ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

ரோஜா தினத்தில் தொடங்கி.. - பிப்ரவரி 14

14 பிப்ரவரி அன்று மட்டுமல்ல, அதற்கு ஒரு வாரம் முன்பாகவே காதலர்கள்/அன்பர்கள் தினக் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கி விடுகின்றன. இப்படியும் தினங்கள் உள்ளன என்பது இப்போதுதான் பரவலாகத் தெரிய வருகிறது. பரிசுப் பொருட்கள் விற்பனைக்கான வியாபார உத்தியாகவும் இந்தத் தினங்கள் விளம்பரப் படுத்தப்பட்டு வருகின்றன! புகைப்படக் கலைஞர்களுக்கோ  தேடிப் பொருத்தமான படங்களைப் பதிய ஒரு வாய்ப்பு :)!

#7பிப்ரவரி 
ரோஜா தினம்:
இதயம் மட்டுமே அறிந்த 
மெளன மொழியில் பேசும் 
ரோஜா.

#8பிப்ரவரி 
விருப்பத்தைத் தெரிவிக்கும் தினம்:
நீயே எனது 
பதில் கிடைத்தப் பிரார்த்தனை
நிறைவேறிய விருப்பம்
பலித்த கனவு.



#9பிப்ரவரி
சாக்லேட் தினம்:
இனிப்புகள் வரும் போகும்
சாக்லேட் மட்டுமே சாசுவதமானது
காதலைப் போன்று..


#10பிப்ரவரி
கரடிப் பொம்மை தினம்
"எப்போதும் உன்னைச் சிரிக்க வைக்கும்
புசுபுசு தோழன்/தோழி"

#11பிப்ரவரி
வாக்குறுதி தினம்:
கொடுக்கும் ஒவ்வொரு வாக்குறுதியையும் காப்பாற்று, 
காப்பாற்ற முடிகிற வாக்குறுதியை மட்டுமே கொடு.
_  Anthony Hitt

#12பிப்ரவரி
அணைக்கும் தினம்:
"சில நேரங்களில் ஒரு அணைப்பு 
ஆயிரம் வார்த்தைகளை விடவும் 
அதிக மதிப்பைப் பெற்று விடுகிறது."


#13பிப்ரவரி
முத்த தினம்:
"ஆன்மாவிடமிருந்து 
ஆன்மாவுக்கு"


#14பிப்ரவரி
காதலர்கள் / அன்பர்கள் தினம்:
நான் இருக்கிறேன்..
எப்போதும் இருப்பேன்..
உனக்காக..!

**
#ஞாயிறு படங்கள்.. (3,4,5 தவிர்த்து மற்றன 
“என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 128” &
“பறவை பார்ப்போம்.. - பாகம் 80”) 
#எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடருகிறது..
**

6 கருத்துகள்:

  1. காதலர்தின கொண்டாட்டங்கள் ஒரு வாரம் முன்னேயே தொங்கி விடுகிறது என்று நேற்றுதான் நானும் அரிது கொண்டேன்.  ஒவ்வொன்றுக்கும் ஒரு தினம் என்று!  வியாபாரம்தான் வேறென்ன?!  புதிதாகக்கூட இருக்கலாம்.

    பதினொன்றாம் தேதிக்கான வார்த்தை பொது, நன்று.  12 ஆம் தேதிக்கு நானுறங்கும் நாள் வேண்டும் சாய்ந்து கொள்ள தோள் வேண்டும் என்ற வரிகள் நினைவுக்கு வர வைக்கிறது புகைப்படம்.    தேர்நதெடுக்கப்பட்ட படங்கள் யாவும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. ஒரு வாரமாக கொண்டாட்டம்.... கொண்டாட்டத்திற்கு தேர்ந்தெடுத்த படங்களும் வரிகளும் மிகவும் சிறப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. படங்களும் வாக்கியங்களும் சிறப்பு. இப்பொழுது ஊர் கடைகளிலேயே காதலர்தின பரிசுகள் விற்கத்தொடங்கிவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். வியாபாரத்திற்கான தினமாகி விட்டது. கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin