வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

பாத்திரத் தேர்வு



வீதி முனையில்
புதிதாய் முளைத்திருந்தான்
பாதி காலினை
விபத்தொன்றில்
பறி கொடுத்த
வாலிபன் ஒருவன்.

அனுதினம் காலையில்
பேருந்துக்குக் காத்திருக்கையில்-
முடங்கிவிட்டவனைச் சுற்றிக்
காணக் கிடைத்த
காட்சிகள் யாவும்
கடவுளின் கருணையை
எண்ணி எண்ணி
வியக்கவும் மெச்சவும்
வைத்தன மற்றொருவனை.

போவோர் வருவோர்
கொடுத்துப் போனார்
அணிவதற்கு ஆடைகள்
குளிருக்குப் போர்வைகள்
உண்பதற்குப் பொட்டலமாய்
அவரவர் வீட்டிலிருந்து
விதவிதமாய் உணவுகள்.

'என்வயதொத்த இவனுக்கு
எந்தவித சிரமுமில்லாமல்
இருந்த இடத்தில்
எல்லாம் கிடைக்க
அருள்பாலிக்கும் இறைவன்-
என் தேவைகளையும்
இப்படி நிறைவேற்றி
வைத்திட்டால்...'
நினைப்பே இனித்தது
நெஞ்சம் ஏங்கியது.

வாழ்க்கை எனும்
நிசமான மேடையில்
விதிக்கப்பட்ட ஆயுள்
எனும்
கால அவகாசத்தில்
நமக்கான பாத்திரங்களை
எப்போதும்
ஆண்டவனே
தீர்மானிப்பதில்லை.
வேறு எவரோதான்
தேர்வு
செய்வதுமில்லை.
உதவுபவராய்
இருக்க விருப்பமா?
உதவி பெறுபவராய்
ஆகிட ஆசையா?
நம் கையில்!
நம் மனதில்!
*** ***

*படம் நன்றி:MQN

*'வடக்கு வாசல்' பத்திரிகையின் ஜூலை 2009 இதழிலும், மற்றும் அதன் இணைய தளத்திலும்:


80 கருத்துகள்:

  1. //உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உதவி பெறுபவராய்
    ஆகிட ஆசையா?
    நம் கையில்!
    நம் மனதில்!//

    இந்த வரிகள் புரியவில்லை மேடம்

    ஆரம்ப வரிகள் ஆழ்மனதில் பதிந்தது....

    பதிலளிநீக்கு
  2. கவிதை அருமையா இருந்துச்சு. படமும் நல்லா இருக்கு.

    என்ன கொஞ்ச நாள் கேப் விட்டுட்டீங்க??

    பதிலளிநீக்கு
  3. பிரியமுடன்.........வசந்த் said...
    ****//உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உதவி பெறுபவராய்
    ஆகிட ஆசையா?
    நம் கையில்!
    நம் மனதில்!//

    இந்த வரிகள் புரியவில்லை மேடம்****

    நல்லது வசந்த். காண்கின்ற காட்சியில் கடவுளின் கருணையை எண்ணி வியக்கின்றவன், அதில் எந்தப் பாத்திரமாக மாற விரும்புகிறான் என்கிற தேர்வு அவன் கையில்தானே?

    உதவுபவராகவா அல்லது சோம்பலின் உச்சத்தில் சொகுசு வேண்டிடும் உதவி பெறுபவராகவா?

    //ஆரம்ப வரிகள் ஆழ்மனதில் பதிந்தது....//

    இக்கவிதையில் முடங்கியவன் நிலை ஒரு உதாரணத்துக்கு சொல்லப் பட்டதே. அப்படிப் பட்டோர் கூட இன்று பரிதாபத்தை நாடி நிற்காமல் முயற்சித்து முன்னேறுவதைக் காண்கிறோம். அவர்களை முன்னுதாரணமாகவும் கொள்கிறோம்.

    ஆரோக்கியமான மனதுக்கு உடல் பலவீனம் தடையில்லை. ஆரோக்கியான உடம்புக்கோ மனத் தளர்வு என்றைக்கும் பெருந் தடையே!

    இப்போது சொல்லுங்கள்!

    தெரிவு நம் கையில்தானே!
    தெளிவு பிறக்க வேண்டியது நம் மனதில்தானே?

    கருத்துப் பரிமாற்றத்துக்கான கேள்விக்கும் வருகைக்கும் நன்றி வசந்த்!

    பதிலளிநீக்கு
  4. அபி அப்பா said...

    //கவிதை அருமையா இருந்துச்சு. படமும் நல்லா இருக்கு.//

    நன்றி அபிஅப்பா. படம் MQN எடுத்தது. PiT போட்டியொன்றில் அப்படத்தை பார்த்த பொழுதே ஏதேனும் என் கவிதை ஒன்றுக்கு உபயோகித்துக் கொள்ள வேண்டுமென நினைத்து அவரிடம் அனுமதியும் வாங்கி வைத்திருந்தேன். இக்கவிதைக்குப் பொருந்திப் போனது:)!

    //என்ன கொஞ்ச நாள் கேப் விட்டுட்டீங்க??//

    ஆமாம், பத்து நாள் ஊரிலே இல்லாததால், பதிவுலகுக்கும் விடுப்பு:)!

    பதிலளிநீக்கு
  5. அழகான கருத்துமிக்கக் கவிதை....தேர்ந்தெடுத்த முத்துச்சரம்தான்! அழகான படமும் கூட!!

    பதிலளிநீக்கு
  6. /*உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உதவி பெறுபவராய்
    ஆகிட ஆசையா?
    நம் கையில்!
    நம் மனதில்!
    *** ****/
    அருமையாகச் சொன்னீர்கள். பாத்திரம் நம் கையில்... நம் மனதில்.... நல்ல கருத்துக்கள் அழகான கவிதை முத்துக்களாக முத்துச்சரத்தில் மின்னுகின்றன. மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  7. //நினைப்பே இனித்தது
    நெஞ்சம் ஏங்கியது.//

    குழந்தைத் தனமான உள் மனதை
    அப்பட்டமாக, நுணுக்கமாக
    பதிய வைத்த கவிதை

    பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  8. நல்ல கவிதை. எதுவுமே எளிதில் கிடைப்பது என்பதால் மட்டும் சிறப்பாகி விடாது.

    வடக்கு வாசல் இதழில் பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துகள்.

    கவிதையின் முதல் பத்தியின் வரிகள் உங்கள் பாணியிலிருந்து சற்று வித்தியாசமான வரிகள். அந்த மாதிரி நிறைய எழுதுங்கள். நல்லா இருக்கு.

    அப்புறம், Welcome back.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  9. நல்ல கவிதை. படமும் நன்று.
    இடைவேளைக்கு பிறகான தங்களின் வரவு கவிதையோடு இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  10. கையில் பாத்திரமா? இல்லை
    கை முன் பாத்திரமா?
    முடிவுசெய்து கொள்!
     
    அருமையான கருத்து. வடக்கு வாசலுக்கு தென்திசையிலிருந்து என் வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  11. //உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உதவி பெறுபவராய்
    ஆகிட ஆசையா?
    நம் கையில்!
    நம் மனதில்!//

    நம் வாழ்க்கை நம் கையில்....

    நல்லதொரு பகிர்வு.

    பதிலளிநீக்கு
  12. கவிதை அருமையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  13. இதை நான் பத்திரிக்கையிலே படிச்சேனாக்கும்.. :)
    நல்ல கருத்து..

    பதிலளிநீக்கு
  14. சந்தனமுல்லை said...

    //அழகான கருத்துமிக்கக் கவிதை....தேர்ந்தெடுத்த முத்துச்சரம்தான்! அழகான படமும் கூட!!//

    நன்றி முல்லை, பொருத்தமான படத் தேர்வையும் பாராட்டியமைக்கு!

    பதிலளிநீக்கு
  15. அமுதா said...

    //அருமையாகச் சொன்னீர்கள். பாத்திரம் நம் கையில்... நம் மனதில்.... நல்ல கருத்துக்கள் அழகான கவிதை முத்துக்களாக முத்துச்சரத்தில் மின்னுகின்றன. மகிழ்ச்சி//

    நல்லது அமுதா, கவிதை தங்களுக்குப் பிடித்ததில் எனக்கும் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  16. கதிர் - ஈரோடு said...

    **** //நினைப்பே இனித்தது
    நெஞ்சம் ஏங்கியது.//

    குழந்தைத் தனமான உள் மனதை
    அப்பட்டமாக, நுணுக்கமாக
    பதிய வைத்த கவிதை ****

    உண்மைதான் பலநேரம் உள்மனம் குழந்தைத் தனமாகத்தான் யோசிக்கும். அதைக் கடந்து வருவதில்தான் இருக்கிறது வாழ்க்கை:)!

    கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கதிர்!

    பதிலளிநீக்கு
  17. பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் நாமே!!
    அருமையான விளக்கம் கவிதை வடிவில்!!!

    பதிலளிநீக்கு
  18. //'என்வயதொத்த இவனுக்கு
    எந்தவித சிரமுமில்லாமல்
    இருந்த இடத்தில்
    எல்லாம் கிடைக்க
    அருள்பாலிக்கும் இறைவன்-
    என் தேவைகளையும்
    இப்படி நிறைவேற்றி
    வைத்திட்டால்...'
    நினைப்பே இனித்தது
    நெஞ்சம் ஏங்கியது.
    //

    போடுகிறாய் தப்புக் கணக்கு என்று புரிய வைக்கும் வரிகள்.

    சோம்பலைத் தவிர்ப்போம் சுகமாய் வாழ்வோம் என்று வலியுருத்துகிறது கவிதை.

    பதிலளிநீக்கு
  19. நல்ல தேர்ந்தெடுத்த சொற்கள் பொருத்தமான படம்

    பதிலளிநீக்கு
  20. அனுஜன்யா said...

    //நல்ல கவிதை. எதுவுமே எளிதில் கிடைப்பது என்பதால் மட்டும் சிறப்பாகி விடாது.//

    அழகாய் சொல்லி விட்டீர்கள்!

    //வடக்கு வாசல் இதழில் பிரசுரம் ஆனதற்கு வாழ்த்துகள்.//

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    //கவிதையின் முதல் பத்தியின் வரிகள் உங்கள் பாணியிலிருந்து சற்று வித்தியாசமான வரிகள். அந்த மாதிரி நிறைய எழுதுங்கள். நல்லா இருக்கு.//

    வசந்த்தும் பாராட்டியிருக்கிறார் அவ்வரிகளை. நிச்சயம் முயற்சிப்பேன்!

    //அப்புறம், Welcome back.//

    இன்னும் ஒரு வாரத்தில் திரும்பவும் ஜூட் விட இருக்கிறேன் சற்று நீண்ட விடுப்பாக:)!

    பதிலளிநீக்கு
  21. குடந்தை அன்புமணி said...

    // நல்ல கவிதை. படமும் நன்று.
    இடைவேளைக்கு பிறகான தங்களின் வரவு கவிதையோடு இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.//

    மகிழ்ச்சி தரும் தங்கள் பாராட்டுக்கு நன்றி அன்புமணி!

    பதிலளிநீக்கு
  22. " உழவன் " " Uzhavan " said...

    //கையில் பாத்திரமா? இல்லை
    கை முன் பாத்திரமா?
    முடிவுசெய்து கொள்!//

    ஆஹா, கவித்துமாய் சொல்லி விட்டீர்கள் உழவன்.

    //அருமையான கருத்து. வடக்கு வாசலுக்கு தென்திசையிலிருந்து என் வாழ்த்துக்கள் :-)//

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  23. துபாய் ராஜா said...

    //நம் வாழ்க்கை நம் கையில்....

    நல்லதொரு பகிர்வு.//

    உண்மைதானே, நன்றி துபாய் ராஜா!

    பதிலளிநீக்கு
  24. கடையம் ஆனந்த் said...

    //கவிதை அருமையா இருக்கு.//

    பாராட்டுக்கு நன்றி ஆனந்த்!

    பதிலளிநீக்கு
  25. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    //இதை நான் பத்திரிக்கையிலே படிச்சேனாக்கும்.. :)
    நல்ல கருத்து..//

    ஜூலை இதழில் வெளிவந்த விவரம் எனக்குப் பத்திரிகை வரும் முன்னரே பார்த்துச் சொன்னவர் நீங்கள்தானே:)? அதற்கும் சேர்த்து என் நன்றிகள்!!

    பதிலளிநீக்கு
  26. தமிழ் பிரியன் said...

    // Trade mark ramalakshmi akka kavithai. Vaazthukkal. Welcome back.//

    அப்படி ட்ரேட் மார்க் வேறு இருக்கிறதா:(? சரி போகட்டும்:)! வாழ்த்துக்களுக்கும் வரவேற்புக்கும் நன்றி தமிழ் பிரியன்!

    பதிலளிநீக்கு
  27. மாதேவி said...

    //கருத்துமிக்க நல்ல கவிதை.//

    நன்றி மாதேவி!

    பதிலளிநீக்கு
  28. ஜீவன் said...

    //பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் நாமே!!
    அருமையான விளக்கம் கவிதை வடிவில்!!!//

    சுருக்கமாய் அதையே நீங்கள் சொன்ன விதமும் அருமை ஜீவன்! நன்றி:)!

    பதிலளிநீக்கு
  29. சதங்கா (Sathanga) said...

    // போடுகிறாய் தப்புக் கணக்கு என்று புரிய வைக்கும் வரிகள். //

    ஆம், தப்புக் கணக்குகளாலே தடுமாறும் உள்ளங்கள்!

    //சோம்பலைத் தவிர்ப்போம் சுகமாய் வாழ்வோம் என்று வலியுருத்துகிறது கவிதை.//

    அதே அதே! அருமையான கருத்துக்கு நன்றி சதங்கா!

    பதிலளிநீக்கு
  30. நேசமித்ரன் said...

    //நல்ல தேர்ந்தெடுத்த சொற்கள் பொருத்தமான படம்//

    பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி நேசமித்ரன்!

    பதிலளிநீக்கு
  31. @ tamilcinema

    தமிழர்ஸ் பற்றிய விவரங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  32. நல்லகவிதை. வடக்குவாசலில் பார்த்து வியந்தேன். தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி !

    பதிலளிநீக்கு
  33. சிங்கக்குட்டி said...

    //நல்ல கவிதை. :-))//

    நன்றி சிங்கக்குட்டி!

    பதிலளிநீக்கு
  34. எம்.ரிஷான் ஷெரீப் said...

    // நல்லகவிதை. வடக்குவாசலில் பார்த்து வியந்தேன். தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி !//

    நன்றி ரிஷான், பாராட்டுக்கும் தொடரும் தங்கள் ஊக்கத்துக்கும்!

    பதிலளிநீக்கு
  35. நேரடியான தெளிவான அழகான கவிதை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.!

    பதிலளிநீக்கு
  36. முத்துநகையே உன்னை நான் அறிவேன் என்று ஒரு பழைய பாடல் உண்டுங்க!

    சிவாஜி ஒரு கால் நடக்கமுடியாத குழந்தைய வைத்துக்கொண்டு பாடும் பாடல் அது (என் தம்பி?)

    அந்தப்பாடல் வரி இப்படிப்போகும்,

    'கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு?
    கையழகு பார்த்தால் பூ எதற்கு?
    உன் காலழகு பார்த்தால், தெய்வத்துக்கு கருணை என்றொரு பேர் எதற்கு?"

    கவியரசர் கண்ணதாசன் வரிகள்னு நினைக்கிறேன்.

    உங்க கவிதையைப் படித்ததும் இந்தப் பாடல் வரிகள் ஞாபகம் வந்தது.

    -------------------

    ***வாழ்க்கை எனும்
    நிசமான மேடையில்
    விதிக்கப்பட்ட ஆயுள்
    எனும்
    கால அவகாசத்தில்
    நமக்கான பாத்திரங்களை
    எப்போதும்
    ஆண்டவனே
    தீர்மானிப்பதில்லை.
    வேறு எவரோதான்
    தேர்வு
    செய்வதுமில்லை.
    உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உதவி பெறுபவராய்
    ஆகிட ஆசையா?
    நம் கையில்!
    நம் மனதில்!***

    It is very TRUE. Yes, it is all in our mind and in our perspective!

    Your thoughtfulness is amazing, Ramalakshmi! வாழ்த்துக்கள்! :)

    பதிலளிநீக்கு
  37. அருமையா இருக்குங்க சகோதரி....!! அழகான வரிகள்....!! இந்த கவிதை எப்படி உங்களுக்கு தோனுச்சு ..... ??

    " உழைப்பே உயர்வு ......!!! "

    நல்ல வரிகள்......!! வாழ்த்துக்கள் ....!!

    பதிலளிநீக்கு
  38. //உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உத்வி பெறுபவராய்
    ஆகிட ஆசையா?//
    நல்ல கேள்வி!
    உதவுபவராய் இருக்கவே ஆசை ராமல்ட்சுமி.

    பதிலளிநீக்கு
  39. //வாழ்க்கை எனும்
    நிசமான மேடையில்
    விதிக்கப்பட்ட ஆயுள்
    எனும்
    கால அவகாசத்தில்
    நமக்கான பாத்திரங்களை
    எப்போதும்
    ஆண்டவனே
    தீர்மானிப்பதில்லை.
    வேறு எவரோதான்
    தேர்வு
    செய்வதுமில்லை.
    உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உதவி பெறுபவராய்
    ஆகிட ஆசையா?
    நம் கையில்!
    நம் மனதில்!///


    நல்ல வரிகளாக ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  40. நன்றி ராமலக்‌ஷ்மி, எனக்கு கவிதை புதிது. உங்கள் வாழ்த்து எனக்கு ஊக்கமளிக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

    பதிலளிநீக்கு
  41. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    பதிலளிநீக்கு
  42. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //நேரடியான தெளிவான அழகான கவிதை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.!//

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தாமிரா!

    பதிலளிநீக்கு
  43. வருண் said...
    //முத்துநகையே உன்னை நான் அறிவேன்//

    இப்பாடல் கேட்ட நினைவிருக்கிறது. காட்சியாகப் பார்த்த நியாபகம் இல்லை.

    //'கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு?
    கையழகு பார்த்தால் பூ எதற்கு?
    உன் காலழகு பார்த்தால், தெய்வத்துக்கு கருணை என்றொரு பேர் எதற்கு?"//

    அழகு வரிகள்!

    //கவியரசர் கண்ணதாசன் வரிகள்னு நினைக்கிறேன்.//

    'ஆமாம்'என்று ஆமோதிக்கிறார் கூகுளார்:)!

    //it is all in our mind and in our perspective!//

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி வருண்!

    பதிலளிநீக்கு
  44. லவ்டேல் மேடி said...
    // " உழைப்பே உயர்வு ......!!! "

    நல்ல வரிகள்......!! வாழ்த்துக்கள் ....!!//

    நன்றி மேடி.

    //இந்த கவிதை எப்படி உங்களுக்கு தோனுச்சு ..... ??//

    அதையும் சொல்லிவிடணுமா:)? சரி.
    தினசரி வாழ்வில் நம்மைக் கடந்து போகின்ற சம்பவங்களும் மனிதர்களும் ஏற்படுத்துகின்ற ஆச்சரியங்களும் அனுபவங்களும், நம்முள் எழுப்பும் கேள்விகளுக்கு விடை தேடுவதாகத்தானே பெரும்பாலும் நம் எழுத்துக்கள் அமைந்து போகின்றன!? அதுபோலத்தான் சுகவீனமற்றவர்கள் பராமரிக்கப் படுவதைப் பார்த்துப் பெருமூச்செறியும் சிலரைக் காண நேர்ந்த போது தோன்றியது இக்கவிதை.

    பதிலளிநீக்கு
  45. கோமதி அரசு said...

    **** //உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உத்வி பெறுபவராய்
    ஆகிட ஆசையா?//
    நல்ல கேள்வி!
    உதவுபவராய் இருக்கவே ஆசை ராமல்ட்சுமி. ****

    நல்லது கோமதி அரசு. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  46. ஆ.ஞானசேகரன் said...
    // நல்ல வரிகளாக ரசித்தேன்...//

    கடைசிப் பத்தியைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கு நன்றி ஞானசேகரன்!

    பதிலளிநீக்கு
  47. முரளிகுமார் பத்மநாபன் said...

    //நன்றி ராமலக்‌ஷ்மி, எனக்கு கவிதை புதிது.//

    எழுத ஆரம்பிக்கையில் எல்லோருக்கும் எல்லாமே புதிதுதானே. தண்ணீரில் இறங்கி விட்டால் தானாகக் கற்றிடுவோம் நீச்சலை:)! தொடர்ந்து எழுதுங்கள். என் வாழ்த்துக்களும் தொடரும்.

    பதிலளிநீக்கு
  48. seidhivalaiyam.in said...
    //உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.//

    பார்த்தேன், என் நன்றிகள்!

    செய்திவளையம் பற்றிய தகவல்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  49. //
    உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உதவி பெறுபவராய்
    ஆகிட ஆசையா?
    நம் கையில்!
    நம் மனதில்!
    //

    மிக அழகான அருமையான ஆழ்ந்து சிந்திக்க வைத்த வரிகள்!!

    எத்துனை கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை தாங்கிக் கொண்டு
    மற்றவர்கள் கைகளை எதிபார்க்காமல், தேகபலம் மட்டுமின்றி
    மனபலமும் அதிகம் பெற்று, மனதால் மேற்கூறியவைகளை உணர்ந்து எப்போதும் மற்றவர்களுக்கு முடிந்த நல்லவைகளை செய்ய தயாராக நாம் இருக்க வேண்டும் இல்லையா மேடம்?

    இது போல் இருப்பதிற்கு முதலில் கைகளில் வளம் பெற்று பிறகு மனோபலம் பெற்று உதவுபவராக இருப்பதுதான் சாலச் சிறந்தது.

    இது எனது எண்ணங்கள் சரிதானே மேடம்??

    பதிலளிநீக்கு
  50. எனக்கு எப்போதும் உதுபவராய் இருக்கத்தான் அதீத ஆவல்.

    பதிலளிநீக்கு
  51. //வீதி முனையில்
    புதிதாய் முளைத்திருந்தான்
    பாதி காலினை
    விபத்தொன்றில்
    பறி கொடுத்த
    வாலிபன் ஒருவன்.//

    படித்தயுடன் மனசு கனத்து போகும் ஆரம்பம்...

    /போவோர் வருவோர்
    கொடுத்துப் போனார்
    அணிவதற்கு ஆடைகள்
    குளிருக்குப் போர்வைகள்
    உண்பதற்குப் பொட்டலமாய்
    அவரவர் வீட்டிலிருந்து
    விதவிதமாய் உணவுகள்.//

    இருந்தும் இவன் மற்றவர் போல், ஓடியாட முடியாதே?!!

    //வாழ்க்கை எனும்
    நிசமான மேடையில்
    விதிக்கப்பட்ட ஆயுள்
    எனும்
    கால அவகாசத்தில்
    நமக்கான பாத்திரங்களை
    எப்போதும்
    ஆண்டவனே
    தீர்மானிப்பதில்லை.//

    அப்படியா ராமலக்ஷ்மி மேடம்.... நான்கூட, நம் வாழ்க்கையின் அனைத்துமே அந்த ஆண்டவன் தீர்மானிப்பது என்றல்லவா நினைத்திருந்தேன்?

    //உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உதவி பெறுபவராய்
    ஆகிட ஆசையா?
    நம் கையில்!
    நம் மனதில்!//

    அட்டகாசமான முடிவு.....

    நல்லா எழுதி இருக்கீங்க.... கூடவே போட்டோக்களும்....

    பதிலளிநீக்கு
  52. RAMYA said...
    // மிக அழகான அருமையான ஆழ்ந்து சிந்திக்க வைத்த வரிகள்!!//

    நன்றி ரம்யா!

    //எத்துனை கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை தாங்கிக் கொண்டு மற்றவர்கள் கைகளை எதிபார்க்காமல், தேகபலம் மட்டுமின்றி
    மனபலமும் அதிகம் பெற்று, மனதால் மேற்கூறியவைகளை உணர்ந்து எப்போதும் மற்றவர்களுக்கு முடிந்த நல்லவைகளை செய்ய தயாராக நாம் இருக்க வேண்டும் இல்லையா மேடம்?//

    அழகான புரிதல்.

    // இது போல் இருப்பதிற்கு முதலில் கைகளில் வளம் பெற்று பிறகு மனோபலம் பெற்று உதவுபவராக இருப்பதுதான் சாலச் சிறந்தது.

    இது எனது எண்ணங்கள் சரிதானே மேடம்??//

    உங்கள் உயரிய எண்ணங்கள் யாவுமே போற்றுதலுக்குரியது ரம்யா.

    பதிலளிநீக்கு
  53. RAMYA said...

    //எனக்கு எப்போதும் உதுபவராய் இருக்கத்தான் அதீத ஆவல்.//

    தற்போது நீங்கள் பலருக்கும் சத்தமின்றி செய்துவரும் பல நல்ல காரியங்களை நான் அறிவேன் ரம்யா. தங்கள் நோக்கம் இலட்சியம் யாவும் நிறைவேற நீங்கள் எடுத்து வரும் எல்லா முயற்சிகளுக்கும் கடவுளின் அருளும் எங்களது வாழ்த்துக்களும் கூடவே வரும்.

    பதிலளிநீக்கு
  54. R.Gopi said...
    //படித்தயுடன் மனசு கனத்து போகும் ஆரம்பம்...//

    மன்னிக்கவும் கோபி, மனதை வருத்தியதற்கு. உதாரணத்துக்காகச் சொன்னது.

    //இருந்தும் இவன் மற்றவர் போல், ஓடியாட முடியாதே?!!//

    அதைத்தான் சிந்திக்க மறந்த விடுகிறார்கள் சிலபேர்.

    //அப்படியா ராமலக்ஷ்மி மேடம்.... நான்கூட, நம் வாழ்க்கையின் அனைத்துமே அந்த ஆண்டவன் தீர்மானிப்பது என்றல்லவா நினைத்திருந்தேன்?//

    சோம்பியிருக்கவும் முயற்சி எடுக்கவே அயற்சியாக உணரவும் ஆண்டவானா சொல்கிறார்:)? LET US DO OUR BEST and LEAVE THE REST TO THE ALMIGHTY! சரிதானா கோபி:)?

    //அட்டகாசமான முடிவு.....

    நல்லா எழுதி இருக்கீங்க.... கூடவே போட்டோக்களும்....//

    நன்றி கோபி. புகைப்படத்துக்கான பாராட்டு MQN-க்கே சேரும்:)!

    பதிலளிநீக்கு
  55. கருத்துமிக்க நல்ல கவிதை.
    Please excuse my late arrival.

    பதிலளிநீக்கு
  56. @ ஜெஸ்வந்தி,
    பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி ஜெஸ்வந்தி!

    பதிலளிநீக்கு
  57. உங்களுக்களின் கருத்துள்ள பாத்திரத்தேர்வு அமுதம் மிகவும் அருமை.


    ராமலக்ஷ்மி, (பாதம் ஹல்வா) தங்கள் வருகைக்கு நன்றி, அந்த இடத்தில் பதில் அளிக்க முடியவில்லை). செய்து பார்த்து கண்டிப்பா எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  58. @ Jaleela,

    கருத்துக்கு நன்றி ஜலீலா.

    கண்டிப்பாகச் சொல்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  59. ஆழ் மனதை வெளிப்படுத்திய விதம் அருமை...

    ஆம் அவன் முடமென அறிந்தும் நாம் அத்தனைக்கும் ஆசைபடும் சாராசரி மனித மனதின் வெளிப்பாடு.. நல்ல கவிதை...

    பதிலளிநீக்கு
  60. @ தமிழரசி,
    அழகான புரிதலுடனான கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி தமிழரசி!

    பதிலளிநீக்கு
  61. /* உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உதவி பெறுபவராய்
    ஆகிட ஆசையா? */

    அதுவும் நம் கையில் இல்லை.. எதுவாக இருப்பினும் ஆனந்தமாய் அனுபவிப்பேன்.. வாழ்கை வாழ்வதற்கே..

    பதிலளிநீக்கு
  62. கார்த்திக் said...
    //அதுவும் நம் கையில் இல்லை..//

    சரியாப் போச்சு:)!

    //எதுவாக இருப்பினும் ஆனந்தமாய் அனுபவிப்பேன்.. வாழ்கை வாழ்வதற்கே..//

    ஆகட்டும் கார்த்திக் வாழ்த்துக்கள்! எதுவாக இருப்பினும் எதிர்கொள்ளும் தைரியம் இருப்போருக்கு என்றைக்குமே வாழ்க்கை ஆனந்தம்தான்! என்ஜாய்:)!

    பதிலளிநீக்கு
  63. /
    வாழ்க்கை எனும்
    நிசமான மேடையில்
    விதிக்கப்பட்ட ஆயுள்
    எனும்
    கால அவகாசத்தில்
    நமக்கான பாத்திரங்களை
    எப்போதும்
    ஆண்டவனே
    தீர்மானிப்பதில்லை.
    வேறு எவரோதான்
    தேர்வு
    செய்வதுமில்லை.
    உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உதவி பெறுபவராய்
    ஆகிட ஆசையா?
    நம் கையில்!
    நம் மனதில்!/

    அருமை

    எல்லாம் நம் கையில்
    என்பதை அற்புதமாக விளம்பி
    உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  64. திகழ்மிளிர் said...

    //அருமை

    எல்லாம் நம் கையில்
    என்பதை அற்புதமாக விளம்பி
    உள்ளீர்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திகழ்மிளிர்.

    பதிலளிநீக்கு
  65. அமிர்தவர்ஷினி அம்மா said...

    // நல்ல கவிதை, வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அமித்து அம்மா.

    பதிலளிநீக்கு
  66. பத்திரிகை வாசல்கள் ஒவ்வொன்றாய்உங்களுக்காக திறந்து கொண்டே வருவதில் மிக்க மகிழ்ச்சி ராமலஷ்மி! நேர்த்தியான இந்தக்கவிதைக்குப்பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  67. //உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உதவி பெறுபவராய்
    ஆகிட ஆசையா?
    நம் கையில்!
    நம் மனதில்!//

    அருமையான கருத்து ராமலக்ஷ்மி. வடக்கு வாசலில் மின்னுவதற்கு வாழ்த்துகளும்!

    (பின்னூட்டங்கள் படிக்கல. மன்னிச்சுக்கோங்க)

    பதிலளிநீக்கு
  68. ஷைலஜா said...

    //பத்திரிகை வாசல்கள் ஒவ்வொன்றாய்உங்களுக்காக திறந்து கொண்டே வருவதில் மிக்க மகிழ்ச்சி ராமலஷ்மி! நேர்த்தியான இந்தக்கவிதைக்குப்பாராட்டுக்கள்!//

    அடிக்கடி நினைவூட்டி, அந்த வாசல்களைத் தட்ட வைத்த உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்:)! கவிதை குறித்த பாராட்டுக்கும் நன்றி ஷைலஜா!

    பதிலளிநீக்கு
  69. கவிநயா said...

    //அருமையான கருத்து ராமலக்ஷ்மி. வடக்கு வாசலில் மின்னுவதற்கு வாழ்த்துகளும்!

    (பின்னூட்டங்கள் படிக்கல. மன்னிச்சுக்கோங்க)//

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி கவிந்யா. நேரமின்மைக்கிடையிலும் தவறாமல் என் ஒவ்வொரு பதிவினையும் படிக்கிறீங்க. அது போதுமே எனக்கு:)!

    பதிலளிநீக்கு
  70. அருமையான கவிதை அக்கா.

    //உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உதவி பெறுபவராய்
    ஆகிட ஆசையா?
    நம் கையில்!
    நம் மனதில்!//

    சிந்திக்க வைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  71. @ சுசி,

    பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி சுசி!

    பதிலளிநீக்கு
  72. வணக்கம்

    உங்க பதிவுகள முதல் தரவயா பாக்குரேங்க... நல்ல இருக்கு ..

    எனக்கு கூட உங்க பேர்தாங்க !!!!
    ரொம்ப சந்தோசம் உங்கள தெரிஞ்சுகிட்டதுல....

    பதிலளிநீக்கு
  73. @ கத்துக்குட்டி,

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி! உங்களை எல்லோரும் எப்படிச் சுருக்கமாக கூப்பிடுவார்கள் என்பதைப் பார்த்தேனே உங்கள் ப்ரொஃபைலில்:)! வலை உலகுக்கு நல்வரவு!

    பதிலளிநீக்கு
  74. //வாழ்க்கை எனும்
    நிசமான மேடையில்
    விதிக்கப்பட்ட ஆயுள்
    எனும்
    கால அவகாசத்தில்
    நமக்கான பாத்திரங்களை
    எப்போதும்
    ஆண்டவனே
    தீர்மானிப்பதில்லை.
    வேறு எவரோதான்
    தேர்வு
    செய்வதுமில்லை.
    உதவுபவராய்
    இருக்க விருப்பமா?
    உதவி பெறுபவராய்
    ஆகிட ஆசையா?
    நம் கையில்!
    நம் மனதில்!//

    நல்ல சிந்தனை ... நம் வாழ்க்கை நம் கையில்

    பதிலளிநீக்கு
  75. கிரி said...
    //நம் வாழ்க்கை நம் கையில்//

    அருமையான புரிதல்!

    //நல்ல சிந்தனை ...//

    நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  76. மின்மடல் வழியாக..:

    //Hi Ramalakshmi,

    Congrats!

    Your story titled 'பாத்திரத் தேர்வு' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 7th August 2009 12:44:03 PM GMT



    Here is the link to the story: http://www.tamilish.com/story/95851

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team//

    தகவலுக்கு நன்றி தமிழிஷ். வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin