ஞாயிறு, 16 ஜனவரி, 2022

பனி விலகும்

 #1
"வெறுப்பை வெறுப்பால் 
முடிவுக்குக் கொண்டு வர முடியாது,  
அன்பால் மட்டுமே முடியும்,  
அதுவே நிலையான விதி."
_Buddha 


#2
"இசை என்பது 
அழகிய, கவித்துவமான விஷயங்களை 
இதயத்திற்கு உணர்த்தும் தெய்வீக வழி."
_ Pablo Casals


#3 
“பார்ப்பதற்கு முன்  
கேட்பதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்  கண்கள்”  
_ Robert Frank”
(2021, ஜூன் 29 - கேமரா தினத்தின்று ஃப்ளிக்கரில் பதிந்த படம்)

#4
"மற்றவரை நேசிக்கும், 
மகிழ்ச்சிப் படுத்த விழையும் எவரொருவரும் 
சான்டா க்ளாஸ் ஆவார்!" 
_Edwin Osgood Grover

(2021, டிசம்பர் 25 - கிறுஸ்துமஸ் வாழ்த்தாக ஃப்ளிக்கரில் பதிந்த படம்)

#5
"வேளாண்மையே 
நாட்டின் செழுமைக்கு அடிப்படை ஆதாரம்." 
_  J. J. MAPES.
(இந்த வருடம் தைப்பொங்கல் வாழ்த்தாக ஃப்ளிக்கரில் பதிந்த படம்)


#6
‘பனி விலகியே தீரும்.’


#7
“நம்பிக்கை ஒருபோதும்  உங்களைக்  கைவிடுவதில்லை. 
நீங்கள்தாம் அதைக் கைவிடுகிறீர்கள்.”
_George Weinberg

**
[பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன் படங்களின் தொகுப்பு, எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]
***

12 கருத்துகள்:

  1. படங்களும் வரிகளும் அருமை.  கண்கள் எப்படிக் கேட்கும்? காட்சியை உணரவேண்டும் என்று இருக்கலாமோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அர்த்தம் அதுவே. விழிப்போடு இருக்க வேண்டும் என்பதை அழுத்திச் சொல்லப் பயன்படுத்தப்பட்ட மிகையான சொல்லாடல் என எண்ணுகிறேன்: “The eye should learn to listen before it looks.”

      நன்றி ஸ்ரீராம் :).

      நீக்கு
  2. பதில்கள்
    1. இயற்கையின் அழகுக்கு ஈடில்லைதான். மிக்க நன்றி!

      நீக்கு
  3. படங்களும் அவை சொன்ன வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அத்தனையும் அழகு!! ஆம் கண்களும் விழிப்பாக இருக்க வேண்டும்! அகக்கண்ணும்!

    இயற்கை இயற்கைதான் அந்தக் கடைசி இரு படங்கள்..அழகோ அழகு! வாழ்வியல் கருத்துகள் உட்பட.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அனைத்து படங்களுமே அழகு என்றாலும் 5 6 மற்றும் 7 மிகவும் பிடித்தது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin