புதன், 15 மார்ச், 2017

அணில் ( Squirrel ) - தெரிஞ்சுக்கலாம் வாங்க..

#1
உயிரியல் பெயர்: Sciuridae

ணில் (Squirrel) மரத்தில் வசிக்கும் ஒரு கொறிணி (Rodent) அதாவது உணவைக் கொறித்து உண்ணும் சிறு விலங்கு. அணிலில் பலவகை உண்டு. இந்தியாவில் காணப்படும் அணில்கள் வெளிர்சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகளைக் கொண்டிருக்கும்.

#2
  ஆங்கிலப் பெயர்: Squirrel        
இவை 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
பனித் துருவங்கள், கடும் பாலை வனங்கள் தவிர்த்து மற்ற எல்லா வகை வெப்ப மண்டலங்கள் மற்றும் மழைக்காடுகளிலும் வசிக்கும்.

#3
வகைகள்: நிலத்து - மரத்து அணில் (Ground & Tree Squirrel), 
பறக்கும் அணில் (Flying squirrel),  இராட்சச அணில்(Giant squirrel) போன்றன.     
புசுபுசுத்த வாலும், மரமேறும் விலங்குகளுக்கு அவசியமான கூரிய பார்வைத் திறன் கொண்ட பெரிய கண்களும், எடை குறைந்த உடலும் கொண்டவை. பின்னங்கால்கள் முன்னங்கால்களை விடவும் நீளமானவை. நான்கு அல்லது ஐந்து விரல்களைக் கொண்டிருக்கும் இவற்றின் பாதங்கள். மற்ற பாலுண்ணிகளைப் போலன்றி மரத்தில் தலைகீழாக இறங்கும், நிற்கும் வல்லமை பெற்றவை.

# 3A
(ஸ்ரீராம் விருப்பத்திற்காக..
 சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த படம்.. )
அப்போது கணுக்கால்கள் 180 டிகிரி வரை திரும்பிக் கொடுக்க, பின்னங்கால்களின் பாதங்கள் மேல்நோக்கி மரப்பட்டைகளை வலுவாகப் பற்றிக் கொள்ளும்.

#4
நீளம்: 7-10 செ.மீ              எடை: 10 கிராம்           

பெரும்பாலும் பழங்கள், கொட்டைகள், விதைகள், பூக்களை உண்டு வாழும் தாவர உண்ணிகள் என்றாலும் பல அணில்கள் சிறு பூச்சிகள், சிறு பறவைகள் மற்றும் விலங்குகள், முட்டைகள், குட்டிப் பாம்புகள் போன்றவற்றை உண்பதும் உண்டு. 

#5
பூர்வீகம்: அமெரிக்கா, யுரேஸியா,
ஆப்ரிக்கா, பிறகு ஆஸ்திரேலியா

மரங்களில் அல்லது வீடுகளில் மறைவான இடமாகப் பார்த்து தேங்காய் நார், பஞ்சு ஆகியவற்றைக் கொண்டு கூடுகள் கட்டும். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறைகள் இனப் பெருக்கம் செய்யும். 3 முதல் 6 வாரங்களில் குட்டிகளை ஈன்றிடும். பிறக்கும் போது குட்டிகளுக்குப் பற்களோ, பார்வைத் திறனோ இருக்காது.

#6

பெண் அணில்களே குட்டிகளைப் பராமரிக்கும். இளம் அணில்கள் ஒரே வருடத்தில் இறந்து போவதுண்டு. மற்றபடி வளர்ந்த அணில்கள் 5 முதல் 10 ஆண்டு வரையிலும், பிடித்து வளர்க்கப் பட்டால் 10 முதல் 20 ஆண்டுகள் வரையிலும் வாழும்.

#7
ஆயுட்காலம்: 5 - 10 ஆண்டுகள்
அணிலின் வால் அதற்கு எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பது சுவாரஸ்யம்.  நீண்ட சிறு கம்பி அல்லது கிளையில் அணில் செல்லும் போது வால்களை இருபக்கமாகவும் ஆட்டிக் கொண்டே செல்வது தன்னை சமநிலைப் படுத்திக் கொள்வதற்காக. எதிரிகள் தென்பட்டால் மற்ற அணில்களுக்கு எச்சரிக்கை விடுக்க, குரல் கொடுக்காமல் புத்திசாலித்தனமாக வாலினை உயர்த்தி 3 முறைகள் ஆட்டும். மற்ற அணில்கள் கவனித்து உடனே உஷாராகி விடும். உறங்கும் போதும், குளிர் மற்றும் மழைக் காலங்களிலும் வாலினால் தன் உடலைச் சுருட்டிப் போர்த்திக் கதகதப்பாகத் தன்னை வைத்துக் கொள்ளும். அதே நேரம் வெயில் காலங்களில், வாலுக்கு அதிக இரத்தத்தைப் பாய்ச்சி உடலைக் குளிர்ச்சியாக்கிக் கொள்ளும். மரங்கள் சுவர்களிலிருந்து சில நேரங்களில் தலை கீழாகக் குதிக்க நேருகையில் வால் இதற்கு ஒரு பாராச்சூட் போலப் பயன்படும்.
*
தகவல்கள்: இணையத்திலிருந்து சேகரித்து தமிழாக்கம் செய்தவை.
**
படங்கள் (3A தவிர்த்து மற்றன): என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 13)

***

25 கருத்துகள்:

 1. அணில் பற்றிய அருமையான செய்திகள். அழகான படங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. கொறிணி! புது வார்த்தை (எனக்கு)

  சுவாரஸ்யமான தகவல்கள். தலைகீழாக அது இறங்கும்போது கணுக்கால்கள் திரும்பி இருப்பதை ஒரு படம் பிடித்திருக்கக் கூடாதோ!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணையத்தில் கிடைத்த வார்த்தை.

   ஏன் பிடிக்காமல்? எப்போதோ பிடித்த படம் ஒன்று இதோ:https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/11473171874/
   உங்களுக்காக பதிவிலும் சேர்த்து விட்டேன் :)!

   நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. அணில்களின் அழகழகான படங்களோடு அதிசயமான தகவல்களும். அணில்கள் பழங்களையும் கொட்டைகளையும் மட்டும்தான் தின்னும் என்றல்லவா நினைத்திருந்தேன். பறவைகள், முட்டைகள், சிறு பாம்புகளையும் தின்னும் என்பது புதிய தகவல். நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 4. எங்கள் வீட்டு மாமரத்தில் நிறையவே அணில்களைக் காண்கிறேன் அவை உண்ணும் அழகைப் படம் எடுக்கலாம் என்றால் காமரா எடுத்து வருவதற்குள் போய் விடுகின்றன. பழுக்கும் மாம்பழங்களையும் இவை தின்னும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், நம் உருவம் நிழலாடுவதைக் கண்டாலே உஷாராகி ஓடி விடும். நன்றி GMB sir.

   நீக்கு
 5. பல புதிய தகவல்கள்....எனக்கு மிகவும் பிடித்த உயிரினம்....

  அழகு படங்கள்..

  பதிலளிநீக்கு
 6. படங்கள் அனைத்தும் அழகு. தகவல்களும் சிறப்பானவை.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் ராமலக்‌ஷ்மி விடாமல் எழுதுவதற்கு வாழ்த்துக்கள். சிறுவயதில் தஞ்சையில் வாழ்ந்த போது, அணில் ஒன்று தன் குட்டிக்கு தாவும் பயிற்சி கொடுத்ததை பார்த்திருக்கிறேன். அருமையான அறிவியல் கட்டுரைக்கு நன்றிகள். தமாம் பாலா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம். என்ன ஆச்சரியம்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையத்தில் பார்க்கிறேன். நலம்தானே?

   மிக்க நன்றி :)

   நீக்கு
 8. புதுமையான பதிவு..அருமையான தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 9. குஞ்சி அனிைலை எப்படி பராமரிப்பது அக்கா ... இன்னும் கண் விழிக்க வில்லை.. என்னிடம் வந்து மூன்று நாட்கள் ஆகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றுதான் உங்கள் comment பார்க்கிறேன். கீழ்வரும் இணைப்பில் உள்ள தகவல்கள் உங்களுக்கு உதவக் கூடும்.

   http://www.mary.cc/squirrels/foundababy.htm

   நீக்கு
  2. என்னிடமும் இரண்டு குட்டி உள்ளது நான் பசிரஞ்சில் பாலூட்டி வளர்க்கிறேன் நன்றி

   நீக்கு
 10. அணிலின் வால் வளரக் கூடியதா?அதன் வால் முடிகள்

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin