அதனுள் அங்கே பிரகாசிக்கிறது சூரியன்
அதனுள் அங்கே ஒளிர்கின்றன நட்சத்திரங்கள்
அதனுள் அங்கே உறங்குகின்றன கற்கள்
மிருகங்கள் அவை உணர்கின்றன வாழ்கின்றன
மனிதர்கள் அவர்கள் மெய்ப்பொருளை
ஆன்மாவில் தங்கிடத் தருகின்றனர்.
என் இருப்பினுள் வாழும்
ஆன்மாவை நான் கவனித்துப் பார்க்கிறேன்.
உலகத்தைப் படைத்தவர் நகருகிறார்
சூரிய ஓளியிலும் ஆன்ம-ஒளியிலும்
பரந்த உலகில் இல்லாதும்
இங்கே ஆன்மாவின் ஆழத்தில் இருந்தும்.
நீவிர், சிருட்டிகர்-ஆன்மா,
என் இதயத்தை மன்றாடச் சொல்கிறேன்,
அந்த ஆசிகளுக்காகவும் தூய வல்லமைக்காகவும்
கற்றுக் கொள்ளவும் உழைக்கவும்
என்னிடத்தில் வாழவும் வளரவும்.
*
மூலம்: Morning Verse, (Grades 5-12)
by Rudolf Steiner
*
ருடோல்ஃப் ஸ்டைனர் (1861-1925)ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். அவரது காலத்தில் நன்கு கற்றுத் தேர்ந்த விஞ்ஞானியும், மதிக்கப்பட்ட தத்துவஞானியும், சமூகப் புரட்சியாளரும் ஆவார். கட்டிடக்கலை நிபுணர், உளவியல்வாதி, அமானுஷ்யவாதி ஆயினும் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில் இலக்கிய விமர்சகராகவே உலகுக்கு ஆரம்பத்தில் அறிமுகமானார். விவசாயத்தில் உயிர் இயக்கவியல் அணுகுமுறையை முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர். பின்னாளில் இவரது கோட்பாடாகிய "மனித இன அறிவு" எனப்படும் ஆன்மீக-அறிவியல் அணுகுமுறைக்காக முக்கியத்துவம் பெற்றவர். மேற்கத்திய நாகரீகமானது ஆன்மீக உலகுக்கும் பௌதிக உலகுக்கும் இடையே பின்னிப் பிணைந்த உறவை சரி வரப் புரிந்து கொள்ளத் தவறினால் அது படிப்படியாக நாகரீக வாழ்வுக்கும் பூமிக்கும் அழிவைக் கொண்டு வரும் என சக அறிஞர்கள் சொல்வதற்குப் பல காலம் முன்னரே உலகுக்குத் தெளிவாக எடுத்துரைத்தவர். ஸ்டெயினரின் ஆன்மீக- அறிவியல் வழிமுறைகளும் நுண்ணறிவும் நடைமுறையில் கல்வி, கலை, வங்கி, மருத்துவம், மனோதத்துவம் முக்கியமாக விவசாயம் ஆகிய துறைகளில் முழுமையான புதுமைகளுக்கு வித்திட்டன.
மேற்கண்ட செய்யுள் அவரது பெயரில் இயங்கும் கல்விக் கூடங்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கானக் காலை நேரப் பிரார்த்தனைப் பாடலாக உள்ளது.
*
ஆசிரியர் குறிப்பு மற்றும் கவிதை தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
*
26 மார்ச் 2023 சொல்வனம் இதழில்.., நன்றி சொல்வனம்!
***
கவிஞர் பற்றிய குறிப்புகள் சுவாரஸ்யம். அமானுஷ்யவாதி என்கிற சொற்ப்ரயோகம் புருவம் உயர்த்த வைக்கிறது!
பதிலளிநீக்குஇவருக்கு 9 வயதாக இருக்கையில் தொலைதூர நகரில் வசித்து வந்த தன் அத்தையின் ஆவியை சந்தித்ததாக நம்புகிறார். இவரிடம் அத்தை உதவி கேட்டு வந்த ஒரு சமயத்தில், அத்தை ஏற்கனவே காலமாகிவிட்டிருந்தது இவருக்கும் குடும்பத்தினருக்கும் தெரியாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
நீக்குசிறு வயதில் ஏற்பட்ட இந்த அனுபவமும், அதன் தொடர்ச்சியாக எழுந்த சிந்தனைகளும் மேற்கொண்ட ஆய்வுகளும் அமானுஷ்யவாதி என்ற பெயர் வரக் காரணமாக இருந்திருக்கின்றன.
நன்றி ஸ்ரீராம்.
கவிஞர் பெரிய அறிவாளராகத் தெரிகிறார். உளவியல்வாதி, அமானுஷ்யவாதி என்பதைப் பார்த்ததும்....ஏனோ கவிதையுடன் பொருத்திப் பார்க்கத் தோன்றியது.
பதிலளிநீக்குகீதா
அதற்காகவே ஆசிரியர் பற்றிய குறிப்புகளை கவிதைகளோடு சேர்த்து அளிக்க விரும்புகிறேன். நன்றி கீதா
நீக்குபள்ளிப் பருவத்தில் கிளிப் பிள்ளை போலப் பொருள் உணராது மனப்பாடமாக இவை போன்ற இறை வேண்டலைச் சொல்கிறோம்.
பதிலளிநீக்குஆனாலும், வாழ்வின் பிற்பகுதியில் சிலருக்காவது, மெய்ப்பொருள் வசித்திட ஏதுவாக, ஆன்மாவை வனைந்திடும் காலங்கள் அமைந்திடும்.
அப்போது உலகத்தைப் படைத்தவர் ஆன்மாவின் ஆழத்தில் நகர்வதை அனுபவித்திடக் கூடும்.
கவிதையின் இறுதி வரிகளின் வார்த்தைகள் ஆலயத்தில் அமர்ந்து சொல்வதைப் போல இருக்கிறது.
நல்லதொரு பிரார்த்தனை வரிகளை வாசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி.
தங்கள் விரிவான கருத்துகளுக்கு மிக்க நன்றி.
நீக்குமிகவும் அருமையான கவிதை.
பதிலளிநீக்குகவிஞர் வாழ்க்கை வரலாறு , அவரின் ஆன்மீக அறிவியல் அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியது.
நன்றி கோமதிம்மா.
நீக்கு