திங்கள், 7 மே, 2018

கரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)

கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். சமீபத்தில் வால் முளைக்காத இளம் கரிச்சான் குருவியைப் படமாக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

#1
என் பகிர்வில் சொல்லப்படாத சில சுவாரஸ்யமான தகவல்கள் காலம் சென்ற திரு. கல்பட்டு நடராஜன் அவர்களின் பதிவில் வாசிக்கக் கிடைத்தன. அதில் ஒரு பகுதி..

*“கரிச்சான் குருவிக்கு பயம் என்பதே துளியும் கிடையாது.
இது தன்னைவிட உருவத்திலும், பலத்திலும் பெரிதான காகம், கழுகு, பருந்து போன்ற பறவைகளைத் துரத்தித் துரத்தி விரட்டும். அந்தப் பறவைகளும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று திரும்பிப் பாராமல் அதி வேகமாகப் பறந்து செல்லும். இந்தக் காட்சி பார்க்க வேடிக்கையான ஒன்று. King crow என்ற பெயர் வரக் காரணம் இதுவே. இயற்கையின் எழில் மூலம் இறைவன் நமக்கு அளிக்கும் இக் காட்சிகளில் தான் எத்தனை பாடங்கள் ! உருவத்தில் சிறியவனாக இருந்தாலும் உள்ளத்தில் உரம் இருந்தால் உன்னைவிட பலசாலியான எதிரியையும் ஓட ஓட உன்னால் விரட்ட முடியும் என்பதை நமக்கு இப்பறவையின் மூலம் ஆண்டவன் உணர்த்துகிறாரோ!

#2


*சில பறவைகள் தங்களது சிறகுகளில் பேன் போன்ற சிறு பூச்சிகள் சேராமல் தடுக்க ஒரு உத்தியினைக் கையாளும். அவை எறும்புப் புற்றின்மீது சென்றமரும். அப்போது அவற்றின் மீது ஏறும் எறும்புகள் வெளியிடும் ஃபார்மிக் அமிலத்தில் பேன்கள் இறந்து விடுகின்றன.என்ன சுலபமான பேன் நிவாரணி வைத்தியம்! 

#3
*கரிச்சான் குருவிகள் கிராமப் புரங்களில் இடையன் ஆடு மாடுகளை மேய ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் கிளப்பிவிட அவை பறக்கும்போது, கரிச்சான் குருவி இறக்கைகளை விரித்தபடி வைத்துக் கொண்டு ‘கிளைடர்’ விமானம் போல பறந்து சென்று பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு அதே மூச்சில் தான் இருந்த இடத்திற்கே வந்து சேரும் ‘பூமரேங்’ என்னும் ஆயுதம் போல.”

நன்றி: http://kalpattaarpakkangkal.blogspot.in/2013/02/21.html

*
பறவை பார்ப்போம்.. - (பாகம் 25)
என் வீட்டுத் தோட்டத்தில்.. - (பாகம் 29)

**

மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல்:

ஆர். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு  (1919 - 1992) பற்றி அறிந்திருப்பீர்கள்.  சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கி, பாராட்டுகளைப் பெற்றவர்.

எதற்காக அந்தப் புனைப்பெயரைத் தேர்ந்தெடுத்தார் என்பது சுவாரஸ்யம். ‘கரிச்சான்’ என்ற பெயரில் எழுதி வந்த எழுத்தாளர் கு.ப.ராவின் புனைவுகளால் ஈர்க்கப்பட்டதோடு, அவர் மேல் கொண்டிருந்த மரியாதை மற்றும் அன்பின் காரணமாக ‘கரிச்சான் குஞ்சு’ என்ற பெயரில் எழுதத் தொடங்கியதாகத் தெரிகிறது.
***

4 மே 2008_ல் தொடங்கிய முத்துச்சரம் பத்தாண்டுகளைக் கடந்து பயணிக்கிறது. உடன் வரும் அனைவருக்கும் நன்றி!
****

13 கருத்துகள்:

 1. படங்களையும், விவரங்களையும் ரசித்தேன். கரிச்சான் குருவியின் துணிச்சல் ஆச்சர்யமாக இருக்கிறது.

  பத்தாண்டுகளைக் கடக்கும் முத்துச்சரத்திற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். மென்மேலும் தொடரட்டும் பயணம்.

  பதிலளிநீக்கு
 2. படங்கள் செய்திகள் அருமை.
  பத்தாண்டுகளைக் கடந்து விட்ட முத்துச்சரத்திற்கு வாழ்த்துக்கள்.
  தொடர்ந்து எழுதுங்கள் ராமலக்ஷ்மி.

  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 3. உங்களுக்கென்று படம் பிடிக்க பறவைகள் போஸ் தருமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலும் சன்னலுக்குப் பின்னே மறைந்து நின்று எடுப்பேன். ஆனால் சில நேரங்களில் நேருக்கு நேர் கேமராவைப் பார்த்து அவை போஸ் கொடுக்கவும் செய்கின்றன:).

   நன்றி GMB sir.

   நீக்கு
 4. என்னுடைய பின்னூட்டம் 'காக்கா உஷ்' ஆனது எப்படி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பதிவுக்கு இதற்கு முன் தங்களது பின்னூட்டம் வரவில்லையே:)! எப்படித் தப்பியதெனத் தெரியவில்லை.

   நீக்கு
 5. கரிச்சான்குஞ்சுவை (எழுத்தாளர்) தேடிக்கொண்டிருந்தபோது இங்கு வந்து சேர்ந்தேன். குஞ்சுகளின் படங்கள் தெளிவு.

  பத்தாண்டுக்கான நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin