி w80 வழியா நான் எடுத்தாலும் இப்படித்தான் இருக்குமா?///
வராது. செட்டிங்க்லாம் சரியாய் கொடுக்கணும் ... சரியா போகஸ் பண்ணனும் இதெல்லாம் உமக்கு சரிப்படாது//****
காவேரியைப் படம் எடுத்துப் போட்டிருக்கிறார் பாருங்கள் எல்கே. ஆர்வத்துடன் தொடர்ந்து பழகி வந்தால் எல்லாருமே ஓரளவு நல்லாவே எடுக்கலாம். நன்றி சொல்லுவோம் டிஜிட்டல் புரட்சிக்கு:)!
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//எல்லா மலர் படங்களும் அருமை ராமலக்ஷ்மி.
திறமையான ஒவியர் வரைந்த மாதிரி உள்ள தண்டுடன் அல்லி தான் எனக்கு பிடித்த படம்.//
எனக்கும் மிகப் பிடித்தபடம் அதுவே. நன்றி கோமதிம்மா.
விஜய் said...
பதிலளிநீக்கு//எப்பொழுதும்போல் உங்கள் கண்வண்ணம் அழகு
வாழ்த்துக்கள் சகோ//
நன்றி விஜய்!
சந்தனமுல்லை said...
பதிலளிநீக்கு//Wow!Wow!Wow! you made my day! thanks!//
நன்றி முல்லை.
Chitra said...
பதிலளிநீக்கு//wow! Beautiful photos! :-)//
நன்றி சித்ரா.
பத்மா said...
பதிலளிநீக்கு//ரொம்ப அழகான பகிர்வு ..நன்றி நன்றி//
மிக்க நன்றி பத்மா.
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//YELLOW HIBISCUS TAKE MY VOTE.SIMPLE AND BEAUTIFUL.//
அமைதியான மஞ்சளுடன் அழகு மலர். அந்த வண்ணத்தில் ஹைபிஸ்கஸ் அங்கேதான் முதன்முறையாகக் கண்டேன். நன்றி வல்லிம்மா.
goma said...
பதிலளிநீக்கு//இதுக்கு இதுக்குத்தான், காத்திருந்தேன்//
உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருப்பேன் என நம்புகிறேன்:)!
கண்ணகி said...
பதிலளிநீக்கு//எல்லாமே அழகு...பூவுக்குள் வண்டு ரியல்..குதுப்மினார் அழகோ அழகு.//
நன்றி கண்ணகி.
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//அற்புதம்; எப்போ எடுத்த படங்கள் இவை?//
26 ஜனவரி 2010, குடியரசு தின மலர்கண்காட்சியில்:)!
நன்றி மோகன் குமார்.
துளசி கோபால் said...
பதிலளிநீக்கு//ஹைய்யோ!!!!!!!!!!!!!!!
எதைச்சொல்ல, எதைவிட?
என்னங்க இப்படி எனக்கு ஹோம்சிக்கை வரவழைச்சுட்டீங்க!//
மலர்கள் உங்களை இழுத்து வந்து விட்டன பாருங்கள்:)! நன்றி துளசி மேடம்.
க.பாலாசி said...
பதிலளிநீக்கு***//ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் வந்ததாகவும்//
ஏங்கப்பா...எத்தனை ரசிகர்கள்...
மலர்களை பார்க்கும்பொழுது மட்டும் எப்படித்தான் மனதும் மலர்கிறதோ தெரியவில்லை. இங்கும் அப்படித்தான்.../***
மனதும் மலர்கிறது. உண்மை. நன்றி பாலாசி.
தேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்கு//செக்கச் சிவந்த மலர்..கோழிக்கொண்டைதா எனக்கு பிடித்தது.. ராமலெக்ஷ்மி.. எங்கள் வீட்டுத்தோட்டத்திலும் இருக்கு..
வெல்வெட் புன்னகை..//
அட, ஆமாம் பெரிய பூ தலையில் கோழிக் கொண்டைதான்:)! வெல்வெட் உங்கள் தோட்டத்திலே புன்னகைப்பது அறிந்து மகிழ்ச்சி. நன்றி தேனம்மை.
சசிகுமார் said...
பதிலளிநீக்கு***//7.இதழா குழலா//
வித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது அக்கா//***
ரசனைக்கு நன்றி சசிகுமார்.
சிங்கக்குட்டி said...
பதிலளிநீக்கு//இது மீள் பதிவா? முன்பே பார்த்த நினைவு...!//
மீள் பதிவுமில்லை. ஒன்று கூட மீள்படமுமில்லை:)! இதன் முதல் பாகத்தில் குதும்ப்மினாரையும் க்ளாஸ் ஹவுஸையும் வேறு கோணங்களில் காட்டியிருந்தேன். அது நினைவில் இருக்கக் கூடும்.
//படங்கள் அருமையாக இருக்கிறது :-)//
நன்றி சிங்கக்குட்டி.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//வண்ணத்தில் ரோஜா//
நன்றி:)!
//கோணத்தில் “தொந்தரவு செய்யாதீர் ” :)//
எனக்கு வண்ணத்திலும்:)!
ஹேமா said...
பதிலளிநீக்கு//அக்கா....தொந்தரவு செய்யாதீர்ன்னு சொல்லிட்டு அத்தனை பூக்களையுமே தொந்தரவு செய்திருக்கிறீர்கள்.//
இப்படி மடக்குகிறீர்களே ஹேமா:)?
//அவ்வளவு அழகு.இதில் எதை முதல் என்று சொல்ல? என்னால் முடியவில்லை !//
அத்தனைக்கும் சரிசமமாய் மார்க் கொடுத்து விட்டீர்கள் என எடுத்துக் கொள்கிறேன்:)! நன்றி.
க.நா.சாந்தி லெட்சுமணன். said...
பதிலளிநீக்கு//ஏதாச்சுமா? எல்லாமே வெகு அழகுங்க!//
நன்றி சாந்தி.
ஆ.ஞானசேகரன் said...
பதிலளிநீக்கு//ஆகா அத்தனையும் அழகு//
நன்றி ஞானசேகரன்.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//தண்டுடன் அல்லி ரொம்ப பிடிச்சிருக்கு.. வண்ணத்திலும் கோணத்திலும்...//
ஓ நன்றி சாரல். என் ஃப்ளிக்கர் ப்ரொஃபைல் படம். கவனியுங்கள் அடுத்தமுறை:)!
வழிப்போக்கன் - யோகேஷ் said...
பதிலளிநீக்குபூக்களின் அழகு கண்ணை பறிக்கிறது...
நன்றிகள் யோகேஷ்.
R.Gopi said...
பதிலளிநீக்கு//ஆஹா...
பொதுவாகவே மலர்கள் கொள்ளை அழகு... இங்கு அழகாக அணிவகுத்து வேறு இருக்கிறது...
ஆகவே, கொள்ளையோ கொள்ளை அழகாக காட்சியளிக்கிறது....
பகிர்வுக்கு நன்றி....//
நீண்ட இடைவெளிக்குப் பின் வருகிறீர்கள். நன்றி கோபி.
Bharkavi said...
பதிலளிநீக்கு//Beautiful photos and very nice captions :)//
பெங்களூருதானா உங்களுக்கும்:)? முதல் வருகைக்கு நன்றி பார்கவி!
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//ஓ... இதுதான் ஆம்பலா? படமும் உங்கள் தலைப்பும் அழகு, பொருத்தம்.
பூவும் வண்டும் பிரம்ம்மாதம்...
இதழா குழலா...புதுமையான பூ...செயற்கைப் பூவோ?
நம்பினால் நம்புங்கள் பூ காலி ஃப்ளவர் உறவினர் போலும்...
'நான்'தான் சூப்பர்!!!
பூவேலி 'பயங்கர' கவர்ச்சி...//
நல்லாயிருக்கு உங்க கருத்தும் வர்ணனையும்:)! இதழா குழலா நிஜப்பூ! மலர் கண்காட்சியில் செயற்கைக்கெல்லாம் இடமில்லை. ஆளுயரச் செடியில் இருந்ததை, என் உயரத்துக்கு, அண்ணாந்து பார்த்து எடுத்திருக்கிறேன், கவனியுங்கள்:)!
சே.குமார் said...
பதிலளிநீக்கு//மலர்கள் அருமை. கண்ணுக்குள்ளே நிற்கின்றன.//
நன்றிகள் குமார்.
James Vasanth said...
பதிலளிநீக்கு//இது நியாயமா ராமலக்ஷ்மி ?
பாலைவன வெயிலில் காய்ந்து
கொண்டிருக்கும் நேரம் பார்த்தா
இந்த பதிவு :) ஒவ்வொன்றும்
மிக அருமை..//
கண்ணுக்குக் குளுமையாய் படங்கள் தந்திருக்கிறேன் என முதல் ஆளாக மகிழ்ச்சியடைவதை விடுத்து இப்படிக் கேட்பது நியாயமா:)?
நன்றி ஜேம்ஸ்.
From Indli..
பதிலளிநீக்கு//Hi Ramalakshmi,
Congrats!
Your story titled 'மலரோடு மலராக..-பெங்களூரு லால்பாக்கில்..' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 23rd August 2010 05:07:01 AM GMT
Here is the link to the story: http://ta.indli.com/story/325728
Thanks for using Indli
Regards,
-Indli//
இன் ட்லியில் வாக்களித்த 30 பேருக்கும், தமிழ்மணத்தில் வாக்களித்த 15 பேருக்கும் என் நன்றிகள்.
***எல்லா மலரும் அழகுதான். இருப்பினும் வண்ணம், கோணம், வடிவம் என ஏதேனும் காரணத்தால் எதுவேனும் குறிப்பாகப் பிடித்திருந்தால் சொல்லிச் செல்லுங்களேன்:)!***
பதிலளிநீக்கு"ராஜா மகள்" தான் எனக்குப் பிடிக்குதுங்க, ராமலக்ஷ்மி :)
அன்பின் ராமலஷ்மி
பதிலளிநீக்குஅத்தனையும் அருமை - மலர்களில் இத்தனை வகையா - அத்தனையும் புகைப்படமாகவா ? ரசிக்கும் தன்மை - புகைப்படம் எடுக்கும் திறமை - அத்தனைக்கும் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
வருண் said...
பதிலளிநீக்கு//"ராஜா மகள்" தான் எனக்குப் பிடிக்குதுங்க, ராமலக்ஷ்மி :)//
நன்றி வருண்:)!
cheena (சீனா) said...
பதிலளிநீக்கு//அன்பின் ராமலஷ்மி
அத்தனையும் அருமை - மலர்களில் இத்தனை வகையா - அத்தனையும் புகைப்படமாகவா ? ரசிக்கும் தன்மை - புகைப்படம் எடுக்கும் திறமை - அத்தனைக்கும் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்//
வாங்க சீனா சார். வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
உங்களுடைய பூ படங்களைப்பார்த்து எனக்கு உங்கள் சிஷ்யனாக மாற முயற்சி செய்து வருகிறேன்..என்ன கேமரா உங்களது?விலை என்னவோ! உங்கள் சிஷ்யனின் படத்தையும் பாருங்கள்..
பதிலளிநீக்குhttp://jaivabaieswaran.blogspot.com
மொட்டு மலராகும்,மலர் மொட்டாகுமா மற்றும் அல்லிக்குளம் வைக்கலாம்..
@ JAIVABAIESWARAN,
பதிலளிநீக்குநானே இன்னும் கற்று வரும் மாணவிதான்! மலர்களைப் படமெடுக்கும் ஒத்த ரசனை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். உங்கள் அல்லிக்குளம் மிக அருமையான முயற்சி. என் பாராட்டுக்கள். காமிராக்கள்: Nikon 3700, Sony W80. பல ஆண்டு முன்னர் வாங்கியவை. தற்போதைய விலை மாறியிருக்கலாம். பெரும்பாலும் இப்போது சோனியைதான் பயன்படுத்துகிறேன். வருகைக்கும் தந்த சுட்டிக்கும் மிக்க நன்றிங்க.