செவ்வாய், 23 செப்டம்பர், 2008

ஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..

அன்று சாமான்யனுக்கு எகிறும் விலைவாசியில் கார் வாங்குவதென்பது நிறைவேறாத ஆசை போலிருந்தது.
இன்றோ விலைவாசி கட்டுக்குள் வராவிடினும் வங்கிகள் கடனை வாரி வழங்கிட வாசலுக்கு வண்டி வருவது கடினமாயில்லை.

ஆனால்....
ஆனால் என்ன?

அன்றைக்கு ஒரு இருபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இந்த நையாண்டிக் கவிதையின் கடைசி நான்கு வரிகள் இன்றைக்கும் பொருந்தி வந்தால் அதற்கு நான் பொறுப்பல்லதானே!


[1980-ல் எழுதி '84-ல் நான் இளங்கலை இரண்டாம் ஆண்டிலிருந்த போது திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் வெளியானது.]


இப்போது பாடலாமா:
"ஆசை ஆசை இப்பொழுது பேராசை... பெட்ரோல் போட்டு வண்டியில் போவதுதான்..."
[இங்கு வலையேற்றிய பின் செப்டம்பர் 25, 2008 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.]

67 கருத்துகள்:

 1. இப்ப உள்ள நிலைமைய அப்பயே எழுதிரிக்கிங்க
  அருமையான கவிதை அக்கா

  பதிலளிநீக்கு
 2. ஆங்கில பட்டதாரி தமிழ் கவிதைகளில் அசத்தியிருக்கீங்க :)

  பதிலளிநீக்கு
 3. கலக்கறீங்க..கலக்கியிருக்கீங்க ராம லஷ்மி...
  :-))

  பதிலளிநீக்கு
 4. நல்ல கவிதை.. வாய்கிழிய முன்னேற்றம் முன்னேற்றம்னு பேசுனாலும் எதுவும் மாறலன்றதுக்கு நல்ல உதாரணம் இது... :(

  பதிலளிநீக்கு
 5. உண்மையே.. போகிற போக்கை பார்த்தால் நாளைய 8ம் வகுப்பு வரலாறு புத்தகத்தில் "பொட்ரேலை நம் முன்னோர்கள் அனைவரும் வாகனங்களுக்கு பயன்படுத்தி வந்தார்கள் என்ற தகவல் ஆச்சயமலிக்கிறதல்லாவா??" என்று இருக்கப்போகிறது..

  ஆங்கில இலக்கியம்.. தமிழ் ஈர்ப்பா?

  நர்சிம்

  பதிலளிநீக்கு
 6. smile said...
  //இப்ப உள்ள நிலைமைய அப்பயே எழுதிரிக்கிங்க//

  ஆனா நான் பொறுப்பில்லைன்னும் சொல்லிட்டேங்க:)) !!

  //அருமையான கவிதை அக்கா//

  முதல் வருகை பதிவுக்கும் வலைப்பூவுக்கும். நன்றி ஸ்மைல்.

  பதிலளிநீக்கு
 7. ஆயில்யன் said...
  //ஆங்கில பட்டதாரி தமிழ் கவிதைகளில் அசத்தியிருக்கீங்க :) //

  ஆனால் கற்றதென்னவோ இன்பம் தரும் இலக்கியம்தான், இல்லையா ஆயில்யன்:)) ?

  பதிலளிநீக்கு
 8. யதார்த்ததைச் சொல்லும் அருமையான கவிதை...

  பதிலளிநீக்கு
 9. கவிதையில் உள்ள ப்ளோ நல்லாருக்கு மேடம்..
  சுவாரசியமா எழுதியிருக்கீங்க!!
  இதே லாஜிக் நாம் இப்போ சேமிக்கற காசுக்கும் பொருந்து இல்லையா..
  கடைசியில் காசு வரும்போது அது ஒரு காபி வாங்கும் அளவிற்குதான் இருக்கும்..
  அப்போது விக்கிற விலைவாசியில்!! :-))

  பதிலளிநீக்கு
 10. சந்தனமுல்லை said...

  //கலக்கறீங்க..கலக்கியிருக்கீங்க ராம லஷ்மி...
  :-)) //

  நன்றி சந்தனமுல்லை. நாட்டு நடப்பே இப்போ நையாண்டி செய்யற மாதிரிதான் இருக்கிறது பல விஷயங்களில் :( !

  பதிலளிநீக்கு
 11. வெண்பூ said...
  //நல்ல கவிதை.. வாய்கிழிய முன்னேற்றம் முன்னேற்றம்னு பேசுனாலும் எதுவும் மாறலன்றதுக்கு நல்ல உதாரணம் இது... :( //

  உண்மைதான் வெண்பூ:( !

  இந்தக் கவிதையை தேடியெடுத்து இப்போது போடக் காரணம் நீங்களும்தான். சமீபத்திய உங்களது பதிவொன்றில் கால ஓட்டத்தில் காணாமல் போனவற்றில் ஒன்றாக சைக்கிளைக் குறிப்பிட்டிருந்தீர்கள் அல்லவா?

  பதிலளிநீக்கு
 12. narsim said...
  //உண்மையே.. போகிற போக்கை பார்த்தால் நாளைய 8ம் வகுப்பு வரலாறு புத்தகத்தில் "பொட்ரேலை நம் முன்னோர்கள் அனைவரும் வாகனங்களுக்கு பயன்படுத்தி வந்தார்கள் என்ற தகவல் ஆச்சயமலிக்கிறதல்லாவா??" என்று இருக்கப்போகிறது..//

  :((. ஆம், அப்படி நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லைதான்.

  //ஆங்கில இலக்கியம்.. தமிழ் ஈர்ப்பா?//

  அதே:) !

  பதிலளிநீக்கு
 13. Amudha said...
  //யதார்த்ததைச் சொல்லும் அருமையான கவிதை...//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதா.

  பதிலளிநீக்கு
 14. சந்தனமுல்லை said..
  //கவிதையில் உள்ள ப்ளோ நல்லாருக்கு மேடம்..
  சுவாரசியமா எழுதியிருக்கீங்க!! //

  கேட்கவே சந்தோஷமாக இருக்கிறதே. பதினாறு வயதில் பத்தாவது படிக்கையில் நான் எழுதிய இரண்டாவது கவிதை. "அப்போ முதல் கவிதை..?" அப்படின்னு யாரும் கேட்பார்களா என வெயிட் பண்ணுவதை விட:)) நானே கேட்டு நானே சொல்லிக்கறேன் "அதையும் சீக்கிரம் வலையேற்றுகிறேன்" என :)) !

  //இதே லாஜிக் நாம் இப்போ சேமிக்கற காசுக்கும் பொருந்து இல்லையா..
  கடைசியில் காசு வரும்போது அது ஒரு காபி வாங்கும் அளவிற்குதான் இருக்கும்..
  அப்போது விக்கிற விலைவாசியில்!! :-)) //

  ரொம்பச் சரியாகச் சொன்னீர்கள் சந்தனமுல்லை:))!

  பதிலளிநீக்கு
 15. வணக்கம்!

  நகைச்சுவை வடிவத்தில் அன்று முதல் இன்று வரை சமுதாயத்தில் நிலவி வரும் அவலநிலையை நீங்கள் அழகாக இந்த கவிதையில் அன்றே எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

  ஒரு வீடு/வாகனம்(கார்) வாங்க ஆசைப்படும்போதெல்லாம் இந்நிலையால் பாதிக்கப்பட்டு, இதெல்லாம் ஏழைகளுக்கு எட்டாக்கனி எனறு வருந்தும் பலகோடி மக்களில் நானும் ஒருவன். நாளை நன்மை மலரும் என்ற நம்பிக்கையில் வாழும்....

  என் சுரேஷ்

  பதிலளிநீக்கு
 16. N Suresh said...
  //வணக்கம்!//

  வணக்கம் சுரேஷ். வலைச் சரத்தில் எனது வலைப்பூவையே கொண்டு நிறுத்தி எதிர்பாராத ஆனந்தம் அளித்த தாங்கள் முதல் முறையாக எனது வலைப்பூவில் கருத்தைப் பகிர்ந்து கொள்ள வந்து மறுபடி அதே ஆனந்தத்தைத் தந்து விட்டீர்கள்.

  //நகைச்சுவை வடிவத்தில் அன்று முதல் இன்று வரை சமுதாயத்தில் நிலவி வரும் அவலநிலையை நீங்கள் அழகாக இந்த கவிதையில் அன்றே எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்//

  சில நேரங்களில் நகைச்சுவையாகச் சொல்லும் போது அவலங்கள் இன்னும் ஆழமாக அம்பலமாவதாக உணர்கிறோம்தானே?

  //ஒரு வீடு/வாகனம்(கார்) வாங்க ஆசைப்படும்போதெல்லாம் இந்நிலையால் பாதிக்கப்பட்டு, இதெல்லாம் ஏழைகளுக்கு எட்டாக்கனி எனறு வருந்தும் பலகோடி மக்களில் நானும் ஒருவன். நாளை நன்மை மலரும் என்ற நம்பிக்கையில் வாழும்.... //

  "நாளை நன்மை மலரும் என்ற நம்பிக்கையில்" என நல்ல வார்த்தைகளையும் நீங்களே சொல்லி விட்டீர்கள். மலரும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. ஆங்கில இலக்கியம் படிச்சிட்டு தமிழிலும் அழகா கவிதை எல்லாம் எழுதி இருக்கீங்க... இது தான் பிறவி கவிஞரோ? கவிதை நல்லா இருக்கு..:)
  நம்பிக்கையுடன்

  பதிலளிநீக்கு
 18. முத்துலெட்சுமி-கயல்விழி said...
  //தீர்க்கதரிசி நீங்க :)//

  என்னமோங்க. அப்போ நான் எழுதிய பலவும் இப்படிப் பொருந்தி நின்று 'தீர்க்கதரிசி'ன்னு பட்டமெல்லாம் வாங்கிக் கொடுக்குது. எழுதும் போது அப்படியெல்லாம் நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை.

  பதிலளிநீக்கு
 19. தமிழ் பிரியன் said...
  //ஆங்கில இலக்கியம் படிச்சிட்டு தமிழிலும் அழகா கவிதை எல்லாம் எழுதி இருக்கீங்க...//

  //கவிதை நல்லா இருக்கு..:)//

  நன்றி தமிழ் பிரியன்.

  //இது தான் பிறவி கவிஞரோ?//

  என்னை வச்சுக் காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே:))?

  //நம்பிக்கையுடன்//

  நம்பிக்கையை என்றைக்கும் காப்பாற்றுவேன் என்கிற உறுதிமொழியுடன்

  பதிலளிநீக்கு
 20. //தீர்க்கதரிசி நீங்க :)//

  ரிப்பீட்டேய்! :)

  பதிலளிநீக்கு
 21. //இருபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இந்த நையாண்டிக் கவிதையின் கடைசி நான்கு வரிகள் இன்றைக்கும் பொருந்தி வந்தால் அதற்கு நான் பொறுப்பல்லதானே!//

  :-) நீங்க ஒரு ஞானி தான் ..அந்த "ஞானி" அல்ல உண்மையான ஞானி தான். உங்கள் கவிதைகள் அனைத்துமே எந்த காலத்திலும் பொருந்துகிறது, நான் இந்த வசனத்தை உங்களோட பதிவுகள்ள குறைந்தது ஐந்து முறையாவது கூறி இருப்பேன்.

  பதிலளிநீக்கு
 22. இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னால்! அடேயப்பா, அப்போதே என்ன அபாரமான சிந்தனை! நீங்கள் தீர்க்கதரிசி தான். என்ன, அவர்களுக்கே தாம் தீர்க்கதரிசி என்று தெரியாது. இப்போ நீங்க சொல்றத எல்லாம் கவனமா கேட்டுக்கறோம். (நா நல்ல கவிஞன் ஆவேன் அப்பிடின்னும் சொல்லலாம் .. ஹி ஹி)

  அனுஜன்யா

  பதிலளிநீக்கு
 23. 84 ல் இளங்கலையா? ஹிஹிஹீஹி அப்ப தான் நான் ஸ்லெட்டை எடுத்துக்கிட்டு இஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சி இருப்பேன்.. ;)))

  பதிலளிநீக்கு
 24. கவிநயா said...
  ////தீர்க்கதரிசி நீங்க :)//

  ரிப்பீட்டேய்! :) ////

  உங்க 'ரிப்பீட்டே'யில் இருக்கிற உற்சாகம் என்னையும் தொத்திக்கிட்டேய்! :)
  நன்றி கவிநயா.

  பதிலளிநீக்கு
 25. கிரி said...
  //:-) நீங்க ஒரு ஞானி தான் ..அந்த "ஞானி" அல்ல//

  :))!

  // உங்கள் கவிதைகள் அனைத்துமே எந்த காலத்திலும் பொருந்துகிறது, நான் இந்த வசனத்தை உங்களோட பதிவுகள்ள குறைந்தது ஐந்து முறையாவது கூறி இருப்பேன்//

  உண்மைதான். அதனால்தான் இந்த முறை "நான் பொறுப்பல்ல" என முதலிலேயே ஜகா வாங்கி விட்டேன்:)))

  நன்றி கிரி.

  பதிலளிநீக்கு
 26. அனுஜன்யா said...
  //இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னால்! அடேயப்பா, அப்போதே என்ன அபாரமான சிந்தனை! நீங்கள் தீர்க்கதரிசி தான். என்ன, அவர்களுக்கே தாம் தீர்க்கதரிசி என்று தெரியாது.//

  பெரிய பெரிய வார்த்தைகள்:)!

  //இப்போ நீங்க சொல்றத எல்லாம் கவனமா கேட்டுக்கறோம். (நா நல்ல கவிஞன் ஆவேன் அப்பிடின்னும் சொல்லலாம் .. ஹி ஹி)//

  "ஆவேன்" என்பது சரியல்ல.
  கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.
  இப்போதே நீங்கள் மிக நல்ல கவிஞர்தான்!

  பதிலளிநீக்கு
 27. தமிழ் பிரியன் said...
  //84 ல் இளங்கலையா? ஹிஹிஹீஹி அப்ப தான் நான் ஸ்லெட்டை எடுத்துக்கிட்டு இஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சி இருப்பேன்.. ;))) //

  இஸ்கூலுக்குப் போய்... இஸ்லேட்டில்... பலப்பத்தால் "அ, ஆ" எழுதி "தமிழ்" மேலான "பிரியத்தை"த் தொடங்கிய காலம் என்பதையும் சொல்லுங்கள்:)!

  பதிலளிநீக்கு
 28. உண்மையை தான் எழுதி இருக்கிறீர்கள்
  ரெண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கினா ஒரு கார் இலவசம் என்ற நிலை வந்துவிடும் போலருக்கு !

  பதிலளிநீக்கு
 29. நாம நாடுஅப்போதிலிருந்துஇன்னும் மாறவில்லை..அதான் நிலைமை.:))
  அருமையான எழுத்து.

  ராமலக்ஷ்மி சாமான்யனின்நிலமை எப்பாவ்வும் இவ்வளவ்வுதானோ.

  பதிலளிநீக்கு
 30. the new cinema said...
  //உண்மையை தான் எழுதி இருக்கிறீர்கள்
  ரெண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கினா ஒரு கார் இலவசம் என்ற நிலை வந்துவிடும் போலருக்கு !//

  வந்தாலும் வரும்:))))!
  முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 31. வல்லிசிம்ஹன் said...
  //நாம நாடுஅப்போதிலிருந்துஇன்னும் மாறவில்லை..அதான் நிலைமை.:))
  அருமையான எழுத்து.

  ராமலக்ஷ்மி சாமான்யனின்நிலமை எப்பாவ்வும் இவ்வளவ்வுதானோ.//

  எத்தனையோ விஷயங்களில் முன்னேறி விட்டிருந்தாலும் நீங்களே சொல்லியிருக்கிற மாதிரி சாமான்யனின் நிலமை மட்டும் மாறவேயில்லைதான்.

  ஆரம்பக் கால எழுத்தையும் பாராட்டியிருப்பதற்கு நன்றி வல்லிம்மா:)!

  பதிலளிநீக்கு
 32. அருமையான கவிதை அக்கா

  பதிலளிநீக்கு
 33. கடையம் ஆனந்த் said...
  //அருமையான கவிதை அக்கா//

  நன்றி ஆனந்த்.

  பதிலளிநீக்கு
 34. AMIRDHAVARSHINI AMMA said...
  //தீர்க்கதரிசி நீங்க :)

  repeat again madam//

  முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா!

  பதிலளிநீக்கு
 35. கலக்கிட்டீங்க.

  ஆசை ஆசை பாட்டோடு இன்னோரு பாட்டையும் சேத்துக்கோங்க.

  தள்ளுமடல் வண்டி இது தள்ளிவிடுங்க.
  எண்ணை விலை ஏறிப்போச்சு மாட்டப்பூட்டுங்க.

  கோபாலா :( :)

  பதிலளிநீக்கு
 36. புதுகைத் தென்றல் said...
  //ஆசை ஆசை பாட்டோடு இன்னோரு பாட்டையும் சேத்துக்கோங்க.

  தள்ளுமடல் வண்டி இது தள்ளிவிடுங்க.
  எண்ணை விலை ஏறிப்போச்சு மாட்டப்பூட்டுங்க.//

  அட, ஆமாம் சரியான பாட்டுதான்:))! ஆனா மாட்டை பூட்டினாலும் மிருக வதையாகி விடுமே:(! ஆகையால் "ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி வருது"ன்னே பாடிடுவோம்:))!

  //கோபாலா :( :)//

  ஏறும் எண்ணெய் விலையைப் பார்க்கையில் நீங்க காட்டியிருக்கிற மாதிரி அழவா :( சிரிக்கவா:)-ன்னுதான் தெரியலை.

  பதிலளிநீக்கு
 37. வருங்காலத்த பத்தி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க....இது இப்பயில்ல இன்னும் இருபது வருஷத்துக்குப் பிறகும் இதே நிலைமை தான் இருக்கும். அந்த அளவிற்கு உண்மை இது.

  பதிலளிநீக்கு
 38. நான் ஆதவன் said...
  //வருங்காலத்த பத்தி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க....//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதவன்.

  //இது இப்பயில்ல இன்னும் இருபது வருஷத்துக்குப் பிறகும் இதே நிலைமை தான் இருக்கும்.//

  நீங்கள் சொல்வது சரியே.

  //அந்த அளவிற்கு உண்மை இது.//

  ஆம், வருத்தம் தரும் உண்மை.

  பதிலளிநீக்கு
 39. அக்கா 1984 பெட்ரோல் லிட்டர் 6 ரூபாய். அப்ப 6 ரூபாய்க்கு என்ன மதிப்புன்னு இப்போ உங்க கவிதையை படிக்கயிலதான் புரியுது. :)


  அப்புறம் நீங்க பெரிய தீர்க்கதரிசிமாதிரி தெரியுதே? அப்படியே தம்பி அப்துல்லா பெட்ரோல் கார்லேயே போய்ட்டு வருகிற அளவிற்கு பெரிய ஆளா வருவேன்னு சொல்லுங்க பார்ப்போம் :))))))

  பதிலளிநீக்கு
 40. புதுகை.அப்துல்லா said...
  //அக்கா 1984 பெட்ரோல் லிட்டர் 6 ரூபாய். அப்ப 6 ரூபாய்க்கு என்ன மதிப்புன்னு இப்போ உங்க கவிதையை படிக்கயிலதான் புரியுது. :)//

  உண்மை. சரியா கணக்கிட்டு பார்த்து விட்டீர்களே:))

  //அப்புறம் நீங்க பெரிய தீர்க்கதரிசிமாதிரி தெரியுதே? அப்படியே தம்பி அப்துல்லா பெட்ரோல் கார்லேயே போய்ட்டு வருகிற அளவிற்கு பெரிய ஆளா வருவேன்னு சொல்லுங்க பார்ப்போம் :)))))) //

  நாலு பேரு நல்லா இருக்கணும் என வாழ்த்த தீர்க்கதரிசியா இருக்கணுமா என்ன? நல்ல மனசு இருந்தா போதும்தானே:)? வாழ்வில் எல்லா உயர்வும் வந்தடைந்து ஆடி போன்ற ஒரு வாகனத்தில் போய் வருவீர்கள். 'என்னாது ஆடியிலா.. அது லிட்டருக்கு எத்தனை கி.மீ கொடுக்கும் தெரியுமா..நாட்டுக்கு அது நல்லதா'ன்னு யாரும் கேட்காதீர்கள். அப்துல்லா அந்த நிலைக்கு உயர்கையில் இப்போது செய்து வருவதை விட தன்னைச் சுற்றி இருக்கும் எத்தனை பேருக்கு எப்படியெல்லாம் உதவப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 41. உண்மைதான் இந்த விசயம் கஷ்டப்பட்டு சேமிக்கிற பணம் காலம் போகப் போக பெறுமதியற்றுப்போயிடுது..

  கலக்குறிங்க...

  பதிலளிநீக்கு
 42. திண்ணையில் பார்த்து இங்கே வந்தேன்..
  ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க சகோதரி..!

  பதிலளிநீக்கு
 43. தமிழன்... said...

  //அப்பவே தெரிஞ்சு வச்சிருக்கிங்க...//

  அன்றைய நிலைமையை எழுதும் போது இந்தக் காலக் கட்டம் வரை தொடரும் என சத்தியமா தெரிந்து வைக்கவில்லை தமிழன், நம்புங்கள்:)!

  //உண்மைதான் இந்த விசயம் கஷ்டப்பட்டு சேமிக்கிற பணம் காலம் போகப் போக பெறுமதியற்றுப்போயிடுது..

  கலக்குறிங்க...//

  சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தமிழன்.

  பதிலளிநீக்கு
 44. எம்.ரிஷான் ஷெரீப் said.
  //திண்ணையில் பார்த்து இங்கே வந்தேன்..//

  முரசு font-ல் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கலால் நின்று போய் விட்டிருந்தது திண்ணையில் எழுதுவது. இப்போது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் யூனிகோடில் மறுபடி ஆரம்பம் :) !

  //ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க சகோதரி..! //

  திண்ணையில் படித்து விட்டு இங்கு தேடி வந்து பாராட்டியிருப்பதற்கு நன்றி ரிஷான்.

  பதிலளிநீக்கு
 45. அருமையான க்விதை....
  அன்புடன் அருணா

  பதிலளிநீக்கு
 46. Aruna said...
  //அருமையான க்விதை....//

  வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி அருணா.

  பதிலளிநீக்கு
 47. பார்சா குமார‌ன் said...
  //அருமையான கவிதை//

  பாராட்டுக்கு நன்றி குமாரன்.

  பதிலளிநீக்கு
 48. கவிதை தூள்..

  எதிர்காலத்தையும் மனதில் வைத்து எழுதியுள்ளீர்கள்.. நீங்கள் நினைத்துதான் இப்போதும் நடந்துள்ளது..

  தமிழ் மொழி மீதான ஆர்வத்திற்கும், அவரவர் படிப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதற்கு உங்களது எழுத்தார்வமும், எழுத்தாற்றலும் ஒரு உதாரணம்..

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 49. //எழுதி '84-ல் நான் இளங்கலை இரண்டாம் ஆண்டிலிருந்த //

  ஹய் நம்ம செட்டு:-))

  பதிலளிநீக்கு
 50. ஹி...ஹி...பெட்ரோல் விலை ஏறிடுச்சு. அதான், வண்டி இல்லாம நடந்தே வந்து (6-ஏ நாள்), தாமதமாகிடுச்சு, பதிவு பார்க்க...:P

  கவிதை பத்தி நான் என்ன சொல்ல, அதான் எல்லாரும் (அதுக்குள்ள) சொல்லீட்டாங்களே....:))

  ஜூப்பரு..:)

  பதிலளிநீக்கு
 51. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  //கவிதை தூள்..//

  பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி உண்மைத் தமிழன்.

  //எதிர்காலத்தையும் மனதில் வைத்து எழுதியுள்ளீர்கள்.. நீங்கள் நினைத்துதான் இப்போதும் நடந்துள்ளது.. //

  எதிர்காலத்தில் இப்படியே நிலைமை இருந்து விடக் கூடாதென்கிற ஆதங்கத்தில் எழுதியது. ஆனால், அப்படியே நிலைமை இருப்பது ஆனந்தப் படக் கூடியதாக இல்லையே :( !

  //தமிழ் மொழி மீதான ஆர்வத்திற்கும், அவரவர் படிப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதற்கு உங்களது எழுத்தார்வமும், எழுத்தாற்றலும் ஒரு உதாரணம்.. //

  மிக்க நன்றி :) !

  பதிலளிநீக்கு
 52. NewBee said...
  //ஹி...ஹி...பெட்ரோல் விலை ஏறிடுச்சு. அதான், வண்டி இல்லாம நடந்தே வந்து (6-ஏ நாள்), தாமதமாகிடுச்சு, பதிவு பார்க்க...:P //

  வாங்க புது வண்டு. புதுகைத் தென்றல் "மாட்டை பூட்டலாம்"னாங்க. நான் மிதி வண்டியே தேவலை என்றேன். நீங்க நடராஜா சர்வீஸ்தான் பெஸ்ட்னுட்டீங்க! எவ்வ்வ்வளோ தூரம் எனக்காக நடந்தே வந்திருக்கீங்க, அதுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் :) !

  //கவிதை பத்தி நான் என்ன சொல்ல, அதான் எல்லாரும் (அதுக்குள்ள) சொல்லீட்டாங்களே....:))

  ஜூப்பரு..:)//

  எல்லோரும் சொன்னாலும் உங்க "ஜூப்பரே" தனிதான்.

  பதிலளிநீக்கு
 53. அபி அப்பா said...
  //
  //எழுதி '84-ல் நான் இளங்கலை இரண்டாம் ஆண்டிலிருந்த //

  ஹய் நம்ம செட்டு:-)) //

  அட அப்படியா, வருஷங்கள்தான் எப்படிப் பறந்திருக்கு பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 54. ஒரு பக்கம் சைக்கிளுக்கே ஏங்கும் சாமான்யன்....இன்னொருபக்கம் BMW வண்டிகளைக் கொண்டு நடக்கும் விபத்துகள்!!!என்னாத்த சொல்ல?
  கவிதை அருமை!

  பதிலளிநீக்கு
 55. நானானி said...//ஒரு பக்கம் சைக்கிளுக்கே ஏங்கும் சாமான்யன்....இன்னொருபக்கம் BMW வண்டிகளைக் கொண்டு நடக்கும் விபத்துகள்!!!என்னாத்த சொல்ல?//

  அதைச் சொல்லுங்கள். அந்த வழக்கில் பல வருடங்கள் கழித்தும் சரியான தீர்ப்பு வழங்கப் பட்டது ஆறுதல் மட்டுமல்ல. மற்றவர்களுக்கு ஒரு பாடமும் கூட.

  //கவிதை அருமை!//

  பாராட்டுக்கு நன்றி நானானி.

  உங்கள் அடுத்த பதிவு ரிலீஸ் எப்போது என நீஈஈ..ண்ட நாட்களாகக் காத்திருக்கிறோம். கவனியுங்கள்.
  இப்படிக்கு அன்புடன்
  உங்களது வலையுலக ரசிகர் மன்ற உறுப்பினர்.

  பதிலளிநீக்கு
 56. கொலுசு கொசுவாவது ... காரு சைக்கிளாவது ... வித்தியாசமான சிந்தனை அப்பவே. உங்களின் பழைய பொக்கிஷங்கள் அனைத்தும் பிரம்மிப்பாக இருக்கிறது. இன்னும் இருக்கறதெல்லாம் ஒன்னு ஒன்னா எடுத்து விடுங்க, காத்திருக்கிறோம் ....

  பதிலளிநீக்கு
 57. சதங்கா (Sathanga) said...
  //ஒன்னு ஒன்னா எடுத்து விடுங்க, காத்திருக்கிறோம் .... //

  செய்திடலாம் சீக்கிரமே:))! நன்றி சதங்கா!

  பதிலளிநீக்கு
 58. அடுத்த பதிவு எப்போது வரும் அக்கா. 1980-களில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பதிவுகளாக மாற்றி கொடுங்களேன். படிக்க சுவராசியமாக இருக்கும். பழசு என்றும் புதுசு இல்லீயா? பழைய கதைகளை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 59. எனது கனவு எனது மாருதி ந்னு ஒரு விளம்பரம் வ்ரும்.. அதே போல எனது கனவும் ஒரு கார் வாங்கனும் என்பதே,,,

  ஆசைபடுவதற்கு காசா பணமா?

  பதிலளிநீக்கு
 60. நல்லா எழுதியிருகீங்க!
  loved it.

  பதிலளிநீக்கு
 61. கடையம் ஆனந்த் said...
  //அடுத்த பதிவு எப்போது வரும் அக்கா.1980-களில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பதிவுகளாக மாற்றி கொடுங்களேன். படிக்க சுவராசியமாக இருக்கும்.//

  இது நேற்று அடுத்த பதிவு இட்டாயிற்று. 1988-ல் எழுதிய கதை:)! சுவாரசியமாக இருக்கிறதோ இல்லையே இன்றைய காலகட்டத்துக்கும் அவசியமானது எனத் தோன்றியதால் பதிந்திருக்கிறேன்.


  // பழசு என்றும் புதுசு இல்லீயா? பழைய கதைகளை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.
  //

  முயற்சிக்கிறேன் ஆனந்த்.
  ஏற்கனவே எழுபதுகளின் நினைவுகளை திண்ணை நினைவுகள் http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html, கூழ்சறுக்கு http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_27.html ஆகியவற்றில் பதிந்துள்ளேனே. நேரம் கிடைக்கையில் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 62. சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
  //ஆசைபடுவதற்கு காசா பணமா?///

  அதானே, நல்லா சொன்னீங்க சுடர்மணி:)!

  பதிலளிநீக்கு
 63. Truth said...
  //நல்லா எழுதியிருகீங்க!
  loved it.//

  முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Truth.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin