ஞாயிறு, 30 நவம்பர், 2025

வாழ்வை வாழ்தல்

 1.
“இதயத்திலிருந்து எழும் வார்த்தைகள் தங்கள் வழியை தவறவிடுவதில்லை.”

2.
“வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ளாதீர்கள். அதன் போக்கில் செல்லட்டும், மலரட்டும்.”

3.
“அவசரம் வாழ்வின் மகிழ்ச்சியைக் கொள்ளையடிக்கிறது. நிகழ்காலத்தில் வாழ்வது அதை மீட்டெடுக்கிறது.

4.
பொறுமை ஒரு அமைதியான ஆற்றல். அது காத்திருத்தலை வளர்ச்சியாக்குகிறது.

5.
சேர்ந்து வளர முடிவெடுக்கும்போது, ஒவ்வொரு சவாலும் பொதுவான வெற்றியாக மாறுகிறது.

6.
வாழ்வில் திரும்பப் பெற இயலாத மூன்று: கூறிய சொற்கள், நழுவ விட்ட வாய்ப்புகள், வீணாக்கிய நேரம்.”
_ Ziad K.

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 221
**

9 கருத்துகள்:

  1. படங்கள் அருமை.  வரிகளும் அருமை.  

    இதயத்திலிருந்து எழும் வார்த்தைகள் தங்கள் வழியை மட்டுமல்ல, நோக்கத்தையும் தவற விடுவதில்லை!!!

    நழுவ விட்ட தருணங்களும், வீணாக்கிய நேரமும் கிட்டத்தட்ட ஒன்றுதானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தருணங்கள் இங்கே வாய்ப்புகள் எனப் பொருளாகிறது. தெளிவாக இருக்கட்டுமென மாற்றி விட்டேன். கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வழமை போலவே படங்கள், படங்களுக்கான வரிகள் என இரண்டுமே சிறப்பு.....

    தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்..... நானும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. மலர்கள் உணர்த்தும் பாடங்கள் மிக அருமை.
    மலர்கள் எல்லாம் எல்லாம் வாழ்வை வாழ்தலை கற்று தருகிறது.

    பதிலளிநீக்கு
  4. எல்லாப் படங்களும் அருமை. இரண்டாவதும், கடைசிப் படமும் ரொம்பவே கவர்கின்றன.

    இதயத்திலிருந்து எழும் வார்த்தைகளைச் சில சமயம் மூளை ப்ராசஸ் செய்த பிறகுதான் வெளிப்படுத்த வேண்டியதாகவும் இருக்கிறது!!!! நான் சொல்ல வந்ததற்கு அடுத்த வரி 2 வது படத்திற்கானது பொருந்திப் போகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin