ஞாயிறு, 27 ஜூலை, 2025

அகத்தின் ஒளி

#1
‘சவால்கள் தடைகள் அல்ல. நமக்குள் மறைந்திருக்கும் வலிமையை விழித்து எழக் கட்டளையிடும் நினைவூட்டல்கள்.’

#2
’அமைதியில் மட்டுமே ஒருவரால் தனது ஆன்மாவின் குரலைக் கேட்க முடியும், ஆனால் அது பெரும்பாலும் மற்றவரது எதிர்பார்ப்புகளின் சத்தத்தால் மூழ்கடிக்கப்பட்டு விடுகிறது.’

#3
’புரிந்து கொள்தல் என்பது வார்த்தைகளை அறிவதல்ல, மாறாக அவற்றிற்கு இடையிலான மௌனத்தை உணர்தல்.’

#4
’பாதை புலப்படாவிடினும், நோக்கத்துடன் முன்னேறு.’

#5
’இதயங்கள் புரிந்து கொள்ளும் போது, மெளனமும் பேசிடும்.’

#6
’தன்னம்பிக்கை கூச்சலிடுவதில்லை, அது கண்களில் அமைதியாக ஒளிர்ந்திடும்.’
*
பறவை பார்ப்போம் - பாகம்: (127)
**
*பயணங்களின் போது எடுத்த படங்கள்..
*எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது..
***



6 கருத்துகள்:

  1. அன்றாடம் பார்க்கும் சேவலை இவ்வளவு சுவாரஸ்யமாக பார்க்கும்படி எடுக்க முடியுமா? அருமை. துணையாக ஆழமான வரிகள்.

    பதிலளிநீக்கு
  2. படங்களும், வரிகளும் அருமை. இரண்டாவது படத்தின் கீழ் உள்ள வரிகள் அருமை.

    பதிலளிநீக்கு
  3. படங்களும் வரிகளும் ரசித்தேன்.

    கோழிகளும் சேவல்களும் அழகுதான் ஆவை உங்கள் புகைப்படங்களின் இன்னும் அழகாகத் தெரிகின்றன. எடுத்த விதமும் சூப்பர் ஒவ்வொரு பறவையையும். அலகில் உள்ள துவாரங்களும், கண்களின் நிறம் கூடத் தெரிகிற அளவு தெளிவு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்துப் பகிர்ந்த கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin