வெள்ளி, 1 ஜூலை, 2016

நீங்கள் நீங்களாக..

# 1
எப்போதும் நினைவில் இருக்கட்டும், மற்ற எல்லோரையும் போன்று நீங்களும் தனித்துவமானவரே. 
Margaret Mead 

#2
“சில நேரங்களில் சின்னச் சின்ன ஆசைகளே வாழ்வில் அதிமுக்கியமானதாகின்றன.”

# 3
எதிர்காலத்தை உங்கள் வருத்தங்கள் அன்றி, உங்கள் நம்பிக்கைகள் வடிவமைக்கட்டும். 
_ Robert H. Schuller


# 4
“இரக்கமற்ற உலகில் மென்மையான இதயத்துடன் இருப்பது தைரியமே அன்றி பலகீனமன்று.”


# 5
ஒற்றை மலரின் அதிசயத்தைத் தெளிவாக நம்மால் உள்வாங்க முடியுமேயானால், நமது மொத்த வாழ்க்கையும் மாறி விடும். - புத்தர்


# 6
தொடர்ந்து உங்களை மாற்ற முயன்றபடியே இருக்கும் உலகில், நீங்கள் நீங்களாக இருப்பதே மிகப் பெரிய சாதனை. 
_Ralph Waldo Emerson


# 7
கனவுகள் அதிமுக்கியமானவை. கற்பனை செய்தாலொழிய காரியம் நிறைவேறாது.
_George Lucas 


***

எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது...

18 கருத்துகள்:

 1. புகைப்படங்களும், அதற்கான வரிகளும் அருமை. ஒற்றை மலரின் அதிசயத்தை யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. வாசகங்களும் படங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டிபோடுகின்றன
  அருமை

  பதிலளிநீக்கு
 3. ஸ்ரீராம் சொன்னது போல ஒற்றை மலர் கொண்டு வரைந்த அதிசயம் அழகு ராமலெக்ஷ்மி :)

  பதிலளிநீக்கு
 4. பிங்க் கலர் பூ கொள்ளையழகு. அனைத்து வாசகங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 5. புகைப்படங்களும் அதற்கான வாசகங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 6. மலர்கள் சொல்லும் வாசகங்கள் அருமை.
  மலர்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 7. நம்பிக்கை வரிகள்....பூக்களின் அழகோடு

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin