"உங்களுக்குள் இன்னும் நீங்கள் சந்திக்காத பேராற்றல் ஒளிந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்."
2.
"உள்ளுணர்வும் அர்ப்பணிப்பும், எதை எங்கு வைக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக அறியும்."
3.
"மிக அறிவார்ந்த பதில் ஒரு சிந்தனையாக வெளிப்பட வேண்டியதில்லை. சில நேரங்களில் அது ஒரு பார்வை."
4.
"நம் முடிவுகள் எதையும் மாற்றுவதில்லை;உலகம் அதன் போக்கில் விரிகிறது, நாம் அதை வேடிக்கை பார்க்கிறோம் அவ்வளவே."
5.
"முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. பார்வை இனி முன்னோக்கி மட்டுமே."
6.
"சரியான துணையுடன் பகிரும்போது, வாழ்க்கை ஒரு பாடலாகிறது."
7. "இலக்கோடு விடியலை வரவேற்பவர்களுக்கே, அந்த நாள் அதன் பலனை வழங்குகிறது."
8. "வியந்து பார்ப்பதை நிறுத்தாதவர்களுக்கு, உலகம் இன்னும் அதிசயங்களால் நிரம்பியே இருக்கிறது."
*
பறவை பார்ப்போம் - பாகம்: 143
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 236
**








பறவைகளின் படங்கள் துல்லியம், அழகு.
பதிலளிநீக்குஅழகாக அந்தந்த வரிகளுக்கு போஸ் கொடுப்பது போல இருக்கின்றன.
வரிகள் அருமை.
சில வரிகள் நிறுத்தி யோசிக்க வைக்கின்றன.
நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் அழகு. வாசகங்களும் சிறப்பு.
பதிலளிநீக்குஉலகம் அதன் போக்கில் விரிகிறது.
நன்றி வெங்கட்.
நீக்குபறவைகள் படங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குஅவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
நன்றி கோமதிம்மா.
நீக்குநாள் தோறும் வியந்து பார்க்க இயற்கையிடம் நிறைய இருக்கிறது.
பதிலளிநீக்குஆம். பார்க்கப் பார்க்க வியப்பும், வியக்க வியக்கப் புரிதலும் அதிகரிக்கிறது.
நீக்கு