ஞாயிறு, 11 நவம்பர், 2018

பெரிதினும் பெரிது கேள்

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 41
பறவை பார்ப்போம் - பாகம்: 32

#1
"நேசிக்கப்பட வேண்டிய தேவையுடன்  பிறக்கிற குழந்தை, 
அதனிலிருந்து மட்டும் வளர்ந்து வெளிவர முடிவதேயில்லை!"
_ஃப்ராங்க் A. க்ளார்க்


#2
"எல்லாவற்றுக்கும் மேலாக 
உங்களுக்கு நீங்கள் உண்மையாய் இருங்கள், 
அப்படி உங்களை உங்கள் இதயத்திற்குக் கொடுக்க முடியாவிட்டால் உங்களை அதனிடமிருந்து வெளியே எடுத்து விடுங்கள்."

#3
"பற்றிக் கொள்தலே பலம் என நம்மில் பலரும் நினைக்கின்றனர், 
ஆனால் சில நேரங்களில் விட்டு விடுவதும் பலமே." 
_ஹெர்மன் ஹெஸெ

#4
“காலத்தினால் ஏற்படும் குழப்பங்கள், 
மனசாட்சியினுடனான போராட்டங்கள், 
தினசரி வாழ்வின் கலக்கங்கள் 
இவற்றுக்கு நடுவே  
நம் வாழ்வின் நங்கூரம்..
விடாத நம்பிக்கையே!”
_தாமஸ் S. மான்ஸன்


#5
“எப்படியானாலும் நீங்கள் சிந்தித்தாக வேண்டும், 
ஏன் பெரிதாக சிந்திக்கக் கூடாது?”
_டொனால்ட் J. ட்ரம்ப்

**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது..]
***

16 கருத்துகள்:

  1. அழகான படங்கள்.

    தேர்ந்தெடுத்த சிந்தனைகளும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அனைத்தும் அழகு.
    வாழ்வியல் சிந்தனை அருமை.

    பதிலளிநீக்கு
  3. படங்களையும் வரிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. இரண்டாவது குறிப்பின் இரண்டாவது வரி எப்படி சாத்தியம் என்றும் சொல்லிக்கொடுத்தால் பரவாயில்லை!!!

    படங்கள் துல்லியம், அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியே வரப் பிரயத்தனம் எடுக்க வேண்டியதில்லை. நாமே நம் ஆன்மாவுக்கு அன்னியமாகிப் போவோமென்பதே அந்த வரி கூற வருகிற கருத்தென எண்ணுகிறேன்.

      நீக்கு
    2. மறுபடியும் ஒரு கேள்வி... நம் ஆன்மாவுக்கு நாமே அன்னியமாகப் போவோமா? இதற்கே எதிர்மறைக் கேள்விநும் உண்டு!

      ஸாரி... படுத்துகிறேன்.

      நீக்கு
    3. மனசாட்சியின் குரலுக்குச் செவி சாய்க்கவில்லையெனில் அதற்கான வாய்ப்பு உள்ளதுதானே?

      நீக்கு
  5. விட்டு விடுதலும் பலமே... ஆம்..

    விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்தச் சிட்டுக் குருவியைப் போலே என்கிற பாரதி வரி நினைவுக்கு வருகிறது.. சிட்டுக் குருவி விட்டு விடுதலையாகி நிற்கிறதா என்றும் நமக்குத் தெரியாது!

    நம் (பாரதியின்) கற்பனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இப்போது திண்ணையில் வெளியான எனது “விட்டு விடுதலை” கவிதை நினைவுக்கு வருகிறது: https://tamilamudam.blogspot.com/2011/08/blog-post.html

      “சிட்டுக்குருவி விட்டு விடுதலையாகி நிற்கிறதா..”

      அந்தப் பதிவில், ‘சிட்டுக்குருவிக்கு மட்டும்தான் கொடுப்பினை போலும்’ எனக் கருத்தளித்திருக்கிறீர்கள். ஆனால் யாருக்கும் தெரியாதுதான் என்றாலு அது மகாகவியின் அழகானதொரு கற்பனை :)!

      நீக்கு
  6. பொன்மொழிகள் இருக்கட்டும் படங்கள் எல்லா ம் நீங்கள் எடுத்ததா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எடுக்கும் படங்களுக்காகத் தேடப்பட்ட பொன்மொழிகளே, பொன்மொழிகளுக்காகப் பகிரப் பட்ட படங்களல்ல:).

      பெரும்பாலும் என் பதிவுகளில் குறிப்பாகப் படத் தொகுப்புகளில் நான் எடுத்தவற்றை மட்டுமே பகிருகிறேன். கவிதைகள் போன்ற பதிவுகளுக்கு மற்றவர் எடுத்தவற்றைப் பகிர்ந்தால் அதைக் குறிப்பிடவும் செய்கிறேன்.

      நன்றி.

      நீக்கு
  7. நல்லதொரு உரையாடல்.

    உணர்வுக்கும், அறிவுக்கும் இடையில் இடைவிடாமல் நிகழும் போராட்டத்தில் விழிப்புணர்வை இழக்கும்போது இதயமே வெற்றி பெறுகிறது.

    திட சங்கல்பம் தவறும் அத்தருணத்தில் ஆன்மா தன்னிச்சையாகவே மனமடிவுடன் ஊமையாகிவிடுகிறது.

    பற்றறுத்தல் குறித்த கவிதையும் நிதர்சனம். இந்தக் கவிதையிலும் மனித உணர்வின் ஆதிக்கம் அறிவை மிஞ்சி ஆன்மாவின் கையறுநிலையையே சுட்டிக் காட்டுவது போல அமைந்திருக்கிறது.

    அது யதார்த்தமும் கூட.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin