என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (93)
#1
“மென்மையான ரோஜா,
இதயத்தால் மட்டுமே அறிய முடிகிற,
அதீத மகிழ்ச்சியை அளிக்கிறது.”
#2
“துணிந்து செயல்படுங்கள்,
அது உங்கள் வளர்ச்சிக்கு வழி வகுக்கக் கூடும்.”
#3
நம்புங்கள்,
நடக்கும்!
#4
“அவளை நேசிக்கும் இதயத்தை
இயற்கை ஒருபோதும் வஞ்சிப்பதில்லை!”
_ William Wordsworth
#5
“மகத்துவத்தின் விதை
ஒவ்வொரு மனிதருள்ளும் உள்ளது.
அது முளை விடுவதும் விடாததும்
அவரவர் தெரிவு.”
_Sean Patrick
#6
"அபரிமிதம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது.
அதை வெளிக் கொணருங்கள்."
_Laura Emily
** |
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடருகிறது..]
***
சக்தி வாய்ந்த மகிழ்ச்சி?
ReplyDeleteநம்புங்கள்; நடக்கும். - உண்மை.
வரவர படங்களை ரசிப்பதைவிட வரிகளை அதிகம் ரசிக்கத் தொடங்கி விடுவேன் போலிருக்கிறது! படங்களும், வரிகளும் அழகு.
Powerful joy.. அதீத மகிழ்ச்சி.. உற்சாகம்.., மாற்றி விட்டேன்!
Deleteமகிழ்ச்சி, நன்றி ஸ்ரீராம்:).
நம்புங்கள் , நடக்கும்- உண்மை.
ReplyDeleteநம்புவோம்.
படங்கள் எல்லாம் மிக அருமை.
நன்றி கோமதிம்மா.
Deleteபடங்கள் அனைத்தும் அழகு. கடைசி படத்தில் இருக்கும் பூ சமீபத்தில் நானும் படம் எடுத்துப் பகிர்ந்தேன் - இங்கே தால்கட்டோரா பூங்காவில் இருக்கிறது.
ReplyDeleteபடங்களுக்கான வரிகளும் நன்று.
தொடரட்டும் சேமிப்பும் பகிர்வும்.
இந்தப் பூவுக்கு Flame Vine, Orange Trumpet Creeper, Chinese Cracker, Golden Shower எனப் பல பெயர்கள். இப்பூவைப் பற்றி விரிவாக முன்னர் இங்கே பகிர்ந்துள்ளேன்: தீச்சுவாலைக் கொடி https://tamilamudam.blogspot.com/2017/02/8.html
Deleteநன்றி வெங்கட்.
எல்லா பூக்களும் மிக அழகு! மலர்கள் என்றால் அழகு என்று தானே அர்த்தம்? அந்த இரண்டாவது ஆரஞ்சு வண்ண மலர் பெயர் என்ன? ஞாபகத்திற்கு வரவில்லை அதன் பெயர்!
ReplyDeleteFlame Vine, Orange Trumpet Creeper, Chinese Cracker, Golden Shower.. எனப் பல பெயர்கள். நன்றி மனோம்மா.
ReplyDelete