ஞாயிறு, 24 டிசம்பர், 2017

சுவைக்கலாம் வாங்க.. (1)

டேபிள் டாப் போட்டோகிராபி சவாலானதும் சுவாரஸ்யமானதும் ஆகும். நாம் எடுக்கும் கருப்பொருட்களுக்கு சரியானபடி பக்கங்களிருந்தோ மேலிருந்தோ வெளிச்சம் கொடுக்க வேண்டும். அல்லது எக்ஸ்டர்னல் ஃப்ளாஷ் கூரையில் பட்டு பவுன்ஸ் ஆகி வெளிச்சம் கருப்பொருள் மீது பரவலாக விழ வேண்டும். இதற்கென்றே இப்போது பின்னணிக்காகப் பல வண்ண விரிப்புகளுடன் சிறு கூடாரங்கள் மற்றும் பக்க வாட்டில் உபயோகிப்பதற்கான லைட்ஸ் விதம் விதமாக விற்பனையில் உள்ளன. இணையத்தில் தேடி வரவழைத்துக் கொள்ளலாம். நான் சாதாரணமாக வீட்டு மேசைகளில் வைத்து, மேசை விளக்குகள் மற்றும் எக்ஸ்டர்னல் ஃப்ளாஷ் பயன்படுத்தி எடுத்த உணவுப் படங்கள், ஞாயிறு படங்களாக இன்று...

#1
உலர்ந்த அத்திப் பழம்


#2
பட்டர் குக்கீஸ்


#3
டோக்ளா


#4
பன்னீர் ஜிலேபி


#6
ஜாங்கிரி


#7
சீடை

#8
காரக் கொழுக்கட்டை

#9
மாதுளை

#10

#11
ஆப்ரிகாட்

#12
கேட்பரி டெய்ரி மில்க்
***

16 கருத்துகள்:

 1. படங்கள் வெகு அழகு. உணவுப் பண்டங்களை அழகாய் எடுத்துப் பகிர்ந்தது வெகு அழகு.

  டோக்ளா....

  பதிலளிநீக்கு
 2. அருமை. எனக்கு கை ஆடாமல் (நடுக்கம் அல்ல, ஷேக் இல்லாமல்) படம் எடுக்கவேண்டியிருக்கிறது! நான் வைத்திருக்கும் ஒன் ப்ளஸ் ஃபைவ்வுக்கே நான் நியாயம் செய்யவில்லை என்பான் என் மகன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன் ப்ளஸ் ஃபைவ்! அருமையான டூயல் கேமரா! ஐயப்பன் கிருஷ்ணன் அதில் விதம் விதமாக எடுக்கிறார். நல்ல DOF கிடைக்கிறது. தொடர்ந்து முயன்று பாருங்கள்:).

   நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. படங்கள் நல்லா எடுத்திருக்கீங்க. (சீடை நல்லா வரலை. அதன் Texture ரொம்ப oilyயா படம் காட்டுகிறது. அப்படி சீடை வராது. டோக்ளாவின் மஞ்சள் நிறம் தெளிவா வரலை. நான் நினைக்கறேன் அதுக்கு நீங்க மஞ்சள் நிற தட்டை உபயோகப்படுத்தியிருக்கக்கூடாது என்று). மாதுளை - இரண்டாவது படம் நல்லா வந்திருக்கு. மாதுளை முத்துக்கள் மாலைபோல வந்திருக்கு. எது பெஸ்ட் என்று கேட்டால், அத்திப்பழப் படம்தான் (முதல் படம்).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /சீடை texture.. / நளபாக வித்தகர் நீங்கள் சொன்னால் சரியே. டோக்ளாவின் நிறமே வெளிர் மஞ்சளில்தான் இருந்தது. அதுவும் A2B உபயமே.

   நீக்கு
 4. இன்னொன்று தோன்றியது. பன்னீர் ஜிலேபி, ஜாங்கிரி, உப்புமா கொழுக்கட்டை - இந்த மூன்றும் அடையாறு ஆனந்தபவன் கடைல வாங்கியதோ என்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. ஆச்சரியம்! எப்படி மிகச் சரியாகக் கணித்தீர்கள்:)? அதுவும் அந்த பன்னீர் ஜிலேபி அவர்களது ஸ்பெஷல்.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. அழகான படங்களுடன் அருமையான உணவு வகைகள்

  பதிலளிநீக்கு
 6. அருமையான உணவுகள். ஹெல்தி. சீடைதான் கொஞ்சம் வெளிச்சம் பத்தலையோன்னு தோணுது.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin