ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

ஒரேயொரு பரிசு

#1
‘ஒரு சிலரே உணருகின்றனர், 
அதிர்ஷ்டம் என்பது உருவாக்கப்படுவது என்பதை.’
 - Robert Kiyosaki

#2
“சில நேரங்களில் விலகிச் செல்வதென்பது பலகீனத்தைக் குறிப்பதாகாது, 
எல்லா வகையிலும் பலத்தைப் பறைசாற்றி நிற்கும்."


#3
 ‘உங்கள் கவனம், உங்களுக்கு எரிச்சலைத் தருபவர்கள் மேல் அன்றி,
உங்களுக்கு உத்வேகத்தைத் தருபவர் மீது இருக்கட்டுமாக!’

#4
"உங்கள் குழந்தைக்குக் கொடுக்க உங்களிடமிருப்பது ஒரேயொரு பரிசுதான் எனில் 
அது உற்சாகமாக இருக்கட்டும்"
- Bruce Barton


#5
 “தன் நலத்தைப் பேணுவது சுயநலம் ஆகாது. 
வெற்றுப் பாத்திரத்திலிருந்து பரிமாற இயலாது.”
_Eleanor Brownn


#6
“உன் பணி, எது உன் பணி என்பதைக் கண்டறிவது.
பின் முழு மனதோடு அப்பணிக்கு உன்னை அர்ப்பணிப்பது.”
_ Buddha


#7
“எம்மை வெட்டிக் கனவு காண்பவர் என்கிறார்கள். 
ஆனால் நாங்களே உறக்கத்தை அறியாதவர்கள்.”
#சிறுவியாபாரிகள்
***
[உங்களுடனான பகிர்வாகவும் எனக்கான சேமிப்பாகவும்  தொகுப்பது தொடரும்..]

14 கருத்துகள்:

 1. பொருள் நிறைந்த வரிகளையும் அதற்கான படங்களையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. அழகான படங்கள் - நீங்கள் சொல்வதைப் போல பேசும் படங்கள்.... ஒவ்வொன்றும் அழகு.

  பகிர்ந்து கொண்ட சிந்தனைகளும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தொடரட்டும் சேமிப்பு.

  பதிலளிநீக்கு
 3. புகைப்படங்களும் அவற்றை ஒட்டி நின்ற பொன் வரிகளும் அருமை!

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொரு வரிகளும், படங்களும் மிக சிறப்பு...

  பதிலளிநீக்கு
 5. படங்கள்களும், வரிகளும் அழகு, அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin